Everything posted by குமாரசாமி
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
தமிழன் இந்துவாகவும் சிங்களவன் பௌத்தனாகவும் இருக்கட்டும். இலங்கை தமிழன் சகல உரிமையுடனும் வாழணும். அதை உங்கள் தோழர் செய்து கொடுப்பாரா?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
வணக்கம் விசுகர்! 🙏 இந்தியாவின் அரவணைப்பில் தான் எமது விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியடைந்தன. இது வரலாறும் உண்மையும் கூட.. ஆனால் அவர்கள் வளர்த்த விடுதலையை முள்ளிவாய்க்காலில் அழித்தர்கள் இதுதான் உண்மை. இந்த இந்தியா உலக நாடுகளுக்கு தோழமை நாடு. உலக அரசியல் நிலமையில் இந்தியாவை எதிர்க்க யாரும் தயார் இல்லை. சீனா உட்பட. இந்தியா சர்வதேசத்திற்கு நேரடியாக அறிவித்து விட்டே முள்ளிவாய்க்கால் அழிவை நிகழ்த்தினார்கள். நிலைமை இப்படியிருக்க... ஈழத்தில் நடந்த போர்க்குற்றம் பற்றி விசாரிக்க யார் வருவார்கள்? அப்படி ஒன்று வந்தால் அமெரிக்கா தொடக்கம் இந்தியா ஐரோப்பா வரைக்கும் போர் குற்றத்தில் வருவார்கள் இல்லையா? நடக்க வேண்டியதை கதைப்போமாக.👈
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
தமிழ் மக்களுடன் சேர்ந்த ஏகோபித்த ஆதரவுடன் அனுரவின் வெற்றி கிந்தியாவை கொஞ்சம் கலங்க வைத்து விட்டது. ஏனென்றால் கிந்தியாயின் அரசியல் துருப்பு சீட்டு ஈழத்தமிழர்கள் அல்லவா. அவர்களே சிங்கள கட்சிக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்தால்......கிந்தியன் ஆட்டம் போட சீட்டு ஏதுமில்லையே.....👈
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சத்தியமாக எனக்கு புரியவில்லை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.நான் தெரிந்து தெரியாமலும் தவறு செய்திருக்கலாம்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இதை நான் மனதளவில் குறிப்பிட்டு எழுதவில்லை. உங்கள் மருத்துவ குறிப்புகள் அவசியமானது. அதை தாங்கள் எழுதும் போது இன்னொருவரை தாக்கியே எழுதுகின்றீர்கள்.அந்த தாக்குதல் அவசியமில்லை என்கிறேன். இது எனக்கு விளங்கவில்லை.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அயல் நாடுகளில் தெளிந்த நீரோடை என்பது கிந்தியனுக்கு கெட்ட கனவு. அவனுக்கு அயலவன் நிம்மதியாக வாழ பிடிக்காது.
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
ஒரு கட்சி 75 வருச கொண்டாட்டத்தை கொண்டாடுது எண்டால் அந்த கட்சி சாதித்த சாதனைகளையும் பட்டியலிட வேண்டும்.
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
எல்லாம் முடிஞ்சி இப்ப அனுரவ திட்டுற நிகழ்காலம்..😂
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
உங்களைப்போன்ற ஜேசுநாதர்களின் கருத்துக்களை படித்து யாழ்களம் நுழைந்தவன் அல்ல நான். அன்றைய கூட்டமும் சிநேகிதம்களும் புரிந்துணர்வுகளும் கருத்து பரிமாற்றங்களும் வேறு. அது ஒரு இனிய காலம். அன்றையவர்கள் வக்கிரத்துடன் யாழ்களம் வருவதுமில்லை.வக்கிரமாக பழகியதும் இல்லை. ஆனால் யாழ்களத்தில் வக்கிரத்தின் முன்னோடியானவர் தாங்கள், இது எனது கண்ணோட்டம்.
-
ஊதாரி ஊடகங்கள்!
அருமை...அருமை. கோதாரி ஊடகங்கள் என வந்திருக்க வேண்டும். நல்லது செய்ய எவ்வளவோ இருக்க மிக கேவலமாக பொது ஊடகங்களை பயன்படுத்துகின்றார்கள்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
எழுதுங்கள் உங்களுக்கு பொழுது போகவேணும் எல்லோ. அதுக்காக நேரம் பொன்னானது மண்ணானது எண்ட பில்டப் இனியும் வேணாம். நேரம் பொன்னானது என்பவர்கள் ஏன் அரட்டை கருத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்? விலகி போக வேண்டியது தானே?
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
என்னப்பா அமீரையும் திட்டுறானுவள் சம்பந்தனையும் திட்டுறானுவள் சுமந்திரனையும் திட்டுறானுவள் சாராயக்கடை சிறியையும் திட்டுறானுவள் சிவாஜிலிங்கத்தையும் திட்டுறானுவள் சாணக்கியனையும் திட்டுறானுவள் தம்பி அர்ச்சுனாவையும் திட்டுறானுவள் ஏன்.... எங்கையோ கிடக்கிற சீமானையும் திட்டுறானுவள்..... அடேய்களா என்னதான் வேணும் உங்களுக்கு? 🤣
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஜேர்மனிய அரசியலில் உண்மைகள் நியாயங்களை சொன்னால் நாஷி. இலங்கை அரசியலில் உண்மைகள் நியாயங்களை சொன்னால் துரோகி. உலக அரசியலில் உண்மைகள் நியாயங்களை சொன்னால் நன்றி கெட்டவன்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
உங்களை நான் ஏதாவது கேட்டேனா? நான் உங்களை யாழ்கள கருத்தாளர் என்பதால் நன்கு மதிக்கின்றேன். மரியாதையும் இருக்கின்றது. கீரைக்கடை விடயங்கள் எல்லா திரிகளுக்கும் ஒவ்வாது. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். யாழ்களத்தில் நான் உங்களுடன் அதிகம் விவாதித்தால் என்னை தடை செய்துவிடுவார்களோ என்றொரு அச்சமும் எனக்கு அண்மைக்காலமாக இருந்து வருகின்றது.எனவே நான் எழுதுவது பிழையென்றால் பெட்டீசம் போடுங்கள். என் கருத்திற்கு பதில் எழுதாதீர்கள். அல்லது ஒரு சிவப்பு புள்ளியிடுங்கள்.உங்களுக்கும் ஆத்ம திருப்தியாகும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் ஒரு காலத்தில் கிரீன் கட்சியின் ஆதரவாளனாகவும் வாக்காளனாகவும் இருந்துள்ளேன். ஆனால் என்று போர் மூர்க்கம் கொண்டார்களோ அதன் பின் அவர்களை கிஞ்சித்தும் பார்ப்பதில்லை. வெறும் அரசியலுக்காக வெத்து வேட்டுக்களை விதைத்தவர்கள். போரில்லா உலகம் வேண்டும் என்ற கட்சியினர் இன்று உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதே கட்சியினர்தான் ஒருகாலத்தில் சவூதி அரேபியாவுடனான ஜேர்மனியின் ஆயுத விற்பனையை எதிர்த்தவர்கள்.அது மட்டுமல்லாமல் அது சம்பந்தமான அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய வைத்தவர்கள். ஈராக் போரை எதிர்த்தவர்கள்.லிபியா போரை எதிர்த்தவர்கள் இன்று முக்கிய பதவிக்கு வந்தவுடன் உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் அவசியம் என்கின்றனர். கெட்டவர்கள்.😡 ஆனால் எனக்கு வேறு கட்சி தேர்வுகள் உண்டு 1) Die Linke 2) Bündnis Sahra Wagenknecht இவர்கள் மேற்குலகின் வெளி அரசியலை முற்றாக எதிர்ப்பவர்கள்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
கிந்தியா அனுரவிற்கு இவ்வளவு ராஜ மரியாதை கொடுக்கின்றது எனும் போதுதான் ஈழத்தமிழனாகிய எனக்கு பதட்டம் ஏற்படுகின்றது. இலங்கை பழைய ஜானாதிபதிகளுக்கு இவ்வளவு தாரை தம்பட்ட வரவேற்புகள் இருந்ததில்லை.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
பொலித்தீன் இல்லாமல் காவோலையும் கிடுகையும் வைத்து வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். நிலா சோறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தனர்.அப்படி நானும் கொஞ்சக்காலம் வாழ்ந்துள்ளேன். அரசியலில் புலம்பெயர்ந்தவன் பாடம் எடுக்கக்கூடாது.ஆனால் காவோலை என்றவுடன்.......?🤪
-
குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு
இதே மாதிரி, இதே பாணியில் அன்றொரு நாள் நான் எழுதியதிற்கு என்னை கருத்து எழுத தடை செய்திருந்திருந்தார்கள்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடக்குது? 🤣
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அதென்றால் உண்மைதான்.....😂
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
எனக்குரிய பதிலை நீட்டி/விளக்கமாக எழுதியுள்ளீர்கள். அதற்கு முதற்கண் நன்றிகள். சொந்த கருத்துக்கள் எண்ணங்களை எழுத்தாக எழுதுவது சுலபம் இல்லை என்பதை நானும் அறிந்தவன். அதனாலேயே உங்கள் எழுத்துக்களை மதிப்பவர்களில் நானும் ஒருவன். நிற்க... இரத்தின சுருக்கமான என் கருத்து என்னவெனில்.... உலக அரசியல் என்பது காட்டாறு போன்றது. அதில் நாணல் புற்களாக நிற்பது வலு சிரமம். இதில் சிக்கி நிற்பது ஈழத்தமிழர் அரசியல். ஈழத்தமிழர்களாகியவர்கள் இன்னும் ஒரே வட்டத்துக்குள் நின்று எதுவுமே சாதிக்கப்போவதில்லை என்பது என் கருத்து. வரலாறுகளையும் தமிழர் பெருமைகளையும் பேசிக்கொண்டிருக்காமல் அடுத்த நகர்கவகளை நோக்கி பயணிப்போம்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
வடபகுதியில் பெரும்பாலான மண் புழுதிமண். அங்கே உள்ள பிரச்சனை அவர்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரணமாக மூன்றடுக்கில் விதம் விதமான கல் அடுக்கியே ஒரு வீதியை அமைப்பார்கள். பெரிய பாறாங்கல் பரப்பி அதன் மேல் அமைத்த வீதிகளே வெள்ளங்களுக்கு காணாமல் போய் விடுகின்றது. இந்த நிலையில் அங்கிருக்கும் ரோட்டு ஓவசியர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர் பாடம் எடுக்க முடியாது.😂
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
சிங்களம் தமிழர்க்குரிய உரிமைகளை தீர்க்க ஆர்வமாக இருந்தாலும் இந்தியா அனுமதிக்குமா? பழைய வரலாறுகள் சம்பவங்கள் உறுதி மொழிகள் எல்லாவாற்றையும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கோசானுக்கு ஏற்கனவே பல மிக்ஸர்கள் அத்துப்படி போல் தெரிகின்றது...🤣