Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

வாக்களிப்பில் பங்கு பற்றிய கிளியவன் அண்ணா, நுணாவிலன் அண்ணா, தமிழரசு அண்ணா, கருணை நிழல் அண்ணா, கண்ணீர் அண்ணா ஆகியோருக்கும் என் நன்றிகள்.

மற்றவர்கள் பெயர்கள் நினைவு வரும்போது அவர்களையும் கூறுகிறேன்.

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரியைத் திறந்த நெல்லையனுக்கும் ஓர் இயங்கு நிலையைத் தோற்றுவித்த காதல், உதயம் தொடர்ந்து ஒரு பெரிய கருத்தாளர் பட்டியலே இருக்கிறது... அனைவருக்கும் பாராட்டுக்கள்.. குறிப்பாக அகூதா, மல்லையூரான், மற்றும் புரட்சி ஆகியோருக்கும், தொடர்ந்து பல வழிகளிலும் இவ்விடயத்தைக் காவிச் சென்ற கருத்துக்கள நண்பர்களுக்கும் தலை சாய்த்து மதிப்பளிக்கின்ற அதே வேளை தொடர்ந்தும்... எங்கள் போராட்டம் தொடரும்..... தளத்தில் கடந்தகாலங்களில் நடந்த அகிம்சை, ஆயுத போராட்டங்களைத் தொடர்ந்து.... இப்போது வடிவங்கள் மாறிய புதிய போராட்டம் அதுதான் புலம்பெயர்ந்தவர்கள் போராட்டம்... முற்றுமுழுதாக இராணுவத்திற்குள் குரல் அடைக்கப்பட்ட எங்கள் இனத்தின் குரலாக எங்கள் போராட்டம் தொடரும் என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் அழுத்திச் சொல்லவேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். சொல்வோம்

நன்றி அக்கா உங்கள் signature இல் மீண்டும் ஆதரவளிப்பதற்கு. :)

தளத்தில் கடந்தகாலங்களில் நடந்த அகிம்சை, ஆயுத போராட்டங்களைத் தொடர்ந்து.... இப்போது வடிவங்கள் மாறிய புதிய போராட்டம் அதுதான் புலம்பெயர்ந்தவர்கள் போராட்டம்... முற்றுமுழுதாக இராணுவத்திற்குள் குரல் அடைக்கப்பட்ட எங்கள் இனத்தின் குரலாக எங்கள் போராட்டம் தொடரும் என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் அழுத்திச் சொல்லவேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். சொல்வோம்

நல்ல கருத்து. :)

அண்ணா இன்னொரு உதவி வேணும். பகலவன் அண்ணா கொடுத்த link இல் சென்று bbc one இன் link ஐ போட்டு தேடி உள்ளே சென்றால்,

To play BBC One you need to enable JavaScript. How ? என்று வருகிறது. How என்பதை அழுத்த java script ஐ enable என்று விடும்படி கேட்கிறது. ஆனால் JavaScript இற்கு ஏற்கனவே enable என்று தான் tick பண்ணப்பட்டிருக்கு. empty the cache என்பதை கொடுத்த பிறகும் இப்படியே தான் இருக்கு. :( என்ன செய்ய வேண்டும்? முடிந்தால் பதிலளியுங்கள்.

openproxy இல் bbc one இன் link ஐ போட்டு பெறப்பட்ட link இதுதான்.

http://openproxy.co.uk/browse.php?u=Oi8vd3d3LmJiYy5jby51ay9pcGxheWVyL3R2L2JiY19vbmVfbG9uZG9uL3dhdGNobGl2ZQ%3D%3D&b=13&f=norefer

வேறு uk link இற்கு இப்படி வரவில்லை. BBC iplayer க்கு தான் இப்படி வருகிறது. :(

எனக்கு மட்டும் அப்படி வருகிறதா வேறு யாருக்கும் கூட அப்படி வருகிறதா? :unsure: :unsure:

BBC ONE இதில் பார்க்கலாம். விருது விழா நேரலையில் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன்: http://livetvcafe.ne...664W52Y/BBC-ONE

கூகிழில் watch BBC ONE LIVE என தேடல் செய்யுங்கள். மூன்று, நான்கு வெவ்வேறு தளங்களூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது.

மேலும், கீழும், பக்கங்களிலும் உள்ள விளம்பரங்களை மாத்திரம் சொடுக்கிவிடாதீர்கள். அதனூடு வைரசும் வரலாம். சுமார் 20 செக்கன்களின் பின்னர் நேரலையில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

Edited by கலைஞன்

இன்னோர் இணைப்பு: http://nowwatchtvlive.com/2011/07/watch-bbc-one-uk-online-bbc-one-live-channel/

ஒவ்வொரு இணைப்பிலும் BBC ONE சுமார் 30 செக்கன்களின் பின் ஆரம்பிக்கும். காணொளி மீது உள்ள அல்லது அதை மறைக்கும் விளம்பரங்களை மூடும் போது அவதானம் தேவை.

இந்த BBC ONE இணைப்பு தெளிவு அதிகமாக உள்ளது: http://www.onlinetvj...ing-online.html

விருது விழா சற்று முன் நேரலையில் ஆரம்பித்துள்ளது. தெளிவு பரவாயில்லை.

இந்த BBC ONE இணைப்பு தெளிவு அதிகமாக உள்ளது: http://www.onlinetvj...ing-online.html

நன்றி அண்ணா. :)

BAFTA 2012 Current Affairs UnderCover Careக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் சம்மந்தப்பட்ட ஆவணப்படங்கள் இரண்டுக்குமே ஏமாற்றம்.

Current Affairs

WINNER: Undercover Care: The Abuse Exposed (Panorama)

Bahrain: Shouting in the Dark

Sri Lanka’s Killing Fields

The Truth About Adoption (Panorama)

http://www.bafta.org...evision/awards/

Edited by கலைஞன்

:( :(

rkn-0421-17971.JPG

Current Affairs winner: Undercover Care

The winners of the BAFTA for Current Affairs alongside award presenter Jeremy Bowen.

http://www.bafta.org/television/awards/2012-television-awards-winners,662,GAL.html

அரசியல் காரணங்களுக்காக பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் சம்மந்தப்பட்ட ஆவணப்படங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கக்கூடும்.

அரசியல் காரணங்களுக்காக பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் சம்மந்தப்பட்ட ஆவணப்படங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கக்கூடும்.

channel 4 இற்கு தராவிட்டாலும் Al jazeera க்கு என்றாலும் கொடுத்திருக்கலாம். :(அரசியல் காரணங்களுக்கு பயப்படுபவர்கள் என்றால் இவ்விழாவில் current affair என்ற ஒன்றையே தவிர்த்திருக்கலாம். :wub:

பிரித்தானியாவில் நோயாளிகளின் காப்பகத்தில் நடந்ததை ஆதாரங்களோடு உண்மைகளை/ கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்...

எமது மக்களின்அவலங்களை, போற்குற்றங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 க்கு bafta விருது கிடைக்காமல் போனது கவலையாக இருந்தாலும் இந்த நோயாளிகளின் உணர்வுகளும் மதிக்கப் படவேண்டியவையே...

nominees ஆக தெரிவு செய்யப்பட்ட அனைத்து காணொளிகளுக்கும் ஏதாவதொரு முக்கிய காரணம் இருக்கும் தான் குட்டி அண்ணா. ஆனாலும் அவற்றில் மிக முக்கிய பிரச்சனைகளை வெளிப்படுத்திய காணொளிகளில் ஒன்றுக்கு விருது கிடைக்காதது BAFTA விருது விழாவையே கேள்விக்குறியாக்கியுள்ளது. :unsure:

எனினும் விருது பெற்ற காணொளிக்கு எம் வாழ்த்துகள். :)

radiotimes இல் ஓரளவு வாக்கு போட்டதால் கிடைத்த திருப்தியை வைத்துக்கொண்டு அனைவரும் இனி லண்டன் மகாராணிக்கு message போடுங்கள். twitter இல் என்றாலும் மகிந்தவின் லண்டன் வருகையை எதிர்க்கிறோம் என்று ஒரு வசனம் போடுங்கள். :)

வாக்களிப்பு நடந்த விதத்தை அவதானித்து இருக்கலாம்... அதனால் இரண்டிற்கும் விருது வழங்காமல் வேறு ஒன்றுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்... எனது தனிப்பட்ட ஊகிப்பு மட்டுமே!

அதற்காக இரவும் பகலும் உழைத்த உறவுகளை நான் குறை சொல்லவில்லை.

ஒரு தாழ்மையான வேண்டுகோள், அடுத்தமுறை இப்படி ஏதும் ஒரு நிகழ்வு நடக்குமாயின் தயவு செய்து திரி தொடக்கி எல்லோருக்கும் தெரிவது போல் ஒவ்வொரு விடையங்களையும் விளம்பரப் படுத்தாமல் தனிமடல்கள் மூலம் உங்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் தொடர்பில் இருந்து செய்யுங்கள்.

BAFTA Awards - Current Affairs உலகளாவிய விடயத்திற்கு மட்டுமான விருது அல்ல. தவிர, தெரிவுக்குழுவில் உள்ளவர்கள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள். அவர்கள் பிரித்தானியாவிக்கு வெளியில் நடைபெற்றுள்ள சம்பவம் பற்றிய விடயத்தினைவிட தமது நாட்டினுள் நடைபெற்ற சம்பவத்திற்கு அதிக கவனம் கொடுக்கக்கூடும். வெளிநாடுகளில் பலருக்கு சிறீ லங்கா எனும் ஓர் நாடு பற்றியே தெரியாது. பலருக்கு 2009 வீதி மறிப்பு, மனித சங்கிலி போராட்டங்களின் பின்னரே சிறீ லங்கா எனும் நாடு பற்றி தெரியும். எனவே சிறீ லங்கா கொலைக்களம் அவர்களது விருப்பத்தெரிவாக அமையாது போயிருக்கலாம்.

விருதுகளை தொகுத்து வழங்கியவர் இறுதியாக முடிவுரையில்... உங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றால் அதற்கு அரசியலே காரணமாகும் என நகைச்சுவையாக கூறினார். அவர் நகைச்சுவையாக அப்படி தெரிவிப்பினும், BAFTA குழுவிற்கு பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் மூலம் உயர் மட்டத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக நெருக்கடிகளும் அல்லது அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு இருக்கலாம். இவையும் இந்நாடுகள் சம்மந்தப்பட்ட ஆவணங்களுக்கு விருது கிடைக்காமைக்கு காரணமாகக்கூடும். இந்த ஆவணப்படங்களுக்கு விருது கொடுப்பதன் மூலம் BAFTA குழு தமக்கு தேவையில்லாமல் பிரச்சனைகள் வருவதை தவிர்ப்பதற்கு இப்படி செய்திருக்கலாம்.

நாம் முன்பு யாழ் செய்திக்குழுமம் ஊடாக சில பரப்புரைகள் செய்தபோது எமக்கு காணொளிகளுக்கு அதிக பார்வைகளை பெறுவது மிகவும் கடினமாக காணப்பட்டது. ஆனால், இப்போது கிடைப்பதுபோல் ஆதரவு கிடைத்தால் சனல் 4 கொலைக்களம் காணொளியின் பார்வைகள் மில்லியன் கணக்கில் உயர்வதற்கு உதவலாம். இது உலக அளவில் அதிகமானோர் சிறீ லங்காவின் கொலைக்களம் பார்வையிடப்படுவதற்கு உதவலாம். சனல் 4 இன் யூரியூப் காணொளிக்கு like ஐ விட unlike ஆயிரக்கணக்கில் போடப்பட்டுள்ளது. நீங்கள் like செய்வதன் மூலம் அதிகமானோர் அதை பார்வையிடுவதற்கு உதவலாம்.

Radio Timesகு இரவு, பகலாக வாக்கு குத்திய நேரத்திற்கு சனல் 4 கொலைக்களம் காணொளியை யூரியூப்பில் அதன் பார்வைகள் அதிகரிப்பதற்கு முயற்சி செய்திருப்பின் பார்வைகள் இரண்டு மில்லியன்களுக்கு மேலும் அதிகரித்திருக்கும். இப்போது சில லட்சங்கள் பாரவைகளே உள்ளது.

Edited by கலைஞன்

சனல் 4 இன் யூரியூப் காணொளிக்கு like ஐ விட unlike ஆயிரக்கணக்கில் போடப்பட்டுள்ளது. நீங்கள் like செய்வதன் மூலம் அதிகமானோர் அதை பார்வையிடுவதற்கு உதவலாம்.

ஆம், முதலில் அதனை யோசிக்கவில்லை. :( சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. :)

இனியாவது நாம் இதனையும் கருத்தில் கொள்வோம். என்னால் முடிந்த பங்களிப்பை நானும் தருகிறேன். :)

பல நாட்களின் பின் இந்த திரியை பார்த்தேன்....கவலையாக உள்ளது..ஆனாலும் .இந்தத்திரியில் முன் நின்று செயற்பட்டு,எம் எல்லோரையும்

தட்டி எழுப்பி வாக்களிக்க வைத்த தங்கை காதலுக்கும் ,தம்பி உதயனுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த திரியினூடு

வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி கூறுகிறேன்.காதல்,உதயன் அவர்களிற்கு எனது சிறிய அனுபவத்தின் மூலம்

பகிர்ந்து கொள்வது என்னவென்றால்.[ நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதி.............நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின்

கோலங்கள் ..................அஞ்சாமல் மோது .............] இந்தப்பாடலின் வரிகளை யாருடைய மனங்களையும் நோகும்படி எழுதவில்லை ,மாறாக

.உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவே .............நன்றி

காதல்,உதயன் அவர்களிற்கு எனது சிறிய அனுபவத்தின் மூலம்

பகிர்ந்து கொள்வது என்னவென்றால்.[ நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதி.............நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின்

கோலங்கள் ..................அஞ்சாமல் மோது .............] இந்தப்பாடலின் வரிகளை யாருடைய மனங்களையும் நோகும்படி எழுதவில்லை ,மாறாக

.உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவே .............நன்றி

நன்றி அண்ணா.

நல்லோர்க்கு என்று நீங்கள் போட்டதால் நானும் நல்ல பிள்ளை என்று சொல்லிக்கொண்டு வந்து நன்றி சொல்லவில்லை. :( :( :( ஆனால் எமக்காக பாடலை இணைத்ததால் நன்றி சொல்கிறேன். :)

(ஒருவரியில் முடிக்கிற வரிக்கு கூட பல வரிகளில் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைமை எனக்கு. :()

நிச்சயமாக இப்பாடல் நல்லவர்களுக்கு உதவும். :) அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும். :)

Note: பெயரில் ஒரு திருத்தம். உதயன் இல்லை உதயம். :)

Edited by காதல்

எப்படி ஊடக உலகம் வேண்டுமென்றே தமிழர் பிரச்சனையை மறைத்து ஒதுக்கி வந்தது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் . தனக்கும் அதில் பங்கிருந்தாலும், BBCகூடக் கிட்டடியில் இதை கூறியிருந்தது. இந்த ஆவணத்தை தயாரிக்க Channel-4 உண்மையான உழைப்பை போட்டிருந்தது. தாயரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலார் இலங்கையால் பலதடவை மிரட்டப்பட்டும் நாடுகடத்தவும்பட்டவர்களே. இந்த ஆவணத்தை அகில உலக NGOக்கள் உதாரணம் காட்டியிருந்தன. இதில் முதன் முறையில் ஈடுபட்ட சாட்சியங்கள் இப்போது இலங்கையில் பணயக்கைதிகள். இதற்கெல்லாம் பிறகும் ஒரு தயாரிப்பு பரிசு பெறத்தவறிவிட்டது என்றால் நிச்சயமாக அது எங்கோ உதைக்கிறது. அந்த இடம் BAFTA இன் ஊடக நடுநிலமையாகும்.

கணக்கில் எடுக்கப்படமாட்டாதென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு வாக்களிப்பு இந்த தயாரிப்பை பரிசு பெறத்தகமையில்லாததாக மாற்றியிருக்கிறதென்றால் நிச்சயமாக பரிசளிப்பவர்கள் மீது ஓரவஞ்சக செயல்ப்பாடு சம்பந்தமாக சந்தேகப்படவேண்டும். இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் கள்ள வாக்களிப்புக்களை அரசாங்கம் தமிழர் மீது ஏவும் சட்டப்படியான ஆயுதமாக ஏற்றுகொண்டிருக்கிறார்கள். தமிழர் சம்பந்தமாக இப்படி நிகழ்வுகளில் அவர்கள் வெற்றி பெறாமல் இருக்க இனிமேலைய காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்று BAFTA இலங்கை அரசுக்குப் பாடம் கொடுத்திருக்கிறது. அத்தாவது "நீங்கள் தமிழருக்கெதிராக கள்ள வோட்டு ஆரம்பித்து வையுங்கள். நாங்கள் தமிழரின் ஆவணங்களை தகமை இல்லாததாக அறிவிக்க அதுவே போதும் " என்பதாகும்.

Edited by மல்லையூரான்

வாக்களிப்பு தொடர்பாக நன்றி எனும் வார்த்தையை தவிர்க்குமாறு சகாறா அக்கா கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கு பதிலாக பாராட்டுகள் எனும் வார்த்தையை நானும் பயன்படுத்துகிறேன். (அவர் கருத்திலிருந்து சுட்டது தான் :D)

எனினும் பழக்கதோசத்தில் எங்காவது நன்றி கூறி விட்டால் கோவிக்க வேண்டாம். :lol:

இத்திரிக்கு late ஆக வந்தாலும் latest ஆக பெரும் பங்களிப்பு வழங்கிய :D தமிழக உறவு ராஜவன்னியன் அண்ணாவுக்கும் எம் பாராட்டுகள். குமாரசாமி அண்ணா, அபராஜிதன் அண்ணா போன்றவர்களுக்கும் பாராட்டுகள்.

வாக்களிப்பில் இரண்டாம் நிலை, BAFTA விருது கிடைக்காமை ஆகியவற்றை நினைத்து யாரும் மனம் வருந்தவோ அல்லது சோர்ந்து விடவோ வேண்டாம். எம்மால் முடிந்ததை தொடர்ந்து செய்வோம். :)

நீங்கள் போட்ட பாடல் வரிகளை பார்த்ததும் எனக்கு இப்பாடல் நினைவு வந்தது. இத்திரிக்கும் வாக்களித்த உறவுகளுக்கும் கூட பொருத்தமானது என்பதால் பாடலை நேரடியாகவே இணைக்கிறேன்.

(பாடலை இணைத்தது தவறு என்று உரியவர்கள் கூறினால் நீக்கி விடுகிறேன். :))

பாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...

[media=]http://www.youtube.com/watch?v=p1D3bEz938U&feature=related

Edited by காதல்

இந்தப்பாடலை இணைத்தது இந்த திரியில் இணைத்தது தவறாக எனக்குத்தெரியவில்லை.ஏனனில் ஜனரஞ்சக அந்தஸ்தை பெற்று விட்ட இந்தப்பாடல் நொந்து நூலாகி துவண்டு தூங்கி கிடக்கும் எந்த ஒரு மனித உள்ளத்தையும் தட்டி எழுப்பிவிடும்.நான் எத்தனையோ பாடல்களுக்கு இசை மீட்டியுள்ளேன்.[என்னை பெருமைப்படுத்த இதை நான் எழுதவில்லை] ஆனால் இந்தப்பாடலுக்கு இசை மீட்டும் போது ஆத்மா திருப்தியடைந்துள்ளேன்.அவ்வளவு இனிமையான இசை வடிவத்தையும் எல்லோருக்கும் விளங்கும் வகையில் எளிமையான,முறையில்.ஆழமான கருத்துச்செறிந்த ஓர் பாடல் என்று சொன்னால் அது மிகையாகாது.....

இணைப்பிற்கு நன்றி காதல் [......பாராட்டுக்கள்........] :D

(பாடலை இணைத்தது தவறு என்று உரியவர்கள் கூறினால் நீக்கி விடுகிறேன். :))

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.