Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Tamil Eelam Referendum 201?

Featured Replies

தமிழ் ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் - ஐநாவுக்கு வைகோ கோரிக்கை

தமிழீழம் அமைய ஐ.நா.சபை சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீட்டு விழா தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நூலினை வெளியிட, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.

விழாவில் வைகோ பேசுகையில், "இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. இந்த வஞ்சக சூழ்ச்சியால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர்.

இப்போது இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் சிங்களர்கள் குடியேற்றம் விரைவாக நடைபெறுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களைக் கொன்று விட்டதாக இலங்கை அரசு கருதலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் பின்னால் 7 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைப் பிரச்னைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும். ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்பு எடுத்து தமிழீழம் அமைக்காவிட்டால் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள்.

பொது வாக்கெடுப்பா, ஆயுதமா என்பதை வரலாறே தீர்மானிக்க முடியும். ஆயுதம் தாங்கிப் போராடுவதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. தவறு என்றால் எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களை பசிபிக் கடலில்தான் கொட்ட வேண்டும். எந்த நாடாவது அப்படிச் செய்ய முன் வருமா?

பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதற்குத்தான் எல்லா நாடுகளும் நிதி அதிகம் ஒதுக்குதின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எனவே ஆயுதம் எடுப்பதில் தவறு இல்லை.

பழ.நெடுமாறன் எழுதியுள்ள இந்த நூல் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டத்துக்கான ஆயுத சாலையாகப் பயன்படும்," என்றார் வைகோ.

பழ.நெடுமாறன் பேசுகையில், "பிரபாகரன் புகழ் பாடுவதற்காக இந்த நூலை எழுதவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். ஈழத் தமிழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுதியுள்ளேன். பிரிட்டிஷார் ஆட்சியில் தமிழர்கள் கூலிகளாகத்தான் பார்க்கப்பட்டனர்.

இந்தப் பார்வை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. விடுதலைப் புலிகளுடைய எழுச்சிக்குப் பின்னரே இந்தப் பார்வை மாறியது.

வீரம் நிறைந்தவர்களாக இப்போது தமிழர்கள் பார்க்கப்படுகின்றனர்," என்றார் அவர்.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சித் தலைவர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட பலர் பேசினர்.

விழாவில் பழ.நெடுமாறனுக்கு ம.தி.மு.க. சார்பில் தங்கப் பேனா பரிசளிக்கப்பட்டது.

http://tamil.oneindi...am-aid0136.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை போட்டுவிட்டேன், தமிழ்நாட்டு வோட்டுக்கள்தான் அதிகம்

இதை எம்மவர்களுக்குத் தெரியப்படுத்துவதோடு, ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

நானும் போனகிழமையே போட்டுவிட்டேன். பல மக்களின் பார்வைக்கு படும்படி இதனை யாழில் முன்பக்கத்திலேயே இருக்க செய்ய முடியாதா?

தலைப்பில் 2011 என்பதற்கு பதிலாக 201? என்று இருக்கிறது. மாற்றி விடுங்கள்....

தலைப்பும் தமிழில் இருந்தால் வாசகர்களும் விரும்பி பார்ப்பார்கள். அல்லது ஆங்கில செய்தியோ என்று விட்டிட்டு போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I asked Robert Blake on twitter: lets see if he replies!

@State_SCA #AskSCA Do you think that US did not have clear understanding of #SriLankan #Tamils' struggle for freedom for 64 years?

I asked Robert Blake on twitter: lets see if he replies!

@State_SCA #AskSCA Do you think that US did not have clear understanding of #SriLankan #Tamils' struggle for freedom for 64 years?

I also would like to see his answer to your question.

If America was aware of the problem, then, was there any solutions discussed at any part of their government at any time? If not so, why didn’t they do anything so far?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.