Jump to content

என் சோக கதைய கேளுங்க...


Recommended Posts

எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...!

என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்..

என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்தது. தினமும் எங்களை அப்பாதான் பைக்கில் வைத்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வார். நான் என் அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நான் அப்பா செல்லம். என் அம்மா தையல் வேலைக்கு செல்வார். அம்மா எனக்கு அழகழகான துணிகள் தைத்து தருவார். தினமும் அப்பா ஆட்டோ ஓட்டி முடிந்து வீடு திரும்பும்போது எங்களுக்கு மிக்சர் எல்லாம் வாங்கிவருவார்.

எங்கள் சந்தோஷ வாழ்க்கை முழுவதையும் அந்த ஒரு நாள் அடியோடு மண்ணில் போட்டு புதைத்துவிட்டது.

பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் என் அம்மாவுக்கும் ஏதோ தகராறு. அந்த பிரச்சினையில் என் அம்மாவுக்கும் அவர்களுக்கும் அவ்வப்போது மோதல் வந்துகொண்டே இருக்கும். அந்த பிரச்சினையில் என் அம்மா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார். அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டார்கள். மோதல் தொடர்ந்ததால் நாங்களும் அவர்களும் மாறிமாறி போலீசில் புகார் செய்தோம். போலீசார் வந்து என் அம்மாவிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அம்மாவை குற்றஞ்சாட்டினார்கள். அம்மா அழுதார்.

போலீஸ் வந்தது, விசாரித்தது எல்லாவற்றையும் அப்பா தெரிந்திருக்கவேண்டும். அவர் பைக்கில் திரும்பிவரவில்லை. பைக்கை விற்றுவிட்டதாகச் சொன்னார். அவருடைய கையில் பிரியாணி பொட்டலமும், குளிர் பானமும் இருந்தது.

அம்மா எங்களை குளிப்பாட்டினார். தலை துவட்டிவிட்டு நல்ல உடைகளை உடுத்தினார். அப்போது அழுதுகொண்டே இருந்தார். நான் "அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?''-என்று கேட்டேன். அதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லாமல் என்னையும், அண்ணனையும் சேர்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடியே அழுதார். எப்போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் உணவு சாப்பிடுவோம். அப்பா ஏதாவது தமாஷ் செய்துகொண்டே எங்களோடு சாப்பிடுவார். அன்று எந்த தமாசும் இல்லை. இறுகிய முகத்தோடு அவர் எங்களுக்கு பிரியாணி பரிமாறினார். என்னிடமும், அண்ணனிடமும் போதுமா இன்னும் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டுகேட்டு கொடுத்தார். நாங்கள் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு, குளிர்பானத்தை உடைத்து நான்கு கப்களில் ஊற்றினார்கள். `எதற்காக குளிர்பானம் தருகிறீர்கள்?'-என்று நான் கேட்டேன். அதற்கு அப்பா, அம்மா இருவருமே எந்த பதிலும் சொல்லவில்லை. முதல் இரண்டு கப்களில் இருந்ததை அப்பாவும், அம்மாவும் குடித்தார்கள். அடுத்து அண்ணன் குடித்தான். அவன் குடித்ததும் நான் பருகியதை தட்டிவிட்டு விட்டு, "தங்கச்சி குடித்திடாதே அது விஷம்..''-என்றான். அதற்குள் நான் சிறிதளவு குடித்துவிட்டேன். அடுத்த நிமிடத்திலே எனக்கு தலைசுற்றியது. அப்போது அம்மா மெதுவாக தவழ்ந்து சென்று எல்லோரும் விஷம் குடித்துவிட்டோம் என்ற தகவலை அம்மாவின் நெருங்கிய தோழி ஒருவருக்கு சொல்லி விட்டு அப்படியே நிலை குலைந்து விழுந்தார்.

அம்மாவின் தோழி சிறிது நேரத்திலே காருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார்கள். 2002-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கும் எனக்கும் எவ்வளவோ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆனால் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் இறந்துவிட்டார்கள். நான் மட்டும் இப்போது தனிமரமாக நிற்கிறேன். ஒரு சில உறவினர்கள் வீடுகளில் அங்கும் இங்குமாகத் தங்கிவிட்டு இப்போது என் பாட்டி ஒமனாவுடன் இருக்கிறேன்.''-என்று அழுகையோடு சொல்லும் அகிலா, பெற்றோரின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விடுகிறாள். அந்த சமாதியில் அவர்கள் மூன்றுபேரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அகிலா அம்மாவின் புடவை ஒன்றையும், அப்பாவின் காக்கி சட்டை ஒன்றையும், அண்ணனின் கால்சட்டையையும் தன்னோடு நினைவாக வைத்திருக்கிறாள்.

"எங்கள் வீடு இப்போது கடனில் இருக்கிறது. அங்குதான் என் குடும்பத்தினரின் சமாதி உள்ளது. அந்த வீட்டை நான் சொந்தமாக்க வேண்டும். நிறைய படித்து வேலை பார்த்து சம்பாதித்து தான் அந்த கடனை என்னால் தீர்க்கமுடியும். இப்போதும் என் பெற்றோரை நினைத்தால் எனக்கு அழுகையாக வருகிறது. ஏன் இந்த தற்கொலை நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பிரச்சினை என்றாலும் அதை பேசி தீர்த்து, சமாளித்திருக்க முடியுமே. பிரச்சினைகளுக்கு தற்கொலையாத் தீர்வு. நான் அனாதையாகி என் குடும்பத்தினரை நினைத்து அழுதுகொண்டிருப்பது போலத்தானே, என்னை நினைத்து என் குடும்பத்தினரின் ஆத்மாவும் அழுது கொண்டிருக்கும்...''- இந்த சிறுமி சொல்வது சரிதான். இனியார் அழுது என்ன பயன்? போன உயிரும் பாசமும் திரும்பிவரவாப் போகிறது. தேவைதானா இப்படிப்பட்ட தற்கொலைகள்...?

Thanks:http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_E.htm

Link to comment
Share on other sites

இச்சம்பவம் உண்மையாக இருந்தாலும் இதில் சிறு கற்பனையும் சேர்க்கப்பட்டுள்ளது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால்.  நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?
    • முன்பு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்  மைதானங்களில் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு பின் தொடங்கினால் சனி மற்றும் ஞாயிறு மாலைவரை நடக்கும்......அதுவும் யாழ் இந்து மைதானமென்றால் மூன்று பக்க வீதிகளிலும் சனம் குவிந்து நின்று பார்க்கும்.......ஆனால் இப்பொழுது ஒரு நல்ல வீடியோ கூட ரெண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை......அவ்வளவுக்கு வேலைகளும் ஆட்களும் நேரமின்றி ( பிஸியாகி ) விட்ட  காலத்தில் வாழ்கின்றோம்......இங்குள்ள பிள்ளைகள் கூட கிரிக்கட் பக்கம் தலை வைத்தும் படுக்காதுகள்......அது சம்பந்தமாய் ஒன்றுமே தெரியாது.....(கால்பந்தாட்டம் + றக்பி  நல்லா ரசித்துப் பார்ப்பார்கள்). இந்தக் கதியில் 20 ஓவர் விளையாட்டு ஓரளவு பரவாயில்லை என்ற மாதிரி இருக்குது....... அது கூட 4 மணித்தியாலத்துக்கு மேல் வருகுது......அதனால் இடைக்கிடைதான் வந்து வந்து பார்க்கிறது.........!   😁 மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂
    • இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................
    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.