Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவைப் போல அதிகாரப்பகிர்வு அவசியம் – இந்தியக் குழுவிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

selvam-tna_mp_telo.jpg

அதிகாரங்கள் இல்லாத அதிகாரப்பகிர்வினால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்திய முறைமையில் மாநிலங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது போன்று மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தாஜ் சமுத்ரா விடுதியில் சந்தித்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது-

”சிறிலங்காவில் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல்தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் குழுவிடம் கோரியுள்ளோம்.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்குமாறு இந்திய நாடாளுமன்றக் குழுவினர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழர் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. அங்கு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறாமல் உள்ளது. ஆகியன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியக் குழுவினரிடம் எடுத்துக் கூறினோம்.

இராணுவத்தின் கீழ் உள்ள நிர்வாகங்கள் அனைத்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் ஒன்றின் கீழ் கையளிக்கப்படும் போது வடக்கு, கிழக்கில் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் தமிழர்கள் கௌரவமாக வாழமுடியும் என்று குறிப்பிட்டோம்.

அத்துடன் சிறிலங்கா அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்தும் இந்தியத் தரப்பினருக்கு நாங்கள் விளக்கினோம்.

இதன்போது, பேச்சுக்கள் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும், அதற்காக சிறிலங்கா அரசுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் இந்தியக் குழுவினர் எம்மிடம் தெரிவித்தனர்.

இது குறித்து தாம் அக்கறை கொள்வதாகவும், நிறுத்தப்பட்டுள்ள பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபரை சந்திக்கும் போது எடுத்துக் கூறவுள்ளதாக, இந்தியக் குழுவின் தலைவி சுஸ்மா சுவராஜ் உறுதியளித்தார்.

சிறிலங்கா அரசின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்தியக்குழுவினர் சுதந்திரமான முறையில் சென்று வடக்கு, கிழக்கில் மக்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும் என்று இந்தியக் குழுவிடம் கூறியுள்ளோம்.

அதிகாரம் இல்லாத அதிகாரப்பரவலாக்கத்தினால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ளது போன்று காணி, காவல்துறை அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் சிறிலங்காவின் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் நாம் வலியுறுத்தினோம்.

வரும் சனிக்கிழமை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கும்போது இது குறித்து, தாங்கள் பேசுவதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.“ என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinapp...?20120418106017

அதிகாரப் பகிர்வு மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும்: மனோ

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு வலியுறுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது.

அதேபோன்று அதிகாரப் பகிர்வை வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வைத்து இந்தியக் குழுவினரை சந்தித்தபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்தும் இந்தியா அக்கறை காட்ட வேண்டும். தேசிய இனப்பிரச்சி னைக்கான தீர்வு கூட்டமைப்பினதும் அரசாங்கத்தினதும் பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை.

மலையக மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே அதிகாரப் பகிர்வு வட, கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படாமல் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மலையக சமூகத்தினரின் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது வறுமையிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சிறுபான்மை இன மக்கள் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டியது இந்தியாவின் பொறுப்பு" என அவர் கூறினார்டுத்த இலங்கைக்கு வலியுறுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது.

அதேபோன்று அதிகாரப் பகிர்வை வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வைத்து இந்தியக் குழுவினரை சந்தித்தபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்தும் இந்தியா அக்கறை காட்ட வேண்டும். தேசிய இனப்பிரச்சி னைக்கான தீர்வு கூட்டமைப்பினதும் அரசாங்கத்தினதும் பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை.

மலையக மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே அதிகாரப் பகிர்வு வட, கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படாமல் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மலையக சமூகத்தினரின் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது வறுமையிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சிறுபான்மை இன மக்கள் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டியது இந்தியாவின் பொறுப்பு" என அவர் கூறினார்_.

http://www.virakesar...asp?key_c=37646

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பலனடையணும்.

அந்த மாவீரரை ஒரு கணம் கனம் பண்ணுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் இல்லாத அதிகாரப்பரவலாக்கத்தினால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ளது போன்று காணி, காவல்துறை அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் சிறிலங்காவின் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் நாம் வலியுறுத்தினோம்.

இந்தமாதிரி ஒரு தீர்வை பெறவா எமது மக்கள் மிகப்பெரிய தியாகங்களை செய்தார்கள் !

எம்மை நாமே ஆழவேண்டும் அதற்காகவே எமது மக்கள் போராடினார்கள் ............ இந்தியாவில் உள்ள மாநிலங்கள் போன்ற தீர்வு கூட்டமைப்புக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கலாம், ஆனால் தமது சொந்தங்களை உறவுகளை தொலைத்த உறவுகள் நிச்சயமாக ஏற்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அதிகாரங்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டால் தண்ணி கூடக்குடிக்க முடியாமல் இருக்கும் போது கூட்டமைப்பு இந்த அதிகாரங்களைக் கேட்டுப் பெறுவது வெட்கக் கேடான விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது-

எங்கடை பிரச்சனையளை விளங்கப்படுத்தி சொல்லுறதுக்கே ஒரு நாள் காணாது.....இதிலை இதுக்கெண்டு மினைக்கெட்டு வந்தவையோடை..........ஓ அவை வேறை அலுவலாய் வந்த இடத்திலை உங்களை சந்திச்சவையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The IDPs mainly raised two issues with the Indian delegation. One is related to housing. “Where will we live after we leave this place,” asked an inmate. These residents are not entitled to the 50,000 houses that India is assisting in building in Sri Lanka, nor are they part of any other scheme. “From my interactions, I came to the conclusion that these people did not have homes even earlier,” said T.K. Rangarajan of the CPI(M). It possibly did not matter then as there was some kind of livelihood.

(??)

Indian MPs try to paint a rosy picture of SriLanka!

http://www.thehindu....icle3328105.ece

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.