Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்மானமுள்ள தமிழரின் அடையாளங்களை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது!

Featured Replies

தன்மானமுள்ள தமிழரின் அடையாளங்களை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! - ஐ.தே.கவின் எம்.பி யோகராஜன் தெரிவிப்பு!!

'அகிம்சாவாதி காந்தியையும், சாரணியத்தின் தந்தை பேடன் பவுலையும் எதிரிகளாகவும், தமிழர்களின் ஆதரவாளர்களாகவும் கருதியவர்களின் அறிவற்ற செயலின் பேரினவாத செயல்பாடே சிலை உடைப்புகளாகும். சிலைகளை உடைத்தாலும் தலையே போனாலும் தன்மானமுள்ள தமிழர்களின் அடையாளங்களையும் முகவரிகளையும் எந்த ஒரு கொம்பனாலும் அழிக்க முடியாது. அதற்கு உதாரணமாக உடைக்கப்பட்ட சிலைகளை மீண்டும் உருவாக்குவதற்கு இலங்கையர்களிடம் இருந்து மட்டுமல்ல சர்வதேச சமூகங்களிடம் இருந்தும் உதவிகள் வந்து குவிய வேண்டும். அதைப் பார்த்து சோரம்போகும் இனவாதிகளும், அவர்களுக்கு துணை போகும் தமிழினத் துரோகிகளும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.'

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் கண்டனமும், கவலையும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மகாத்மா காந்தி, பேடன் பவுல், விபுலானந்தர், பெரியதம்பி புலவர் ஆகியோரின் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

'குஜராத்தில் பிறந்த இந்தியரான மகாத்மா காந்தியை உலகமே நேசிக்கின்றது. வெள்ளையரான பேடன் பவுலின் சாரணியம் சகல இன மக்களையும் ஐக்கியப்படுத்துகிறது. இவர்கள் இருவரும் தமிழர்கள் அல்ல. ஆனால், சமூகநலவாதிகள்;. உலகச் சிறப்புகளை தன்னகத்தே கொண்ட உத்தமர்கள்.

சுவாமி விபுலானந்தரும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையும் நமது மண்ணின் மைந்தர்களாக சைவத்திற்கும் தமிழுக்கும் உயிரோட்டமாக திகழ்ந்தவர்கள்.

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இவர்கள் மட்டக்களப்பு மண்ணில் சிலைகளாக நிற்பதை விரும்பாத பேரினவாதிகளின் ஈனச்செயலுக்கு ஈடாக எதை ஒப்பிடுவது என்று புரியவில்லை. சிலைகளை உடைப்பதால் ஒரு சமூகத்தின் எழுச்சியை தடுத்துவிட முடியாது. திட்டமிட்டு நடத்திய இந்த நாடகத்தால் இலங்கையின் மானம், மரியாதை சர்வதேசத்திலும் கொடிகட்டிப் பறக்கிறது.

வரலாற்றுப் பெரியார்களின் சிலைகளை உடைப்பவர்கள் தமிழ் உயிர்களை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் என்பதற்கு இதுவே தகுந்த சாட்சியாகும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் எதிர்ப்பை காட்டுவதற்காக நடத்தப்பட்ட சிலை உடைப்பின் மூலம் இனவாதிகள் சாதிக்க நினைப்பது என்ன? விபுலானந்த அடிகளாரும், புலவர்மணி பெரியத்தம்பிப்பிள்ளையினாலும் தமிழ் வளர்த்தது குற்றமா? அல்லது தமிழனாக பிறந்து சமூக நலனுக்காக உழைத்தது தவறா?

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்களின் கலாசார தடயங்களையும், சரித்திர பதிவுகளையும் திட்டமிட்டு அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசின் கூலிப்படைகளின் அட்டகாசங்களுக்கு தடைபோடுவது யார்?' என்றும் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=fbff507a-d518-48d9-a941-bf7cbe3b34cd

ஆம் தவறு மாபெரும் தவறு சிங்களவனின் அகராதியில் நிலைத்துவிட்ட இந்த கொள்கை எப்போது சிங்களவனால் மறக்கப்படுகிறதோ,அல்லது மறக்கவைக்கப்படுகிறதோ அன்று தான் இந்த கேள்விக்கு ஓர் சரியான விடை கிடைக்கும் என நான் நினைக்கிறேன்................

விபுலானந்த அடிகளாரும், புலவர்மணி பெரியத்தம்பிப்பிள்ளையினாலும் தமிழ் வளர்த்தது குற்றமா? அல்லது தமிழனாக பிறந்து சமூக நலனுக்காக உழைத்தது தவறா?

Edited by tamilsooriyan

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி விபுலானந்தரும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையும் நமது மண்ணின் மைந்தர்களாக சைவத்திற்கும் தமிழுக்கும் உயிரோட்டமாக திகழ்ந்தவர்கள்.

நாம் வாழ்ந்தகாலத்திலையே ஒரு மாபெரும் வீரத்தமிழனை பார்த்திருக்கின்றோம், அவருடன் ஒப்பிடும்பொழுது வரலாற்று நூல்களில் படித்த பெரும் தலைவர்களை பற்றி பேசவேண்டிய தேவையே கிடையாது என்பதே எனது கருத்து.

429366_264921566924078_963494873_n.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆ... அப்ப எண்ணத்திற்கு தமிழ் இடியப்ப கடையில "சிறி லங்கா" எண்டு போட்டு தமிழை அழிக்கினம்? 

தமிழீழம் எப்போது தமிழ் கடை விளம்பர பலகையில் வரபோது? 

நாமே காலால் போட்டு தமிழை நசுக்குகிறோம்.  

அகூதா அண்ணா எங்கட தமிழ் கடைகளுக்கு எப்ப கடிதம் போடபோறீன்கள்?

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.