Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இனி பெஞ்சன் கிஞ்சன்,பட்டா கிட்டா எண்டு எக்கச்சக்கமாய் எக்கவுண்டிலை வந்துகொண்டே இருக்கும். இன்றைய அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்தியேக சட்டங்களும் வசதிகளும் இருக்க பயமேன். 😎
  2. நமது அன்றாட வாழ்வும் பாலியலும் .... இன்றைய காலகட்டத்தில் உலகில் பெரும்பாலானோர் அவசர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அந்த குடும்ப வாழ்க்கையிலே எவ்வளவு சிரமங்கள்,சலிப்புகள்,தடங்கல்கல்கள் என கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேலை சிரமங்களினால் குடும்ப அன்னியோன்யங்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. பல இடங்களில் விவாகரத்திலும் கதைகள் முடிகின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமாக பாலியல் சம்பநதப்பட்ட விடயங்களும் அமைகின்றன நான் நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். பேச வெட்கப்படும் விடயங்களை பேசுவோம்.💕
  3. உண்மைதான். இனியும்,இன்றும் கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடி தமிழ் குடி என கர்ச்சித்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. அடுத்து நடக்க வேண்டியதை கவனிக்க வேண்டும். கூகிளில் உலகின் மூத்த மொழி தமிழ் என்றுதான் இருக்கின்றது. அதற்காக இந்த உலகம் தமிழை கட்டிக்கொண்டு அழத் தயாரில்லை.
  4. முன்னர் புளொட்டிலிருந்து கட்சி தாவும் போது அபிவிருத்தி அபிவிருத்தி என ஆவேசம் கொண்டதின் அர்த்தம் இதுதானா? 😂
  5. கொழும்பில ஆகாயத்த தொடுற அளவுக்கு சீனாக்காரன் தாமரைக்கோபுரத்தை கட்டிக் குடுத்திருக்கிறான். அதில இருந்து தமிழ்நாட்டையும் முழு இலங்கையையும் கண்காணிக்கலாம் எண்டொரு கதையும் இலங்கையில உலாவிக்கொண்டுதான் இருக்குது.
  6. நானும் குமாரசாமிய சுருக்கி " வட குமார" எண்ட பேரில கட்சி தொடங்குவம் எண்டு பாக்கிறன். சின்னம் வடலி 😁
  7. சென்ற தேர்தலில் ரவிராஜ் மனைவி கண்கலங்கிய படி சென்றது நினைவிற்கு வருகின்றது...
  8. தொழில் வேறு. சமூக சேவை வேறு என சொல்ல வருகின்றீர்கள்? 😎 தமிழரசுகட்சியில் இல்லாத பித்தலாட்டங்கள்????? சிங்களவனே காறித்துப்பும் நிலை.
  9. பிக்பாஸ் தொடங்கிவிட்டது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு வரவேண்டுமென்ற மெனக்கெடல் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நோக்கமாக அவர்கள் எதனை சொன்னாலும் பின்னால் இருப்பது பணம் புரளும் சந்தையாக இதனை மாற்ற வேண்டும். 2030ல் உங்களுக்கு புரியும். நான் பார்க்கிறேன் பார்க்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி அது உங்களை வந்தடையும். ஒன்று எதிர்வினை. இல்லை ஆதரவு என்றே அது தன்னை வடிவமைத்திருக்கிறது. நீங்கள் கடந்து செல்வதாக சொல்லி கொண்டால் எழுதவில்லை என்று வேண்டுமானல் சொல்லி கொள்ளமுடியும் தெரியாது என சொல்ல முடியாது. இது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வோர் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “ தான் வேடிக்கை பார்க்கு நாம்..... ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எறிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எறி.. உனக்கு ஒரு டாலர் தருவேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக் கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அதுதான் நாம் தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சியையும் சொல்லமுடியும். வரலாற்றில் அந்த நிகழ்ச்சிகளை தடை செய்த பிறகு தான் மானுட அன்பு கொஞ்சம் புரிந்தது. மீண்டும் சிதைக்க இப்படியான நிகழ்ச்சிகள் வரிசை கட்டி வருகிறது. காலம் என்பதே அப்படித்தான்.. முன்னும் பின்னுமாய் அலைக்கழிப்பது.... உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். எந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பார்வையாளராக மட்டுமே இருங்கள். பங்கேற்பாளராக இருக்காதீர்கள். எந்த நிகழ்ச்சிக்கும் வாக்களிக்காதீர்கள். அதுதான் அவர்களின் மூலதனம். அவர்கள் பொய்யாக ஒரு எண்ணிக்கையை சொல்லுவார்கள்... ஒரு கோடி பேர் வாக்களித்தார்கள் என்பார். நாமும் இவ்வளவு பேரா ? என யோசித்து கையில் இருக்கும் அலைபேசியில் ஒரு பிரஸ் தானே என அமுக்குவோம். அங்கே தான் எல்லாம் தொடங்குகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.. அது பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நிலை.. ஆனால் அவர்கள் டார்கெட் நாம் தான். கொஞ்சம் தெளிவாக வேடிக்கை மட்டும் பாருங்கள்... எல்லாமே தலைகீழாகும்... இது நடக்க வாய்ப்பில்லைதான்... ஆனாலும்.. முயற்சிப்போம்.. முகநூலில் வந்தது...
  10. எங்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்புவதை விட சிங்கள அரசியல்வாதிகளை நம்புவது மேலான விடயம் என்பதனை கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல் உறுத்தி சொல்லியிருக்கின்றது போல் தெரிகின்றது . அதிலும் அந்த இரண்டு தேர்தலிலும் தமிழ்மக்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அமோகமாக வாக்களித்திருந்தனர். கோத்தபாய போட்டியிட்டபோதும் தமிழ்மக்கள் சஜித்திற்கு வாக்களித்திருந்தனர். இதனாலேயே கோத்தபாய சிங்களமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என மார்தட்டி இனவாதத்தை பிரமாண்டமாக காட்டினார். அதே போல் சிங்களவாக்குகளால் பெரும்பான்மையாக வந்த அனுர இன்றுவரை எதுவுமே பேசவில்லை.வாய் திறக்கவில்லை. இன்றுவரை யாரையும் எதிர்த்து பேசவில்லை. தன் உடை நடைகளையும் மாற்றவில்லை. எதற்கும் மூன்றுமாதம் பொறுத்திருப்போம்....அதன் பின்.... எனது பார்வையில் அனுர பொது ஆட்சி செய்து இலங்கையின் நிலமையை சீராக்க ஆரம்பித்தாலும்.......கிந்திய கருநாகம் சும்மா விடப்போவதில்லை. உதாரணங்களாக அண்மைய பங்களாதேஷ் ஆட்சி கவிழ்ப்பும் குழப்பங்களும்.
  11. சிறித்தம்பி! இவர் ஒரு சட்டத்தரணி. இவரின் தொழில் பொய் சொல்லுவது.அதாவது தன் வெற்றிக்காக கோட்டுச்சூட்டு போட்டு நீதிமன்றத்தில் பொய் சொல்பவர். இவரிடம் நீதி நியாயத்தை எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. 😎
  12. இன்றிருக்கும் அனுர அரசு எல்லாப்பக்கமும் சாய்ந்து நாணல் புல் மாதிரி இருக்க வேண்டும். இல்லையேல் கோத்தபாயவுக்கு நடந்த கண்கொள்ளா காட்சிதான் இவருக்கும்....😎 மக்களே மகா சனங்களே குஞ்சு குருமன்களே! ஒவ்வொரு அரசியல்வாதியும் பதவிக்கு வர முன் வெற்று வேட்டுக்களும் புஸ்வாணங்களும் விடுவார்கள்..பதவிக்கு வந்தவுடன் எல்லாம் தலைகீழ்.......😁
  13. என்ரை கூப்பன் மட்டை எப்ப உங்கடை கைக்கு கிடச்சது கந்தையர்? 😂
  14. யுத்தகுற்றங்களை விசாரிக்க வேண்டுமாயின்...... அதற்கு உதவி செய்த நாடுகளையும் விசாரிக்க வேண்டும் அல்லவா?
  15. நூற்றுக்கு நூறு வீதம் எம்மிடத்தில் பிழைகளை வைத்துக்கொண்டு சிங்கள அரசியல் தலைவர்களை திட்டுவதில்/வசைபாடுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
  16. சந்திரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது வன்னியிலிருந்து வாழ்த்துச்செய்தி தொலைநகல் மூலம் சென்றதாக அறிந்திருந்தேன்.
  17. இனப்பிரச்சனை இல்லாமல் போய்விட்டது போல் தெரிகின்றது. இலங்கையின் தலையாய பிரச்சனை ஊழல்பிரச்சனை என்பது போல் முடித்து விடுவார்களோ?
  18. எல்லா போர்வாதிகளும் அமைதியை விரும்புபவர்களும் அமெரிக்க தேர்தல் முடிவை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். எனவே அமெரிக்கர்களுக்கும் டொனால்ட் ரம்ப் ஜனாதிபதியாக வரவேண்டும். உலக அமைதிக்கும் டொனால்ட் ரம்ப் வர வேண்டும். இஸ்ரேலுக்கு நல்ல பேதிமருந்து குடுக்க ரஷ்யாவால் மட்டுமே முடியும். 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.