Everything posted by சாமானியன்
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
அது சரி , இன்டெர்நாஷனல் மென்ஸ் டே எப்பவாம் வருது ..?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
என்னமோ நம்ம ஜெலன்ஸ்கியின் லெவலுக்கு கனம் ஆமையாரை எலிவேட் பண்ணியே தீர்வது என்றொரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது மாதிரியெல்லோ இருக்கு .. ?!
-
கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி!
நல்லவனுக்கு ஒரு ஆசை கெட்டவனுக்கு ஒரு ஆசை இடையில நிக்கிறவனுக்கும் ஒரு ஆசை கூட்டிக் கழித்தால் ஆசையே அலை போலே நாம் எல்லாம் அதன் மேலே தான் மிஞ்சும் ...
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
சமகாலத்து குளிர்காலம் முடிவடை போழ்துகளில் உக்ரேனியத்து நந்திக்கடல்களில் அலைகள் மீண்டும் மேலெழும் துருப்பம்மான் செல்வார் அங்கே அடையாளம் காண உடன் போவார் யாராக இருக்கும் ? 😡
-
மாவையின் மரணம் தொடர்பில் கொட்டித் தீர்க்கப்படும் ஆதங்கங்கள்
இப்ப பொது வெளிகளில் எல்லோருமே அருச்சுனா மாதிரி காண்டீபத்துடன் திரிய வெளிக்கிட்டிட்ட மாதிரி இருக்கு . அது கூட பரவாயில்லை .. தங்கத்தையும் தேடிப்போய் இ இருக்கிற வைரத்தை இழக்காதிருந்தால் சரி தான்
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
இதுக்குத்தான் ஓடி விளங்கவேணும் எண்டு சொல்லுறவையோ .. அவர் பகல் நேராக கணக்கெல்லோ விட்டிருக்கிறார் .. இருக்கிற இடத்தில சரியா 12 மணித்தியாலம் பகல் போல கிடக்கு
-
கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!
என்ன உலகமய்யா இது .. இங்கிலீசு பத்திரிக்கை எழுதுகிறான் " தமிழ் எம் பி யின் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு " எண்டு .. அதே சம்பவத்தை தினக்குரல் போடுது " எம் பி யின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு " எண்டு .. செய்வினைகளும் செயப்பாட்டு வினைகளும் சும்மா புகுந்து விளையாடுகின்றன
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கஸ்தூரி மிஸ் தமிழ்நாடு ஆகவும் இருந்திருக்கிறார் , இது போதாதா ...😀 கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
நம்மட பொஸ் என்னை தனியா கடை வழிய விடுவதில்லை , தான் சொல்லாத கண்ட கண்ட சாமான்களை வாங்கி வந்து விடுவேன் எண்டு . நேற்று என்னை பால் பாண் வாங்க சொல்ல நான் கேட்டனான் , நீர் வரேல்லையோ எண்டு . என்ன இந்த சாரியோட வூலிசிற்குள்ள வரவோ . அது சரி வராது என்று ஆள் ஜகா வாங்கி விட்டது . அருமையாக கிடைக்கிற சந்தர்ப்பம் என்ற பரபரப்பில் , குறு பார்வைகளைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை , ஆள் மனம் மாறேக்கு முன்னர் போய் வந்து விடுவோம் எண்டு . செக்கவுட் பெண்மணியின் வழமைக்கு மாறான கவனிப்பு ஒரு கிகுளுப்பாக தான் இருந்தது . ம்ம்ம் .. சூரன் போர் வருடத்தில் ஒரு தடவை தானே வரும் ..
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
நேற்று சூரன் போர் முடிய , வரும் வழியில் பால் பாண் வாங்கவேண்டும் என்ற பாரியாரின் கட்டளையை சிரமேற்கொண்டு , விபூதி சந்தனப் பொட்டு , வேட்டிசகிதம் வூலிசிற்குள் போனேன் . உள்ளே சென்ற நேரம் தொடக்கம் வெளியே வரும் வர பார்வைக்கணைகள் . செக்கவுட் ஒபெரட்டரின் கஸ்டமர் சேவை வழமையை விட மேம்பட்டிருந்ததை உணரக்கூடியதாக இருந்தது . சாமானியன் நானொரு வலதுசாரியோ ..? 😀
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்
அந்த வரலாற்றுத் தெளிவின்மை மூலம் தானே இந்த கோடிக்கணக்கான பணத்தை மற்றப்பக்கமாக நீவிர் வைத்திருக்கிறீர் ..? // கஜேந்திரகுமார் எவ்வளவு பங்கு LOLC இல் வைத்துள்ளார்கள் என்பதை ஒரு கூகிள் தேடுதல் மூலம் எடுக்கலாம். கீழே போட்டுள்ளேன். அவருக்கும் அவரது அம்மாவுக்கும் சேர்த்து 2 மில்லியன் பங்குகள் உள்ளன. ஒரு பங்கு Rs500. ஆகவே இவர்களுக்கு மாத்திரம் Rs 1 பில்லியன் (100 கோடி) பெறுமதியான பங்குகள் உள்ளன. https://stock.ideabeam.com/company/LOLC/shareholder-other?page=2et Outlook for Android // தெளிவிருந்திருந்தால் , வடகிழக்கில் மாத்திரம் முதலீடு செய்திருப்பீரே அண்ணாத்தை ..???
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
புத்தனாயிருந்து , இப்ப பிள்ளையாராகிட்டீங்கன்னுட்டு சொல்லவேயில்லயே .. உங்களோட டூ .. 😀 அது சரி , கேட்டுத் தான் அனுப்பினீகளா , கேளாமலே கொடுத்தீகளா, அடி ஆத்தி ?
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
ஆறுமுகன் சோதரனின் நேசா ! சிங்கள நண்பர் ஒருவர் , AKD கட்சியின் தென் பகுதி தேர்தல் அலுவலக செலவிற்கு என்னிடம் நிதி பங்களிப்பு கோரியிருந்தார் . அனுப்பியிருந்திருக்கிறேன் ...
-
தமிழ்த்தாய் வாழ்த்து - சுப.சோமசுந்தரம்
தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); எனில் தமிழகம் என்று நேரேயே அமைத்து விட வேண்டியதது தானே ஏனிந்த சுத்து மாத்து சாரே //தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே..// ஐயா , தமிழ் சமூகத்தை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறீக போல இருக்கு .. சனாதனம் , ரிஷி , நீட் எல்லாமே தமிழ் சமூகத்திற்கு எதிரான கேவலமான விடயங்கள் என்று தமிழ் மக்கள் சொன்னார்களா .. என்னா சாரே , கண்மூடித் தனமா இருக்கே வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே
-
வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு - சுமந்திரன்
"(B) பார் " புகழ் திருநீறு தாரி யாழ் முதலமைச்சராக இருந்த காலங்களில் இதே விடயம் பற்றி பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இப்ப இந்த "சுத்து மாத்து" இடையில புகுந்து தான் தான் இதை தொடக்கி வைத்த மாதிரி கடை விடுகுது ? 🤣
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
ஒத்த பண்புடையோர் தம்மை இலகுவில் அடையாளம் கண்டு கொள்வர் எண்பது இதைத் தானோ ?
-
அரச சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை; நாட்டுக்கு சேவையாற்றியுள்ளோம் - நாமல்!
அண்மையில் பிரிஸ்பேனில் எனது வீட்டினை விற்றிருந்தேன் . வாங்கியவன் ஒரு சைனாக் காரன் . அவன் தனக்கு சிறிலங்கா நண்பர்கள் இருக்கிறார்கள் என்று, கூட எடுத்த படம் காட்டினான். அவனும் சாட்சாத் மகிந்தவும் சிநேகபூர்வமாக அந்த படத்தில் அதற்காக ம மாமா கொள்ளையடித்த சல்லியில் சைனாவுக்குள்ளால என்ர வீட்டை வாங்கீட்டங்கள் எண்டு நான் சொல்ல வரேல்லை 😀
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
AK47 இல்லாதது தெரியுது , பத்து கூடி நிண்டு கேவலம் கதைக்குது ...😡
-
புவி வெப்பம் அதிகரிப்பு: உத்தராகண்ட் ஓம் பர்வத மலையில் முதல் முறையாக பனிக்கட்டிகள் மாயம்
மெல்பேர்ன் அப்பிடீன்னு சொல்லி ஒரு ஷேஸ்திரம் இருக்கு கண்டியளோ , அம்சமா இருக்கு .. 20 வரியம் பிரிஸ்பேன் எனப்படும் யாழ் சூழ்நிலை உள்ள இடத்தில் இருந்து விட்டு , என்ன தான் இங்கே இருக்கு என்று பார்த்து விடலாமே என்று மாறியிருக்கிறேன் . மாறின கையோட , இளவேனிலில் பிரிஸ்பேன் தேசம் 35 பாகை செல்ஷியஸில் வரு வரு எண்டு வறுபட மெல்பேர்ன் 10 - 20 பாகை இளமையில் தழுவிச் செல்கிறது ...😊
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
வேறொன்றும் ஞாபகம் வருகிறது. திருகோணமலையில் பேச்சுவார்த்தை நடந்தகாலகட்டம் . அவர்கள் நிதி சேகரிப்பிற்காக டிக்கெட் அடித்து , அலுவலகங்களில் கொடுத்திருந்தார்கள் . அலுவலக சிற் ஊழியரிடம் கொடுத்து விருப்பமானவர்களிடம் கொடுத்து பணத்தை சேர்த்து வைக்கச் சொல்லியிருந்தேன் ( பொடியங்கள் என்ன கேட்டாலும் செய்து கொடுக்கும்படி அரச மேலிடத்து உத்தரவு அமுலில் இருந்த நேரம் அது ) . அடுத்த கிழமை பேச்சுவார்த்தை முறிந்து , பொடியங்களும் பெருவாரியான தமிழ் மக்களும் ஊரை காலி செய்து வடக்கு நோக்கி நகர , நம்மை போல போக இயலாத எஞ்சிய சிலர் தங்கியிருந்து , அரச படையின் அடடூழியத்திற்கு ஆளாகி பலர் அழிந்து சிதைந்து போக எஞ்சியோர் பல மாதங்களின் பின்னர் அலுவலக வேலைகளை ஆரம்பித்தனர் . ஊரைக் காலி செய்து போன அந்த சிற்றூழியர் சிலகாலம் கழித்து திரும்பி வந்து, என்னிடம் தயங்கி தயங்கி வந்து , " ஐயா , அந்த டிக்கெட் அடிக்கட்டைகளும் சேர்த்த பணமும் பத்திரமாக , வீட்டு கூரையில் செருகி வைத்தபடியே இருக்கு , என்ன செய்ய " என்று கேட்டார் . பணம் கொடுத்திருந்த ஆகக்குறைந்தது ஒரு சக ஊழியரை மிக்க கொடுமையான முறையில் ஆமிக்காரர் கொன்று போட்டதை நானறிவேன். நான் சொன்னேன் , கொடுத்தவர்களிடம் தேடி திரும்பக் கொடுப்பது பிரச்சினையான விடயம் , யார் யார் என்ன மனநிலையில் இருக்கினம் என்று தெரியாது , தொகைகளும் பெரிதில்லை . அப்படியே கோயில் உண்டியலில் போட்டு விடுங்கள் என்று ,,,
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
நான் கூட இங்கே பொற்கரையில் வைத்து மே 2009 இல் இதே கதை சொல்லி வந்தவர்களிடம் ஒரு தொகை கொடுத்திருந்தேன் . 19ம் திகதி எல்லாமே முடிந்து விட்டது என்ற செய்தி வந்ததும் , அவர்கள் சேர்த்த தொகை , சேர்ப்பிற்கு சொல்லிய காரணத்திற்கு சென்று சேர்ந்திருக்கக் கூடிய சந்தர்ப்பமே இல்லை என்று தெரிந்து போயிற்று. சேர்த்தவர்கள் தாமாகவே வந்து சேர்த்த தொகைக்கு என்ன நடந்தது என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் நம்மவர்களா..?? மூச் ....
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு
தம்பிமார் , சத்தியமா சொல்லுறேன் , சும்மா ஆடாதேங்கோ , கடைசியில எங்களிட்ட யாழ் ஆஸ்பத்திரிக்கு தான் வரவேண்டியிருக்கும் பிராணன் தக்க வைக்க , அதை நினைவில் வைச்சுக்கொண்டு எந்த பதிவெண்டாலும் போட்டுப்பாருங்கோ இங்க பெரியசாமியும் இருக்கிறார் , விசாரிச்சு சரியான வைத்தியம் கொடுப்பார் , என் பிராணன் மேல சத்தியம் , சத்தியம் , சத்தியம்...
-
பிள்ளையானின் சகாவினது சேட்டைகள்...! மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி : சாணக்கியன் MP !
காண்டீப விசையின் நாதமும் வாவியின் இசையும் ஒன்று கலந்தால் தான் தீர்வு வருமோ .🤫
-
எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர்
சின்னன் சின்னனா திருட்டுகள் செய்யமாட்டோம் மத்திய வாங்கி மாதிரி ஒன்றிரண்டு கொள்ளைகள் மட்டும் புரிவோம் .. நிறம் மாறாத பூக்கள் தேடியலைகின்றன காதுகளை ..