Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் கோபமோ, பகையோ எமக்கு இல்லை - இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Asiri-300-80-tamil.gif

19107207991716406172gl2.jpg

இந்தியாவுடன் கோபமோ, பகையோ எமக்கு இல்லை - இலங்கை

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், இலங்கை - இந்திய உறவுகளில் விரிசல் இன்றி சுமூக நிலை காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது என்பதை அவதானித்து அதற்கு ஏற்றாற்போல் பரிமாணமாக நகர விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான உறவு குறித்து பாராளுமன்றில் இன்று (05) எதிர்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், இந்தியாவுடன் இலங்கைக்கு கோபமோ, பகையோ இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை - இந்திய உறவை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இலங்கை வருவதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானித்தமை ´இந்திய கொள்கை கவசம் உள்ள உலோக நாணய சப்தம்´ என பீரிஸ் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் முடிவு வேறு சில நாடுகளையும் எதிராக வாக்களிக்க வழி செய்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முடிவை அடுத்து, வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க நினைத்த சிலர் வாக்களித்ததாகவும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நினைத்தவர்கள் வாக்களிப்பை தவிர்த்ததாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் உள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்வுக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24299

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தாலும்மீசையில் மண் ஒட்டவில்லை

(இதனால்தான் சிங்களவன் மீசையே வைப்பதில்லையோ?)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் நாட்டுக்கு எதிராக அமைந்துள்ளது : ஜீ.எல்.பீரிஸ்

gl-peris.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் நாட்டுக்கு எதிராக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு அமெரிக்காவைத் தூண்டியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாவதன் மூலம் நாட்டு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து எவ்வாறான நிலைப்பாட்டை உருவாக்கிக்கொள்வர் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்காக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு கூட்டமைப்பு தடை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பரிந்துரைகளின் அனைத்துமே அமுல்படுத்தப்படும் என உறுதியளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை மாத்துங்கோ தலீவா.  ஏன் நாடுகளை சம்பந்தம் இல்லாமல் இழுக்கிறீர்கள்?

"நேரு குடும்பத்துடன் பகையோ கோபமோ இல்லை" - ராஜபக்சே குடும்பம்.

ராஜபக்சே குடும்ப கூஜா கூவல்.

 

மகிந்தாவின் அன்றைய இந்திய எதிர்ப்பு பேச்சு

இந்திய சர்வகட்சி குழுவின் வருகையானது உறவில் மாற்றமில்லை என்பதற்கு சான்று : அமுனுகம _

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தது என்பதற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதற்கு இந்திய சர்வகட்சி எம்.பி. க்கள் குழுவின் விஜயம் சிறந்த உதாரணமாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.நாங்கள் இந்திய தூதுக்குழுவினரை கௌரவத்துடன் வரவேற்போம். இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் மிகவும் நெருக்கமான உறவு காணப்படுகின்றது என்றும் வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டார்.இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அவர்கள் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். இந்நிலையில் இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயம் குறித்து விபரிக்கையிலேயே அவர் @மற்கண்டவாறு கூறினார். ___

http://www.lankasri....0632cbC3Xc.html :D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.