Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

40 ஆண்டுகளில் முதற்தடவையாக அணுமின் இல்லாத ஜப்பான்

Featured Replies

ஜப்பானில் இயங்கிவந்த கடைசி அணு உலையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

120505055805_japan__nuclear_304x171_reuters_nocredit.jpg

அணு சக்தி இல்லாத ஜப்பானை வரவேற்கும் பேரணியில் 5000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்

2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹொக்கொய்டோ நிர்வாக எல்லையில் அமைந்துள்ள டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலைதான் பழுதுபார்க்கும் பணிக்காக இப்போது மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணு மின்சாரமின்றி இயங்குகின்றது.

கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்சக்தி தேவையில் 30 வீதத்தை அணுமின் மூலமே பெற்றுவந்தது.

மக்கள் விருப்பம்

ஜப்பானின் இந்த நடவடிக்கையை வரவேற்கும் முகமாக தலைநகர் டோக்யோவில் ஊர்வலம் நடத்திய நூற்றுக்கணக்கானவர்கள், தமது நாட்டில் அணு சக்திக்கு இடமில்லை என்ற நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வாசகங்களை ஏந்தியிருந்தனர்.

ஃபுக்குஷிமா அழிவைத் தொடர்ந்து, ஜப்பான் அதன் அணு உலைகளை பழுது பார்க்கும் தேவைக்காக படிப்படியாக மூடிவந்தது.

பூமியதிர்ச்சிகளோ சுனாமியோ ஏற்பட்டால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை ஆராய்வதற்காக அதிர்வுச் சோதனைகளை அதிகாரிகள் நடத்திவருகின்றனர்.

அதேவேளை, மூடப்பட்டுள்ள அணுமின் நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டுமானால் அந்தந்த உள்ளூராட்சி நிர்வாகங்களின் அணுமதியைப் பெறவேண்டும் என்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுவரை அப்படி எந்த உள்ளுராட்சி நிர்வாகங்களும் அனுமதி வழங்கியதாகத் தெரியவில்லை.

மேற்கு ஜப்பானிலுள்ள ஓஹி அணுமின் நிலையத்திலுள்ள இரண்டு உலைகள் பாதுகாப்பானவை என்றும், நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சனையைத் தீர்க்க அவற்றை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று அரசு கூறிவருகிறது.

ஆனால் உள்ளூராட்சி நிர்வாக அதிகாரிகள் இன்னும் அதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை.

ஜப்பான் பெரும் மின்சாரப் பற்றாக்குறை பிரச்சனையால் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று அமைச்சர்கள் எச்சரித்துவருகின்றனர்.

ஆனால், மக்களின் விருப்பத்துக்கு மாறாக செல்வதற்கும் அரசு தயாராக இல்லை.

http://www.bbc.co.uk...annuclear.shtml

ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் யப்பான் விட்ட தவறு 24 மணித்தியாலத்தில் அமெரிக்கா பிளேனின் எடுத்து சென்று இணைக்க இருந்த எமேயென்சி கூலிங் ஹெனெறேட்டர்களை அரசியல் காரணங்களுக்க மறுத்து, கடல் தண்ணியை அணு உலைகள் மீது அடித்து குளிரப்பண்ணி உலைகளுக்கு மேலதிக சேதத்தை ஏற்படுத்தியதனாலாகும்.

ஆரம்பத்தில் அமெரிக்காவில் GE இனால் வடிவமைக்க பட்ட அணு உலை. அதில் தாங்கள் செய்த தொழில் இரகசிய மாற்றங்களை அமெரிக்கர் கண்டுகொள்வதை யப்பான் விரும்பாததால் இந்த அவலநிலைக்குத் தள்ளப்பட்டது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் நிறுத்தம்.. கூடங்குளத்தில் ஆரம்பம்.. எப்பதான் இவர்களுக்கு கூர்ப்பு வருமோ??!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான்காரர் மூடுகின்றார்கள், இந்தியாவில் அணு உலைகளை திறக்கிறதுக்கு இந்திய அரசாங்கம் முயற்சிக்கின்றது :rolleyes:

தமிழர்கள் பகுதி என்பதினாலோ ? :icon_idea:

ஜப்பானில் நிறுத்தம்.. கூடங்குளத்தில் ஆரம்பம்.. எப்பதான் இவர்களுக்கு கூர்ப்பு வருமோ??!! :icon_mrgreen:

2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இலங்கை, இந்தியாவில் அணைகள் கட்டி நீர்ப்பாச்சும் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. 6 வருடங்களுக்கு முன், யாருடை ஆலோசனைகளையும் கேட்காமல் ஹூவர் அணைக்கட்டை விட 4 மடங்கு பெரிய அணையை சீனாவில் நிர்ணயித்த பொறியியலார் அதை என்ன செய்வது என்று தெரியாது தவிக்கின்றனர். உலகின் மிகப்பெரிய அணைக்கட்டு ஆபத்து அங்கே நிகழக் காத்திருக்கிறது. பெரியாறில் அந்த ஆபத்து நிகழ சந்தர்ப்பம் இல்லை. இலங்கைக்கு மின்சாரம் வழங்க, கூடங்குளத்தில், ரூசிய வடிவமைப்பில், காங்கிரஸ் கட்சி அணு உலை அமைப்பதுதான் ஆபத்து.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க இருப்பவர்களுக்கே மின்சாரம் இல்லை. இதில் இலங்கைக்கு எப்படி மின்சாரம் போகும்? வைகோ பொல ஆட்கள் டைம்பாஸ்க்கு பேசுவதை எல்லாம் நம்புகிறீர்களா?

ஜப்பானில் நிறுத்தம்.. கூடங்குளத்தில் ஆரம்பம்.. எப்பதான் இவர்களுக்கு கூர்ப்பு வருமோ??!! :icon_mrgreen:

ஜப்பானில் மற்ற அனு உலைகளை தற்காலிகமாக மூடி இருக்கிறார்கள். நிரந்தரமாக அல்ல.

ஜப்பான்காரர் மூடுகின்றார்கள், இந்தியாவில் அணு உலைகளை திறக்கிறதுக்கு இந்திய அரசாங்கம் முயற்சிக்கின்றது :rolleyes:

தமிழர்கள் பகுதி என்பதினாலோ ? :icon_idea:

உத்திர பிரதேசம்,நராரா, கர்நாடகாவின் கைகா, குஜராத்தின் காக்ராபூர், மகாராஸ்டிராவின் தாராபூர், ஜல்தாபூர் என பல இடங்களில் அனு உலைகள் இருக்கின்றன அல்லது கட்டபடுகின்றன். தமிழ்நாட்டில் மட்டுமே அல்ல.

ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் யப்பான் விட்ட தவறு 24 மணித்தியாலத்தில் அமெரிக்கா பிளேனின் எடுத்து சென்று இணைக்க இருந்த எமேயென்சி கூலிங் ஹெனெறேட்டர்களை அரசியல் காரணங்களுக்க மறுத்து, கடல் தண்ணியை அணு உலைகள் மீது அடித்து குளிரப்பண்ணி உலைகளுக்கு மேலதிக சேதத்தை ஏற்படுத்தியதனாலாகும்.

ஆரம்பத்தில் அமெரிக்காவில் GE இனால் வடிவமைக்க பட்ட அணு உலை. அதில் தாங்கள் செய்த தொழில் இரகசிய மாற்றங்களை அமெரிக்கர் கண்டுகொள்வதை யப்பான் விரும்பாததால் இந்த அவலநிலைக்குத் தள்ளப்பட்டது.

அந்த அனு உலையில் ஆயுள் காலம் ஜப்பானின் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீட்டிக்கபட்டதாக படித்தேன். GE மேல் கடைசி வரை பழி வரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் இப்போது கடும் கோடை காலத்தில் தினமும் 8 மணி நேரம் மின்சாரம் கிடையாது :(

2006 வரை மின்சார தடை என்பதே என்னவென்று தெரியாத காலம் . கூடங்குளம் வந்தால் சற்று நிலமை சரியாகும் என்ற எதிர்பார்ப்பே. அதே நேரத்தில் அனு உலைகளை மேலும் மேலும் கட்டுவதும் ஆபத்தே

உங்களுக்கு எட்டு மணித்தியாலம் மின்சாரம் இல்லை.. ஆனால் நெய்வேலியில் இருந்து ஏன் பெங்களூருக்குப் போகுது? :rolleyes:

தீர்வு என்னவென்றால் அணுமின் நிலையம் என்கிறார்கள்.. இதை பெங்களூருக்குப் பக்கத்தில கட்டி அவர்கள் மின்சாரம் எடுக்கிறதுதானே??! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு எட்டு மணித்தியாலம் மின்சாரம் இல்லை.. ஆனால் நெய்வேலியில் இருந்து ஏன் பெங்களூருக்குப் போகுது? :rolleyes:

தீர்வு என்னவென்றால் அணுமின் நிலையம் என்கிறார்கள்.. இதை பெங்களூருக்குப் பக்கத்தில கட்டி அவர்கள் மின்சாரம் எடுக்கிறதுதானே??! :wub:

நெய்வேலியில் கிடைக்கும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு 1300 மெகாவாட் கிடைக்கிறது. கூடவே பாண்டிசேரிக்கும் போகும்.

கர்நாட்காவின் கைகா அனுமின் நிலையத்தில் இருந்தும், ராய்பூர் ராய்ச்சூர் நிலையத்தில் இருந்தும் தமிழ்நாட்டிற்க்கு மின்சாரம் வருகிறது. centralized grid என்பதால் இந்த ஏற்பாடு. உற்பத்தில் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும் என கருத முடியாது.

அப்புறம் பெங்களூர் மக்கள் தொகையில் 32% பேர் தமிழாம். 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்லுது :) .

Edited by rockyOne

  • கருத்துக்கள உறவுகள்

நெய்வேலியில் கிடைக்கும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு 1300 மெகாவாட் கிடைக்கிறது. கூடவே பாண்டிசேரிக்கும் போகும்.

கர்நாட்காவின் கைகா அனுமின் நிலையத்தில் இருந்தும், ராய்பூர் நிலையத்தில் இருந்தும் தமிழ்நாட்டிற்க்கு மின்சாரம் வருகிறது. centralized grid என்பதால் இந்த ஏற்பாடு. உற்பத்தில் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும் என கருத முடியாது.

அப்புறம் பெங்களூர் மக்கள் தொகையில் 32% பேர் தமிழாம். 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்லுது :) .

அப்படியானால் நெய்வேலியில் போராட்டம் நடத்தினதெல்லாம் கப்சாவா? :lol: Centralized Grid எல்லா இடங்கலிலும் உள்ளதுதான்.. 2003 இல் அமெரிக்காவில் நடந்த கோளாறினால் கனடாவில் பாரிய மிந்தடை ஏற்பட்டது.. :unsure:

பெங்களூரில் 32% தமிழா? ஓ.. இவர்களுக்காக கூடங்குளம் மக்கள் சிலுவை சுமக்கிறார்கள்.. :D ஆபத்தில்லாமல் இருந்தால் சரி.. :unsure:

நெய்வேலி போராட்டம் எல்லாம் கப்சாதான். நெய்வேலி எல்லையில் சத்தம் போட்டு விட்டு டிவிக்கு போஸ் கொடுத்து விட்டு வந்து விட்டார்கள்.

நெல்லை மாவட்ட மக்கள் பல பேர் சென்னையில் வசிக்கிறார்கள். பல லட்சம் பேர்..சென்னையில் இருக்கும் அனைத்து வகையான ரவுடிகளும் நெல்லை மாவட்டம் தான். இவர்கள் நெல்லை மாவட்ட மக்களுக்கு சிலுவை சுமக்கும் போது அவர்கள் சுமக்க மாட்டார்களா? ஏன் மும்பையில் கூட இவர்கள் ஆட்டம் தான். :D

RockyOne

இங்க இருப்பவர்களுக்கே மின்சாரம் இல்லை. இதில் இலங்கைக்கு எப்படி மின்சாரம் போகும்? வைகோ பொல ஆட்கள் டைம்பாஸ்க்கு பேசுவதை எல்லாம் நம்புகிறீர்களா?

காங்கிரசின் வேண்டுகோளின்படி அனல் மின்சார ஆலை நிறுவி தமிழ் நாடுக்கு மின் ஏற்றுமதிசெய்ய இலங்கை அரசால், மூதூரில் தமிழ் மக்கள் குடியிருந்த காணிகள் பறிக்கபட்டு இன்னமும் கையடக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் தமிழ் நாட்டிலிருந்து அணுஉலை மின் உற்பத்தி செய்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. இது காங்கிரஸ் போட்ட தில்லு முல்லு திட்டம். ஆனால் காங்கிரஸ் கேட்கும் எதையுமே செய்ய விரும்பாத இலங்கை அரசு, காங்கிரஸ், அனல் மின் நிலையத்திற்கு காணி கேட்டவுடன், சண்டையின் போது எழும்பி ஒடிய மூதூர் மக்களின் காணிகளைத்தான் காங்கிசுக்கு கொடுத்தது. இதன் உள் நோக்கம் தமிழ் மக்கள் வலுப்பெற்று காணியைக்கேட்டால் கட்டடங்ககள் போட்ட பின் காங்கிரஸ் விட்டுவிட்டு ஒடவேண்டி வரும் என்பதற்காவே. இதை விளங்கினால் காங்கிரஸ் முன் வந்து மின் நிலையம் அமைக்காது என்றே இலங்கை அரசு நினைத்தது. ஆனால் நடந்தது வேறு. காணிகள் தமிழர் காணிகள் என்பதால் தன்னால் அதை சமாளித்து கொள்ள முடியும் என்று நினத்து துரோக காங்கிரசும் விட்டு கொடுக்காமல் மின் நிலையம் அமைக்க பலதவை ஒப்பந்தம் எழுத முயற்சித்துவிட்டது. ஆனால் கங்கிரசுக்கு போல அல்லாமல் நுரைசோலையில் சீனாவுக்கு ஒழுங்காக இடம் கிடைத்து ஒருவருடமாக அனல்மின் நிலையம் அங்கே இயங்குகிறது. மேலும் இதிலிருந்து தமிழ் நாட்டுக்கு ஏற்றுமதியும் நடைபெறமாட்டாது. அதே நேரம், ஒப்பந்தத்தின் காங்கிரசின் பங்கும், கூடன்குள பாதுகாப்பு பிரச்சனையால் காலதாமதம் எற்பட்டது. இலங்கை அரசும், காங்கிரஸ் கேட்குமாப்போல் இரு நாட்டுக்குமான கிறிட்டு-திருட்டு மின் பரிவர்த்தனை செய்யவேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டதாக நினைத்து சந்தோசப்பட்டது.. இப்போது தமிழ் நாட்டில் அதீத மின் தட்டுப்பாட்டால் தமிழக அரசு கங்கிரசின் ஜில் மாலுக்கு வளைந்து கொடுத்திருக்கிறது. இது இலங்கை அரசை அதன் ஒப்பந்த பாகத்தை நிறைவேற்றும் படி காங்கிரஸ் திரும்ப இடிக்க தொடங்க சந்தர்ப்பம் அளிக்கிறது. இதனால்த்தான் இலங்கையின் அதி தீவிர சிங்கள அமைச்சரான சம்பிக்க ரணவக்க கூடன் குளம் சர்வதேச விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதால் மன்னர், முல்லைத்தீவு, யாழ்ப்பணம் போன்ற தமிழ் இடங்களுக்கு கதிர் வீச்சு வரப்போவதாக கூறி ஐ.நா. வில் வழக்கு தொடர ஆயதங்கள் செய்கிறார். அவர் கூறுமாப்போல் அவர் வெற்றியடைந்தால், தமிழக மக்கள் எத்தனை மணித்தியால மின் வெட்டையும், சந்திக்கலாம். ஆனால் கூடன் குளம் மூடவேண்டிவரும்.

ஒப்பந்தம், மூதூரில் பறிக்கப்பட்டு அகதிகளாக இருக்கும் தமிழர்களின் காணிகளில் சிங்கள அரசு அனல் மின்சாரம் உற்பத்தி செய்ய காங்கிரசின் கம்பனிகளுக்கு இடம் அளிக்கவேண்டும். தமிழ் நாட்டில் அணுமின் உற்பத்தி செய்து சிங்கள அரசுக்கு காங்கிரஸ் வழங்க வேண்டும். இதற்கு தமிழ் நாட்டில் 8 மணித்தியால மின் வெட்டோ அல்லது தமிழீழத்தின் பெரும்பாகம் மின்சாரம் இல்லாமலே இருட்டில் இருப்பதோ காரணம் அல்ல . இந்த பிணக்கு மண்டியிடும் காங்கிரசுக்கும், காங்கிரசின் தலையில் குட்டும் இலங்கை அரசுக்குமிடையிலான இழுபறி மட்டுமே. இதில் ஈழத்தமிழருக்கோ வை கோ வுக்கோ எந்தவிதமான பங்கும் கிடையாது. யாரும் வை.கோவை நம்ப வேண்டிய தேவை இதில் இல்லை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.