Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் அம்பும் வில்லுடனும்,கல் கத்திகளுடனும் வந்திருந்தால் ஒவ்வொரு ஈழவிரும்பியும் தெய்வங்கள் போல் வென்றிருப்பார்கள்.

அறிவாளிகள் கதைக்க வந்திட்டினம்.

  • Replies 117
  • Views 26k
  • Created
  • Last Reply

சிங்களவன் அம்பும் வில்லுடனும்,கல் கத்திகளுடனும் வந்திருந்தால் ஒவ்வொரு ஈழவிரும்பியும் தெய்வங்கள் போல் வென்றிருப்பார்கள்.

அறிவாளிகள் கதைக்க வந்திட்டினம்.

நீங்கள் அதிக கடவுள் பக்தி உடையவர் என்று நினைக்கிறேன்... அதனால் தான் உங்களுக்கு கோபம் வருகிறது...

ஆனால் அவர் கேள்வியில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை... நான் நினைப்பதும் அவரை போலவே தான்... அதற்காக நான் அறிவாளியில்லை... ஆனால் அவரை நான் பார்த்தவரை எனக்கு அவர் அறிவாளியாக தான் தோன்றுகிறார்... :)

அறிவாளிகள் கதைக்காமல் வேறு யார் கதைக்க வேண்டும்? அறிவாளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... ஆனால் இப்படி கருத்துகளுக்கு அறிவாளி என்ற சொல்லை சம்பந்தப்படுத்த வேண்டாமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்... :) :)

நான் 2009 இன் பின்னர் கோயிலுக்கு போவதில்லை... 2, 3 தரம் போயிருக்கிறேன்... அதுவும் வற்புறுத்தலினால்.... :(

ஏன்?என்ன காரணம்?

  • தொடங்கியவர்

கோமகன் அண்ணா!

ஒரு சந்தேகம் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நினைக்கிறேன்.

அப்பரைக் கல்லிலே கட்டிக் கடலிலே விட்ட போது அவர் தேவாரம் பாடினார். கல்லு தெப்பமாகி அவரைக் காப்பாற்றியது.

சம்பந்தர் அப்பாவைக் காணவில்லை என்று அழுதார். ஆண்டவன் பாரியாருடன் வந்து பால் கொடுத்தார்.

இப்படி ஏராளம் ஏராளம் கதைகள்.....

தங்கள் வீட்டில் பொங்க அரிசியில்லாவிட்டாலும் அம்மனுக்கென்று ஒவ்வொரு பிடி அரிசியாகச் சேர்த்து வைத்து வற்றாப்பளை அம்மனுக்குப் பொங்கலிட்டு கடவுளை நம்பி வாழ்ந்த வன்னி மக்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையிலே கொட்டும் குண்டுகளுக்கு மத்தியில் நின்று கூக்கிரலிட்டபோது இந்தக் 'கடவுள்' ஏன் வரவில்லை.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் மணிவாசகன் . இதில் நான் பிழையாக எடுப்பதற்கு என்ன இருக்கின்றது ? பொதுவாகவே ஆன்மீகம் பல சர்சைகளைக் கொண்டிருந்தது வரலாறு . விலங்குகளுடன் விலங்குகளக இருந்த மனிதனை சமூகக் கட்டமைப்புகளுக்குள் கொண்டுவர இப்படியான " கடவுள் நேரில் காட்சி தந்தார் " போன்ற கதைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் . ஆனால் நாயன்மார்கள் பாடிய அத்தனை ஆன்மீகப் பாடல்களும் வரலாற்றுப் பொக்கிசங்களாக எம் முன்னே இருக்கின்றனவே ? இந்தப் பதிவு உங்களை சஞ்சலப்படுத்துவதானால் , எந்த முறையில் இந்தப் பதிவை நான் நகர்த்துவது சிறந்தது என்ற ஆலோசனைகளையும் வழங்கினால் நான் நன்றி உடையவனாக இருப்பேன் . மேலும் உங்கள் இறுதிக் கேள்விக்கான எனது பதில் " அந்த மக்கள் கூக்குரல் இடாமல் தேவாரம் பாடியிருந்தால் கடவுள் சில நேரம் காப்பாற்றியிருக்கலாம் " .

Edited by கோமகன்

ஏன்?என்ன காரணம்?

தங்கள் வீட்டில் பொங்க அரிசியில்லாவிட்டாலும் அம்மனுக்கென்று ஒவ்வொரு பிடி அரிசியாகச் சேர்த்து வைத்து வற்றாப்பளை அம்மனுக்குப் பொங்கலிட்டு கடவுளை நம்பி வாழ்ந்த வன்னி மக்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையிலே கொட்டும் குண்டுகளுக்கு மத்தியில் நின்று கூக்கிரலிட்டபோது இந்தக் 'கடவுள்' ஏன் வரவில்லை.

இது தான் காரணம்.. :) :)

நான் கூறுவது ஏதாவது உங்களுக்கு பிடிக்காவிட்டால் மன்னியுங்கள். ஆனால் நான் என்தரப்பு பதிலை கூற விரும்புகிறேன்.... :)

மேலதிக தகவல்களுக்கு நான் ஏற்கனவே இணைத்த "அஷ்வின் வின்" இனது இந்த கவிதையை வாசியுங்கள்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100971

ஆனால் நாயன்மார்கள் பாடிய அத்தனை ஆன்மீகப் படலகளும் வரலாற்றுப் பொக்கிசங்களாக எம் முன்னே இருக்கின்றனவே ?

சரியோ பிழையோ எனக்கு நாயன்மார்களின் வரலாறு தெரிந்திருக்க வேண்டுமென்ற ஆவலினாலும் அவர்கள் பாடல்களினாலும் தான் கோயிலுக்கு போகாவிட்டாலும் இன்றும் இவற்றை வாசிக்கும் ஆர்வம் உள்ளது...

" அந்த மக்கள் கூக்குரல் இடாமல் தேவாரம் பாடியிருந்தால் கடவுள் சில நேரம் காப்பாற்றியிருக்கலாம் " .

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை... எத்தனையோ மக்கள் ஷெல் விழுவதற்கு மத்தியிலும் வீட்டிலும் கோயிலிலும் தேவாரம் படித்துக்கொண்டிருந்தார்கள்....

அவர்கள் ஏற்கனவே உள்ள தேவாரத்தை படிக்காமல் புதிதாக இயற்றி படித்திருக்க வேண்டுமென்று மட்டும் கூறி விடாதீர்கள்... அப்படி படித்தால் தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் அதற்கான ஆற்றலையும் அனைத்து மக்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும்...

பிறந்த ஒரு மாத குழந்தை, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருந்த குழந்தைகளும் தேவாரம் படித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியோ பிழையோ எனக்கு நாயன்மார்களின் வரலாறு தெரிந்திருக்க வேண்டுமென்ற ஆவலினாலும் அவர்கள் பாடல்களினாலும் தான் கோயிலுக்கு போகாவிட்டாலும் இன்றும் இவற்றை வாசிக்கும் ஆர்வம் உள்ளது...

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை... எத்தனையோ மக்கள் ஷெல் விழுவதற்கு மத்தியிலும் வீட்டிலும் கோயிலிலும் தேவாரம் படித்துக்கொண்டிருந்தார்கள்....

அவர்கள் ஏற்கனவே உள்ள தேவாரத்தை படிக்காமல் புதிதாக இயற்றி படித்திருக்க வேண்டுமென்று மட்டும் கூறி விடாதீர்கள்... அப்படி படித்தால் தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் அதற்கான ஆற்றலையும் அனைத்து மக்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும்...

பிறந்த ஒரு மாத குழந்தை, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருந்த குழந்தைகளும் தேவாரம் படித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?

மதங்கள் வேண்டாம் என்கிறீர்களா? அல்லது காலைமுதல் மாலை வரை இங்கே ஒப்பாரி வைப்போம் என்கிறீர்களா? இல்லையேல் உங்கள் முன்னோட்டங்களை சொல்லுங்கள்?இனியும் யாருக்கு கொடிபிடிக்க வேண்டும்?

மதங்கள் வேண்டாம் என்கிறீர்களா? அல்லது காலைமுதல் மாலை வரை இங்கே ஒப்பாரி வைப்போம் என்கிறீர்களா? இல்லையேல் உங்கள் முன்னோட்டங்களை சொல்லுங்கள்?இனியும் யாருக்கு கொடிபிடிக்க வேண்டும்?

நீங்கள் கூறிய எதை பற்றியும் நான் கூற வரவில்லை... வன்னி மக்களை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை? அப்படி அவர்கள் இறப்பது தான் நியதி என்றால் ஏன் சாதரணமாக கொலைசெயயப்படாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் என்ற கேள்விகள் தான் என்னுள் எழுகிறது...

கோமகன் அண்ணாவின் திரியில் மாறி மாறி நாம் கருத்துகள் எழுதிக்கொண்டிருப்பது அழகல்ல... எனவே இதனை இத்துடன் நிறுத்தி விடுவோம்.. நன்றி... :) :) :) :) :)

தரமான இலக்கியங்கள் என்ற வகையில் தேவாரங்களை மதிக்கிறேன். ஆனால் பரவச நிலையெல்லாம் இனிமேல் ஏற்படுமா என்பது சந்தேகமே!

தற்போதெல்லாம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பதிவுகளைக் காணும் போது போபம் வருகிறது. அது என் பலவீனமாக இருக்கிறது.

ஆனாலும் இந்தப் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் பலர் இருப்பதால் சரித்திரக் கதைகளை வாசிக்கும் ஆர்வம் பலரிடத்தில் இருப்பதனாலும் உங்கள் பதிவைத் தொடருங்கள்.

உங்கள் திரியைத் திசைமாற்றியதற்கு மன்னிக்கவும்

  • தொடங்கியவர்

சிங்களவன் அம்பும் வில்லுடனும்,கல் கத்திகளுடனும் வந்திருந்தால் ஒவ்வொரு ஈழவிரும்பியும் தெய்வங்கள் போல் வென்றிருப்பார்கள்.

அறிவாளிகள் கதைக்க வந்திட்டினம்.

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி ஒழுகப் படும். 154

குமாரசாமியர் உங்களுக்கு நான் தாற குளிசை மேலை சொன்னது தான் . ரெண்டு பிளாவால வாற கிக் ஐ விட இதிலை கிக் கூட . நன்றி உங்கள் கருத்துக்களுக்கு .

தொடர்ந்து எழுதுங்கள், கோமகன்.

மிக்க நன்றிகள் நூணா உங்கள் காணொளிக்கு .

  • தொடங்கியவர்

நீங்கள் அதிக கடவுள் பக்தி உடையவர் என்று நினைக்கிறேன்... அதனால் தான் உங்களுக்கு கோபம் வருகிறது...

ஆனால் அவர் கேள்வியில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை... நான் நினைப்பதும் அவரை போலவே தான்... அதற்காக நான் அறிவாளியில்லை... ஆனால் அவரை நான் பார்த்தவரை எனக்கு அவர் அறிவாளியாக தான் தோன்றுகிறார்... :)

அறிவாளிகள் கதைக்காமல் வேறு யார் கதைக்க வேண்டும்? அறிவாளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... ஆனால் இப்படி கருத்துகளுக்கு அறிவாளி என்ற சொல்லை சம்பந்தப்படுத்த வேண்டாமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்... :) :)

நான் 2009 இன் பின்னர் கோயிலுக்கு போவதில்லை... 2, 3 தரம் போயிருக்கிறேன்... அதுவும் வற்புறுத்தலினால்.... :(

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று. 157

மிக்க நன்றிகள் காதல் உங்கள் கருத்துக்களுக்கு .

  • தொடங்கியவர்

தரமான இலக்கியங்கள் என்ற வகையில் தேவாரங்களை மதிக்கிறேன். ஆனால் பரவச நிலையெல்லாம் இனிமேல் ஏற்படுமா என்பது சந்தேகமே!

தற்போதெல்லாம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பதிவுகளைக் காணும் போது போபம் வருகிறது. அது என் பலவீனமாக இருக்கிறது.

ஆனாலும் இந்தப் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் பலர் இருப்பதால் சரித்திரக் கதைகளை வாசிக்கும் ஆர்வம் பலரிடத்தில் இருப்பதனாலும் உங்கள் பதிவைத் தொடருங்கள்.

உங்கள் திரியைத் திசைமாற்றியதற்கு மன்னிக்கவும்

உங்கள் திறமைகளை நான் என்றுமே தவறாக எடைபோட்டது கிடையாது . நான் இந்தக் கருத்துக்களத்தின் வாசகனாக இருந்தகாலத்தில் உங்கள் எழுத்துகளால் கவரப்பட்டவன் . உங்கள் கருத்தால் எனது பதிவு திசைமாறியதாக நான் நினைக்கவில்லை . மாறக , எனது பதிவு ஒருவரால் ஊன்றிக் கவனிக்கப்பட்டு அலசி ஆராய்ந்து கேள்வி எழுப்பப் பட்டதாகவே உணர்கின்றேன் . ஆகவே உங்கள் கேள்வியினால் இந்தப் பதிவு செழுமைப் படுத்தப்பட்டுள்ளது என்பதே எனது கருத்து . மிக்க நன்றிகள் உங்கள் நேரத்திற்கும் . கருத்துக்களுக்கும் .

Edited by கோமகன்

நன்றி அண்ணா!

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று. 157

நன்றி உங்கள் கருத்துக்கு...

நான் அறம் அல்லாத எதையும் செய்வது போல் எனக்கு தோன்றவில்லை...

பொறாமை, பேராசை, அடுத்தவர் மேல் கோபம் கொள்ளல், அடுத்தவர்களை புண்படுத்தும் சொற்பிரயோகம் ஆகியவற்றினை தவிர்ப்பதே உண்மையான அறம்...

இங்கு நான் யாரையாவது நோகடித்திருந்தால் அது அறத்தை மீறியிருப்பதற்கான சந்தர்ப்பம்.. அப்படி நடந்திருந்தால் உரியவர்கள் மன்னித்து கொள்ளுங்கள்...

நன்றி...

  • தொடங்கியவர்

12 ஏயர்கோன் கலிக்காம நாயனார் .

naaiyadi_i.jpg

சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வேளாண்மையிற் சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமநாயனார். இவர் சிவபத்தியிலும் அடியார் பக்த்தியிலும் சிறந்து விளங்கினார். கலிக்காமனார் மானக்கஞ்சாறனாரது மகளைத் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருபணிகள் புரிந்தார். "நிதியமாவன திருநீறுகந்தார் கழல்" என்று சிவபெருமானைத் துதியினாற் பரவித்தொழுது இன்புறுந்தன்மையராய் வாழ்ந்தார். அங்கனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை பரவையாரிடத்து தூதுவிட்ட செய்தியைக் கேள்யுற்று, ஆண்டவனை ஏவுபவனும் தொண்டனா? இது என்ன பாவம்! இப்பெரும்பிழையினைக் கேட்டபின்னரும் இறவாதிருக்கின்றானே! பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவினால் அவ்வேவலைச் செய்வதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவது போவதாகத் திரிவதோ? நான்முகன் மால் ஆதிய தேவரெல்லாம் தொழும் தேவாதேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? என்று பலவாறு எண்ணி மனம் புழுங்கினார். இதனைக் கேள்வியுற்று தன்பிழையினை உணர்ந்த வன்றொண்டர் ஆரூரிறைவரை நாளும் போற்றிக் கலிக்காமரது கோபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் நண்பராக்கத் திருவுளம் கொண்டார். ஏயர்கோன் கலிக்காமனார்க்குச் சூலை நோயினை ஏவினார். அச்சூலை ஏயர்கோனை வருத்திற்று, வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார்.

அப்போது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி "உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்த்தாலன்றித் தீராது" எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர் வழிவழி அடியனான என் வருதத்தை வம்பனான அவ்வன்றொண்டனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்கத் தீர்வதைக் காட்டிலும் எந்நோய் என்னை வருத்துதலே நன்று' என்றார். சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றி 'இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற் சூலை சென்று நீ தீர்ப்பாய்' எனப் பணித்தருளினார். நம்பியாரூரும் பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக்கேட்ட கலிக்காமர் 'மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற் இவ்வயிற்றினோடும் கிழிப்பேன் என்று உடைவாளாற் கிழித்திட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது.

கலிக்காமர் இறத்தல் கண்டு மனைவியார் உடனுயிர் விடத்துணிந்தார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அண்மையில் வந்துவிட்டார் என்று வந்தோர் சொல்லக்கேட்டார். தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ளும்படி சுற்றத்தார்களை ஏவினார். அவர்களும் நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் 'கலிக்காமருடைய சூலைநோயை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக முயல்கின்றேன்' என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று 'சுவாமி! அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளிகொள்கின்றார்' என்றனர். அதுகேட்ட வன்றொண்டர், தீங்கேதுமில்லை என்றீர்கள், ஆயினும் என்மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் அவரை நான் விரைந்து காணுதல் வேண்டும்' என்றார். அதுகேட்டு அவர்கள் கலிக்காமரைக் காட்டினர். கலிக்காமர் குடர் சொரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் 'நிகழ்ந்தது நன்று; யானும் இவர் போல் இறந்தழிவேன்' என்று குற்றுடைவாளைப் பற்றினார். அப்பொழுது இறைவர் அருளால் கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து "கேளிரேயாக்கிக்கெட்டேன்" என்று சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக்கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் வாளை விட்டெறிந்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் அன்பினால் தழுவிப் பிரியாத நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினர். நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் ஆரூரர் இசைவு பெற்றுத் தம்முடைய ஊர்க்குத் திரும்பினார். அங்கு தமக்கேற்ற திருதொண்டுகள் புரிந்திருந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • தொடங்கியவர்

13 ஏனாதி நாத நாயனார் .

naeenaat_i.jpg

சோழநாட்டிலே எயினூரிலே சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாத நாயனார் . தொன்மை திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலைத்து நின்ற இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் கடமையாற்றி வந்தார். அதன் மூலம் வரும் பொருள் வளங்களால் சிவனடியார்களை உபசரிக்கும் பேரன்பினராய் விளங்கினார்.

ஏனாதிநாதர் வாட்படை பயிற்றும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர். இதனால் அவரது தாய்முறையிலான அதிசூரன் என்பானுக்கு அத்தொழில் வருவாய் குறைந்தது. அதனால் ஏனாதிநாதர் மீது பொறாமையுற்ற அதிசூரன் வீரர் கூட்டத்தோடு சென்று 'வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது' என அவரை போருக்கு அறைகூவியழைத்தான்; ஏனாதியார் போர்க்கோலம் பூண்டு சிங்க ஏறுபோல் புறப்பட்டார். அவரிடம் வாள் வித்தை பயிலும் காளையரும் வாள்வீரரான அவரது சுற்றத்தலைவரும் அவரின் இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர். 'நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம். போரில் வென்றார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்'. என்று அங்கு அதிசூரன் கூறினான். ஏனாதிநாதரும் அதற்கு இசைந்தார். இருவரிடையேயும் நடந்த வாட் போரில் அதிசூரன் தோற்றோடினான்.

தோற்றோடிய அதிசூரன் மானமழிந்ததற்கு நொந்து, இரவு முழுவதும் நித்திரையின்றி ஆலோசித்தான். இறுதியில் ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணினான்."நாம் இருவருக்குந் துணைவருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டும் நாளை விடியற்கலாத்தே வேறோர் இடத்திற் போர் செய்வோம், வாரும்" என்று ஒருவனைக் கொண்டு ஏனாதிநாதருக்குச் சொல்லியனுப்பினான். அதுகேட்ட ஏனாதிநாதர், சுற்றத்தார் யாரும் அறியாதபடி அவன் குறித்த போர்களத்திற் சென்று அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார். தீங்கு குறித்து அழைத்த தீயோனாகிய அதிசூரன், 'திருநீறு தாங்கிய நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதிநாதர்' என அறிந்து முன் எப்பொழுதுமே திருநீறிடாத அவன், நெற்றி நிறைய வெண்ணீறு பூசி நெஞ்சத்து வஞ்சனையாகிய கறுப்பினை உட்கொண்டு வாளும் கேடகமும் தாங்கி தான் குறித்த இடத்திற்குப் போனான். அங்கு நின்ற ஏனாதி நாதரைக் கண்டு அவரை அணுகும் வரை தனது நெற்றியை கேடயத்தால் மறைத்துக் கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதர் சமயந் தெரிந்து அவனை எதிர்த்துப் பொருத முற்பட்ட வேளையில், அதிசூரன் தன் முகத்தை மறைத்த கேடகத்தை சிறிது விலக்கினான். அப்பொழுது அவனது நெற்றியிலே திருநீற்றினைக் கண்ணுற்றார் ஏனாதிநாதர். கண்டபொழுதே 'கெட்டேன் இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். அதனால் இவர்தம் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்' என்று தம் கையிலுள்ள வாளையும், கேடகத்தையும் நீக்கக் கருதினார். ஆயினும் ஆயுதம் இல்லாதவரைக் கொன்றார் என்ற பழி இவரை அடையாதிருத்தல் வேண்டும் என்று எண்ணி, வாளையும், பலகையையும் கையிற்பற்றியபடியே போர் செய்வார் போல் வாளுடன் எதிர் நின்றார். அந்நிலையில் முன்னே நின்ற தீவினையாளனாகிய அதிசூரன் தனது எண்ணத்தை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான். சிவபெருமான் ஏனாதிநாதருக்கு எதிரே தொன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட்படையினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.

http://ta.wikipedia....ாதி_நாத_நாயனார்

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

14 . ஐயடிகள் காடவர்கோன் நாயனார் காலம் கி.பி. 670 இல் இருந்து கி.பி. 685).

Naaiyadi_i.jpg

காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம். இவ்வாறு பல்லாண்டு காலம் கோயில் திருப்பணிகள் புரிந்தும் ஈசனை போற்றி இசைபாடியும் சிவலோகம் சேர்ந்தார்.

Naaiyadi.jpg

http://kala-tamilforu.blogspot.fr/2011_02_01_archive.html

  • தொடங்கியவர்

15 கணநாத நாயனார்.

naganana_i.jpg

“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார்.

அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். தம்மிடம் வந்த நந்தவனப்பணி செய்வோர், மலர்பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத்த தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார்.

இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார்.

http://kala-tamilforu.blogspot.fr/2011/06/15.html

  • தொடங்கியவர்

16 கணம்புல்ல நாயனார் .

nakanamp_i.jpg

“கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை .

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.

ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். ஆனால் அது தாம் நியமாகவே மேற்கொண்ட யாம அளவு வரை எரிக்கப் போதாதாயிற்று. நாயனார் அன்பினால் எலும்பும் உருக கணம்புல்லைப்போன்ற தமது திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்தனர். தலையாய அத்திருவிளக்குப் பணியால் இருவினைத் தொடக்கையும் எரித்தொழித்தார். இறைவர் அவருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளினார். அவர் சிவலோகத்தில் இறைஞ்சி இன்பமுடன் அமர்ந்தனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

புத்தன்,

நாயனார்கள், சைவம் வளர்த்தவர்கள்! சிவனை முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள்!

ஆழ்வார்கள் வைஷ்ணவ மதத்தை வளர்த்தவர்கள்! விஷ்ணுவை முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள்!

ஆண்டாள்கள், ஆழ்வார்களின் பெண்பால் எனக் கருதுகின்றேன்!

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

இவரது தமிழ்ப் பாடல்கள், மிகவும் இனிமையானவை!

குறுக்கே நுழந்தமைக்காக, கோமகனும் ,புத்தனும் மன்னிக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

<p>

நன்றிகள் புங்கையூரான்....ஆகவே இரு கருத்தியல் கோட்பாட்டுக்காக தமிழ் சமுகம் மதரீதியில் அப்பவே பிரிவடைந்துள்ளது....ஆழ்வார்கள் ஈழத்தில் பெரிதாக பிரபலம் அடையவில்லை.......இப்ப இரண்டையும் ஒன்றாக்கி இந்து என சொல்லுகிறோம்.......ம்ம்ம்

எனக்கு தெரிந்து முன்பு இந்து சமயம் வேறு, சைவ சமயம் வேறு, வைஷ்ணவ சமயம் வேறு.. சைவ சமய கடவுள் முருகன். இந்து சமய கடவுளாக சிவன், பிள்ளையாரை கூறுவார். காலப்போக்கில் சிவனின் மகன் முருகன் என்று கதை புனையப்பட்டிருக்கிறது. அதே போல் வைஷ்ணவ சமய கடவுள் தான் விஷ்ணு. இறுதியில் இவை அனைத்தையும் இந்து சமயம் என்ற பெயரிலேயே ஒன்று சேர்த்து விட்டார்கள்.

அதனால் தான் இன்றும் எமது வருடப்பிறப்பு தை மாதமா, சித்திரை மாதமா என்ற குழப்பம் தீரவில்லை. சைவ சமயத்தவரின் வருடப்பிறப்பு தை மாதம் தான். எனினும் இந்து சமய வருடப்பிறப்பை தான் நாம் கொண்டாடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இன்று தான் இந்த திரியில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் எனப் போய்ப் பார்த்தேன் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை ஆனால் வாசித்த மட்டில் பிரயோசனமான பதிவு தொடருங்கள்...உங்களுக்கு தெரிந்ததெல்லாம் யாழில் உள்ளவர்களுக்கு பிரயோசனப்படட்டும்.

  • தொடங்கியவர்

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

புத்தன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் . உங்கள் கேள்வி நீண்ட வரலாற்றைக் கொண்டது . 12 ஆழ்வார்கள் வைணவ மதத்தின் முழுமுதல் கடவுளாம் விஷ்ணுவையும் , 63 நாயன்மார்கள் இந்து சமயத்தின் முழுமுதற்கடவுளாம் சிவனையும் கொண்டு அவரவர் இயங்கு தளத்தில் இயங்கினார்கள் . நான் அறிந்தவரையில் இந்துசமயம் பல உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது . அதில் சைவம் சிவனையும் சாக்தம் சக்தியையும் , காணாபத்தியம் வினாயகரையும் முழுமுதற்கடவுளாக் கொண்டிருந்தது .அதேபோல் வைஷ்ணவம் வடகலை . தென்கலை எனப்பிரிவு பட்டிருந்தது . ஆனால் பெரும் போராட்டத்தைக் கொண்டிருந்தது சைவமும் சமணமும் என்பது வரலாறு . மன்னராட்சியில் யார் ராஜகுருவாக இருந்தார்களோ அந்தந்தக்காலத்தில் இந்த இரு சமயங்களும் ஏற்றத் தாழ்வினைப் பெற்றிருந்தன .காலப்போக்கில் சமணம் வீழ்ச்சியுற்று பௌத்தமதாமாகவும் , ஜென்மதமாகவும் பரிணமிக்க , சைவம் தனது தாய் மதமான இந்து சமயத்துடன் கலந்து பெரும் வளர்சிகண்டது வரலாறு . கீறீஸ்த்தவத்தில் எவ்வாறு பல உடப்பிரிவுகள் உள்தோ அதேபோல் இந்துசமயத்தில் பல உட்பிரிவுகள் வருவதில் அதிசயமில்லை . மற்றவர்களின் பதிலையும் கண்டு தொடருகின்றேன் .

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.