Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்த உலகளாவியரீதியில் உறுதுணைக்குழுக்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TGTE270412News-seithy-150.jpg

முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் சனநாயக வடிவமாகவுள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்ட, உலகளாவியரீதியில் உறுதுணைக்குழுக்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவாக்குவதும், மக்கள் மயப்படுத்துவதும் இந்த உறுதுணைக்குழுக்களின் அடிப்படை நோக்கமாகவுள்ளது.

தமிழகத்தில் தோழமை மையமாகவும் மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய உறுதுணைக்குழுக்கள் ஏலவே தோற்றம் பெற்றிருந்ததன் தொடர்சியாக, தற்போது ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் உறுதுணைக்குழுகள் விரிவாக்கம் பெற்றுள்ளன.

ஜேர்மன்:

ஜேர்மன் பேர்லின் நகரில் உறுதுணைக்குழுவின் அங்குரார்ப்பண கூட்டம் 28-04-12 சனிக்கிழமை இடம்பெறுகின்றதென உள்துறை அமைச்சின் ஜேர்மன் செயலகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wassertor str 48,10969 Berlin, எனும் முகவரியில், இக்கூட்டம் மாலை 17:30 மணிக்கு இடம்பெறுகின்றது.

மலேசியா:

மலேசியாவில், தமிழீழ மலேசிய நண்பர்கள் எனத் தோற்றம் பெற்றுள்ள உறுதுணைக் குழுவானது, தமிழீழ விவகாரம் தொடர்பில் மலேசியத் தமிழர்களிடையே ஓர் முனைப்பினை ஏற்படுத்தும் செயற்பாட்டில் பங்காற்றவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கையினை நிறைவேற்ற, மலேசிய மட்டத்தில் உறுதுணையினை வழங்கவுள்ள, தமிழீழ மலேசிய நண்பர்கள் அமைப்பின் ஓருங்கிணைப்பாளராக ஈஸ்வரலிங்கம் பங்காற்றுகின்றார்.

016 688 0455

எனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழீழ மலேசிய நண்பர்கள் அமைப்பில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோர்வே மக்கள் பிரதிநிதி தோமஸ் அலோசியஸ்ஓருங்கிணைப்பில், பேர்கன் மற்றும் ஸ்தவாங்கர் ஆகிய நகரங்களுக்கான உறுதுணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் முன் எடுத்துச் செல்லும் முகமாக, மேற்குறித்த இரு நகரங்களிலும் பொதுக்கூட்டங்களை இந்த உறுதுணைக்குழுக்கள் முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது நோர்வேயின் பிற இடங்களிலும் உறுதுணைக்குழுக்கள் உருவாக்கப்படவுள்ளன.

004791668547

இத் தொடர்பிலகத்தின் ஊடாக, இந்த உறுதுணைக்குழுக்களுடன் இணைந்து கொள்ளலாம் என மக்கள் பிரதநிதி தோமஸ் அலோசியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்:

பிரான்ஸ் தழுவியரீதியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யும் வகையில், தலைநகர் பாரசில் ,உறுதுணைக் குழுவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

சமூகதளத்திலும் மற்றும் விடுதலைச் செயற்பாட்டிலும் தொடர்சியாக பங்காற்றி வரும் பொதுப்பிரதிநிதிகள் ஐவரின் ஓருங்கிணைப்பில், உறுதுணைக்குழுவிற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சுவிஸ்:

சுவிசின் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலைவில் , இதற்கு வலுவூட்டும் வகையில், மாநில மட்டங்களில் உறுதுணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதனொரு அங்கமாக , சூரிச் பிராந்திய உறுதுணைக்குழுவின் முதலாவது பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானமும், தமிழர் விடுதலைப் போராட்டமும் எனும் மையப்பொருளில், அரசியல் கருத்தரங்கமாக அமைந்த இப்பொதுக்கூட்டத்தில், தியாகச்சுடர் அன்னை பூபதியினை நினைவேந்தி நிகழ்வு இடம்பெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், காணொளி பரிவர்த்தனையூடாக சிறப்புரையாற்றியதோடு, மக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்கெடுத்திருந்த, நா.த.அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவின் பிரதிநிதி பேராசிரியர் மணிவண்ணன்(தமிழகம்) அவர்களின் கருத்துக்களும் இடம்பெற்றிருந்தன.

இத்தோடு ஐ.நா மனித உரிமைச்சபையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதிகளான துணை அவைத்தலைவர் சுகன்யா , துணை அமைச்சர் சுதன்ராஜ் ,அமைச்சரவை செயலர் சுகிந்தன் ஆகியோரும் இக்கருத்தரங்கில் பங்கெடுத்திருந்தனர்.

சுவிசின் மாநிலம் தழுவியரீதியில் உறுதுணைக்குழுவின் இணைந்து கொள்ள 078 850 90 22 - 078 6979 497 எனும் தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

TGTE270412News-seithy-001.jpg

TGTE270412News-seithy-002.jpg

TGTE270412News-seithy-003.jpg

TGTE270412News-seithy-004.jpg

TGTE270412News-seithy-397_005.jpg

TGTE270412News-seithy-413_006.jpg

-நாதம் ஊடகசேவை-

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

தொடரட்டும் தங்கள் பணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி ...... வாழ்த்துக்கள் !

செயலில் ஆர்வமுள்ள குழுக்கள் அமைந்தால் வெற்றி!

இல்லையேல் வெட்டி அறிக்கைகள், அரட்டைகள் மூலம் தேவையற்ற பிரச்சினைகளும், பிளவுகளும் மட்டுமே அதிகரிக்கும்

நா. க. தா. ஈ. அ. தனது நிர்வாக ஆளுமையை பலமடங்கு வளர்க்கவேண்டிய அவசர தேவை உள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.