Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம்? – கலக்கத்தில் சிறிலங்கா!

Featured Replies

நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார்.

ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர். எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் நிலையில், போர்க்குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பணியாற்றுகின்ற நிலையில், எரிக் சொல்ஹெய்ம் அவருக்குத் தலைவலி கொடுக்கலாம் என்று சிறிலங்கா கலக்கமடைந்துள்ளது.

ஐ.நாவுக்கான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டால், அது சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசதரப்பு எதிர்பார்க்கிறது. சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுநோர்வே பகிரங்கமாகவே வலியுறுத்தி வருகிறது.

சில காலங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்தபோது, எரிக் சொல்ஹெய்ம் கூட இதையே வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான ஒருவர் ஐ.நாவில் உயர் பதவியைப் பெறுவது தமக்கு நெருக்கடியாக அமையும் என்று, சிறிலங்கா அரசதரப்பு கலக்கமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://thaaitamil.com/?p=16463

தமிழர்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர் என்ற ரீதியில் எரிக் ஐ.நா. செயலாளர் நாயகமாக வருவது எமக்கு சில நன்மைகளை தந்தாலும் இவர் மேற்குலக நலன்களுக்கே நிச்சயம் முதன்மை இடத்தை தருவார். இன்றைய விரிசல் நிறைந்த மேற்குலக - சிங்கள உறவில் இவரின் வருகை எமக்கு கூடுதல் நன்மைகளை தரக்கூட்டும். ஆனால் நாம் எம்மையே நம்பி கூடுதலாக செயல்படல்வேண்டும்.

இவர் மூலம் ஏனைய நாடுகளின் ஐ.நா தூதர்களை எமக்கு சார்பாக மாத்த முடியுமானால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது

எவரவர் சம்பந்தப்பட்டிருந்தனர்..........

என எல்லாம் தெரிந்தவர் முக்கிய பதவிகளுக்கு வருவது நன்மையே. இனி இவர்கள் எவரும் உண்மையை மறைக்கவோ பொய்க்காக வாதிடவோ முடியாது அந்தளவுக்கு உண்மைகள் வெளிவந்துவிட்டன. அவற்றிற்கு எதிராக வாதிட அவர்களது பதவிகளும் இடங்கொடுக்கா. அத்துடன் இனி இதற்கான நீதி என்ன என்பதே எல்லோருக்கும் இருக்கும் கேள்வியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களிற்கு நடந்த கொடுமைகளுக்கு நீதிகிடைக்கவும் அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலும் நடக்கக்கூடிய ஒரே ஒருநபர் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள்தான் எமது பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர் என்றவகையில் இவருக்கு அதற்க்கான கடமைப்பாடும் உண்டெனலாம். இவரின் ஐநா பிரவேசம் தமிழ்மக்களுக்கான விடிவுக்கான காலம் எனலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சோல்கைம் எனது தனிப்பட்ட நண்பர் என்றவகையில் அவரது தனிப்பட்ட உறுதியான அனுதாபம் ஈழத்தமிழர்பால் இருந்தது. என்பதையும் ஆனால் பதவி சார்த நடு நிலை மேற்க்கு நாடுகளின் எச்சரிக்கை போன்ற எல்லைகளுக்குள்ளேதான் அவர் செயல் பட வேண்டி இருந்தது என்பதையும் அதையும் மீறி அவர் பாலசிங்கம் அண்ணர்ருடன் அனுதாபத்துடன் செயல்பட்டார் என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் .

மேற்க்குநாடுகளின் நலன்களையும் தற்கொலைப் படை போன்ற மேற்க்கு நாடுகளின் அச்சங்களைப் புலிகள் புரிந்துகொண்டு செயல்படவேண்டுமென்பதை நானும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். 2002ல் ஒஸ்லோவில் நடந்த சந்திப்பில் ரணில் மற்றும் அமரிக்க உதவி செயலாளர் றிச்சேட் அமிஸ்ராஜ் போன்றவர்கலின் முன்னிலையில் இவிடயங்களைக் கையாண்ட பாலசிங்கம் அண்ணரின் ராஜதந்திர முதிற்ச்சி என்னை ஆச்சரியப் படுத்தியது. உண்மையில் எரிக் சோல்கைம் பாலசிங்கம் அண்னரின் தேர்ந்த ராசதந்திரத்தால் உற்ச்சாகம் அடைந்திருந்தார். ஆனால் துர் அதிஸ்ட்டவசமாகபாலா அண்னரின் கை தொடர்ந்தும் ஓங்கியிருக்கவில்லை.

பின்னர் பேச்சுவார்த்தைகளில் தமிழ்செல்வன் புலித்தேவன் நடேசன் என இராசதந்திரிகள் அல்லாதவர்ளை முன்னிலைப் படுத்தியபோதே மேற்க்குநாடுகள் ஆரம்பித்துவிட்டது. அவர்கள் எவ்வித dedication அதிகாரமோ பாலா அண்ணனின் முடிவெடுத்துவிட்டு வன்னிக்குப் புரியவைக்கும் தற் துணிபோ இருக்கவில்லை. வன்னியின் பிரதிந்திகள் எல்லாவற்றுக்கும் வன்னியை கேட்டே வாய்திறத்தல் அல்லது ஒத்துழையாமை மற்றும் காலையில் சமாதானபெச்சு மாலையில் கடைசி அடிக்கு காசு கேட்டல் போன்ற இராசதந்திர வளமைக்கு மாறான ஒரு சூழல் சகல மேற்க்கு நாடுகளின் இராசதந்திரிகளுக்கும் எரிச்சல்லூட்டியது என சொல்லப்பட்டது

தமிழ் செல்வன் குழுவினரின் ஒத்துழையாமையால் ஜெனிவா பேச்சுவார்த்தைகளை முறிந்ததாக மேற்க்கு நாடுகள் கருதின. அன்று மாலை விரக்தியுடன் ஒஸ்லோ வந்த எரிக் சோல்கைம் என்னுடன் பேசும்போது மேற்சொன்ன விடயங்களை தொட்டுக்காட்டி “அழிவின் ஆரம்பித்துவிட்டதே” என மனம் நொந்து சொன்னார். அவரை சந்தித்துவிட்டு விரக்தியுடன் வெளியில் வந்த என்னுடைய பேட்டி பிபிசி யில் வெளிவந்தது.

http://news.bbc.co.u...sia/5076930.stm

மேற்படி பேட்டி தொடர்பாக என்னை விமர்சித்த இணைய தளம் ஒன்று வன்னியில் நெருக்குதலால் தங்கள் விமர்சனத்தை வாபஸ் பெற்றார்கள் என வன்னி சென்றபோது எனக்குத் தெரிவிக்கப் பட்டது.

இந்தப் பின்னணியில் மேற்க்கு நாடுகள் புலிகள் எதிர்நிலை எடுப்பது தொடர்பாக எரிக்கால் ஒன்றும் செய்ய்முடியவில்லை

பாலசிங்கம் அண்ணர் கருத்துக்களை வன்னி கேட்டிருந்தால் எரிக் சோல்கைமால் கில்லாரி கிளின்ரன் போன்றவர்களது ஆதரவுடன் எமக்குச் சார்பாக அதிகம் செய்திருக்க முடிந்திருக்கும். .

நண்பர் எரிக் சோல்கைம் அவர்கள் நோர்வேயின் ஐநா தூதராக வெற்றிபெறவேண்டுமென வாழ்த்துக்கிறேன்.

.

Edited by poet

கடைசி அடிக்கு இராணுவம் யாழிலும் திருகோணமலையிலும் குவிக்கபட்டுகொண்டிருந்த அதே வேளை. அரசு இரு வருடங்களுக்கு முன்பே உடன்பட்ட எதையுமே நிறைவேற்றாத நிலையிலேயே ஜெனிவா பேச்சுக்கள் தொடர்ந்தது.

அரசு உடன்பட்டவைகள் நிறைவேற்றபாடதா நிலையில் தொடர்ந்தும் எதைப்பற்றி பேசுவது?

என்ற இழுபறி நிலையிலேயே பேச்சு தொடர்ந்தது.

இதில் புலிகள் விட்டு கொடுக்க என்ன இருந்தது என்பதை எங்களுக்கு புரியும்படி உங்களால் தயவு செய்து எழுதமுடியுமா?

வன்னி .......... வன்னி என்று நீங்கள் எழுதுவதை எங்களால் வசிக்க முடிகிறது அந்த வன்னி யார் என்பதும் புரியவில்லை.

தமிழ்ச்செல்வன் குழுவினர் எதற்கு ஒத்துழைக்கவில்லை என்பது உங்கள் கருத்தில் தெரிந்தோ தெரியாமலோ மறைக்கபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய மருதம் கேணி, விவாதத்துக்கு வரவில்லை. என் சுயசரிதத்தில் விரிவாக எழுதுவேன். இங்கு இதன்மேல் இந்த திரியில் எழுதவில்லை.

மேற்க்கு நாட்டு இராசதந்தரிகள் அமைச்சர்கள் சொன்னதன்படி 1’ ஒருவித power delication னும் இல்லாமல் அனுப்புகிறார்கள் அதனால் எந்த சிறு விடயத்திலும் முடிவெடுக்கும் அட்திகாரம் இல்லை. மாலையில் பொதுக்கூட்டங்களில் கடைசி அடிக்கு பணம் கேட்க்கிறார்கள். இதுபற்றி இலங்கை அரசுக்கு எம்மால் பதில் கூற முடியவில்லை என்பது பொதுவான கருத்து. .2. பாலசிங்கத்துக்கு இராசதந்திர அரசியல் விடயங்களைப் புரிந்து கொள்ளும் capacity மற்றும் தற்துணிபாக முடிவெடுத்து தலைமையை ஏற்றுக்கொள்ள வைக்கும் தற்துணிவும் இருந்தது.என்றார்கள். 3 பாலசிங்கம் அண்ணரை மட்டும்தான் அதிகாரத்தோடு dedication பேச தகுதி வாய்ந்தவர் என மேற்க்குலகம் கருதியது. ஒரு மேற்க்கு நாட்டு அமைச்சர் சமாதான பேச்சுவார்த்தையில் வரிக்கு வரை நாங்கள் வன்னியில் பரசூட்டில் குதித்து பதில் கேட்க்க வேணும் என நினைக்கிறார்களா என்று கேட்டார். இதை எல்லாம் உடனுக்குடன் வன்னிக்கு எழுதினேன். வன்னி என்பது வன்னிதான். நான் வன்னி என்கிறபோது நந்தவனம் தவிர்ந்த வன்னி என்று எடுங்கள்.

1996ல் இருந்து 2006 வரை ஒரு வருடம் தப்பாமல் எல்லா வருடங்களும் பலதடவை வன்னிக்கு சென்று வந்துள்ளேன். ஆரம்பத்தில் ஒவ்வொரு தடவையும் நான் எல்லைகடக்கும்போது நந்தவனம் தலையிடும். நான் அவர்கள் தலையீட்டை ஏற்றுக்கொண்டதில்லை.அதனால் மாதவனின் உதவியாலர்கள் ஊடாகவே என் பயணங்கள் பதியப்பட்டது. ஒரு முறை எல்லை கடக்கும்போது நோர்வீஜிய பேராசிரியர் Oivind fuglarud என்னோடு இருந்தார் அவர் அச்சப்பட்டார் என நினைக்கிறேன்.

அந்தத் தடவை நந்தவனத்தின் பாஸ் புத்தகம் வாங்கும்படி கேட்க்கப் பட்டது. நான் அவர்கள் ஊடாக வன்னி போக மறுத்தேன். வருவதா திரும்பிப் போவதா என தலைமையைக் கேட்டுச் சொல்லச் சொன்னேன். பின்னர் நந்தவன பதிவில்லாமல் உளவுத்துறையூடாக (மாதவன்) எங்களை அனுமதித்தார்கள். எந்தொடர்பாக உளவுத்துறைக்கும் நந்தவனத்துக்கும் முரண்பாடு இருந்தது.

என்னுடைய எல்லா பயணங்களின்போதும் நந்தவனப் பதிவு இருக்கவில்லை. நந்தவனத்தின் உபாயங்கள் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதே என் நிலைபாடாக இருந்தது. அந்த பதவிக்கு பாலகுமாரனே தகுதியானவர் என்றும் வன்னிக்கு தெரிவித்தேன். ஆதலால் நான் வன்னி என்னும்போது வன்னித் தலைமை - நந்தவனம் என்று கொள்ளுங்கள். உங்களுக்குப் புரியும். விரிவான குறிப்புகள் யுத்தம் பற்றிய என் புத்தகத்தில் எழுதுவேன்

சமாதான பேச்சுவார்த்தை பிரதிநீதிகள் கடைசியடி பற்றி கூட்டங்களில் பேசியது நமக்கு. உதவ விரும்பிய மேற்க்கு நாட்டு முக்கியஸ்தர்களை வாயடைக்க வைத்த இராசதந்திர தவறாகும். இராணுவம் சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்தால் உடனடியாக கடைசி யுத்தம் புரியும் நோக்கில் இருக்கவில்லை. அவனது நோக்கம் புலிகளின் நேரடி யுத்த நிலையினால் தமக்குக் கிடைக்கும் advantage ஆதாயங்களை உச்சப்படுத்தி நிலைபடுத்துவதாக இருந்தது.

இதன் அரசியல்தான் ஒஸ்லோவில் ஆரம்பித்த கோத்தகொடவின் கருணாவுடனான தொடர்புகள்.

யுத்தம் முறியும் கையோடு யாழ்ப்பாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் வசப்படுத்தி நம்மை வன்னியுள் முடக்குவதே எதிரியின் இலக்காக இருந்தது. சிங்கள பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை நாம் முறிக்கவேண்டும் என்கிற அடிப்படையில் இராசதந்திரத்துடன் செயல்பட்டனர்.

பேச்சுவார்த்தை முறிவதானால் அதன் பலனை நாமே பெறவேண்டும். அதற்க்கு பேச்சுவார்த்தையை சிங்கள பிரதிநிதிகள் முறிக்கும்வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தினேன். பாலசிங்கம் அண்ணரும் அதைத்தான் விரும்பினார் என்பது எனது உறுதிப்படுதப் படாத ஊகம். இத்துடன் இந்த விவாதத்தில் இருந்து விடை பெறுகிறேன்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.