Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலூட்டி வளர்த்த கிளி! (வயது வந்தவர்களுக்கு மட்டும்!)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலவிஷயங்களை உணர்வு பூர்வமாக அணுகாமல் என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று புரிவதற்காக அறிந்துவைத்திருத்தல் வேண்டும். தீயவற்றை பார்க்காமலும், கேட்காமலும் பேசாமலும் இருப்பதற்கு எது கொடியது என்று தெரியவும் வேண்டும். சில விஷயங்களை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதற்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன. என்னடா பீடிகையா? எழுதும் விஷயம் விவகாரமானது. வயசுக்கு வந்திருந்தால் மாத்திரம் வாசியுங்கள். டவுட் என்றால் வந்தாச்சா என்று கூகிளில் தேடிவிட்டு வாருங்கள் ப்ளீஸ்!

600-01540750w_thumb%25255B2%25255D.jpg?imgmax=800

“கடவுளே பாழாய் போன மீன்குழம்பும் புட்டும் திறக்கும்போது நாறக்கூடாது” என்று கும்பிட்டுக்கொண்டே சாப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் திறப்பதுண்டு. பக்கத்தில் எவனாவது கிங்பெங் இருந்தால் ஓகே. அவன் சாப்பாடு இன்னமும் நாறும்! இல்லாவிட்டால் ஜெனிபரும் கித்மனும் என்னோடு சாப்பிட வரமாட்டாள்கள்(தம்பி போன் வயர் அறுந்து நாலு வாரமாச்சு!). நல்லகாலம் இன்று யாருமே இல்லை என்று துணிச்சலாக பெட்டியை திறந்தேன். கும்புளா மீனில அப்பா நேற்றிரவு நல்ல தடிப்பாக வச்ச குழம்பு. கப்பென்று … ஜெனிபர் ஓடிவந்தாள் அவசர அவசரமாக மூடினேன் .. பெட்டியை.

“ஜேகே .. இந்த முறை டைம்ஸ் மாகசீன் பார்த்தியா?”

“இல்லையே .. ஏன் என்னை பற்றி எழுதியிருக்காங்களா?’

“அய் .. ஆசைய பாரு .. அதிண்ட அட்டைப்படம் பார் … உன்னுடைய டமில் ப்ளாக்கில் போடு .. ஹிட்ஸ் அள்ளும்”

உடனேயே போய் எடுத்துப்பார்த்தேன். முன்பக்க அட்டைப்படம் ஏதோ தொந்தரவு செய்தது. அன்னையர் தினத்து ஸ்பெஷல் எடிஷன். ஐந்து வயது வரைக்கும் கூட தாய்ப்பால் கொடுக்கலாம் என்று ஒரு தாய் சொல்லுவதை கவர் பண்ணியிருந்தார்கள். அந்த தாயுடைய மூன்று வயது மகன் அவளிடம் பால் குடிப்பது போட்டோ.

600_thumb1.jpg?imgmax=800

இங்கே ஆஸ்திரேலியாவில் இந்த போட்டோ பெருத்த சண்டையை மூட்டிவிட்டிருக்கிறது. எத்தனை வயது மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று பெண்கள் எல்லாரும் குடுமிச்சண்டை. எங்கள் அலுவலகத்திலும் இதே பிரச்சனை தான். இந்த வாரம் முழுக்க சாப்பாட்டு நேரம் எல்லாம் இதே விஷயம் தான். அப்போது தான் பீட்டர் ஒரு குண்டை தூக்கிப்போட்டான்.

கிரேக்க கவிஞர் ஹோமரின்(ஓஎல் வரலாற்று பாடத்துக்கு முக்கி முக்கி பாடமாக்கின பெயர்) கதைகளில் ஓடிபஸ் கதை என்று ஒன்று இருக்கிறது. பிறக்கும் போதே அசரீரி ஒன்று, இந்த குழந்தை வளர்ந்த பின் தன் தந்தையை கொன்றுவிட்டு அம்மாவை திருமணம் செய்யும் என்று சொல்கிறது. இதை கேட்ட தமிழ் சினிமாவில் வரும் தகப்பன் ராஜா ஓடிபசை ஒரு தோணியில் குழந்தையாய் ஆற்றில் விட பல ஊர் தாண்டி கர்ணன் வளர்ந்து ஷோபனாவை லவ் பண்ணி பானுப்பிரியாவை கைப்பிடிக்கிறான். ஓடிபசுக்கு தான் வளர்ப்பு மகன் என்று தெரியாது.

ஒரு நாள் பாரில் கள்ளு குடிச்சுக்கொண்டு இருக்கும் போது தான் மீண்டும் அந்த அசரீரி வந்து நீ உன் அப்பாவை கொன்று அம்மாவை மணம் முடிப்பாய் என்று திருவாய் மொழிய, ஓடிபஸ் என்னடா இது நாதாரி அசரீரியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே இரவோடு இரவாக வளர்ப்பு தாய் தந்தையை விட்டு ஓடித்தப்புகிறான்.

vlcsnap-246923_thumb6.png?imgmax=800

போகும் வழியில் தகராறு. சண்டையில் ஒருவரை இவன் கொன்றுவிட .. yeah you right! அவர் தான் அவனின் அப்பன். அது தெரியாமல் விக்கிரமன் தொடர்ந்து பயணிக்க ஒரு ஊரில் வேதாளம் ஒன்று எல்லோரையும் கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணிக்கொண்டு இருந்தது. கேள்வி கேட்டு பதில் சொல்லாவிட்டால் மேலோகம் தான். யாராலும் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் யாருமே அந்த ஊரில் அம்புலிமாமாவோ படலையோவாசிப்பதில்லை. கேள்வி இதுதான்,

“காலைல நாலு காலில நடக்கும். மத்தியானம் ரெண்டு காலில நடக்கும். இரவு மூன்று காலில நடக்கும். அது எது?”

சரியான பதிலை ஓடிபஸ் சொல்லிவிட வேதாளம் ஊரை விட்டு ஓடீட்டுது., மக்கள் எல்லோரும் சந்தோஷத்தில் ஓடிபசை தலையில் தூக்கி கொண்டாடுகிறார்கள். அவன் தான் இனி எங்கள் மன்னன் என்று அந்த ஊரின் ராணிக்கு அவனையே மணம் முடித்து கொடுக்கிறார்கள். yeah you righ! அந்த ராணி தான் அவனின் பயோலஜிகல் அம்மா! WTF என்று சொல்லத்தோன்றுகிறதா? பாவம் அவனுக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்து நாளைடைவில் வறட்சி , பிளேக் அது இது என்று வந்து ஊரே அழிந்துபோக அசரீரி சாபம் நிஜமாகிறது.

225px-IngresOdipusAndSphinx_thumb.jpg?imgmax=800

இந்த கருமாந்திர கதைக்கும் அன்னையர் தினத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பீட்டரிடம் கேட்டேன். சைக்கோலாஜியில் ஓடிபஸ் மனப்பான்மை(கொம்பிளக்ஸ்) என்று ஒன்று இருக்கிறதாம். தன்னையறியாமலேயே ஒவ்வொரு ஆணுக்கும் அவனுடைய தாய் மீது ஒரு ஒப்செசஷன் இருக்கும். அது சிலவேளைகளில் எல்லை தாண்டி, விகாரமான மனம் என்றால் போசசிவ்னஸ் அதிகமாகி தந்தையை கொல்ல கூட துணிவானாம். இது பற்றி இன்னமும் விவகாரமான விஷயம் எல்லாம் இருக்கிறது. எழுதவேண்டாமே!

அதனால் பிள்ளைக்கு நினைவு தெரியும் வயது வரமுன்னமேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டும். வளர்ந்த பிள்ளைக்கு சின்னவயதில் தாய்ப்பால் குடித்த ஞாபகம் இருக்ககூடாது என்பது தான் பீட்டர் சொல்லவந்த கருத்து!

இப்போது டைம்ஸ் அட்டைப்படத்தை பாருங்கள். கொஞ்சம் ஓவர் தான் இல்ல?

மூலம் :http://www.padalay.com/2012/05/17-05-2012.html

Edited by jkpadalai

  • கருத்துக்கள உறவுகள்

திரு விளையாடற் புராணத்திலும் மாபாதகம் தீர்த்த படலமென்று இதே மாதிரி ஒரு கதையிருக்கிறது. அதைப் பற்றியும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"ரைம்" வெளியிட்ட.... கட்டுரையைப் பற்றி,

என்னுடன் வேலை செய்யும்.... கானாக்காரனுடன் விவாதித்தேன்.

அவன், தப்பே.. இல்லை, என்று சொல்கிறான்.

தாங்கள்... பல்லு முளைச்சு, பத்து வயது மட்டும்... அம்மா பால் தான், குடிப்பார்களாம்.

எனக்கென்னவோ..... மூன்று வயதுடன், தாய்ப்பாலை நிறுத்தி, புட்டிப் பாலுடன் சத்துணவை குழந்தைக்கு கொடுக்கலாம்.

நெடுக பால் கொடுத்தால்... தாயும், பாவம் தானே...

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது டைம்ஸ் அட்டைப்படத்தை பாருங்கள். கொஞ்சம் ஓவர் தான் இல்ல?

அம்மாவினதும் பிள்ளையினதும் ஜனநாயக உரிமை .....அதை நாங்கள் எப்படி கொஞ்சம் ஒவர் என்று சொல்லுறது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@Karu .. " மாபாதகம் தீர்த்த படலம்" வாசிக்கவில்லை ... படிக்கவேண்டும் ..

@தமிழ்சிறி .. உண்மை தான் ..

@புத்தன் .. பார்க்கும் போது தோன்றும் உணர்வு .. தாய் பிள்ளை என்பதையும் தாண்டி ஒருவித கவர்ச்சி இருக்கிறது .. Its very disturbing அதனாலேயே அப்படி எழுதினேன் .. சிலவேளை என் மனதின் விகாரமாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.