Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகாவின் விடுதலை: யாருக்கு அச்சுறுத்தல்? (பூராயப் பார்வை)

Featured Replies

பலத்த எதிர்பார்ப்பு ஆரவாரங்களுக்கு மத்தியில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருக்கின்றார். மேற்கு நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தமே பொன்சேகாவின் விடுதலைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது என்பது அனைவருக்கம் தெரிந்ததுதான். பொன்சேகாவின் வருகையுடன் சிறிலங்காவின் அரசியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என்பது சாதாரண சிங்கள மக்களிடையே காணப்படும் எதிர்பார்ப்பாகும். பொன்சேகா வெளியே வந்தபோது காணப்பட்ட மக்களின் ஆரவாரம் இதனைத் தெளிவாகப் பலப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு யதார்த்தமானவை என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சரத் பொன்சோகாவின் விடுதலை தொடர்பாக கடந்த சில மாத காலமாகப் பேசப்பட்டபோதிலும், கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விடயத்தில் திடீர்த் திருப்பங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா இவ்வருட முற்பகுதியில் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை கொழும்பிடம் வலியுறுத்தியிருந்தது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் றோபெர்ட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சருக்கு கையளித்த கடிதம் ஒன்றில், பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகவும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது.

இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், நல்லிணக்கம் என்பவற்றுடன் பொன்சேகாவின் விடுதலையையும் அமெரிக்கா முக்கியமானதாக நோக்கியது. இவை தொடர்பாகப் பேசுவதற்கு வாஷிங்டன் வருமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அழைத்திருந்தார். மார்ச் நடுப்பகுதியில் அவரது வருகை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காமையால் அமெரிக்கா செல்வதை பீரிஸ் தவிர்த்துக்கொண்டார். இந்தப் பின்னணியிலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இருந்தபோதிலும், ஒத்திவைக்கப்பட்ட பீரிஸின் அமெரிக்க விஜயம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. மே 18 ஆம் திகதி ஹிலாரி கிளின்டனை அமைச்சர் பீரிஸ் சந்தித்ததார். அந்தச் சந்திப்பு இடம்பெற்ற போது பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை கொழும்பு வெளியிட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்னையிலிருந்து வெளிவரும் 'இந்து' பத்திரிகையாளரிடம்தான் இது தொடர்பில் முதலில் தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்சேகாவின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இது நீதிமன்றத் தீர்ப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாக இருப்பதாதால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு, அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுக்க 3-4 நாட்கள் சென்றுள்ளது.

இருந்த போதிலும், இதற்கு முன்னரே பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ரிரான் அலஸ் தொடர்ச்சியாக ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்திவந்த போதிலும், ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனை ஒன்றுதான் அவரது விடுதலைக்குத் தடையாக இருந்தது. அதாவது, பொன்சேகா மன்னிப்பக் கோர வேண்டும், இல்லையெனில் பொன்சேகாவின் குடும்பத்தினர் யாராவது அவரது சார்பில் மன்னிப்பக் கோர வேண்டும் என ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொன்சேகா குடும்பத்தினர் கூறிவிட்டனர். இது ஜனாதிபதிக்குப் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலிருந்து ஜனாதிபதி இப்போது இறங்கிவந்திருப்பது இவ்விடயத்தில் அவர் மீது அதிகளவு வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்விடயம் தொடர்பான பேச்சுக்களுக்காக ரிரான் அலஸின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருப்பது மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த புதன்கிழமை காலை ரிரான் அலஸ் ஜனாதிபதியின் வாஸஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்து பொன்சோவின் விடுதலை தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தினார். லண்டனில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டிரான் அலஸ் இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் அவசரமாக அங்கிருந்து அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அனோமா பொன்சேகாவடனும் பேச வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருந்திருக்கின்றது. இதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு செல்வதற்கு அனோமா மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது. இந்த நிலையிலேயே ரிரான் அலஸ் இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதி அங்கு சென்றிருக்கின்றார். ஜனாதிபதி ஒருவர் அரசியல் விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு மற்றொருவருடை வீடு தேடிச் செல்வது என்பது இராஜதந்திர மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. ஆனால், ஜனாதிபதிக்குக் காணப்பட்ட நிர்ப்பந்தம் அந்தளவுக்கு இறங்கிச் செல்ல வேண்டிய ஒரு தேவையை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியில் நிபந்தனைகளின் அடிப்படையில் பொன்சேகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதேவேளையில், ஜனாதிபதியால் அவர் மன்னிப்பு வழங்கப்பட்டவராக இருந்தாலும், இரண்டு வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதால் அடுத்துவரும் ஏழு வருட காலத்துக்கு பாராளுமன்றத் தேர்தல் ஒன்றிலோ அல்லது மாகாண சபைக்கோ அவர் போட்டியிட முடியாது. அதேபோல குறிப்பிட்ட காலத்துக்கு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாது. உடனடியாக அரசியல் பிரவேசத்தை மேற்கொள்வதற்கு இவை பொன்சேகாவுக்குப் பெரும் தடையாக இருக்கும் என்பது உண்மை!

இதனால், பொன்சோகாவின் விடுதலை உடனடியாக அரசுக்கு பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும், அரச எதிர்ப்பப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், அதன் மூலமாக தன்னுடைய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும் அவர் முற்படுவார் என எதிர்பார்க்கலாம். அத்துடன், பொன்சேகாவின் அனைத்து அரசியல் உரிமைகளும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை அவரது ஆதரவாளர்கள் தீவிரப்படுத்தலாம். இவை அனைத்தும் அரசுக்கு உடனடிப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அரச எதிர்த் தரப்பு அவருக்குப் பின்பாக அணிதிரள்வதற்கு வழிவகுக்கலாம்.

அதாவது, அவரது தீவிர அரசியல் பிரவேசம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் முதலில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும். ஐ.தே.க. ஏற்கனவே பிளவுபட்ட ஒரு நிலையில்தான் உள்ளது. பொன்சேகா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சஜித் அணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர உடபட அனைவரையும் அங்கு காண முடிந்தது. இந்த நிலையில் பொன்சேகாவுடன் இணைந்து தமது தீவிர அரசியலை முன்னெடுப்பதற்கு சஜித் குழுவினர் முற்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

பொன்சேகா விடுதலையானபோது அவர் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ரணில் விடுத்த கோரிக்கையை பொன்சேகா நிராகரித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், ரணிலின் தலைமையில் அதிருப்தியடைந்திருக்கும் ஐ.தே.க.வினர் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செய்ய முன்வரலாம். அதனைவிட ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினரும் பொன்சேகாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த நிலையில் பொன்சேகாவின் வருகை அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக பலமான எதிரணி ஒன்று உருவாக இது வழிவகுப்பதாக அமையலாம்! ஆனால், தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் இது எந்தவிதமான நலன்களையும் பெற்றுத்தருவதாக இருக்கப்போவதில்லை.

- பூராயத்துக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.

http://www.pooraayam...2-13-20-49.html

Edited by ஊர்பூராயம்

ஐ.தே.க. வுடன் சேரமாட்டேன் என கூறியுள்ளார். சேர்ந்தால் அது. ஐ.தே. க.வை மேலும் பிளவுக்கு உள்ளாக்கலாம். வேறு எந்த கட்சியிலும் சேரும் சாத்தியம் இல்லை.

அதேவேளை புதிய கட்சி ஆரம்பிக்கும் சாத்தியங்களே அதிகம். ஆனால் இவரால் பத்து வருடங்களுக்கு போட்டியிடமுடியாது, பிரச்சாரம் மட்டுமே செய்யமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவின் விடுதலைக்குச் சாதகமாக அழுத்தங்களை வழங்கிய

அமெரிக்க அரசு தமிழ்க்கைதிகளின் விடயத்தில் அமைதி காப்பது

கண்டனத்திற்குரியது.

இவரின் விடுதலை சிங்களம் தமக்கிடையில் அடிபட்டுக்கொள்ள

வழிசமைப்பதுடன் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை இன்னும்

சிக்கலாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் பல்லு பிடுங்கிய பாம்பாக சரத் இருக்க வேண்டிய நிலை.அமெரிக்காவின் சொல் கேட்பது போல் மகிந்த கூட்டம் நடித்து தமக்கு உள்ள உலக அரசியல் அழுத்தத்தை குறைக்க முயல்கிறது.அத்தோடு ஐ.தே.கவின் பலத்தை மேலும் குறைக்க சரத்தின் வெளியேற்றம் உதவும்.ஒரு காலத்தில் எஸ்.பி.திசநாயக்காவுக்கு ஏற்பட்ட நிலை சரத்துக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளோ அல்லது தமிழ்/சிங்கள அமைப்புக்களோ இவரை அணுகி போர்குற்ற சாட்சியாக சாட்சியமளிக்க ஊக்கமளிக்க வேண்டும்.இவரின் வாயால் பல உண்மைகள் வரவழைக்கப்பட வேண்டும்.

- ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்டது “பொதுமன்னிப்பு” அல்ல

- ஃபொன்சேகா குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பு அப்படியே உள்ளது

- வெள்ளைக் கொடி வழக்கில், உயர்நீதிமன்றத்தால் சரத் ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி முற்றாக ரத்து செய்துள்ளார்

- இராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட ஹைகார்ப் வழக்கு விவகாரத்தில் ஒரு பகுதியைத்தான் ஜனாதிபதி ரத்து செய்துள்ளார் என்றும், எனவே இரு வழக்குகளில் அவர் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டுள்ளார்

- ஃபொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட சிவில் உரிமைகள் அப்படியே நிலுவையில் இருக்கும்

- தேர்தல்களில் போட்டியிட முடியாத ஒரு நிலை தொடரவே செய்யும்

- சரத் ஃபொன்சேகாவுக்கு இதர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உரிமைகள் உட்பட இதர உரிமை கிடைக்கும்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/05/120522_saratsilva_fonsekarelease.shtml

மன்னிப்பை ஏற்குமாறு பொன்சேகாவின் வீடுதேடிச் சென்று மன்றாடியது அரசு!

'சரத் பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் என சொல்லித் திரிந்த அரசு இன்று வீட்டுக்கே ஓடிச்சென்று மன்னிப்பை பெற்றுக்கொள்ளுமாறு மன்றாடி மன்னிப்பை வழங்கியுள்ளது. பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் அன்று கோரிக்கை விடுத்தும்கூட அவரை விடுதலை செய்யாத அரசு, இன்று ஹிலாரி கிளிண்டன் சொன்னதும் விடுதலை செய்துள்ளது.'

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற இறக்குமதிகள், ஏற்றுமதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்ண்டவாறு தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் என சொல்லித் திரிந்த அரசு இன்று வீட்டுக்கே ஓடிச் சென்று தயவு செய்து மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என மன்றாடி மன்னிப்பை வழங்கியுள்ளது. சரத் பொன்சேகா தவறிழைத்திருந்தால் அரசு ஏன் ஓடித்திரிய வேண்டும்? எது எப்படியிருப்பினும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டதையிட்டு நாம் சந்தோஷமடைகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=aadec015-897d-484e-bc8c-56064b1a0c84

பொன்சேகா புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளாராம்

Jayantha Ketagoda, a member of the Sri Lankan parliament told PTI today that the former Army Commander and presidential candidate will form his own political party, an application for which has already been submitted.

"We have submitted the registration application to the elections commissioner under the name Democratic Party (DP)," Ketagoda said. Adding "this was done when the General (Fonseka) was in prison".

http://news.outlookindia.com/items.aspx?artid=763501

நான் நினைப்பது என்னவென்றால் :D

சரத் பொன்சேகா மகிந்தவுக்கு ஆதரவாக இருப்பதாக ஒப்புக்கொண்ட பின் அல்லது ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட பின் தான் அவரை விடுதலை செய்திருப்பார்கள். :unsure:

இனிமேல் வெளியில் அரசாங்கத்தை பகைப்பது போல் காட்டிக்கொண்டு உட்பக்கமாக அரசாங்கத்திற்கு ஆதரவாக தான் நடப்பார். (விரும்பி அல்லது வேறு வழியில்லாமல்)

அமெரிக்காவையும் ஏமாற்றி தமிழரையும் ஏமாற்றும் முயற்சி தான் நடக்கப்போகிறது. ஏமாறாமல் இருப்பது எம் கடமை. அதே போல் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவரை ஏற்றிவிட்டு அரசாங்கத்தின் போர்குற்றங்களை அவர் வாயால் வெளியில் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

என்ன தான் இருந்தாலும் சரத் பொன்சேகாவும் ஒரு சிங்கள அரசியல்வாதி. அவர்கள் மோதிக்கொண்டாலும் அவர்கள் குணங்களோ கொள்கையோ மாறாது. எம்மவர்கள் போல் மாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள். :wub:

எனவே சரத் பொன்சேகா விடுதலையானாரோ இல்லையோ தமிழர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்கப்போவது இல்லை. :( :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.