Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தை அரசாங்கம் பாதுகாக்கும்!- தம்புள்ளை விவகாரம் தொடர்பாக பிரதமர்!

Featured Replies

உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தை அரசாங்கம் பாதுகாக்கும்!- தம்புள்ளை விவகாரம் தொடர்பாக பிரதமர்!

வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.

இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகரமாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பினர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றுக்குச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கலகெதர பிரதேசத்தில் நடைபெற்ற வைவபம் ஒன்றில் கலந்துகொண்டே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் முஸ்லிம் பள்ளிவாசல் சம்பந்தமாக நான் விசாரித்துப் பார்த்தேன். தம்புள்ளை பிரதேசத்திற்கு வரும் முஸ்லிம் வியாபாரிகள் தமது சமயக் கிரியைகளை மேற்கொள்வதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசலான இது சுமார் அறுபது வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டதாகும்.

இந்தப் பள்ளிவாசல் சம்பந்தமாக எனக்கு எவ்வித தகவல்களையும் எவரும் வழங்கவில்லை. ஆனாலும் சென்ற தினங்களில் பல ஊடகங்களில் முஸ்லிம் பள்ளிவாசல் சம்பந்தமாக பல அறிக்கைகள் விடப்பட்டன. அதற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினைக் கூட பிரதேசவாசிகள் நடத்தியிருந்தார்கள்.

பெளத்த சாசனத்தைப் பாதுகாத்துப் போஷிப்பதாக அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது. ஆனாலும் ஏனைய மதங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதற்கு அகௌரவப்படுத்துவதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை.

நாம் இன, மத மற்றும் கலாசார ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. எப்படியிருப்பினும் தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலினை வேறோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு தற்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன மற்றும் மத ரீதியாகக் கருத்து முரண்பாடுகள் ஏற்படும் வகையில் நாம் தீர்மானங்களை எடுக்கக் கூடாது. இனம், மதங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இன்று நடைபெறும் இந்த வைபவம் பௌத்த விஹாரையொன்றில் நடைபெற்றாலும் இதற்காக இந்தப் பிரதேசத்தில் வாழும் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதிலிருந்து இந்தப் பிரதேசத்தில் நிலவும் சமய ரீதியான ஒற்றுமை முழுநாட்டுக்கும் முன்மாதிரியாக உள்ளது என்றார்.

http://www.tamilwin.com/show-RUmqyERYOUgv4.html

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் என்று வந்திருக்க வேண்டும்!

தர்மத்திற்கும் சிங்களத்திற்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு எதிராக அரசுக்குள்ளேயே சூழ்ச்சி! தம்புள்ளையில் புதுவடிவம் அம்பலம் - சோபித தேரர்

அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு உள்ளேயே சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

30 வருட யுத்தத்தில் இருந்து நாடு மீட்கப்பட்டு சுதந்திரம் கிட்டியபோதும், அது தொடர்பில் பொது மக்கள் பேதமின்றி மகிழ்ச்சியடைந்த போதும் சர்வதேச சூழ்ச்சியால் இலங்கை வலைக்குள் சிக்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக செயற்படும் வேளையில் அதற்கு சமமான சூழ்ச்சி அரசாங்கத்துக்குள்ளும் மேற்கொள்ளப்படுவதாக ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி விழிப்புடன் இருக்க வேண்டும் என கொழும்பில் இன்று 24ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

தம்புள்ளை புனித பூமியில் முஸ்லிம் பள்ளிவாசல் அமைப்பது அதன் ஊடாக சிங்கள முஸ்லிம் இனங்களுக்கு இடையில் பேதம் ஏற்படுத்துவது அரசாங்கத்தின் உள்சூழ்ச்சியின் புதிய வடிவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளையில் சம்பவத்தின் மூலம், தம்புள்ளையில் முஸ்லிம் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிவதாகவும் இதற்கு அரசாங்க தரப்பில் உள்ள சிலரும் ஆதரவு அளித்துள்ளதாகவும் அப்படியானவர்களுக்கு தராத்திரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24768

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சகோதரர்களின் உயிரைப் பணயம் வைத்தா? :D

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சகோதரர்களின் உயிரைப் பணயம் வைத்தா?

தோழர் ஒரே டமாஸ்தான்..! சோனியல் நானே கழுத்தை நீட்டுகிறேன் என்றாலும் நம்ம ஆட்கள் நீங்களும் நாங்களும் உடன் பிறவா எக்ஸ்ட்ரா எக்ஸ்டரா என பிட்டை போட்டு ...நம்ம ஆள் அவர்களுக்காக கழுத்தை நீட்டுவான்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.