Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அரசிலுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - சந்திரிகா குமாரதுங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chandrika6_CI.jpg

'விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை, இலங்கை அரசில் பொறுப்பில் உள்ளவர்கள், முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி ராஜபக்ஷே, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுப் பணிகளுக்காக, தற்போது செய்வதை விட, இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்'' என, இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனிப்பட்ட விடயமாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து, டில்லியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒழிக்கப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்டது, தற்போதைய இலங்கை அரசுக்கு, அங்குள்ள தமிழர்களுக்கான மறு வாழ்வுப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், இதை வலியுறுத்தி வருகின்றன. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என, இந்த நாடுகள் கூறி வருகின்றன. இந்த வாய்ப்பை, இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போர் முடிவுக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. இலங்கை தமிழர்களுக்கு இந்த கால கட்டத்தில் அதிகமான மறு வாழ்வுப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அந்த அளவுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே, வேறுபாடு உள்ளது. ஆனால், இலங்கை அரசில் பொறுப்பில் உள்ளவர்கள், இதை புரிந்து கொள்ளவில்லை. மறு வாழ்வுப் பணிகளை பொறுத்தவரை, இலங்கை அரசு, இன்னும் அதிகமான பணிகளைச் செய்திருக்க வேண்டும்.

இலங்கை தமிழர்கள், தொடர்ந்து நடந்து வந்த போரால், கடந்த 30 ஆண்டுகளாக, கடுமையான பாதிப்பிற்கும், பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களுக்கான நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

எல்லோரும் தமிழர்கள் என்பதுதான் இதில் உண்மை. விடுதலைப்புலிகள் ஈழத்தின் போராளிகள். தமிழ்மக்கள் அதன் பங்காளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இன்னும் தமிழரிலிருந்து தூர நிற்கின்றீர்கள் என்பது இதன் மூலம் புரிகிறது.

பிரச்சினைக்கு முடிவு தற்போதைக்கு இல்லை என்பது மீண்டும் தெரிகிறது.

தமிழ் மக்கள்தான் விடுதலை புலிகள் , விடுதலைபுலிகள்தான் தமிழ் மக்கள் என்ற வேறுபாட்டை தானே கூறுகிறீர்கள் அம்மையே.......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசம் விளங்கியா கருணா, பிள்ளையானுக்கு அரசியல் பதவி குடுத்தனீங்கள்? 

அடுத்த சனி சிறி லங்காவை கைப்பற்றி எங்களுக்கு திரும்ப ஆப்படிக்க ரெடி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.