Everything posted by குமாரசாமி
-
கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறை சோதனை, சமூக நலத் துறை விசாரணை - என்ன நடக்கிறது?
அந்த தந்தையின் நீண்ட கால போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இன்றைய உலகிற்கு ஆச்சிரமங்கள் தேவையில்லை.
-
ஊழல் கலாசாரம் தொடர்ந்து நீடித்தால் ஜப்பான் ஒருபோதும் இலங்கையில் முதலீடு செய்யாது - தூதுவர் கடும் எச்சரிக்கை
இலங்கையில் பழம் பெரும் பிரச்சனையான இனப்பிரச்சனை இருக்க..... இலங்கை ஊழல் ,கப்பம் மிகுந்த நாடு என பிரச்சனையை முடித்து விட்டார்கள்.😂 அதை தீர்க்க வந்தவர் சர்வ அதிகாரம் பெற்ற அனுர..... அவர் அதை தீர்த்து வைப்பார்.
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
ஏனப்பா அவசரப்படுறியள்? ஒரு இரண்டு மூண்டு மாசம் பொறுங்கோவன். 😀
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
மகாபாரத கதைகளிலும் சண்டைதான்...🤣 ஜேசுபிரான் கதைகளிலும் சண்டைதான்....😂 முகமது நபி கதைகளிலும் சண்டைதான்....😁 உலகம் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரமே இல்லை.😎
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வணக்கம் விசுகர்! சிங்களவர்களுக்கு தமிழர்கள் மீது அப்படி ஒரு இன வன்மம் வர காரணம் என்ன? அது எங்கிருந்து உருவாகியது? அது உருவாக காரணம் என்ன?
-
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
ஆசிரிய தொழிலில் இருப்பவரின் பிள்ளை ஆசிரியராக வருவதற்கும் வைத்திய தொழிலில் இருப்பவரின் பிள்ளை வைத்தியராக வருவதையும் ஒரு அரசியல்வாதியின் பிள்ளை அரசியல்வாதியாக வருவதையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் வைத்திய/ஆசிரிய தொழிலுக்கு வருபவர்களுக்கு படிப்பறிவும் பட்டறிவும் தேவை. படிக்காமல் கவர்ச்சி மூலம் இந்த தொழிலுக்கு வர முடியாது. அரசியல் அப்படியல்ல. அதிலும் இந்திய அரசியல் அப்படியல்ல. மக்கள் செல்வாக்கு,அரசியல் செல்வாக்கு இருந்தால் யாரும் அரசியல்வாதியாகலாம். தமிழ்நாட்டு அரசியலில் கலைஞர் கருணாநிதிக்கு உள்ள ஆற்றல் ஸ்டாலினுக்கு அறவே இல்லை. அதிலும் உதயநிதிக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாது. பின்புலத்தில் நல்ல படித்த அதிகாரிகள் இருந்தால் எந்த மோடனும் ஆட்சி செய்யலாம். அதற்கு சீத்தாராமன் என்ன பதில் சொன்னார்? 🤣
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இன்றைய உலகில் எது முக்கியமான செய்தி என நீங்களே சொல்லிவிடுங்கள். எந்த கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடினேன்? சும்மா விதண்டாவாத நியாயமில்லாத குப்பை கருத்துக்களுக்கெல்லாம் நான் பதில் எழுதுவதில்லை.😎 குழுவும் கட்சியும் உருவாகுவது கொள்கைகளை வைத்தே. திரிக்கு திரி கருத்து வைப்பவர்களிடையே நட்பும் வேற்றுமைகளும் வருவதை கவனித்தால் சகலதும் சுபம்.
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
விசுகர்! உங்களுக்கு நல்லவடிவாய் தெரியும் எனக்கு உலக நடப்புகள் தெரியாதெண்டு. ஹிஸ்புல்லா பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ தெரிஞ்சு கொள்ளவம்.
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இப்ப என்ர மனசில எழும்புற கேள்வி என்னவெண்டால்.....? மேற்குலக மச்சான்ஸ்மார்! ஈராக்,லிபியாவுக்கு சாத்தின மாதிரி ஏன் ஈரானுக்கு சாத்தவில்லை? சனம் செத்துப்போகும் எண்டு யோசிக்கினமா? இல்ல அங்கை அடிக்க இஞ்ச வெடிக்கும் எண்டு பயப்பிடினமோ? 😂 அது சரி நேட்டோ சும்மாதானே திரியுது. போய் ஒருக்கால் ஈரானோட உரசி பாக்கிறது? 😋
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
சிங்கள இராணுவமும் ஆகாய படையும் தமிழர் பகுதிகளில் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தி சாகடித்து விட்டு விடுதலைப்புலிகளை சாகடித்து விட்டோம் என கணக்கு காட்டியதெல்லாம் நினைவில் வந்து தொலைக்கின்றது. இறையாண்மையுள்ள இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைக்காக போராடியவர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் தங்குமிட வசதிகளும் செய்து கொடுத்தது எந்தக்கணக்கில் வரும்? இன்றும் தமிழ்நாட்டு உறவுகள் தமிழீழ விடுதலைக்காக உதவ காத்திருக்கின்றார்கள் என்பது யதார்த்த உண்மை. கருத்து வெற்றிக்காக உனக்கொரு நீதி எனக்கொரு நீதி வேண்டாம் விசுகர்.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
நாமெல்லாம் நம் விவசாயத்தை சொந்த தொழிலாக செய்யும் போது சம்பளத்தை யாரிடம் எதிர்பார்த்தோம்? 😎
-
அனுராவின் ஆள் என்று வவுனியாவில் அட்டகாசம் .
சுமந்திரம் புகழ் சுமந்திரன் உந்த விசயத்திலை பேய் காய்.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
கொஞ்சக் காலத்துக்கு வெளிநாடுகளுக்கு போக அனுமதியில்லை எண்டு சொல்லிப்போட்டு தோட்டம்,துரவு,வயல் கொத்த விட வேணும்.
-
எமது தேசியத் தலைவரின் திருமணநாள்.
திருமண நல் வாழ்த்துகள் தலைவா.❤️
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
எல்லை தாண்டிய பயங்கரவாதம். அன்னிய நாட்டை ஆக்கிரமித்தல்.ஆக்கிரமிப்பு. பொதுமக்கள் அழிவு. நாட்டு சுதந்திரங்கள். இதெல்லாம் உங்கள் லிஸ்ரில் இருக்கா இல்லையா விசுகர்
-
தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்தால் ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தயார்; சி. வி. விக்னேஸ்வரன்
எனக்கு அவரை தெரியும். நல்ல பழக்கம். ஒண்டாய் திரிஞ்சனாங்கள்.ஒரே பள்ளிக்கூடத்தில படிச்சனாங்கள். நான் இவருக்கு தேத்தண்ணி வாங்கி குடுத்தனான்.இவற்றை சொந்தங்களுக்கு நானெண்டால் நல்ல பிரியம்......😁 இன்னும் வரலாம்.....😋 பட்டுவேட்டி கள்ளரெண்டு சும்மாவே சொன்னவையள். 😎
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
ஜனாதிபதி இன வெறியனா இல்லையா? 😎
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
ரஜனிகாந்த் திரையுலகிற்கு கிடைத்த சாபம். இவருக்கும் நடிப்புக்கும் எட்டாப்பொருத்தம். தனிய ஆக்சன்/கை அசைப்புகள் மட்டுமே இவர் மூலதனம் . இவரின் திரையுலக பிரவேசத்தின் பின்னரே தரமுள்ள கதையம்சம் உள்ள படங்கள் காணாமல் போய் தொலைந்தது. கதை கருத்தம்சம் இல்லாமெலே சோக்கு போக்கு காட்டி மக்களை ஏமாற்றலாம் என்பதின் முன்னோடி இவர். இவர் வருகையின் பின்னரே நடிப்பு முக பாவனை இல்லாமல் திரையுலகில் கோலோச்சமுடியும் என பல பட்டாளாங்கள் இறங்கின. யாரோ ஒரு அறிவாளி எழுதிய வசனங்களை திரையில் ஒப்பவித்து தன்னை ஒரு அறிவாளியாக காட்டிய இவரை மற்றவர்கள் கொண்டாடுகின்றார்கள் என்பதற்காக நாமும் அதே குட்டையில் விழக்கூடாது
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
எமக்காக பேச யாரும் தயாரில்லாத நிலையில் ஈழத்தமிழருக்கு ஊன்றுகோல் வாழ்க்கைதான். இதற்கெல்லாம் காரணம் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமேயன்றி வேறு யாருமில்லை.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சிறிமா ஆட்சியில் முன்னேறியவர்கள் என்றால் வட கிழக்கு விவசாயிகள் மட்டுமே.
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
அவர்கள் சீனியர்கள் அல்ல. அடிமைகள். 😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நீங்கள் சொல்லும் அந்த கருத்தை சர்வதேசம் இனிவரும் காலங்களில் ஈழத்தமிழரை நோக்கி சொல்லாது என்பதற்கு உங்களிடம் உத்தரவாதம் உள்ளதா விசுகர்?
-
இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
நன்றி உங்கள் கருத்திற்கு....
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
தீராத கோபத்தையும், தீராத பழியையும் தன்னகத்தே சேகரித்து வைத்திருக்கும் இஸ்ரேல் எத்தனை நாட்களுக்கு/காலத்திற்கு தன் மக்களை சுதந்திரமாக வாழ பாதுகாப்பு கொடுக்கும்? கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் இஸ்ரேல் பொதுமக்கள் வாழ்க்கை..