Everything posted by குமாரசாமி
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இஞ்ச எழுதின கருத்துக்கள தளபதி விஜய் பாத்தார் எண்டால்...... 😋
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
நேர காலத்துக்கு படுத்து எழும்பினால்த்தான் உடம்புக்குள்ள இருக்கிற சுரப்பிகள் ஒழுங்காய் சுரக்குமாம். இத நா சொல்லல. வைத்தியர்கள் சொல்லுறாங்க.😂
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
இவங்கள் எழ எழ குண்டு போடுவான்கள்.😎
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இவருக்கு ஏதோ எக்கச்சக்கமான விசயங்கள் தெரிஞ்சிருக்கு....எண்படடியால ஆள பின் தொடத்தான் இருக்கு..😀
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
https://x.com/BowesChay/status/1851136170752663681 இப்படியொரு செய்தியும் உண்டு.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பணும் இல்லை என்பார்கள். 😄
-
பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
பாப்பம் இந்த முறை. புதிசாய் வந்தவையள் ஏதாவது வித்தியாசமாய் செய்யினமோ எண்டு. இல்லாட்டி அரைச்ச மாவையே திருப்பி அரைக்கப்போயினமோ தெரியாது 😎
-
ஜாம்ஷிட் ஷர்மாத்தின் மரணதண்டனையை ஈரான் நிறைவேற்றியது
முன்னரெல்லாம் ஜேர்மனியில் அரசியல் முதிர்ச்சியும்,உலக அனுபவமும் உள்ளவர்கள் தான் அரசியல்வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். அவர்கள் பல உலக குழப்ப நிலைகளிலும் சகல நாடுகளுடனும் நல்ல உறவையே வைத்திருந்தார்கள்.வியாபார ரீதியிலும் எல்லா நாடுகளுடனும் சுமுக நிலையிலேயே இருந்தார்கள். ஆனால் இன்று இருக்கும் அரசியல்வாதிகள் சொந்த நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் திணறுகின்றார்கள்.பல நாடுகளுடன் நல்லுறவும் இல்லை. அன்னலேனா பேர்பொக் சொல்லி வேலையில்லை.ஒரு முட்டாள்த்தனமான வெளிவிவகார அமைச்சர்.😂
-
மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் தடுக்க முடியாதது ஏன்?
பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிடின் மேற்குலகின் வீழ்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.மூன்றாம் உலக நாடுகள் விழிப்படைந்த அளவிற்கு மேற்குலகுகள் இன்னும் விழிப்படையவில்லை என நான் நினைக்கின்றேன். மேற்குலகு இன்னும் மற்றொரு இனத்தை கட்டியாழும் கற்கால நினைப்பிலேயே காலத்தை கடத்த நினைக்கின்றது போலும்....
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அடேங்கப்பா! உங்கள் குழுவாதத்திற்கு என் பாராட்டுக்கள்.😄 உங்கள் கருத்திற்கு நன்றி செலுத்தியவர் யாழ் களத்தை கண்ணியமாகவும் கலங்காமலும் பார்த்துக்கொள்வார் என நான் நம்புகின்றேன்.🤣 நீங்கள் உங்கள் மனதை சிதறிடிக்காமல் நீண்ட விடுமுறையை கழிக்க என் வாள்த்துக்கள்.😎
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
இன்று இஸ்ரேல் சகல அரேபிய நாடுகளின் கண்ணில் விரலை வைத்து ஆட்டுகின்றதென்றால் அது யாருடைய பலம்? அது போல் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் வருவார்கள்.
-
இவங்க இப்படிதான்
கிந்தியர்களுக்கு என்று ஒரு தனிக்குணம் உள்ளது. அதை யாராலும் திருத்த முடியாது. இடம் பொருள் ஏவல் பார்க்க மாட்டார்கள்.இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் இனவாத வர்ணங்கள் பூசுவர்.
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
இவர் தான் நரி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்😁
-
5 வயது பேரனின் கேள்வி
இலங்கை நாட்டின் உள்ள அரசியல் பிரச்சனையால் புலம்பெயர்ந்தோம் என சொல்லிவிடுங்கள். உங்கள் பேரன் இன்னும் கேள்விகளை கேட்பார் என நினைக்கின்றேன். அப்போது இலங்கை ஒடுக்கு அரசியலையும் ஜெர்மனியின் சுதந்திர அரசியலையும் ஒப்பிட்டு விளங்கப்படுத்த முயலுங்கள். உலகில் உள்ள ஒவ்வொரு இன மக்களுக்கும் சொந்த நாடு இருக்கின்றது. எமக்கு ஒரு நாடில்லை என்பதையும் உணர்த்த முயலுங்கள். அது சரி 5 வயது பேரனுக்கு இதுவெல்லாம் சாத்தியமா? 🙂
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எல்லாரும் புதுக்க புதுக்க வெளுத்து வாங்குவார்கள். போகப்போகத்தான் எல்லா வெளிச்சமும் தெரியும். சத்தம் போட்டு ஒலிவாங்கி முன் பேசுவதால் எல்லோரும் அரசியல்வாதியாக முடியாது. தம்பி விஜய் நேரடியாக சினிமாகாட்சி போல் முதல்வர் கதிரையை நோக்குகின்றார். அது சரிவராத காரியம் ராசா.....😁 அரசியல் என்பது கரடுமுரடான நெடிய பாதை. அதில் பயணிப்பது சுலபமில்லை.😎 நடிகர் விஜய்ய பார்த்து பரிதாபப்படுகின்றேன். 😂
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திராவிடம் இல்லாமல் தமிழாக வந்தால் சந்தோசம்.
-
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
ஆர் போட்டுத்தள்ளினது?
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
அந்த றோட்டாலை தான் சந்தைக்கு போறனான்...😀
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
என் கட்சிக்காரர் அப்படி என்ன செய்யக்கூடாத கோதாரிகளை செய்து விட்டார்? 😎
-
நான் உங்கள்... மின்கம்பம்
கவிதை அருமை. இன்னும் எழுதுங்கள்.
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
சசிகலாவின்ர வீட்டுக்கு கல்லெறிஞ்ச ஆக்களின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை இருக்கினம். சசிகலாவின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை தான் இருக்கினம். வாற டிசம்பர் மாதம் ஒரு பெரிய பங்சனிலை இரு பகுதியும் சந்திக்கும் எண்டு நினைக்கிறன். சந்திச்சால் கொத்துரொட்டி காரசாரமாய் இருக்கும்...🤣 தம்பி @nunavilan சௌக்கியமா? 😀
-
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்
அடுத்ததொரு ஆட்சி கவிழ்ப்பு வந்தால் திருப்பியும் சிங்கன் ரணில்தான் ஜனாதிபதி. 🤣
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
என்னது இஸ்ரேல் இவ்வளவு நாளும் சும்மா இருந்ததா? இஸ்ரேல் எனும் நாடு உருவாகிய நாள் தொடக்கம் சொறிதலும் சொட்டலும் தானே நடந்து கொண்டிருக்கின்றது விசுகர் 😎
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஆயுத உதவி தொடக்கம் சகல விதமான உதவியையும் செய்ய ஆட்கள் இருந்தால் குப்பனும் சுப்பனும் அதி தீர வீரர்கள் தான்....
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
அமெரிக்கா அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு....சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறேதுமில்லை. 😂