Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போக விருப்பமில்லை - கவி 05 - "இந்தியத்தால் சிந்திய இரத்தம்"

Featured Replies

220px-Parathan-2.JPGகப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ]

சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான்,

நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்!

கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன்,

எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்...

மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!!

"மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்!

அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்!

வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு,

அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன!

ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!!

தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்!

இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்!

அவன் கருங்குழல் ஆயுதந்தனை வாங்கி...

முதன்முறையாய் சுமந்து பார்த்தான் !

ஆறு வயதிலும் அவனுக்கு ஆசை வந்தது!!

ஈழத்தில் தமிழ் இரத்தம் குடித்த இந்திய வல்லூறுகள்-இவன்

காலத்தில் இரைதேட வெளியே வரப்பயந்து,

பச்சைக் கோட்டைக்குள் பதுங்கியே கிடந்தனர்!

நேரெதிர் இயலாமல்... வீரனை விழுத்த,

சூழ்ச்சிகள் தேடினர் சூழ்ச்சிக்கார சூரர்கள்!!

பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!!

துப்பாக்கிக் குண்டுகள் தடுமாறின... அவனைத் தொட முடியாமல்!

வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற வீணர்களின் வெறியாட்டத்தில்,

ஒரு நிகரற்ற வீரன்... தன்னிரு தோழரோடு... தாய்மண்ணில் சாய்ந்தான்!

அவர்கள் வீழ்ந்தும் அடங்காத கொலைவெறியில்.......................

அதை நினைத்தால் கலங்குது... கண்கள் இன்னும்! பதைக்குது நெஞ்சம்!!

நான் பார்த்துப் பழகிய ஒரு மாவீரனின் வீரமரணம்...

இன்னும் அழியாத நினைவாய் எனக்குள்... !

அறியாத வயசிலும் என் மனதில்... விதையாய் விழுந்தான்!

அவன் வரமாட்டான் என்று தெரிந்தும்...

அவனையே தேடிக்கொண்டிருந்தது... அந்த பிஞ்சு மனசு!!

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

சிந்திய இரத்தத்தின் வரலாறுகள் தொடரும்...

இதன் முன்னைய பதிவுகளைப் பார்க்க:

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - கவிமுகம்

http://www.yarl.com/...56

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

http://www.yarl.com/...88

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - வடமராட்சி மண்ணில் வந்திறங்கிய விஜயர்கள்! (கவி - 02)

http://www.yarl.com/...21

ஊருக்குப் போக விருப்பமில்லை - உலகையே அதிரவைத்த கறுப்பு வீரன்! (கவி-03)

http://www.yarl.com/...61

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஈழக் காற்றில்...இந்திய நாற்றம்" (கவி-04)

http://www.yarl.com/...showtopic=95896

திருத்தத்திற்கான காரணம்:

முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள் செயற்படாதமையினால் அவை மாத்திரம் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அவை செயற்படக்கூடியவாறு இருக்கும் என நம்புகின்றேன்!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத் துயரங்களையும், ஏக்கங்களையும் தாங்கி வரும், உங்கள் கவிதை வலிக்கின்றது!

நன்றிகள், கவிதை!

" பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!! "

இலங்கையின் சுதந்திரம் தொட்டு இன்றுவரை துரோகத்தனம்தான் ஆட்சி செய்தது என்பது கசப்பான உண்மை . வாழ்த்துக்கள் கவிதை இந்தவரிகளுக்காக...............

  • தொடங்கியவர்

தாயகத் துயரங்களையும், ஏக்கங்களையும் தாங்கி வரும், உங்கள் கவிதை வலிக்கின்றது!

நன்றிகள், கவிதை!

வலிகளைத்தான் பெரும்பாலும் அனுபவித்தோம். ஆனாலும் அந்த மண்ணின் ஞாபகங்களில் மனவெளிகள் நிறைந்துபோகின்றன.

வலித்தாலும் எதையும் தாங்கும் வலிமையையும் கொடுத்திருக்கு அந்த மண் எமக்கு!

நன்றி புங்கையூரன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எத்தனை வயசென்று தெரியுது :D மற்றப் படி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை[கவிதை எழுதத் தெரிந்தால் தானே கவிதை விமர்சிக்கலாம்.]பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

" பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!! "

இலங்கையின் சுதந்திரம் தொட்டு இன்றுவரை துரோகத்தனம்தான் ஆட்சி செய்தது என்பது கசப்பான உண்மை . வாழ்த்துக்கள் கவிதை இந்தவரிகளுக்காக...............

கோ... கூட இருந்து குழிபறிக்கிற துரோகத்தனம் எங்கள் இனத்துக்கே ஒரு தொடரும் சாபக்கேடு. இது காலங்காலமாக தொடரும் நிலைமை.

மாறுமா என்பது சந்தேகமே?

உண்மையான துரோகத்தனத்தினை ஏனென்றும் கேட்கமாட்டார்கள்... ஆனால் நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு துரோகப்பட்டம் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.

இதுதான் இன்றைய நிலைமை. :(

நன்றி கோ :)

  • தொடங்கியவர்

உங்களுக்கு எத்தனை வயசென்று தெரியுது :D மற்றப் படி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை[கவிதை எழுதத் தெரிந்தால் தானே கவிதை விமர்சிக்கலாம்.]பாராட்டுக்கள்

ரதியக்கா! பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள்! :)

நான் இப்பொழுதுதான் கவிதையெழுத முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றது.

யாழில் உள்ள பலபேரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் இன்னும் இருக்கின்றது.

நான் உங்களுக்குத் தம்பிதானே அக்கா! என் வயசைத்தான் வெளிப்படையாக யாழில் என் சுயவிபரப் பகுதியில் குறிப்பிட்டிருக்கின்றேனே!

நன்றி ரதி அக்கா! :)

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

இந்த நம்பிக்கை தான் தமிழர்களை ஆறுதல் கொள்ள வைத்திருக்கிறது கவிதை. நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் வலிகளாய் மனதை தைக்கின்றது. உண்மைகள் கூடவே கலங்க வைக்கின்றன. நன்றிகள் கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை உங்கள் முன்னைய இணைப்புக்களை கிளிக்கினால் page not found என்று வருகிறது கவனியுங்கள்

மீண்டு வந்ததில் மிக்க சந்தோசம்! நன்றி கல்கி!

எம் மாவீரர்களின் தியாகங்கள் என்றைக்கும் எதனாலும் தோற்றுப்போகாது! அதன்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பவன் நான்!

அவர்களின் தாயகக் கனவு நிறைவேறும்!

எம் மக்களின் அவலங்கள் எல்லாம் தூர ஓடிப்போகும்!

இது என்றாவது ஒரு நாளேனும் நடந்தே தீரும்!

  • தொடங்கியவர்

கவிதை உங்கள் முன்னைய இணைப்புக்களை கிளிக்கினால் page not found என்று வருகிறது கவனியுங்கள்

என்னால் முடிந்தளவுக்கு என் இணைப்புக்களை மாற்றியமைத்துள்ளேன்.

இப்பொழுது அந்த இணைப்புக்களை சொடுக்கிப் பாருங்கள்! சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் அக்கா! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.