Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகிறார்

Featured Replies

குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகிறார்

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் இன்று காலை 7.10 மணிக்கு புறப்படவுள்ள யூ.எல்.882 விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவார் என முன்னிலை சோஷலிசக் கட்சி சார்பு இணையத்தளமான லங்காவிவ்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார்குமார் குணரட்ணமும் (42) அக்கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகலவும் கடந்த சனிக்கிழமை காலை காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

தனது பிரஜையான நோயல் முதலிகே (குமார் குணரட்ணம்) கடத்தப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை தெளிவாக்கும்படி அஸ்திரேலிய அரசாங்கம் கோரியிருந்தது.

இந்நிலையில் நோயல் முதலிகே என்பவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் நேற்றிரவு சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேம்குமார் குணரட்ணம் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக 'தி அவுஸ்திரேலியன்' பத்திரிகையிடம் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திசேரா சமரசிங்க கூறியுள்ளார்.

"அவர் வெவ்வேறு மூன்று பெயர்களில் மூன்று கடவுச்சீட்டுகளின் கீழ் இலங்கையில் வசித்துள்ளார். பிரேம்குமார் குணரட்ணம் என்ற பெயரில் நாட்டிற்கு ஒருவர் சட்டபூர்வமாக வரவில்லை என நாம் தொடர்ந்து கூறிவந்தோம். அதனால்தான் அவரை கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அவர் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பிஅனுப்பப்பட சிறந்த வாய்ப்புள்ளது. அவர் உரிய விஸா இல்லாமல் அவர் தங்கியிருந்ததாக அறிகிறோம்" என உயர் ஸ்தானிகர் திசேரா சமரசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை குணரட்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலதிக விடயங்களை இத்தருணத்தில் கலந்துரையாடுவது பொருத்தமற்றதாக இருக்கும்' என அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirr...0-01-30-05.html

இன்னொருதடவை சொறிலங்கா சேட்டை விடமாட்டினம். பேரை வைச்சு ஆளை போடலாம் என்று பார்த்தவர்கள். கோத்தபாயா பேசின பேக் கதையாலை அது உடைஞ்சு போய்விட்டது.

ஜே. ஆர்., சிறீமா, பிரேமதாச, சந்திரகா, ரணில், மகிந்த போன்ற சிங்கள அரச பயங்கரவாதிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளுக்கு நீண்டகாலம் ஆதரவு வழங்கிய இந்தியப் பயங்கரவாதிகளால் முடியாததை, ஆஸ்திரேலியா மிக இலகுவில் சாதித்துள்ளது.

இந்தியக் காட்டுமிராண்டி பிச்சைக்கார ராஜதந்திரிகளுக்கு சிங்கள அரச பயங்கரவாதிகள் வழங்கும் மதிப்பு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

அவுசு நாட்டின் பிரசை என்றகாரணத்தால் இவர் ஓரளவுக்கு 'தப்பக்கூடியதாக' இருந்தது. ஆனால் கடத்தப்பட்ட மற்றைய சிங்கள பிரசையின் நிலைமை - அந்தோதான்!

  • தொடங்கியவர்

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவரான குமார் குணரட்ணம் இலங்கையிலிருந்து சென்றுவிட்டார் என்பதை உறுதி செய்த அவுஸ்திரேலிய அதிகாரிகள், அவரின் பயணத்துக்கு உதவி வழங்கிய இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கிரிபத்கொடை பகுதியில் காணாமல்போன, அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது மனிதர் பாதுகாப்பாக உள்ளார். இவரை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

இவர் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்ல வசதி செய்து கொடுத்த பொலிஸ் மற்றும் வேறு அமைப்புகளுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்' என தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் பேச்சாளர் கூறினார்.

அவுஸ்திரேலியாவிலுள்ள இந்த நபரின் குடும்பத்துடன் கான்பெராவிலுள்ள கொன்சுலர் அதிகாரிகள் தொடர்புகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39209-2012-04-10-12-20-58.html

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு சிட்னியில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் சிறிலங்காவுக்கு ஆதரவு தராமல் அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு வழங்கும் போது சிலர் என்னிடம் கேட்டார்கள். வெள்ளைக்காரர்களுக்கு தான் அவுஸ்திரெலியா உதவும். என்னதானேன்றாலும் உங்களை சிறிலங்கன் என்று தான் அழைக்கும் என்றார்கள். சிறிலங்காவில் தமிழன், அரசுக்கு எதிரான கருத்துடையவர் என்றால் சிறிலங்கா அரசு அவரைக் கொல்லும். ஆனால் அவுஸ்திரெலியா அரசு தனது பிரஜைகளுக்கு எப்பொழுதும் என்ன ஆபத்து என்றாலும் வந்து உதவிசெய்யும். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை தந்த அவுஸ்திரெலியா துடுப்பாட்ட அணிக்கே என் ஆதரவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.