Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வை(க்) கோ(ல்) சாமி

Featured Replies

அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தி !அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- எதிரிகளும் இல்லை என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்- சந்தர்ப்பவாத அரசியல், அரசியல் வியாபாரம் எல்லாமே நாம் அறிந்த ஒன்றுதான் - ஆனால் வைகோ, அ.தி.மு.கவிடம் சேர்ந்துள்ள கூட்டு இவை எல்லாவற்றையும் தாண்டியது- அரசியல் விபச்சாரம் என்று சொல்வது கூடச் சரியாகாது- இதைவிட அதிகக் காரமான வார்த்தை ஒன்று தமிழில் இருக்கிறதா?

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும்போதே, எப்போது விமானத்தை விட்டு இறங்குவார், என்று காத்திருந்து- பாய்ந்து கைது செய்த அ.தி. மு.க - அப்போது கழுத்து நரம்புகள் புடைக்க ·பாசிச ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவோம் என்று குமுறிய வைகோ.- ஓரிடத்திலிருந்து மற்றொரு சிறை என்று மாற்றி மாற்றி வை.கோவை அலைக்கழித்த ஜெயலலிதா - 'இவர் தான்தான் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டப் பிறந்தவர் என்று நினைக்கிறார்' என்று பொருமிய வைகோ; பொடா சட்டத்தில் தள்ளியதோடு பத்தொன்பது மாதங்கள் வெளியே வரமுடியாதபடி சுப்ரீம் கோர்ட் வரை வைகோ விடுதலையாவதை எதிர்த்த ஜெயலலிதா - மூன்று கல்லூரி மாணவிகள் தர்மபுரியில் பஸ்சில் எரித்துக் கொல்லப்பட்டதற்குத் தூண்டுதலாக இருந்த கொலைகாரி ஜெயலலிதா என்று தூற்றிய வைகோ- இன்று தாழ் பணிந்து மறத் தமிழனின் தன்மானம் மறந்து ஜெயலலிதாவிடம் மண்டியிட்டு, 35 இடங்களைப் பிச்சையாகப் பெற்றிருக்கிறார். இறந்தும் புகழோடுவாழ்பவர்கள் பெரியோர்கள், இரந்து வாழ்பவர்கள் இருந்தும் இல்லாதவர்கள்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் ம.தி. மு.க தடை செய்யப்படவேண்டும் என்று முழங்கிய ஜெயலலிதா எந்த முகத்தோடு இந்தக் கூட்டணியை வைத்துக்கொண்டார்? எங்களுக்கு மக்கள் கூட்டணியிருக்கிறது என்று தெம்பாய்ச் சொல்லியவர் தேர்தல் வரும் நேரத்தில் ஏன் ஜுரம் கண்டு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஒவ்வொரு கட்சியாக அவர்கள் பக்கம் இழுக்கவேண்டும்?

படித்தவர்கள் மனதிலும் பாமரர்கள் மத்தியிலும் இந்தக்கேள்வி கட்டாயம் எழும். வைகோ தனது மனச்சாட்சிக்காவது ஒருநாள் பதில் சொல்லவேண்டியிருக்கும்-

கவுரமான இடத்தை எதிர்பார்த்து அம்மாவின் பக்கம் சாய்ந்துள்ளவர் கொஞ்சம் யோசித்து வாஜ்பாய் அரசுக்கு ஏற்பட்ட கதியையும், போன தடவை அசெம்பிளி எலெக்ஷனில் அவரிடம் கூட்டு வைத்துக்கொண்ட காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் பெற்ற கவுரவத்தையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பார்கள் - ஆனால் இந்த வை(க்) கோ(ல்) புலி பசி வந்ததும் தன்மானம் உட்பட பத்தையும் மறந்துவிட்டு இன்று அறிவுக்கெட்டாத ஒரு 'கூத்தணி'யை வைத்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு இவர் ஒரு கவுரவமான பணியாளராகவாவது கருதப்படுவாரா என்பதை காலம்தான் சொல்லும்.

அப்ப இது என்ன?

வேதாரண்யத்தில் நடந்த ஜெ., பிறந்த நாள் கூட்டத்தில் நடிகர் செந்தில் கூறிய கதை

ஒரு ஊரில் கணவன், மனைவி இருந்தனர். அவர்கள் வீம்பு பிடித்தவர்கள். கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பணம் சம்பாதித்து வரும்படி மனைவி திட்டினார். இதனால் வெளியே சென்ற கணவன், தன் நண்பர் ஒருவரை பார்த்து தனது குடும்பம் சாப்பாட்டுக்கு கஷ்படுவதாக கூறினார்.

கஞ்சனான அந்த நண்பர் ரூ.10 கொடுத்து நீ சாப்பிட்டுக்கொள் என்றார். கணவனோ அந்த ரூபாய்க்கு மாவு வாங்கி கொண்டு வந்து தனது மனைவி கண்ணம்மாவிடம் கொடுத்து ரொட்டி சுடச்சொன்னார். 3 ரொட்டி சுட்ட மனைவி தனக்கு ரெண்டும், கணவனுக்கு ஒன்று என்றும் பங்கு பிரித்தார். அதை கணவன் ஏற்கவில்லை.

ஆளுக்கு ஒன்றரை ரொட்டி என பிரிக்க கணவர் கூறினார். மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் யார் பேசாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு 2 ரொட்டியும், பேசியவர்களுக்கு ஒரு ரொட்டியும் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

இரவு துவங்கிய சம்பவம் விடிந்தும் முடியவில்லை. இருவரும் அசந்து தூங்கி விட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இருவரும் இறந்து விட்டனர் என நினைத்து மயானத்துக்கு கொண்டு சென்று எரியூட்டினர். சூடு தாங்காமல் இருவரும் வீட்டுக்கு ஓடிவந்தனர்.

அதற்குள் அந்த ரொட்டி மூன்றையும் கருப்பு நாய் ஒன்று திண்று விட்டது. கணவன், மனைவி ஏமாந்து போயினர். இந்த கதையில் கணவன், மனைவியும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர். கருப்பு நாய் கருணாநிதி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் தரம் அழுது புலம்பினாலும் போனவர் போனவர் தான் :wink: :P

  • தொடங்கியவர்

மாண்டவர் மாண்டவர் தான் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

டமில் கொஞ்சம் கொஞ்சம் தான் வருமோ??

  • தொடங்கியவர்

அதாவது வருதே?

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ பற்றி எழுதியவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. மதிமுக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றால் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறவேண்டியது மிக அவசியம். அம்மா கொடுக்கிறார் வைகோ பெற்றுக்கொள்கிறார். இதில் என்ன வந்தது. தடா பொடாவின் கீழெல்லாம் அடைத்து வைக்கப்பட்டது பழைய கதை. அதிமுக மதிமுகவின் அடிப்படை உணர்வுகளை ஏற்றுக்கொண்டுதான் அதைக் கூட்டுச்சேர்த்திருக்கின்றத

  • தொடங்கியவர்

சட்டமன்றத்தில் புலிகளுக்கு எதிராக ஜெ. போட்ட தீர்மானம் ஒன்று பாக்கி இருக்கிறது... அதை வைகோவால் வாபஸ் வாங்க வைக்கவே முடியாது.... ஜெ.வைப் பற்றி ஈழத்தமிழர்களை விட இந்தியத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வைகோ தனக்குக் கிடைத்த 35 தொகுதிகளையும் வெல்லட்டும். ஒரு பறக்கணிக்கப்படமுடியாத கணிசமான பலம் மிக்க கட்சியாக மதிமுக வளரவேண்டியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு வெளிப்படையான ஆதரவை - புலிகளுக்கான ஆதரவை துணிச்சலோடு கொடுக்கும் வைகோவால் ஜெ போட்ட சட்டமன்றத் தீர்மானத்தை வாபஸ் வாங்க முடியாவிட்டாலும் அதனை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டைகளைக் கொண்டுவரமுடியும். நடந்திருப்பது (ஜெயா-வைகோகூட்டு) நன்மைக்கே. வீணாக வைக்கோவை ஈழத்தமிழர் விமர்சிப்பதும் பகைப்பதும் ஆரோக்கியமான அரசியாகாது.

  • தொடங்கியவர்

அப்போது பா.ம.க.வின் கதி? அவர்களும் ஈழத்தமிழர்களைத் தானே ஆதரிக்கிறார்கள்? - அவர்கள் திமுக கூட்டணியில் இருக்கிறார்களே?

ஈழத்தமிழர்களை பகிரங்கமாக எதிர்க்கும் ஜெயா ஜெயிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் விரும்புவது ஆச்சரியம் தான்....

þÅ÷ 94ø ¿¨¼À½õ ¦ºýÚ ¿¢¨È× ¦ºö¾ þ¼õ §À¡ÂŠ §¾¡ð¼õ. þó¾ Ó¨È ¿¼óÐ ,¸Á¡ñ§¼¡ §Åºõ §À¡ðÎ ¦ºýÚ ´Ðí¸¢Â þ¼Óõ «§¾ §¾¡ð¼õ¾¡ý. ºÃ¢ ¦¾¡¨ÄÔÐ Üð¼½¢¾¡ý ¨ÅòÐ ¦¾¡¨ÄóРŢð¼¡÷ «í¸Â¡ÅÐ ´Øí¸¡ö(98)þÕó¾¡Ã¡,Å¡ˆÀ¡öìÌ ¿¡ó¾¡ý ¸Ê¾õ ¦¸¡Îô§Àý,¸¨Ä»÷ ¬ðº¢¨Â ¸¨Äì¸Å¢¼Á¡ð§¼ý ±É Å£ÃźÉõ §Àº¢ ¦ÅÇ¢§Â

ÅóÐÅ¢ð¼¡÷.þô§À¡Ðõ À¡Õí¸û §¾÷¾ø ÓÊó¾Ðõ «õ¨Á¡÷ ¦ÅÇ¢§Â µðÊÅ¢ÎÅ¡÷. þÅÕõ ÅóÐÅ¢ðÎ Å¡ú쨸¢ø ¿¡ý¦ºö¾ Á¢¸ô¦Àâ ¾ÅÚ þÅ÷¸Ù¼ý Üð¼½¢ ¨Åò¾¾¡ý

±É ÒÄõÀ¢ò¾¢Ã¢Å¡÷. þÐ ÁðÎõ ¿¢ƒõ

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை ஜெயா எதிர்க்கிறார் என்று ஒரேயடியாக்கக் கூறுவதை ஏற்கமுடியாது. இந்திய அரசியலில் உள்ள சங்கடமான, அவர்களின் பாதுகாப்பு, பிராந்திய நலன் போன்ற அம்சங்கள்தான் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் அல்லது வரமுயலும் கட்சிகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன. கருணாநிதி அல்லது வைகோ என யார் வந்தாலும் இது மாறப்போவதில்லை. பாமக ஈழத்தமிழர்களை ஆதரிக்கட்டும் யார் வேண்டாமென்றது. அவர்களுக்கு திமுக போதிய தொகுதி ஒதுக்கீடு செய்;துள்ளது. எமக்குத் தேவை எம்மை ஆதரிக்கும் மானிலக் கட்சிகளின் பலம் அதிகரிக்கவேண்டுமென்பதே. ஈழத்தமிழர்கள் இந்தி அரசியலினுடபுகுந்து பக்கச்சார்பு நிலையெடுபதைக் கூடியவரை தவிர்ப்பதுதான் சிறந்ததாகும்.

  • தொடங்கியவர்

அண்ணன் தம்பியுடையான் அவர்கள் வைகோவின் கொள்கைகளில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.... அவரே இப்படிப் பேசுவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல உள்ளது.....

வைகோ மீது நானும் பெரும் மதிப்பு கொண்டிருந்தவன் தான்... இந்த சந்தர்ப்பவாதம் அந்த மதிப்பை குலைத்து விட்டது... தன் கட்சி நலன் என்று கூறி அவர் எதிர்காலத்தில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலும் பல்டி அடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் யாரையுமே இவ்வுலகத்தில் நம்ப முடியாது. வைகோ செய்வது சந்தர்ப்பவாத அரசியலில்லை. ஏற்கனவே இந்தக்கூட்டணி அறுந்து விழும் நிலையில்தான் தொங்கியது. கருணாநிதியே அதை உடைத்து விடுவார் என்ற ஊகம்தான் மேலோங்கியிருந்தது. அதுதான் நடந்துமிருக்கிறது. ஒரு கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதிக ஆசனங்களைத் தரக் காத்திருக்கும் கூட்டணியில் சேருவது சந்தர்ப்பவாதமாகாது. ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதாவால் அதிக ஆசனங்களைக் கொடுக்க முடியுமானால் ஏன் கருணாநிதியால் கொடுக்கமுடியாது. மதிமுக தொடர்ந்தும் முட்டுக்கொடுக்கும் கட்சியாக வளர்ச்சியடையாமல் இருந்துகொண்டே இருப்பதை அதன் ஆதரவாளர்கள் ஏற்கமாட்டார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆழும் நிலைக்கு அக்கட்சி வளரவேண்டுமானால் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி வளரவேண்டியது அவசியம். கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணிக் கடசிகள் ஒன்று சேரவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவே சேர்ந்தன. தற்போது நிலைமை மாறிவிட்டது. வைகோவிற்கு உரிய கௌரவம் ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு எதற்காக வைகோ கருணாநிதியுடன் தொங்கிக்கொண்டு இருக்கவேண்டும். மதித்தவருடன் சேர்வதே சரியானது. கருணாநிதியின் கணிப்பீடு தவறானதாகும். வைகோவின் பெறுமதியை அவர் புரிந்துகொள்ளவில்லை. மிகக்குறைவாக மதிப்பிட்டுவிட்டார். வைகோ அவருக்குச் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்.

அண்ணன் தம்பியுடையான் அவர்கள் வைகோவின் கொள்கைகளில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.... அவரே இப்படிப் பேசுவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல உள்ளது.....

வைகோ மீது நானும் பெரும் மதிப்பு கொண்டிருந்தவன் தான்... இந்த சந்தர்ப்பவாதம் அந்த மதிப்பை குலைத்து விட்டது... தன் கட்சி நலன் என்று கூறி அவர் எதிர்காலத்தில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலும் பல்டி அடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

¾õÀ¢ Ä츢Öì ! ¾¡í¸û §ÁüÌÈ¢ôÀ¢ð¼Ð §À¡ø ¿¡ý ¨Å§¸¡ Å¢ý ¦¸¡û¨¸¸Ç¢ø ¦ÀâÐõ ¿õÀ¢ì¨¸ ¦¸¡ñ¼ÅÉøÄ. ²¦ÉÉ¢ø ¨Å§¸¡ Å¢üÌ ±ýÚ ¾É¢ò¾ ¦¸¡û¨¸Â¢ø¨Ä.¾¢Ã¡Å¢¼ þÂì¸ì¦¸¡û¨¸¾¡ý «Åâý ¦¸¡û¨¸.Üξġ¸ §ÅÚ (¸ÅÉ¢ì¸×õ) ±ó¾ ¾¢Ã¡Å¢¼ «Ãº¢Âø ¸ðº¢¸¨Ç측ðÊÖõ «Å÷ ¾£Å¢ÃÁ¡¸ ÒÄ¢¸¨Ç ¬¾Ã¢ò¾¡÷ ±ýÈ Å¢¼Âò¾¢ü¸¡¸§Å «Å¨Ã ¬¾Ã¢òÐõ À¢ýÀüÈ¢Ôõ Åó§¾ý.«§¾ §Å¨Ç ¾Á¢ú¿¡ðÊý ¿Äý ±ýÀÐ Á¢¸ Ó츢ÂÁ¡ÉÐ «Å÷ ¾ÉÐ ¿ÄÛõ ¾ý þÂì¸ò¾¢ý ¿ÄÛ§Á ¦À⦾Éì¸Õ¾¢ÂÀ¢ý «Å¨Ã Å¢Á÷º¢òо¡ý ¬¸§ÅñÎõ.

±ýÉÕõ ®Æò¾Á¢ú ¦º¡ó¾í¸§Ç ! ¯í¸Ç¢ø 99% Å¢Øì¸¡Î ¨Å§¸¡ ±ýÉ ¦ºö¾¡Öõ ¬¾Ã¢ôÀ£÷¸û ±ýÚ ¦¾Ã¢Ôõ,¸¡Ã½õ «Å÷ ¯í¸é측ö º¢¨È ²¸¢Â¢Õ츢ȡ÷,¯í¸Ù측ö ÐýÀí¸¨Çò¾¡í¸¢Â¢Õ츢ȡ÷.¯ñ¨Á þÐ «ò¾¨ÉÔõ ¯ñ¨Á. «Ð §À¡Ä§Å þýÛõ ¦º¡øÄô§À¡É¡ø «¨¾Å¢¼ ,«Å¨ÃÅ¢¼ 91,92Ó¾ø ¦¸¡Î¨ÁÂ¡É ¸¡Äì¸ð¼í¸Ç¢ø ÐýÀí¸û¾¡í¸¢Â ´ÕÁÉ¢¾ý ¯ñÎ ±ý¨È측ÅÐ ¿£í¸û «Å¨ÃôÀüÈ¢ º¢ó¾¢ò¾Ð ¯ñ¼¡?

¾Á¢ú¿¡ðÎò¾Á¢Æý º¢É¢Á¡ ¨Àò¾¢Âõ ±ýÚ ±ûÇ¢ ¿¨¸Â¡Î¸¢ýÈ£§È ,þíÌ ¿Êì¸ Åó¾ ÌôÀÛõ ÍôÀÛõ,1 §¸¡Ê 2 §¸¡Ê ºõÀÇõ Å¡í¸ ®Æò¾Á¢Æó¾¡ý ¸¡Ã½õ ±ý¸¢È Å¢¼Âõ ¯í¸ÙìÌ ¦¾Ã¢ÔÁ¡?

¿£í¸û ´Õ ¾Á¢úº¢É¢Á¡ À¡÷ìÌõ¸¡º¢ø ´Õ Á¡¸º£ý ¿¢ÃôÀÄ¡õ¾¡§É,¦¾Ã¢ÔÁ¡?

þÚ¾¢Â¡ö ´Õ §¸ûÅ¢ ÒÄ¢¸¨Ç§Â¡ ®ÆÅ¢Î¾¨Ä§Â¡ ¬¾Ã¢ìÌõ ¸¨¼ì§¸¡Êò¾Á¢Æý ܼ ®Æò¾¢ý ƒÉ¿¡Â¸õ ÀüÈ¢§Â¡ ,þýÛõ ÀÄ À¢Ã¨É¸û ÌÈ¢ò§¾¡ ¾Á¢ú¿¡ðÊø þÕóÐ ¯í¸¨Ç §¿¡ì¸¢ §¸ûÅ¢¸û ±ØôÀÅ¢ø¨Ä§Â ²ý ±É º¢ó¾¢ò¾£÷¸Ç¡?¬õ ±É¢ø Å¢¨¼Â¢Úì¸×õ.

ஜெயா ஜெயித்தால் நல்லது என நாம் விரும்புவதற்குக்காரணம். எமது சுயநலமே. தமிழ்நாட்டின் நலன் கருணாநிதியிடம் இருக்கலாம். எமது நலன் தற்போது அம்மணியிடம்தான் உள்ளது. அவர் துணிந்தவர். எதையும் எதிர்த்து நிற்கக்கூடியவர். கருணாநிதியால் ஓங்கி எமக்காக குரல் கொடுக்ககூட முடியவில்லை. துணிச்சல் இல்லாத கருணாநிதியால் பயன் இல்லை. ராஜீவ் கொலைக்குப்பின் புலியெனசொல்லி அவரது அரசு கவிழ்க்கப்பட்ட பயத்தில்pருந்து இன்னும் மீண்டு வரவில்லை.

எமக்கு நல்லர் பொல்லாதவர் இப்போது முக்கியமில்லை. ஆதரவுக்குரல். சிங்களவனை கொஞ்சம் அடக்க எமக்கு ஒரு துணை.

±ý þɢ «¾¢À¡! º¢í¸Ç¨É ±¾¢÷ì¸ ¾Á¢ú ¿¡ðÊø þÕóÐ ¬¾Ã×ìÌÃø §ÅñÎõ ±ý ¦º¡øÖÅÐ Á¸¢úÅ¡öò¾¡ý þÕ츢ÈÐ ¬Â¢Ûõ ¾Á¢ú¿¡ðÊý ¿¢¨ÄÂÈ¢ó¾ ¿£í¸ÙÁ¡ ! þôÀÊ

§¸ðÀÐ.

¯í¸û Í¿Äò¾¢üÌ ±ýÚ ¦º¡øÄ¢Â À¢ý ¿¡ý ±ýÉ ¸ÕòÐ ¦º¡øÄ ÓÊÔõ.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது வருதே?

வந்தால் எங்காவது ஒதுங்க வேண்டியது தானே!! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா ஜெயித்தால் நல்லது என நாம் விரும்புவதற்குக்காரணம். எமது சுயநலமே. தமிழ்நாட்டின் நலன் கருணாநிதியிடம் இருக்கலாம். எமது நலன் தற்போது அம்மணியிடம்தான் உள்ளது. அவர் துணிந்தவர். எதையும் எதிர்த்து நிற்கக்கூடியவர். கருணாநிதியால் ஓங்கி எமக்காக குரல் கொடுக்ககூட முடியவில்லை. துணிச்சல் இல்லாத கருணாநிதியால் பயன் இல்லை. ராஜீவ் கொலைக்குப்பின் புலியெனசொல்லி அவரது அரசு கவிழ்க்கப்பட்ட பயத்தில்pருந்து இன்னும் மீண்டு வரவில்லை.

எமக்கு நல்லர் பொல்லாதவர் இப்போது முக்கியமில்லை. ஆதரவுக்குரல். சிங்களவனை கொஞ்சம் அடக்க எமக்கு ஒரு துணை.

ஏன் அதீபன்

விடுதலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஏதும் பெரிதாகச் செய்யப் போகின்றார் என்று கருதுகின்றீர்களா? இப்போதும் அவர் தான் ஆட்சியில் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!

ஒன்று மட்டும் உண்மை! எம் தேசத்து விடுதலையைப் பெற நாம் தான் முயலவேண்டுமே தவிர, மற்றவர்களை மட்டும் நம்புவது தப்பு!

  • தொடங்கியவர்

ஒன்று மட்டும் உண்மை! எம் தேசத்து விடுதலையைப் பெற நாம் தான் முயலவேண்டுமே தவிர, மற்றவர்களை மட்டும் நம்புவது தப்பு!

யதார்த்தத்தை உணர்ந்து சொல்லப்பட்ட அருமையான கருத்து.....

ஈழ விடுதலையை விரும்பினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏதும் செய்ய இயலாது.... அனுதாபம் தான் பட முடியுமே தவிர ஆயுதங்களை ஏந்த முடியாது.... ஆனாலும் ஈழமக்கள் இன்னல் படும் போதெல்லாம் தமிழ்நாட்டு தமிழனுக்கு இதயம் அறுந்து போகும்.... அவனால் முடிந்ததெல்லால் இங்கிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் அவ்வளவுதான்... கசப்பாக இருந்தாலும் உண்மை இது தான்....

கலைஞர் கைது செய்யப்பட்டபோது உலகெங்கிலும் இருந்த ஈழத்தமிழர்களும் துடிதுடித்துப் போனார்கள்.... ஆனால் கண்டன அறிக்கைத் தந்ததை தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடிந்தது? அதுபோல் தான் இதுவும்.....

ஜெயா ஜெயித்தால் நல்லது என நாம் விரும்புவதற்குக்காரணம். எமது சுயநலமே. தமிழ்நாட்டின் நலன் கருணாநிதியிடம் இருக்கலாம். எமது நலன் தற்போது அம்மணியிடம்தான் உள்ளது. அவர் துணிந்தவர். எதையும் எதிர்த்து நிற்கக்கூடியவர். கருணாநிதியால் ஓங்கி எமக்காக குரல் கொடுக்ககூட முடியவில்லை. துணிச்சல் இல்லாத கருணாநிதியால் பயன் இல்லை. ராஜீவ் கொலைக்குப்பின் புலியெனசொல்லி அவரது அரசு கவிழ்க்கப்பட்ட பயத்தில்pருந்து இன்னும் மீண்டு வரவில்லை.

எமக்கு நல்லர் பொல்லாதவர் இப்போது முக்கியமில்லை. ஆதரவுக்குரல். சிங்களவனை கொஞ்சம் அடக்க எமக்கு ஒரு துணை.

மோனை ..ஜெயா ஜெயிச்சால் நன்மை ஏதோ எல்லாம் சொல்லுறியள் விளங்கினால் சொல்லுங்கோ கோபப்படமால்.......முதலில் மக்காள் வைகோ-ஜெயா கூட்டு வெறும் தேர்தல் கூட்டு அரசியல் கொள்கை கூட்டில்லை உந்த லெக்சன் முடிய ஜெயா அன்ரி என்ன கோதாரி குணம் கொள்வா அப்ப கண்டு கொள்ளுங்கோ

ஜெயா அன்ரி ஆளுமையை பற்றி கதைச்சமாதிரி கிடக்கு..சோபன் பாபு வோடை காதலில் தோல்வியடைஞ்சு தூக்க மாத்திரை அடிக்கக்கை எங்கை ஆளுமை போனது...ஆனப்பட்ட நெடுஞ்செழியனையே நிக்க வைத்து கதைத்து ஆண்களுக்கு கெதிரான மனவிகாரத்தை தீர்த்தது உந்த மனிசி... அடிப்படையில் பார்ப்பனிய எண்ணமோட்டமுடைய மனிசி என்ன நேரத்தில் என்ன செய்யுமெண்டு சொல்ல முடியாது

வை கோ வுக்கு கூட ஸ்ராலினின் முதல்வர் சீட்டு ஈகோ பிரச்சன தான்... ஸ்ராலின் முதல்வர் சீட்டு இல்லாமால் வேறு கூட்டரசாங்கம் ஏற்படுமென்றால்...மீண்டும் வைகோ திமுக கூட்டரசாங்கத்தில் ஆச்சியமில்லை....மறு புறத்தில் ஜெயா- விஜயகாந்த் கூட்டரசாங்கம் ஏற்பட்டாலும் ஆச்சரியபடுதற்க்கில்லை......உந்

  • தொடங்கியவர்

சின்னக்குடி,

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... விஜயகாந்த் தனியாக நின்றால் பெரும் தோல்வி அடையப்போவது உறுதி.... ஒரு சீட்டு வென்றாலே அதிசயம் தான்....

சென்ற தேர்தலில் மதிமுக 211 தொகுதிகளில் நின்று 204 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.... வைகோவை விட எல்லாம் விஜயகாந்த் பெரிய ஆள் இல்லை.... அதைவிட மோசமான தோல்வியைத் தான் சந்திப்பார்....

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை உணர்ந்து சொல்லப்பட்ட அருமையான கருத்து.....

ஈழ விடுதலையை விரும்பினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏதும் செய்ய இயலாது.... அனுதாபம் தான் பட முடியுமே தவிர ஆயுதங்களை ஏந்த முடியாது.... ஆனாலும் ஈழமக்கள் இன்னல் படும் போதெல்லாம் தமிழ்நாட்டு தமிழனுக்கு இதயம் அறுந்து போகும்.... அவனால் முடிந்ததெல்லால் இங்கிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் அவ்வளவுதான்... கசப்பாக இருந்தாலும் உண்மை இது தான்....

கலைஞர் கைது செய்யப்பட்டபோது உலகெங்கிலும் இருந்த ஈழத்தமிழர்களும் துடிதுடித்துப் போனார்கள்.... ஆனால் கண்டன அறிக்கைத் தந்ததை தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடிந்தது? அதுபோல் தான் இதுவும்.....

நான் இங்கு கருதியது ஆட்சிப் பீடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைத் தான். தமிழ்நாட்டுமக்கள் எப்படி மறைமுகமாக ஈழப் போராட்டத்தில் உதவி செய்வதை வெளிப்படுத்த தேவையில்லை. இத்தனை கஸ்டத்திலும் அவர்களின் உதவிகளைக்கு தலைவணங்க வேண்டும்.

இதை விட பலர் இப்பிரச்சனைக்காக தீக்குளித்ததையும், சிறையில் வாடுவதையும் அனைவரும் அறிவோம். எனவே வெறுமனே அரசியல்வாதிகளின் வாய்ப் புகழ்ச்சிகளுக்கும் உண்மையான நேசத்தமிழர்களின் பற்றுக்குமிடையிலான வேறுபாட்டை உணரவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.