Everything posted by Nathamuni
-
சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
சிங்களம் மட்டுமல்ல, இன, மத பேதம் இன்றி, இலங்கை வாழும் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக நம்புவது, எக்காலத்திலும் இந்தியாவை நம்ப முடியாது, கூடாது என்று. இரண்டு பக்கமும், முதுகில் குத்தி விட்டு, பின்னர், துவாரகா என்று ஒரு கூத்தினை காட்டினால், யாரு நம்புவார்கள். மாலைதீவு புட்டுக்கிச்சு, இலங்கையை மடக்கி பறிக்குள்ள போடலாம் எண்டால், சீனா காரன் வேட்டியோட, நயினாதீவுக்குள்ள நிக்குறான். என்ன தான் செய்வது? சவேந்திராவை கூப்பிட்டு, ஒரு ராணுவ....பு... ஏதாவது செய்ய முகாந்திரம் இருக்கோ எண்டு நூல் விட்டு பாக்கினமோ தெரியாது. ஆனால் அதிலை திறமையான, மேற்கு ஆட்களும், அநுபவம் மிக்க அம்மணியும் உள்ள இருந்து பார்த்துக்கொண்டெல்லே இருக்கினம்.
-
சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
அதுதான் விசயமே. இன்று, இலங்கை முழுவதுமாக, மேற்கின் கைக்குள். அது, முற்று முழுவதுமாக, இலங்கை ராணுவத்தினை, பாதுகாப்பு தரப்பினரை கையகப்படுத்தி உள்ளது. ரணில், மிஞ்சினாலும், ராஜபக்சேக்கள் எல்லை மீறினாலும், கதை கந்தல். இதனாலேயே, இந்தியா கூப்பிட்டு, குலை அடிக்கிறது. சவேந்திர சில்வாக்கு அமெரிக்கா ஆதரவு முக்கியம். அவர் எல்லை மீறினால், ஆளை கொண்டு போய், ஹெய்க்கில் நிப்பாட்டி வைக்கும் பலம் உண்டு என்று அவருக்கு தெரியும். அதாலை, போடுற, வடை கறி சாப்பிட்டினை தின்னு போட்டு, வருவார். அவ்வளவுதான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மீன் செதில் வறை: தலையின் ஸ்பெஷல் ஐட்டம். மறக்கப்படாது. நிழலி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
எங்க பார்கிறியள் எண்டு சொல்லி, பாஸ்வேட் சங்கதிகளை தரப்படாதே? ஓவர் ஆக்டிங்கா இல்லையா எண்டு நாமலும் உன்னிப்பாக ஆராய்வோம் தானே!! ச... எல்லாத்துக்கும் உடான்சு சாமியாரிட்டையே போய் நிக்கிறது? 😜
-
யாழில். மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு
இதென்னப்பா இது ஒரு செய்தி என்று. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு சாதாரண நிகழ்வுகளை போட்டு, பீதியை கிளப்புறாங்கள். 🙄
-
யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்
முட்டி? ஓ... கள்ளு முட்டி??? மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்காது.... என்ன வலியாட்டம் ஆடினாலும், கையில இருக்கிற முட்டி உடையாது, கண்டியளே...
-
யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்
யோவ் சாமியாரே, இன்னிக்கு கிறிஸ்மஸ் பார்ட்டி. டிஜே, சின்னமாமியே போட வலியாட்டம் போடனுமெல்லே!
-
யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்
என்ன சொல்ல வாறீங்க? இண்டைக்கு டிஜே போறதா, இல்லையா? கெதியா சொல்லுங்கோ! 🤧🤨
-
துவாரகா உரையாற்றியதாக...
இங்க பாருங்கோவன், துவாரகா, கண பழைய உறவுகளை இறக்கி விட்டுட்டா... 🤣🤣 அப்ப, ஆள் வந்தது நல்லதுதானே 🥰 😍
-
துவாரகா உரையாற்றியதாக...
நாலு காசு பார்க்கும், கடின உழைப்பையா, உழைப்பு. 🤣 நமக்கு ஒருநாளில் கிடைக்கும் பணம், அவர்களுக்கு ஒரு மாதத்தில் கிடைத்தாலே, வண்டி அமோகமாக ஓடும். 😁
-
துவாரகா உரையாற்றியதாக...
அப்படி நான் பார்க்கவில்லை. ஒரு ஆர்வம், அனுதாபத்தால் வந்ததாக இருக்கலாம். எல்லோருமே, இது போலி என்றுதானே சொல்கின்றார்கள். இல்லை இது உண்மைதான் என்று சொன்னால் தானே, நமக்கு சந்தேகம் வரவேண்டும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
களவுறவு எங்கண்ட சாந்தி அக்காவும் களத்திலை.... இதில என்ன விசயம் என்றால், இந்த விசயம் தமிழ்நாட்டினையும் குழப்பி விட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்.
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
உடான்ஸ் சுவாமிகள் வலு பிசி. என்னமோ அவசரமா சொல்லிட்டு போக வந்தேன் எண்டுட்டு போட்டார். கதைக்க நேரமில்லையாம். ஆறுதலா வரட்டுமன். நாலு சிஸ்சயலை கரைசேர்க்க மும்மரமா இருக்கிறார் போலை கிடக்குது. 😁🤣
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
அய்யோ, அய்யோ!! நீங்கள் சொல்லுற இடங்களுக்கு இழுத்து வர முன்னமே வெக்கைல உருகி, ஆவியா போயிடும். அதிலும் பார்க்க, ஆப்பிரிக்கா, அரேபியாவை இழுத்துக் கொண்டு போய் பக்கத்தில விடலாம்!!
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
திருமுருகன் காந்தி இன்று 15 திராவிட இயக்கங்களுடன், நடாத்திய கூட்டத்துக்கு 30 பேர் அளவில் தான் வந்திருந்தார்களாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மேற்கு நாடுகள் ஒண்டும் உங்கள் மீதான அனுதாபத்தில் உள்ளே விடவில்லை. வயதானவர்களை பராமரிப்பதற்கு, வரி வருமானம் இல்லை. அவர்களை பராமரிக்கவும், அந்த சம்பளத்தில் கட்டப்படும் வரிக்காகவும் தான் உள்ள விடுறார்கள். பிரெக்சிற்றுக்கு முக்கியகாரணம் வெள்ளைத் தோல் கிழக்கைரோப்பியர். கலந்தால் பிடிக்கேலாது. எங்கடையாக்கள், எம்மளவு வந்தாலும், எவ்வளவு காலமானாலும், தூரத்திலேயே தெரியும், வாறார் பாக்கித் துரையர் எண்டு. அதால அவனுக்கு நீண்டகால பிரச்சணை இல்லை. விளங்க நிணைப்பியள் எண்டு நிணைக்கிறன். 🤩
- IMG_4066.jpeg
- IMG_4063.jpeg
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
bake பண்ணின பானை, திருப்பி bake பண்ணினால், பல்லு தப்புமே?😰🙄
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இது ரசனியா? சூரியா மாதிரி இருக்குதே. பாலில குளித்து இளமையாயிட்டாரோ? 😂🤣
-
திண்ணை
அட்றா சக்கை! பையர், தமிழ்சிறி எல்லாரையும் திண்ணையில் பார்ப்பது சந்தோசம். பையா, நிதானமாக கலந்துரையாடுங்கள். கோவம் வரும் போது, விலகிச் சென்று ஆறுதலாக வந்து கருத்தாடவும். கருத்தை இழக்கலாம், களத்தை இழக்கக் கூடாது. அதே வேளை, களத்தை உற்சாகமாக வைத்திருக்கும் கருத்தாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் நன்றி! 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
அப்படித்தான் நானும் இருந்தன். ஒரு நாள் ஆப்பிள் பெட்டையை காட்டிப் போட்டாங்கள். அப்படியே மாண்டுபோனன்.... என்னத்தை சொல்ல 😍 🥰
- image0 (1).jpeg
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
நான் கேள்விப்பட்டது வேறு. நண்பர் ஒருவர் வீடியோ பார்த்ததாக சொன்னார். உண்மை தெரியவில்லை. அதன்படி, தாக்குதல் நடத்தியவர்கள் (அல்லது நடத்தியவர்களை ஒருங்கிணைத்தவர்) தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பணம் வட்டிக்கு வாங்கியவதாகவும், அது தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில், சிக்கல் உண்டாகி, கடன் வாங்கியவர், இந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, கட்டி வைக்கப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளானதாயும், அது வீடியோ செய்யப்பட்டு, அவரது நண்பர், உறவினர்களுக்கு அனுப்பப்பட்டு, கடன் காசு வசூலிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பான பழி வாங்களே இது என்றும் சொன்னார். அந்த தாக்குதல் விடியோவை தான் பார்த்ததாக சொன்னார். அவர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதை, பெண் அல்லது பெண்கள் பார்த்து ரசித்ததாலே, பழி உணர்வு, வெறித்தனமாக்கியது என்கிறார். நான், பார்க்கவில்லை, ஆகவே விசயம் தெரிந்தவர்கள் இது சரியா இல்லையா என்று சொல்லுங்கள். நானும், நண்பரிடம் விடுமுறை முடித்து வந்ததும், மேலும் விபரம் கேட்கிறேன்.