-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
கேள்வியா தெரியவில்லை. சின்னவீடு பிளான் போலை தெரியுது. 😁 35 வயது எண்டால், தாராளமாக சின்ன வீடாக்கலாம்.... தெரியும் தானே அந்த பழமொழி; கோழி குருடானாலும்..... 😜
-
பெரியப்பர், உந்த, சாய்மனை கதிரையில இருந்து கொண்டு, பையனை போட்டு பிராண்டுறது தான் வேலை. பையா, வரேக்க வெத்திலை, பாக்கோட வந்திருந்தால், தப்பி இருக்கலாம்... 😁
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
ஆகாயத்தில் ஒரு கூட்டம் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. கிழே மரத்தில் இருந்த ஒரு பறவை கேட்டது. உங்களில் எத்தனை பேர் உள்ளீர்கள்? நாமும், எம்மளவும், எங்களில் பாதியும், உன்னையும், என்னையும் சேர்த்தால் 100. எவ்வளவு பறவைகள் பறந்து போயின? -
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
ஒரு வெள்ளையர் YT ல் துபாய் குறித்து சொன்னார். உலகின் மிக மோசமான இனவெறி பிடித்தவர்கள், சவூதி, துபாய் அரபு சேக்குகள் என்று. உண்மையில் அற்பனுக்கு பவுசு வந்த கதைதான். எண்ணை கண்டுபிடிக்க முன்னம், பர தேசி பிடித்த நாடுகள் தான் இவை. -
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
உண்மைதான், இந்தியாவில் மிகத் தரமான ஆடம்பர வாழ்வு வாழமுடியும் என்கிறார்கள். இந்த 3 மில்லியன் பவுனுக்கு இங்கே ஐரோப்பாவில் மிகத்தரமான வீடு வாங்கிப் போடமுடியும். குடியுரிமையும் தந்து விடுவார்கள். பிஜேபி சார்பில் குமரகுரு என்னும் ஒருவர் தமிழக டிவி களில் தோன்றி வாதம் செய்வார். முன்னாள் திமுக சபாநாயர் ஒருவர் மகன். சென்னையில் பாடசாலைகள் நடாத்தும் குடும்பம். இப்போது பிரிட்டனுக்கு குடி பெயர்த்துள்ளார். £2 மில்லியனுக்கு வீடு வாங்கி போட்டு உள்ளார். துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது. இங்கே வாழ்வது பெருமையானது என்கிறார். -
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
உந்த வீட்டை வாங்கிப்போட்டு, மறைப்புக்கு, கிடுகு வேலி உள்ளுக்கு கட்டதான் வேணும். ஒரு மறைப்பு கிடையாது. மூலையில, ஒரு மெல்லிய திரைசீலை தொங்குது... அம்மணி வேறை புளுகித் தள்ளுது.... படுக்கை அறையில் இருந்து 180 பாகையில சுத்திப் பார்க்கலாம். வேற வீட்டிலை இருந்து பைனாகுலர் வைத்துக்கொண்டு வடிவா பார்க்கலாமே. 😁 -
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
நன்றி வன்னியர். நான் ஒரு முறை நான்கு நாட்கள் தங்கி இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அசந்து போயிருந்தேன் இங்கே இருந்த வசதிகளைப் பார்த்து. வேலை செய்த நிறுவனம் ஒன்றில் ஒரு புதுமையாக பரிசு ஒன்றினை அளித்தார்கள். பொதுவாக பரிசு வழங்குவது, வரி விதிப்புக்கு உள்ளாவது. அதனை தவிர்க்க ஒரே வழி, அதனை லாட்டரி மூலம் வழங்குவது. அதிட்டம் இருந்தால், பரிசு கிடைக்கும். நிறுவனத்தின் முந்தைய வருடம் கிடைத்த லாபத்தினை அறிவிக்க, முக்கிய ஊழியர்களை அழைத்து கூட்டம் போட்டு அறிவித்தார்கள். பரிசாக, துபாயில் தங்க ஒரு வார விடுமுறை. அந்த வகையில் கிடைத்தது இந்த சந்தர்ப்பம். சரி எப்படி லாட்டரி விழுந்தது. நாம் இருந்த சீட்டின் கீழ் பகுதியில் ஒட்டி வைத்து இருந்தார்கள், ஒரு சீட்டினை. யார் இருந்த சீட்டில் அது இருந்ததோ, அவர்களுக்கு அதிஷ்டம். விசயம் தெரியாமல், எனக்காக, அந்த சீட்டினை தந்து விட்டு, தள்ளிப் போயிருந்த நபரின் முகத்தினை நான் பார்க்கவில்லை. பேயறைந்தது போல இருந்தார் என்று எனது பக்கத்து, மேசை நண்பர் பின்னர் சொன்னார். நம்ம லுங்கியை கட்டிக்கொண்டு, அரச மரத்தடியில் படுக்கும் சுகமே சுகம். இது எல்லாம் ஒரு போலி என்று உணர்வு வந்தது. *** விடியோவை பார்க்கும் போது, அம்மணி சொல்லுவதை வைத்தும், வரும் உணர்வு.... (குளித்துக்கொண்டு வெளியே பார்த்து ரசிக்கலாமாம்) யாராவது பைனாகுலர் வைத்துக்கொண்டு, இங்கே நடப்பதை பார்க்கலாமே. *** மகிந்த ராஜபக்சே மச்சான் மனைவியின் சகோதரர், விக்ரமசிங்க குறித்து ஒரு கட்டுரை போட்டிருந்தேன். இவரை சிறிலங்கன் விமான நிறுவன தலைவராக மகிந்த போட்டிருந்தார். அதிலே, சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு இந்த வகையில் ஒரு வீடு இருந்தது. அதிலே, நிர்வாக பயிச்சிக்கு அலுவகர்களை துபாய்க்கு அனுப்பும் போது தங்க வைப்பார்கள். அந்த வீட்டில், ஏர் ஹோஸ்டர்ஸ் ஆக வேலை செய்த ஒரு பெண்ணை, மடக்கி, அங்கே தங்க வைத்திருந்தார், ஒரு வருடமாக. தனது செகிரேட்டரி என்று சொல்லி, சம்பளம் வேறு கொடுக்க உத்தரவு போட்டிருந்தார். கொழும்பில் இயங்கிய நிறுவன தலைவரின், செயலாளருக்கு துபாயில் என்ன வேலை என்று கேட்க கூடாது. -
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
இந்திய உதவியாமே.... யாழ்பாணத்தில சோளக காத்து காலத்தில நிக்குமா இது? கூரை இல்லைத்தானே! -
தோழர், கரண்டுக்கு கடுக்காய் கொடுத்து வந்திருக்கிறார். 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீரினை சிக்கனமாக பயன்படுத்தலாமே. தொழில் நுட்பம் சொல்லிக் கொடுக்காமல், கம நல சேவை பிரிவு என்ன செய்யுதோ தெரியவில்லை. விக்கு நல்லா இருக்கு மவனே. பகுத்தறிவு பேசிய உங்கப்பருக்கும் போட்டிருக்கலாமே... -
ஓமோம், அம்பலத்தார்
-
நன்றி அய்யா, உங்கள் கருத்துக்களுக்கு. ஆனாலும், உங்கள் பதிவுகளின் தொகையே 233. இங்கே இருக்கும் பல கள உறுப்பினர்களின் தொகை 1000 த்துக்கு மேலே. எனவே, உங்கள் கருத்துக்கள் அனுபவபூர்வமானதாக இருப்பதாக தெரியவில்லையே!!!
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
பாத்தீங்களா, பிடிச்சேன்..... எமக்கு 6 பரப்பு காணி உள்ளது.... கொஞ்சம் வில்லங்கத்தில்... அடாத்தாய் குந்தி இருக்கிற, ஆள எழுப்ப அலுவல் பார்த்தனான். இந்தா, அந்தா எண்டுட்டு, இப்ப, கொரோனா முடியட்டும், வெளிக்கிடுவாராம். என்னத்தை சொல்வது... **** யதார்த்தம் என்னவெண்டால்.... எனது உறவினர்.... இப்படிதான் வைத்துக்கொண்டிருந்தார்.... பிள்ளையளுக்கு கொடுக்க வேண்டும் என்று. பிள்ளையள் சொல்லிபோட்டினம்.... நீங்களே போக போறதில்லை. தெரியாத ஊரிலை நாங்கள் எப்பிடி போவம் என்று நினைக்கிறியள். அடுத்த பிளேன் பிடித்து போய், வித்து விட்டு வந்து, அந்த காசில், இங்க பிள்ளையளுக்கு வீட்டினை வாங்கி கொடுத்து விட்டார். சரியாக இரண்டு வருடத்தில் போயும் சேர்ந்து விட்டார். -
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
கையோட இரண்டு தென்னங்கன்று அந்த இடத்திலை போட்டு விடுங்கோ. கிடு, கிடு எண்டு வளர்ந்திடும். பக்கத்து வீட்டுக்காரருக்கு, போனை போட்டு சொல்லி விடுங்கோ, cctc போட்டு செட் பண்ணியாச்சு. அங்காளை, இருந்து கொக்கைத்தடி போட்டு.... தேங்காய் பிடுங்கினால், வந்து வெட்டுவன் என்று மறக்காமல் சொல்லுங்கோ. *** அது சரி, உங்கட ஏரியாவுல, பரப்பு என்ன விலை போகுது? கை மாத்திற ஐடியா இருக்குதே? சுவியர் விசாரிக்க சொல்லேல்ல, நான் தான் கேக்குறன். நல்ல பசை பார்ட்டி கை வசம் இருக்குது. யோசிச்சு சொல்லுங்கோ. 🤑 -
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
சும்மா அநியாயம் சொல்லக்கூடாது. பக்கத்து வீட்டுக்காரர், சைவமாமே. 😜 சரி அதை விடுங்கோ. இங்க, ஜெர்சி மாடுகள், ஐரோப்பாவிலே, அசைவம் எண்டு தெரியுமே? பால், இங்க சைவம் இல்லை கண்டியளே. -
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
பின்ன.... மாட்டுச்சாணம் மட்டும், ஒரு லோட்டுக்கு, அள்ளிக் கொடுப்பியல். இதுக்கு என்ன குறை எண்டு கேக்குறன்? -
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
யாராவன், சிறியறிண்ட காணிக்குள, பசலையை, இலவசமா கொட்டினவன்? சிறியர், யாழ்ப்பாணத்திலை, இந்த 'பசலை' சம்பந்தமான விசயங்கள், ராசியா கருத்தப்படுறது, தெரியுமா? நில்மினியை கேளுங்கோ, சொல்லுவா. காலையில், அந்த வண்டிலோடை வாற ஆக்கள், முழுவிசலம் எண்டால், வலு சந்தோசமா இருப்பார் எண்ட தாத்தா எண்டு, அப்பர் சொல்லுவார். -
என்ன செய்திருப்பியள் அக்கா....? ஒரு தண்ணிப் பார்ட்டி ஏதோ சொல்கிறது எண்டு கடந்து போவீர்களா அல்லது, மல்லுக்கட்டிட நிப்பீர்களா? துட்டனை கண்டால் தூர விலகு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பெண்கள் இருக்குமிடத்தில் என்ன பேசுவது என்று தெரியாத, ஒரு ஜென்மத்திடம், வாயை கொடுப்பதிலும், நகர்வதே புத்திசாலித்தனம். சமூகத்தில் பலரையும் பார்க்கிறோம். இதுகள் எல்லாம், எதுக்கு வந்து சேர்ந்தார்கள் என்று நினைத்துக் கொண்டே நகர வேண்டியது தான். அவர்கள் வளர்ப்பு அப்படி. போலீசாரை அழைத்து, மாஸ்க் போட மறுக்கிறார் என்று சொல்லி இருந்தால், அவருக்கும் தண்டம், கடைக்காரருக்கும் தண்டம். அதைத்தானே செய்திருக்க வேண்டும். **** அதுசரி, என்ன உங்களுக்கு ஒரே வருத்த கண்டமா இருக்குது? சனி, கண்ணா, பின்னா எண்டு திரியுது போலை கிடக்குது. ஆரோக்கியம் முக்கியம். கவனித்துக் கொள்ளுங்கள்.
-
கள் இறக்கிறவர் வருகிறதுக்குள்ள, ஏறி, அரை முட்டி, இறக்கி கொண்டாந்து அடிக்க, அவர், காணிக்காரரிடம் வந்து, பனை, கள் ஊறுதில்லை. வாடகை முழுசா தர ஏலாது எண்டு சண்டை பிடிக்க.... இதெல்லாம், கேள்விப்பட்டது.... 😜