Everything posted by குமாரசாமி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முதலே எதிர்பார்த்தது தானே 🤣
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
அனுர ஆட்சியை பற்றி சாத்திரம்,முன்னறிவுப்புகள் எதுவுமே சொல்ல முடியாது. இருந்தாலும் எனது கணிப்பு என்ன வென்றால் இலங்கையின் முக்கிய பிரச்சனையாகிய தமிழர் பிரச்சனையை 1960 ம் ஆண்டு இருந்த நிலைக்கு இழுத்துக்கொண்டு வருவார் என நினைக்கின்றேன்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஓம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனியாவது இந்த தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளை ஒன்றிணைய உதவட்டும். சிந்திக்கட்டும். உதாரணத்திற்கு என் இனத்தை நான் சார்ந்தவனே நெறிப்படுத்த வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ்தேசிய கட்சிகள் மீது இருந்த அதிருப்தி தான் வாக்குகளின் சிதறல்களுக்கு முக்கிய காரணம் இந்த தோல்வியில் இருந்து முதன்மையான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் சுமந்திரன் கஜேந்திரன்கள் உட்பட தங்களை மீள்சீரமைத்து மீண்டும் மிகவும் தீவிரமான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
அரபு உலகத்தை மேற்குலகு என்றுமே சீர்திருத்த முடியாது. அது மதம் சம்பந்தப்பட்ட கடமைகள்.மத நீதியாக நிச்சயிக்கப்பட்டவை.
-
சாகும் போது கூட சமைச்சு வச்சுட்டு தான் சாகணும் 😟
பல குடும்பங்களில் அன்பு பாசம் எனும் பெயரில் பெண்ணடிமை மறைந்திருக்கின்றது 😀
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
வணக்கம் வளவன்! நான் விரும்பும் கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். அது ஒரு புறமிருக்க... யாழ்களம் ஒரு பொதுவான களம் என நான் மட்டும் கருதியிருந்தேன். ஆனால் நான் யாழ்களத்தில் இணைந்த காலம் தொட்டு படித்தவர்கள் படிக்காதவதர்கள் என்றொரு வட்டம் இருக்கின்றது என கண்டு கொண்டேன். இதை எத்தனை பேர் உணர்ந்தார்களோ தெரியவில்லை. நான் மட்டும் உணர்ந்துள்ளேன். இதன் காரணமாகவே நான் யாழில் இணைந்த காலங்களில் எனது சுயவிபரத்தில் தொழில் கோப்பை கழுவுதல் என குறிப்பிட்டிருந்தேன். இது எனது சுய பாதுகாப்பிற்காக மட்டுமே. ஊரில் யாழ்ப்பாணத்தவரிடம் அல்லது தமிழரிடம் இருக்கும் படிச்ச கிறவுட் மேட்டுக்குடி அட்டகாச அஜாரகங்கள்/குணங்களை எங்கு கண்டாலும் அடியோடு நறுக்க என்றுமே பின்னிற்க மாட்டேன். நன்றி உங்கள் பதில் கருத்திற்கு...
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழர்களின் அடிப்படை பிரச்சனை தீர்க்க வல்ல உங்கள் அபிமான அரசியல்வாதிகளின் பெயர்களை சொல்லுங்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மாற்று அரசியல் தமிழர்களுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கலாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
TZ
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கையின் 100 வருட தமிழ் தேசிய அரசியல் இருப்பு மூழ்கிக்கொண்டு இருக்கிறது... ☹️
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழர்களுக்கு நிறுதிட்டமான அரசியல் இல்லாததின் விளைவுகள் தான் இவை. எமது மூத்த அரசியல்வாதிகள் விட்ட தவறுகளினால் முளைத்த கோழிச்சூடன்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அந்த வடு தமிழினத்தில் என்றும் இருக்கும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்பாக வைத்தியர் அர்ச்சுனா பொலிசாருடன் கலவரம்... கலவரத்தையடுத்து சக வேட்பாளர் கெளசல்யாவுடன் அங்கிருந்து சென்றார் அர்ச்சுனா. ஒரு படிச்ச மனிசன் மற்றவனை பாத்து நாய் நாய் எண்டு திட்டுறது அழகே? அதுவும் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு....🦢- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிலோன்ல நடக்கிற இந்த தேர்தலுக்கு பிறகாவது சிலோன் ரூபாயும் ஈரோவும் சரிசமனான பெறுமதியாய் வர வைரவ பெருமானை வேண்டுறன். 🙏 😎- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அமைதியாக,எகத்தாளம் இல்லாமல் மற்றவரை மட்டம் தட்டாமல் தரமான விளக்கத்திற்கு நன்றி வளவன் 👍 🙏- மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?
ரொம்ப தாங்ஸ் கந்தையர் 😎- இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
எல்லோரும் சரி சமம் என்பது என் கொள்கை.🙏 எனது அதே கொள்கையை சவூதி,ஈரான் போன்ற நாடுகளில் என் கொள்கையை விதைக்க முடியாது. அவர்களுக்கென நாட்டு எல்லைகள் போன்று சட்டங்களும் நீதி முறைகளும் உண்டு. அதை நாம் மதிக்க வேண்டும். அதிலும் மத ரீதியாக அவர்களின் மத கட்டுப்பாடுகளை அந்தந்த நாட்டு எல்லைகளுக்குள் மதித்தே ஆக வேண்டும். இப்போது உங்களிடம் என் கேள்வி என்னவென்றால்..? ஈரானில் மட்டுமா இப்படியான அடக்குமுறைகள் உள்ளன? ஏனைய முஸ்லீம் நாடுகளில் இப்படியான அடக்கு முறைகள் இல்லையா? அதைப்பற்றி இந்த மேற்குலகம் ஏன் பேசுவதில்லை?- சாகும் போது கூட சமைச்சு வச்சுட்டு தான் சாகணும் 😟
ஆண்களும் சமைக்கின்றார்கள்,வீட்டு வேலைகளும் செய்கின்றார்கள் தான் இதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பாலான ஆண்களின் அடிமனதில் சமையல் என்றால் பெண்கள் தான் முதல் நினைவாக வருவார்கள்.இதை பன்னாட்டு மக்களிடம் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன். பல இடங்களில் மனைவியின் வேலையை நானும் பங்குபோட்டு சரிசமமாக வேலை செய்கின்றேன் என சொல்லும் ஆண்களையே பார்த்திருக்கின்றேன். 🙂- மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?
இண்டையிலை இருந்து மிளகாய் உறைப்பு சாப்பிடாமல் விடுறன்...😎 அறிவாளியாய் உருவெடுக்கிறன்... அதே போல மஞ்சள் டோன்ட் டச் 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
மரவள்ளிக்கிழங்கு ஆபிரிக்காவில் முக்கிய உணவு என நினைக்கின்றேன். இருந்தாலும் ஆசிய நாடுகளிலும் இதன் மகத்துவம் அளப்பெரியது. எமது ஊர்களில் ஏழைகளின் முக்கிய உணவாக மரவள்ளிக்கிழங்கு இருக்கும். கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளுக்கு இணையாக மரவள்ளிக்கிழங்கிலிருந்தும் தயாரிப்பார்கள். இணைப்பிற்கு நன்றி சுவியர் 👍- சாகும் போது கூட சமைச்சு வச்சுட்டு தான் சாகணும் 😟
பொதுவாக பெரும்பாலான உலகம் முழுவதும் இருக்கும் ஒரு சிந்தனை என்னவென்றால் வீட்டு சமையல் அறை என்றால் அம்மாக்கள் நினைவு அல்லது அக்கா தங்கச்சி நினைவு வருவது ஏன் என்று தெரியவில்லை? உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இதென்ன கோதாரியாய் கிடக்கு.... வர வர நான் எது சொன்னாலும் நக்கலாய்த்தான் கிடக்கு போல.. - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.