Everything posted by குமாரசாமி
-
துருக்கியுடன் நாற்பது வருடகால யுத்தம் - யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் குர்திஸ் போராளிகள்
25வருடங்களுக்கு மேலாக ஒரு விடுதலை இயக்க தலைவரை சிறையில் அடைத்து வைத்திருந்து..... இன்று அவர் மூலமாக ஒரு யுத்த நிறுத்த அறிவிப்பை துருக்கி அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இன விடுதலை போராட்டங்கள் கேள்விக்குறியாகி விட்டன.
-
'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன?
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இல்லா விட்டால் ஐரோப்பாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும். இருந்தாலும் உந்த கூட்டணி ஏதோ ஒரு நாடகம் போல் தெரிகின்றது.
-
சுற்றுலாப் பயணிகளால் ஜனவரியில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்
கிராம பக்கங்களில் ஒரு வசனம் சொல்வார்கள். கடன் வாங்கி சாப்பிட்டவன் சாகும் வரைக்கும் கடன் வாங்கியே வாழுவான் என....😂
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
நான் அறிந்த வரையில் நீங்கள் எழுதியது அத்தனையும் உண்மை.👍
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
அப் பெண் இவ்வளவு காலமாக சீமானை --- மவனே,------ க்கு பொறந்தவனே என வெளிப்படையாக திட்டும் போது பெண் உரிமைவாதிகளுக்கு வராத கோபம் இன்று சீமானின் வார்த்தை பிரயோகத்திற்கு வருகின்றது என்றால்....? அது அரசியல் சம்பந்தப்பட்டதால் எழுத வேண்டி வந்துவிட்டது. ஆனால் இதே விஜலட்சுமிதான் ஈழதமிழர்களை பயங்கரவாதிகள் என வெளிப்படையாக கூறியவர். எனவே அவர் தன் தனிப்பட்ட வெறுப்புகளுக்காக ஒரு இனத்தின் மீது வன்மத்தை கொட்டியவர்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அம்மா தாயே குஷ்பு! கொஞ்ச நாளாய் 24ம் இடத்திலையே அங்காலை இஞ்சாலை அரக்காமல் அரங்காமல் நிக்கிறவர் முற்பிறவியில என்னென்ன பாவங்களை செய்து தொலைச்சார் எண்டு சொல்லு தாயே...😎
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
நான் இங்கே யாருக்காகவும் வாதடவில்லை. நடந்த சம்பவம் யாருக்காக எந்த சந்தர்ப்பத்தில் பந்தாடப்படுகின்றது என்பதையே சொல்ல வருகின்றேன். பாதிக்கப்பட்டவர் சீமானால் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பது உலகறிந்த விடயம். சீமான் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றால்...... ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இது முன்னுதாரணமாக இருக்கட்டும். அரசியல் என்பது தெளிந்த நீரோடை அல்ல. அது ஒரு சாக்கடை. அரசியல் தெளிந்த நீரோடை என்றால் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்திருக்காது அல்லவா?
-
வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள்; நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம்
இலங்கையில வீதியோரம் திரியும் கட்டாக்காலி நாய்களையும்,கட்டாங்காலி ஆடு மாடுகளையும் கட்டுப்படுத்த ஒரு ஒப்பந்தத்தை சீனாக்காரனோட போடலாம்.😁 ரோட்டும் கிளியர்.கண்ட கண்ட அசௌகரியங்களும் கிளியர்....🙂
-
'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன?
அமெரிக்காவில் ஆட்சி மாறும் வரைக்கும் உக்ரேனுக்கு ஆயுதங்கள்,இராணுவ உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தவர்கள் டொனால்ட் ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அமைதி விரும்பிகளாக மாறிவிட்டார்கள். 🤣 இதில் கொடுமை என்னவென்றால் உக்ரேனுக்கு ஆதரவளித்த அரசுகளும்,அரசியல் தலைவர்களும் மண்ணைக்கவ்வுவதுதான் நடைமுறை சம்பவங்களாக உள்ளன. அதிலும் நடந்து முடிந்த ஜேர்மனிய தேர்தலில் உக்ரேன் போரை முன்னெடுத்த இரு கட்சிகளும் பாரிய பின்னடைவை சந்தித்தது நல்லதொரு படிப்பினையாகும். நிற்க... பெரிய பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினாலும் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பாவை பாதுகாக்க வேண்டும் என முனைப்பாக இருக்கின்றது.😂 ரஷ்யாவும் பெரிய பிரித்தானியவும் நிரந்தர பகையாளிகள் என்பது உலகறிந்த விடயம்.அதிலும் செலென்ஸ்கியும் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் சந்திப்பு கவனிக்கப்பட வேண்டிய விசயம் கண்டியளோ😎
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இங்கே நீங்களும் ஒன்றை கவனிக்க தவறுகின்றீர்கள். அரசியல் பலம்,பண பலம்,அடியாட்கள் பலம் இங்கே முதலிடம் வகிக்கின்றது.நீதி நேர்மை இல்லாத கொலைகளும் மிரட்டல்களும் ஊடகங்களிலையே தினசரி வாசிக்க முடிகின்றது. சீமான் - விஜயலட்சுமி சம்பவங்கள் நடந்து நீண்டகாலமாகியும்,புகார் கொடுத்து நீண்ட காலமாகியும்.... தற்போது இந்த விவகாரத்தை தூக்கிபிடிப்பதன் மர்மம் எல்லோருக்கும் தெரியும். கருத்து வெற்றிக்காக இதை பலர் வெளியே சொல்வதில்லை. நியாயமான சட்டங்களும் அரசியல்துறையும் இருந்தால் விஜயலட்சுமி புகார் கொடுத்த சந்தர்ப்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? "ரோ" ஏற்கனவே ஈழ விடயத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது.கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தில் நீங்கள் உணரவில்லையாயின்.......?????
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
டெய்லி என்ன சாப்பிடுறார் எண்டதை ஒருக்கால் விசாரிக்க வேணும் 😂
-
யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா?
யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா? உக்ரேன் போரில் மட்டுமல்ல. சாதாரணமாகவே அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவால் எதனையும் சமாளிக்க முடியாது.😂
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
சிங்கன் எல்லா விசயத்திலையும் சாதனை படைக்க நினைக்கிறார் போல...🤣
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
தமிழ் நாட்டு அரசியலில் யோக்கியர்கள் எவருமில்லை. அதே போல்.... சினிமாத்துறையிலும் யோக்கியர்கள் எவருமில்லை.நிலைமை இப்படியிருக்க சீமான் நடத்தைகளை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒரு வித அயோக்கியம். அதிலும் அன்றைய பிரச்சனையை இன்று சூடாக்குவதும் பழிவாங்கல் தான். இது சீமானுக்கு வக்காளத்து வாங்கும் கருத்தல்ல.நடு நிலைமையாக யோசித்து பார்த்ததில்.....
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
ஏற்கனவே செலென்ஸ்கி டொனால்ட் ரம்ப் அவர்களை சந்தித்து அடி வாங்காத குறையாக மூக்கேனப்பட்டு திரும்பி வந்தவர். இந்தமுறை என்ன தைரியத்திலை திருப்பியும் ரம்ப் அன்ட் கோ வை சந்திக்கப்போனார் எண்டு தெரியேல்லை? முந்தியே ரம்ப் ரஷ்ய ஆதரவாளர் எண்டு தெரிஞ்சும் போய் சாத்துப்படி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.அதை விட கொடுமை என்னெண்டால் பைடன் உக்ரேனுக்கு ஆயுதம் குடுக்கேக்க அமெரிக்கா தங்கப்பவுண் எண்டவர்கள் இப்ப தலைகீழாய் நிக்கினம்.🤣 அமெரிக்காவை யார் ஆட்சி செய்தாலும் ....அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவோ ஏனைய கண்டங்களோ தனித்து நின்று எதையும் செய்ய முடியாது. இதுதான் இன்றைய உலக யதார்த்தம்.அப்படி ஏதும் நடந்தால் அது உலக அதிசயம். பாவம் செலென்ஸ்கி மட்டுமல்ல நம்ம ஜேர்மனியும் தான்...😎
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ்நாட்டில் அரசியலையும் சினிமாவையும் பிரித்து பார்க்க முடியாது. இப்போதெல்லாம் சினிமாவை கூடுதலாக அரசியல் பிரச்சாரத்திற்காகவே மட்டும் பிரயோகிக்கின்றார்கள். சினிமா என்பது ஒரு கனவுத்தொழிற்சாலை. அங்கு நடக்கும் விட்டுக்கொடுப்புகள்,கதை டிஷ்கசன், விடுதிகளில் நடக்கும் புரிந்துணர்வு சந்திப்புகள் என வெளியே சொல்ல முடியாத சம்பவங்கள் அன்றைய இன்றைய வெள்ளித்திரைகளுக்கு பின்னால் நடக்கும் சம்பவங்கள் ஏராளம்.ஏராளம். அன்றும் சீமான் செய்தது போல் பல பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. ஆனால் அன்று ஊடக வெளிச்சம் இல்லை. பத்திரிகைகளும் அரசியல் கட்சிகள் சார்ந்தே இருந்திருக்கின்றன. அந்த அரசியல் சார்பு இன்றும் ஊடகங்களில் இருக்கின்றது. அன்றைய சினிமா அரசியல் தலைவர்கள் உள்வீட்டு விடயங்கள் வெளிவந்தாலும் அவை அடக்கப்பட்டு விட்டன.அப்படி இருந்தும் முன்னைய தலைவர்களின் அசிங்க செயல்கள் ஒரு ஓரமாக விவாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலில் பாலியல் சீர்கேடுகளும்,ஊழல் லஞ்ச நடைமுறைகளும் சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. அத்துடன் சாதி எனும் கொடூரம் தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் அதிகமாக இல்லை.இவற்றையெல்லாம் அரசியலில் பேசு பொருளாக்க மாட்டார்கள். ஏனென்றால் அவை அனைத்தும் அவர்களுக்கு மூலதனம். இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் சித்திரம். குற்றவாளியும் சுத்தமில்லை. சுத்தவாளிகளும் குற்றம் செய்யாமலில்லை. இது இப்படி இருக்க சீமான் மட்டும் தமிழ்நாட்டு அரசியலில் குற்றவாளி அல்ல.சீமானை குற்றம் சாட்டுபவர்களும் குற்றவாளிகள் மட்டுமல்ல நீதிமான்களும் அல்ல. அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அத்துடன் சீமானின் முன்னாள் காதலி கணவனே கண்கண்ட தெய்வம் எனும் கொள்கையுடையவராக இருந்தாலும் மேலும் பேசலாம். அதுவும் அங்கே பூச்சியம். நியாயமில்லாத அரசியல் வெற்றிகள் என்றுமே நிலைக்காது. அது யாராக இருந்தாலும் சரி..👈
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஜேர்மனியிலையும் உதே நிலைமைதான். ரெஸ்ரோரன்ற் சாப்பாட்டு மேசையிலையும் 13ம் நம்பர் மேசை இல்லை. 😂
-
சீமானுக்கு சிக்கலா..?
அன்றே விளக்கம் கொடுத்த சீமான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அமைதி கூட பல நேரங்களில் பிறர் பார்வைக்கு திமிராகவே தெரிகின்றது.....
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
தென்மராட்சி பக்கம் போய் பாருங்கள். தென்னஞ்சோலைகளை பார்த்தால் குளிர்ச்சியில் உடல் சிலிர்க்கும். தேங்காய்க்கும் பஞ்சமில்லை.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
அன்றைய திராவிட கழகத்திலிருந்து பல அறிவாற்றல் கொண்டவர்கள் வெளியேறினார்கள்.வைகோ வெளியேறினார். நெடுஞ்செழியன் வெளியேறினார்.எம்ஜிஆர் வெளியேறினார். அவர்கள் வெளியேறினாலும் அக்கட்சியை யாராலும் அசைக்க முடியவில்லை. திமுக எப்படி வலுவான கொள்கையோ.... அது போல் நாம் தமிழர் கட்சியும் வலுவான கோள்கையுடைய கட்சி. ஒரு காளியம்மாள் விலகினால் ஆயிரம் காளியம்மாக்கள் உருவாகுவர். ஆறு மாதத்திற்கு முதலே பிசுபிசுத்து போன காளியம்மாள் அண்மைய நாட்கள் வரைக்கும் கட்சி தாவல் சம்பந்தமாக யார் யாரோடெல்லாம் பேரம் பேசினாரோ யாருக்குத்தெரியும். கட்சியின் போக்கு பிடிக்கவில்லை என்றால் மாதக்கணக்கான தாமதம் ஏன்?
-
7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்!
அண்ட பிரபஞ்சமே நேர்கோட்டில் வந்து காட்சி தந்தாலும் சிறிலங்கனுக்கு கடன்வாங்கி சாப்பிட்டு வாழுற பழக்கம் போகாது. 😁
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
முற்றிலும் உண்மை.இருந்த மரியாதையும் போய்விடும்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
சாவகச்சேரி மீன் சந்தையிலை போய் டிஸ்கவுண்ட் கேக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேணும் 🤣
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
நேரடியாகவே நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள் விசுகர்!👍 இதற்கு இடக்கு முடக்கு பதில் சொல்லாமே தவிர நீதி நேர்மையான பதில்கள் இல்லை. எந்த நாட்டில் இனவாதம் ,மதவாதம் இல்லை? இதே கேள்வியை ஈழ மண்ணில் கேட்பதாயின் இன்னொரு கேள்வி போனஸ்! அது எதுவென்றால் சாதி வேகுபாடு எங்கில்லை?👈