Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்

Everything posted by குமாரசாமி

  1. மத வழக்கம் ஒன்று உள்ளது. நல்லூருக்கு மேலாடை இல்லாமல் போவது போல்.... புத்த பிக்குகளிடம் போனால் வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது அந்த மத வழக்கம்.
  2. மணம் முடித்து 29 வருடங்கள்! மூன்று பிள்ளைகளுக்கு பெற்றோர். அந்த இளைமை காலத்தில் சகிப்பு தன்மையுடன் வாழ்ந்தவர்கள்.அந்த பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி திருமண வயது வந்த பின் பெற்றோர் பிரிவதை நியாயப்படுத்துகின்றீர்கள். சாதாரணமாக இளவயதுகளில் சண்டை பிடித்து வாழ்ந்து முதுமைக்காலத்தில் உனக்கு நான் எனக்கு நீ என வாழும் வாழ்க்கைதான் மனித வாழ்க்கை. மனிதனின் பாதி வாழ்க்கையில் மண வாழ்க்கை முறிவென்றால் அதற்கு காரணங்கள் வேறாக இருக்கும்.
  3. அவர்கள் தொப்பி பிரட்டிகள் என்பதை யாழ்களம் ஏற்காது. ஆனால் நான் வாழ்ந்த சமூகம் ஏற்கும்.
  4. அந்த இரு தமிழர்களும் அமைச்சரவையில் இடம் பெறாவிட்டிருந்தால்..... தமிழர்களுக்கு பதவியில்லை ,இனவாத அரசாங்கம், அது இது என பல ஆயுதங்களை தூக்கியிருப்பார்.
  5. தமிழினம் மொழி சார்ந்த இனம்.மத சார்பு இனமல்ல. முஸ்லீம்கள் மொழி சார்ந்த இனமல்ல. அவர்கள் மதத்தை வைத்து மட்டுமே உலக அரசியல் செய்பவர்கள் .உலக வாழ் முஸ்லீம்களுக்கு மதத்தை தவிர மொழி சார்பு எதுவுமில்லை.கிட்டத்தட்ட பார்ப்பனியர்களைப்போல்.....முஸ்லீம்களுக்கு மொழியும் தேவையில்லை.அந்தந்த நாட்டு வரைமுறைகளும் தேவையில்லை. போற வாற இடமெல்லாம் அல்லஃகு அக்பர். அதுவே அவர்கள் தாரக மந்திரம். நான் மனித அழிவுகளையும் மனித/இன அடக்கு முறைகளையும் விரும்புபவனல்ல. ஆனால் இஸ்ரேல் மத்திய கிழக்கில் செய்யும் பொதுமக்கள் அழிவுகளை பார்த்து கண் கலங்கினாலும் முஸ்லீம்களின் வரட்டுக்கர்வம் அழிய வேண்டும் என விரும்புகின்றேன்.
  6. புன்னகையும் மெளனமும் மிகப்பெரிய ஆயுதங்கள்... புன்னகை பல பிரச்சினைகளைத் தீர்க்கும்... மெளனம் பல பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும்...
  7. மோகன் என்ன கஷ்ரப்பட்டாரோ யாருக்குத்தெரியும்..... நன்றி ஐயா 🙏
  8. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாளாம் என்பதை காலம் மறுபடியும் நிரூபித்துள்ளது.😂
  9. மொத்தம் எட்டுச் சுற்றுகள். ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்கள். மொத்தமாக பதினாறு நிமிடங்கள். தோற்றாலோ, வென்றாலோ, 20 மில்லியன் டாலர். ஒரு நிமிடத்துக்கு 1.25 மில்லியன் டாலர். 58 வயதான மைக் டைசன் பெற்றுக்கொண்ட ஊதியம். நிஜப் போட்டியா, பாவனைப் போட்டியா கவலையில்லை. உலகம் முழுக்க, விழித்திருந்து பார்த்த குத்துச்சண்டை நிகழ்வு. “படி.. படி… படிக்காவிட்டால் நாளை மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று திட்டிப் படிக்கவைத்த உலகம் போய், இப்போது நவீன வியாபார உலகமாக மாறிவிட்டிருக்கிறது. எந்த விதத்திலும் கோடி கோடியாகப் பணத்தைச் சம்பாதிக்க முடியுமென நம்ப வைத்திருக்கிறது. மைக் டைசன் ஒரு சிறந்த வீரர் என்பதிலோ, திறமைசாலி என்பதிலோ எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் இதற்கெல்லாம் தகுதியானவர்தான். நான் சொல்ல வந்தது அவரின் தகுதிபற்றியல்ல. ஒரு நிமிடத்திற்குப் பத்து இலட்சம் டாலர்களை அள்ளிக் கொடுக்கும் நவீன வியாபாரச் சந்தை பற்றியே! முன்னரெல்லாம் உடல் உடைந்து, நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து, ஒரு மாதச் சம்பளமாகக் கொண்டுவரும் பணத்தை, இன்றைய இளைஞர்கள் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒரு நாளில் கொண்டு வருகிறார்கள். இது வியப்பைக் கொடுத்தாலும், கூடவே ஒருவிதப் பயத்தையும் கொடுக்கிறது. இதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒருவிதப் படிநிலையென ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
  10. ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது வாராத கோபம் தன் இனத்தை பற்றி பேசிய போது வருகிறதென்றால் ..... அதன் பெயர் திராவிடம்.
  11. ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சில நாடுகள் காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களை சுதாரிக்க முடியாமல் திணறி தள்ளாடுகின்றன. 😀
  12. ஈழத்தமிழ் அரசியலில் அர்ச்சுனாவை போல் மாற்று அரசியல்வாதிகள் உருவாகி விட்டால் மாவை தொடக்கம் சுமந்திரன் சிறி அண்ணா வரைக்கும் பாதிப்பு வருமா இல்லையா? இஞ்ச பாருங்கோ எல்லா இடமும் அநுர அலை. ஆனால் அர்ச்சுனா இடத்திலை....????? ஆர்ரை அலை?
  13. இப்பவே பயங்கர ஆட்டம். இது இன்னும் வெளியே தெரியவில்லை. ஜேர்மனி ஓடின வேகத்தில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கு......வேகம் வருகிற வருடம் குறையும் என எதிர்பார்க்கலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. பல நிறுவனங்கள் திவாலாகி கொண்டு போகின்றது. ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகள். இந்த நிலையில் உக்ரேனுக்கு மிண்டு கொடுக்க வெளிக்கிட்டு சொல்லணாதுயரங்கள். அதை விட ரஷ்ய எரிபொருள் தடை இன்னுமொரு பெரிய இடி. ஜேர்மனி தொழிற்சாலை நாடு. அதற்கு காட்டாறு போல் 24மணி நேரமும் எரிவாயு வேண்டும்.அற்கு மலிவான ரஷ்ய எரிவாயு அவசியமாக இருந்தது. இன்று அது இல்லை. இருமடங்கு விலையுடன் நோர்வேயிடமும் அமெரிக்காவிடவும் இருந்து வரவேண்டிய அவசியம். அது கொம்பனிக்கு கட்டுப்படியாகவில்லை. இதனால் வேலை இழப்புகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றது. அதை விட ஜேர்மனியை நோக்கி அளவிற்கு அதிகமாக அகதிகள் வருகையும் இவர்களுக்கு பெரும் சுமையும் தலையிடியுமாகி விட்டது. இந்த அகதிகள் விடயத்தில் ரஷ்ய அதிபரும் துருக்கி அதிபரும் பக்காவாக செயல்படுகின்றார்கள் என பல இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன். இத்துடன் என் அறுவைய முடித்துக்கொள்கின்றேன். 😂
  14. உண்மை பொய் தெரியாத செய்தி எண்டாலும் நான் நினைக்கிறன் "உழவன் சுமந்திரன்" உந்த வேலையளை செய்யக்கூடிய ஆள்...
  15. அர்ச்சுனா ஒரு வெளிப்படையான மனிதர் போல் தெரிகின்றது. நல்லது நடக்கவேண்டும். அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுக்கு என் வாழ்த்துகள். உங்கள் அபிலாசஷைகளை சோரம்போக விடமாட்டார் என நம்புகின்றேன்.
  16. இப்பவும் ஜேர்மனிய தொலைக்காட்சியில் ஒரு அரசியல் கலந்துரையாடல் பார்த்தேன். அதனுள் உள்ள சாரம்சம் ஜேர்மனிக்கு உக்ரேன் தேவை. அதே தேவை அமெரிக்காவுக்கும் உண்டு. எதற்கும் அடுத்த வருடம் ஜேர்மனியில் ஒரு ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொருளாதார கொள்கை விடயத்தில் ரம்ப் சார்பானவர் ஆட்சிக்கு வருவார். அதாவது ரம்ப் பதவியேற்க இங்கே ஜேர்மனியில் ஆட்சியின் கைகள் மாறும். அதன் பின் பல சாத்தியங்கள் உண்டு. உக்ரேனும் தோற்ற மாதிரி இருக்காது. ரஷ்யாவும் தோற்ற மாதிரி இருக்காது. நேட்டோவின் நிலைமை கவலைக்கிடம்.
  17. ஜனவரி 20க்கு இடையில் போர் நிறுத்தங்கள் ஏற்படலாம் என பலர் கதைக்கின்றார்கள். 😂
  18. @MEERA @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂
  19. தெலுங்கர்களை பற்றி குறையாக சொன்னால் தமிழ்நாட்டு முதல்வருக்கு கெட்ட கோபம் வரும் தானே....😉
  20. இந்த உலகத்திலை 100 வீதம் யோக்கியன் இருக்கிறானா இல்லையே. அது போல்தான் மைக் டைசனும் ஒரு சாதாரண மனித குணம் உள்ளவர். உலகின் முதல் நிலை அதி எடை பிரிவு(heavy weight) குத்துச்சண்டை போட்டியில் உலக புகழ் மைக்டைசனை வீழ்த்தி ஜேக்பால் பட்டம் வென்றார்.. வெற்றி பெற்றவருக்கு 330 கோடி பரிசுத்தொகை வழங்கியதுடன் தோற்ற மைக் டைசனுக்கு 169 கோடியும் கிடைத்துள்ளது.. ஆச்சரியம் என்னவென்றால் மைக்டைசனின் வயது 58! எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற ஜேக் பாலின் வயது வெரும் 27 தான்.. 58 வயதில் தைரியமாக களமிறங்கிய போதே நீ வெற்றி பெற்றுவிட்ட தல..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.