Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குணரட்ணம் எப்போது இலங்கைக்கு வந்தார்: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் கோட்டாபய கேள்வி

Featured Replies

குணரட்ணம் எப்போது இலங்கைக்கு வந்தார்: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் கோட்டாபய கேள்வி

முன்னிலை சோசலிஷக் கட்சியின் (பி.எஸ்.பி.) தலைவர் பிரேம்குமார் குணரட்ணம் காணாமல்போன சிறிது நேரத்தில் அவரை கண்டுபிடிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி விசேட கோரிக்கை விடுத்தார்.

ஜே.வி.பியிலிருந்து பிரிந்த பிரேம்குமார் குணரட்னம் மற்றும் முன்னிலை சோசலிஷக் கட்சியின் அங்கத்தவரான திமுது ஆட்டிகல ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரஜையான பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி ரொபின் மூடி தனக்கு அறிவித்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு நேற்று தெரிவித்தார்.

"இந்நபரை கண்டுபிடிக்குமாறு அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் என்னிடம் கோரினார். அந்நபர் இலங்கைக்கு வந்தமை எமக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் எப்போது இலங்கைக்கு வந்தார் என நான் உயர் ஸ்தானிகரிடம் கேட்டேன். அது தனக்குத் தெரியாதென அவர் கூறினார். இதுவரை தெரியாத ஒரு நபரை எப்படி கண்டுபிடிப்பது என நான் கேட்டேன்.

அப்படியான நபர் இருந்தால் அவரைப் பற்றிய சகல விபரங்களையும் தருமாறு நான் கூறினேன். அவரின் கடவுச்சீட்டு விபரம், இலங்கைக்கு வந்த திகதி, விஸா விபரம் ஆகியவை எமக்குத் தேவை. அந்நபரின் புகைப்படமொன்றையும் நான் கோரினேன். அவை குறித்து தனக்குத் தெரியாதென உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்" என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை, இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

"இது விசித்திரமான கதை. முதலில் அவர்கள் பிரேம்குமார் குணரட்ணம் என ஒருவர் இலங்கையில் இருப்பதை மறுத்தார்கள். இப்போது அத்தகைய ஒரு நபர் இங்கு தங்கியிருப்பது குறித்து பேசுகிறார்கள். அவுஸ்திரேலிய பிரஜைகள் எப்படி இங்கு தொந்தரவு ஏற்படுத்த முடியும். அவர் அவுஸ்திரேலிய பிரஜையானால் அங்கு தங்கிருக்க வேண்டும். இதைத்தான் நான் உயர் ஸ்தானிகரிடம் கூறினேன்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

"குணரட்னம் எனும் நபர் குறித்த வதந்திகள் சில மாதங்களுக்குமுன் வெளிவந்தன. அப்போது இது குறித்து அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் நான் நேரடியாக கேட்டேன். அப்படியான நபர் இலங்கைக்கு வந்தாரா எனக் கேட்டேன். அப்படி வந்தால்; அவரின் விஸா, கடவுச்சீட்டு விபரங்களைக் கேட்டேன். எமக்கு இவ்விபரங்கள் வழங்கப்படவில்லை. திடீரென குமார் குணரட்ணம் காணாமல் போய்விட்டார் எனக் கூறப்படுகிறது. இதில் அரசாங்கம் சம்பந்தப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்" எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

http://www.tamilmirr...8-19-48-41.html

Edited by akootha

  • தொடங்கியவர்

அவுஸின் உயர்ஸ்தானிகர் ஒரு பொய்யர் என கோத்தா நிரூபித்துள்ளார் :wub:

சுத்த மடையன். தான் அதற்குள் நேரடித்தொடர்பு என்று மற்றவர்கள் நிச்சயம் செய்யத்தக்க பாணியில் கதைக்கிறார்.

தைரியமாக விபரங்களைக் கோரும்போது அவுஸ்ரேலிய அரசாங்கம் அதைக் காண்பிக்க வேண்டும். அல்லது பொய் கூறுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

பிரேம்குமார் குணரட்ணம் மீளப்போவதில்லை என்பது தமிழ்ரகள் அறிவார்கள். அதை அவுஸ்ரேலியர்களும் அறிய வேண்டும். விபரங்களை அவுஸ்ரேலியா காண்பிப்பதன் மூலம் குணரட்ணம் சிறிலங்காவில்தான் காணாமல் போயுள்ளார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கான தரவுகளை பிரேம்குமார் குணரட்ணத்தின் நண்பர்கள் உறவினர்கள் அவுஸ்ரேலிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் சிறிலங்காவின் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் வழங்குதல் நல்லது.

குணரட்ணத்தை கண்டுபிடிக்குமாறு இலங்கைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம்

கடந்த சனிக்கிழமை கிரிபத்கொடவில் வைத்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜே.வி.பி மாற்றுக் குழுவின் தலைவரான பிறேம்குமார் குணரட்ணத்தைஇ கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு இலங்கைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுத்துள்ளதுடன் கவலையும் வெளியிட்டுள்ளது.

பிறேம்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர். பிரேம்குமாரின் மனைவி சம்பா குணரட்ணம் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தனது கணவன் இலங்கையில் காணாமல்போயுள்ளதாகவும் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கைக்கு அமைவாக பிரேம்குமார் குணரட்ணத்தை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கொழும்புக்கான அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் முடி இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தான் நாடு திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் வைத்து தனது கணவரான பிரேம்குமார் குணரட்ணத்தின் இருப்பிடம் செயற்பாடு தொடர்பில் சுமார் 18 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு தீவீரமாக விசாரிக்கப்பட்டதாக சம்பா குணரட்ணம் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

http://news.lankasri.com/show-RUmqyETdOUlr7.html

  • தொடங்கியவர்

குணரட்ணத்தை உடனடியாக கண்டுபிடியுங்கள் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை

காணாமல் போயுள்ள முற்போக்கு சோசலிச கட்சியின் முன்னணி தலைவர்களான பிரேம்குமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகியோரை உடனடியாக கண்டுபிடிக்கமாறு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தலைவர்கள் காணாமல் போன சம்பவம் குறித்து அரசாங்கம் இதுவரை அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை எனவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் அண்மைக் காலமாக ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், பலர் வெள்ளை வானில் சென்றவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மக்கள்போராட்ட அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் கடத்தப்பட்ட பல நாள் கடந்துள்ள போதிலும் அவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பது பற்றி எவருக்கும் தெரியாத நிலைமை காணப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/local/12489-2012-04-08-20-22-07.html

SRI LANKA: Two arrested from JVP dissident group

Mr. Premakumar Gunarathnam the leader of the JVP dissident group and Ms. Dimuthu Attigala a member of the same group are reported to be missing from yesterday night. According to a report, published today in the Daily Mirror, both have been arrested. However the grounds on which they were arrested or the location of the place of detention have not been revealed.

http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-STM-081-2012

குணரத்தினம் மற்றும் திமித்துவின் கைதினை கண்டித்து லண்டன் பிரதமர் இல்லத்தின் முன்னால் திங்களன்று ஆர்ப்பாட்டம்.

http://ndpfront.com/...-04-07-22-08-24

  • கருத்துக்கள உறவுகள்

Family fears father among the 'disappeared' in Sri Lanka

Ben Doherty, Dylan Welch

April 10, 2012

ipad-art-wide-a1-20sri-20lankan-420x0.jpg

Worried family … from left, Aman Somaratna, 12, Champa Somaratna and Ama Somaratna, 18. Photo: Kate Geraghty

THE men came an hour before dawn on Saturday, carrying guns but wearing no uniforms, to tell the neighbours of Premakumar Gunaratnam to keep quiet. They encircled the leftist's house in Colombo and cut the power, before storming it and taking him away.

Mr Gunaratnam, a socialist politician with a long history in Sri Lanka who moved to Australia in 2006 under the skilled migration program, has not been seen since.

His wife, Champa Somaratna, a GP in Sydney, believes he has been abducted by security forces as part of a crackdown on political dissent by the conservative government of the President, Mahinda Rajapaksa.

art-353-a1-champa-200x0.jpg

The missing man, Premakumar Gunaratnam. Photo: Kate Geraghty

Sri Lankan authorities have denied the charge and said they have no proof that Mr Gunaratnam has even entered the country.

Mr Gunaratnam, 46, is a well-known figure in Sri Lanka and was a long-time member of the country's main leftist party, the JVP. He recently announced his intention to form a new party.

His brother, Ranjitham, had been a student activist and a senior JVP figure until his alleged detention, torture and killing by the government in 1989.

When asked why her husband had been abducted by Mr Rajapaksa's government, Dr Somaratna said: ''In Sri Lanka there is no proper opposition. All the opposition [parties] are suppressed by the government.''

She said he had been staying at a house in north-west Colombo. Friends had gone to the house when he failed to attend an early morning meeting on Saturday but found it ransacked.

Dr Somaratna reported his disappearance to the Foreign Affairs Department and, in an unusual step, the Australian high commissioner, Robyn Mudie, immediately requested a meeting with the Sri Lankan Defence Secretary and brother to the President, Gotabhaya Rajapaksa.

Sri Lanka alleges Mr Gunaratnam is a militant radical who has led attacks on army bases. A leaked state intelligence document circulating in Sri Lanka says he has at least four aliases and passports under false names.

"He was at one time a high-ranking subversive activist involved in many crimes, including the attack on the Pallekele army camp in 1987, and escaped from the Magazine Prison [in 1988], where he was detained under the Terrorism Prevention Act," the document says.

It alleges Mr Gunaratnam fled the country in 2006, having provided forged documents to the Australian embassy.

The veracity of the government's document and its claims could not be confirmed last night.

Groundviews, an agency monitoring Sri Lankan politics, said local media had reported 56 such disappearances in the past six months.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

குணரட்ணம் இருந்ததை நிரூபிக்க முடியும்: முன்னிலை சோஷலிசக் கட்சி

குமார் குணரட்ணம் என்ற நபர் இலங்கைக்கு வந்தமைக்கு ஆவண ரீதியான ஆதாரங்கள் இல்லையென அரசாங்க அதிகாரிகள் கூறியதை முன்னிலை சோஷலிசக் கட்சியின் இன்று மறுத்தது.

மக்கள் பேராட்ட இயக்கத்தின் முன்னாள் பிரச்சார செயலாளரான வருண ராஜபக்ஷ இது தொடர்பாக டெய்லி மிரரிடம் கூறுகையில்,

"குணரட்ணம், கேகாலையில் பிறந்தார். சென். மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக அவர் இருந்தர். குமார் இலங்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட அரசாங்க அதிகாரியொருவர் கூறியுள்ளார். ஆனால் அவர் இலங்கையில் இருந்தார், எம்மோடு பேசினார். எம்முடன் வாழ்ந்தார் என நாம் கூறுகிறோம். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மேற்படி அதிகாரி குணரட்னத்தின் கடவுச்சீட்டை கோரியுள்ளார். அவரின் கடவுச்சீட்டு எங்குள்ளது என எமக்குத் தெரியாது. ஆனால் அது அந்த அதிகாரியிடமே இருக்க வேண்டும், ஏனெனில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட குமாரின் முதலாவது புகைப்படம் அவரின் கடவுச்சீட்டிலுள்ள புகைப்படமாகும்.

அவரை கடத்தியவர்கள் கணினி தகவல் சேமிப்புச் சாதனங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் கொண்டுசென்றுள்ளனர். எனவே இவை அரசாங்கத்திடம் இருக்கக்கூடும் எனவும் அதனால்தான் அந்த அதிகாரி அவற்றை காட்டுமாறு எம்மிடம் கேட்கிறார் என நாம் கருதுகிறோம்" என்றார்.

கடந்த ஜனவரி மாதம் குமார் குணரட்னத்தின் மனiவி தடுத்து வைக்கப்பட்டபோது தனது கணவர் இருப்பதை மறுத்தமைக்கான காரணம் என்ன என வினவியபோது, தனது பிள்ளைகளின் நிலைமை தெரியாத சூழலில் 10 மணித்தியாலங்களாக விசாரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலையை கருத்திற்கொள்ள வேண்டும் என வருண ராஜபக்ஷ பதிலளித்தார்.

"அவர் என்ன கூறினார் என எனக்குத் தெரியாது. ஆனால் எதுவென்றாலும் அது சூழ்நிலைகாரணமானது. அவர் தனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பளிக்க முற்பட்டார். அவர் 10 மணித்தியாலங்கள் விசாரிகக்ப்பட்டார்.

அப்போது அவரின் பிள்ளைகள் அவருடன் இருக்கவில்லை. அவர் எதை கூறியிருந்தாலு தனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் தீங்கு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இருந்திருக்கும்" என வருண ராஜபக்ஷ கூறினார்.

குமார் குணரட்ணம் என ஒருவர் இருப்பதை ஜே.வி.பி. தொடர்ச்சியாக மறுத்தது ஏன் என கேட்டபோது, 'ஜே.வி.பி. அப்படி ஏன் கூறியது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த சூழ்நிலையில் ஜே.வி.பியுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட நான் விரும்பவில்லை. ஜே.வி.பியின் ஒரு முக்கிய பாகமாக விளங்கினார். இந்நாட்டில் குமார் நடக்காத இடமெதுவும்இல்லை. ஜே.வி.பி. அங்கத்தவர்கள்அனைவரும் அதை அறிவர். குமார் யார் என்பது மனசாட்சிக்குத் தெரியும்' என வருண ராஜபக்ஷ பதிலளித்தார்.

http://www.tamilmirr...9-18-40-19.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.