Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. மோகன் அவர்களுக்கு இன்றைய நிலை சம்பந்தமாக மேலும் சங்கடங்களை கொடுக்காமல் தற்போதைய நிலையில் இருப்பதுதான் எனக்கு அழகு.உங்கள் கரிசனைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙂
  2. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், SA அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Kane Williamson 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? NZ 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Fazalhaq Farooqi 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AFG 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Hardik Pandya 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  3. வழமை போல் உங்கள் எழுத்துக்களும் கதை சொல்லும் விதமும் மிகப்பிரமாதம்.👍🏼
  4. ஏனெண்டால் நம்ம மிளகாய்த்தூளின்ர மகிமை அப்பிடி....😎 எதுக்கெடுத்தாலும் செத்தல் மிளகாய்,பச்சை மிளகாய்..... கெட்ட கேட்டுக்கு போத்தில் மிளகாய்த்தூள் வேற.....நம்மளாலேயே மிளகாய்த்தூள் கொடுமை தாங்கேலாமல் கிடக்கு....😔 வெள்ளைக்காரன் எங்கட உறைப்பு கறியளிலை வாய் வைப்பானே?😂
  5. அவர்கள் பூனையும் எலியும் விளையாட்டு விளையாடுவார்கள்.அவர்களுடன் எமது தமிழ் அரசியல்வாதிகளும் சேர்ந்து விளையாடுவார்கள்.
  6. போயும் போயும் சிங்கள இனவாத அரசு அல்லது இராணுவம் கட்டிய விகாரையை இடிக்கும் சந்தர்ப்பம் வருமென நினைக்கின்றீர்களா பாஞ்ச் ஐயா? 😀 இனிமேலாவது நடக்கிற கதையை கதைப்பம்.
  7. நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல. இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்....... தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது. அனுபவங்கள்.
  8. பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும். இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள்.
  9. தம் ஆரசியல் இலாபத்திற்காக ஏதோ ஒரு வழிகளில் தம் போர்வெற்றியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
  10. எழுத்துக்களும்,சம்பவங்களும் வாசித்ததையே மீண்டும் வாசிக்க தூண்டுகின்றது.👍🏼 தொடருங்கள்.
  11. ஸ - ச்சல நாட்டை (பனி விழும் மலர்வனம் ரி - நளின காந்தி (எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா ) க - கேதாரம் (இது ஒரு பொன் மாலை பொழுது) ம - வஸந்தா (அந்தி மழை பொழிகிறது) ப - காபி (கண்ணே கலைமானே) த - மிஸ்ர சிவரஞ்சனி (அழகே, அழகே தேவதை) எனக்கு பகாடி மாதிரியும் தோணும் நி - பட்தீப் (கண்ணா வருவாயா) ஸ் - சரசாங்கி (மல்லிகையே மல்லிகையே).
  12. அங்கு ஒரு சிதம்பர ரகசியம் ஒன்றுமிருக்காது என நினைக்கிறேன்.தமிழ் சமூகத்தினுள் அனுரவின் வளர்ச்சி இந்திய கொள்கை வகுப்பாளருக்கு வயிற்றில் புளியை கரைக்கும் எல்லோ? 😂
  13. இது அமெரிக்க/இஸ்ரேலின் நேற்று இன்றைய திட்டமாக இருக்காது. நீண்ட கால திட்டத்தை அழிவுகள் மூலமாக தீர்க்கின்றனர். இது யூத - அரேபிய யுத்தங்களுக்கு இன்னும் வழிவகுக்கும் என நான் நினைக்கின்றேன்.
  14. "கரை கடந்த புயல்" கதை அமர்க்களம் 👍
  15. கோட்டை முனியப்பர் மணியோசையோடு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். நீங்கள் போராடுங்கள்.நான் இருந்தபடி இரசிக்கின்றேன்.🙂
  16. பிரச்சனை தீர்ந்த பின்னர் தான்- சிரிப்பேன் என்றால்- உங்களால் கடைசி வரை - சிரிக்கவே முடியாது.
  17. தெரியாமல் தான் கேட்கின்றேன். எமது ஊர்களிலும் வளர்ப்பு பன்றி இறைச்சி சாப்பிடுகின்றார்களா? காட்டுப்பன்றி இறைச்சி தான் சாப்பிடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.அதுவும் எல்லோரும் இல்லை.
  18. CDU யும் AFD யும் தற்போது ஒரு பாதையில் தான் பயணிக்கப்போகின்றார்கள் போல் இருக்கின்றது. இவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கும் குறைவில்லை. எல்லாவற்றையும் விட சொந்த நாட்டில் பிரச்சனை என அகதியாக வந்து விட்டு.....வந்து தங்கிய இடத்தில் தங்கள் அஜாரக வேலைகளை செய்தால் யார்தான் கொதி நிலைக்கு வரமாட்டார்கள்?
  19. மாவை சேனாதிராசா,காசி ஆனந்தன்,வண்ணை ஆனந்தன் போன்றோர் ஈழ விடுதலைக்கான அதிரடி பேச்சாளர்களாக இருந்தார்கள். அது மட்டுமல்ல சிறிமாவின் சிங்கள அஜாரக அரசால் சிறை வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது கூட சைக்கிள் ரியூப்பை தொண்டைக்குள் செலுத்தி பால் ஊற்றி சித்திரவதைக்கு உள்ளானவர்கள். மாவை சேனாதிராசா பல தடவைகள் அரசியல் பேச்சுக்களுக்காக சிறைவாசம் செய்தவர்.பௌத்த சாசன அரசியலுடன் தமிழ்மக்கள் சேர்ந்து வாழமுடியாது என பல ஆதாரங்களை சமர்ப்பித்தவர் மாவை சேனாதிராசா.70,73 களில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியதில் மாவையின் பங்கு அளப்பெரியது. அவரின் இறுதிகால அரசியல் போக்கு கசப்பை தந்தாலும் அவர் முன்னாடி நின்ற பலம் வாய்ந்த தலைவர்களின் அரசியல் போக்குகளையும் நாம் கவனிக்க வேண்டும்.
  20. தடிமல் காய்ச்சலுக்கு கோழி சூப் சுடச்சுட குடித்தாலும் உடல் அமைதிப்படும். சொந்த அனுபவமாக்கும்.🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.