Jump to content

கனடாவில் புலிகளிற்குத் தடையாம்

Recommended Posts

Posted

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கு உதவி வழங்க அனுமதியுண்டு: கனடிய அரசு

[திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2006, 23:34 ஈழம்] [புதினம் நிருபர்]

கனடாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கான பட்டியலில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஏப்ரல் 8ம் திகதி 2006ம் ஆண்டிலிருந்து இணைத்துக் கொள்ளப்படுவதாக, கனடிய பொதுநல பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக்வெல் டே இன்று அறிவித்தார்.

கடந்த காலத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த செயற்பாடு, முன்னைய அரசால் கிடப்பில் போடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், கனடிய மக்களை பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு தமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறினார்.

இந்த முடிவு சரியானது என்று நியாயப்படுத்திய கனடிய வெளிநாட்டமைச்சர் பீற்றர் மைக்கே, சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் கனடா தொடர்ந்தும் ஆர்வம் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள், சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாகக் கூறிய பீற்றர் மைக்கே, சமாதான முயற்சிகளில் அவர்கள் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது செயற்பாடுகள் சந்தேகத்திற்குள்ளாக்குவதாக விளக்கினார்.

சிறிலங்கா அரசும், பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணும் விடயத்தில் தான் வழங்கிய உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று தெரிவித்த வெளிநாட்டமைச்சர் மைக்கே, அவ்வாறு சிறிலங்கா அரசு உறுதிமொழிகளை இதுவரை கடைப்பிடித்து வருகிறதா இல்லையா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில், 39 ஆவது பயங்கரவாத அமைப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்திற்கு நேரடியாக உதவி செய்வது, இயக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பன தடை செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த அமைப்புடன் தொடர்புடைய முன்னணி அமைப்புக்கள் தொடர்ந்தும் தங்கள் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு எந்தத் தடையும் வழங்கப்படவில்லை என்பது, அரச அறிவிப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த இயக்கத்துடன் தொடர்புடைய ஏனைய அமைப்புக்களிடம், விரும்பியவர்கள் உதவி வழங்குவதற்கும் ஏனைய ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்குவதற்கும், இணைந்து செயற்படுவதற்கும் இந்தச் சட்டம் தடை விதிக்கவில்லை என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Puthinam

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்மலன் அவர்களின் கருத்து நு}று வீதமும் சரியானதே. தேசியத்துக்கான பல ஆதரவாளர்கள் ஆர்வமுள்ளோர் புறந்தள்ளப்பட்டு ஒரு வட்டத்திற்குள் புலம்பெயர் நாடுகளில் தமிழீழத் தேசியம் சுழன்று வருவதை நானும் அவதானித்திருக்கிறேன். ஆர்வத்துடன் உதவிசெய்ய சுனாமியின்போது வன்னிக்குச் சென்றவர்களின்மீது பலர் தனிப்பட்ட குரோதம் காரணமாகப் பழிகளைச் சுமத்தி தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான தகவல்களைக் கொடுத்ததன்மூலம் தங்கள் வஞ்சங்களைத் தீர்த்துக்கொண்டது யாவரும் அறிந்ததே. புலத்தில் ஒருவகைச் செல்வாக்கின் அடிப்படையிலேயே விடயங்கள் நடைபெறுகின்றன. இங்கு தமிழ்த்தேசியத்தை நேசிப்போரை இனங்கண்டு அவர்களின் ஆதரவைப் பெற்று பிரச்சாரத்தை முன்னெடுக்ககூடிய முயற்சிகளை இடையில் நின்று தடுப்போர் பலருள்ளனர். துரோகி முத்திரை குத்தும் அதிகாரத்தை இங்குள்ளோர் சிலர் சுயமாகவே தம் வசம் வைத்திருப்பதாலும் அவர்களின் செலவாக்கு எடுபடுவதாலும் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாகிக்கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது. கனடிய அரசின் அண்மைய தடைக்கான முக்கிய காரணங்களில் ஹியுமன் றைட் வாச்சின் அறிக்கையும் ஒன்றாகும். இடைத்தரகர்களின் அடாவடித் தனங்களால் தேசியத்தின்மீது உண்மை ஆர்வம் கொண்டிருநத பலர் அதற்கு எதிராகத் திருப்பிவிடப் பட்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பிரசார நடவடிக்கைகளே இந்த அறிக்கைக்கும், தடைக்கும் முக்கிய காரணங்களாகும். சர்வதேசத்தில் போராட்டத்திற்கான நியாயங்களை முன்வைத்துச் செய்யவேண்டிய பிரசாரத்தைவிட அதற்கு உடந்தையாக இருக்கும் நம்மவர்களின் தவறான நடவடிக்கைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களின் ஆதரவை எமக்குச் சார்பாகத் திருப்புவது மிக எளிதானது. ஆனால் நந்திகளாய் குந்தியிருந்து தடுப்பவர்கள் முதலில் அப்புறபபடுத்தப்;படவேண்டும்.

Posted

அறிவுசார் தளத்தில் புலத்தில் பணிபுரிய வேண்டும். அது உண்மைதான்,ஆனால் யாரை நம்பி யாரை விடுவது என்று இயக்கமே குழம்பிபோயுள்ளது. எல்லாருமே சுயநலம். இதுவரை வேலை செய்து விடுதலையை இந்தளவுக்கு கொண்டுவந்தவகள் இன்றுவரை கஸ்டப்படுகின்ற அந்த கீழ்மட்டம் வரை இறங்கி வேலை செய்யும்,வீடுவீடாக சென்று படலை தட்டி காசு சேர்க்கும் அந்த தொண்டர்கள் தான். ஆகவே பிழை என்று ஒன்றும் இல்லை.

படித்தவர்கள் மனசுத்தியுடன் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

தலைவர் அனைவரையும் தான் வேண்டி நிற்கிறார். இங்கு சுயமதி இழந்து நிற்கும் அறிவாளிகளை என்ன செய்வது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் குரோத அரசியல் இராணுவ தந்திரோபாயங்கள் மூலம் உட்பகையை அணுகும் கட்டத்தைக் கடந்துவிட்டோம். புூரண கட்டுப்பாடுள்ள பிரதேசத்தில் நின்று கொண்டு தமிழ்த்தேசியத்தை விரிவுபடுத்தி நாட்டை நிறுவக்கூடிய அனைத்துச் சாத்தியங்களையும் பெற்றுவிட்டதால் நட்புக்கரம் நீட்டி உட்பகையை இல்லாதொழிக்கவேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டுத் தொடர்ந்தும் குரோத மனப்பான்மையைப் பேணுவது நம்மை நாமே அழிக்கவே ஏதுவாகும். மேற்கு நாடுகள் எமக்குப் பயங்கரவாதப் பட்டம் சுூட்டுவதற்கான காரணம் நமது தேசிய விடுதலைக்கான முனைப்பன்று. நமக்குள் உள்ள பகைமையை நாமே வளர்த்தெடுப்பதும் வன்முறையின் மூலம் அதற்கான தீர்வைப் பெறமுனைவதுமேயாகும். மேற்கு நாடுகளின் பார்வையில் மாற்றுக்கருத்துக் கொண்ட நாம் கூறும் துரோகிகளும் பயங்கரவாதிகளே. தடைசெய்யப்படுமளவுக்கு அல்லது பட்டியலிலிடப்படுமளவுக்கு அவர்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. சிறீலங்கா அரசு தேர்தல்மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால் அதன் ஆயதப் படைகளைப் பயங்கரவாதிகளாகக்கூற எந்த நாட்டினாலும் முடியாது. அப்படிக் கூறினால் ராஜதந்திர உறவுகள் கெட்டுப்போகும். நமது செவி மட்டுமே முறுக்கப்படக் கூடியது. இதுவே யதார்த்த நிலையாகும். ஆயினும் எமது ஒருமித்த குரலை ஒடுக்க எவராலும் முடியாது. அதுவும் அங்கீகரிக்கப் படவேண்டிய ஒரு நாட்டின் குரலாகவே இருக்கும். ஆனால் துரதிஷ்ட வசமாக பிரிவுகளும் குரோதங்களும் எம்முள் வளர்கின்றனவேயொழியக் குறைவதாயில்லை. புூனைக்கு மணிகட்டுவது யார்? எமக்குள்ளே சமாதானத்தைக் கொண்டுவருவது யார்? இதுவே இன்றுள்ள கேள்வி. இன்றைய நிலையில் மாற்றுக் குழுக்களையும் நட்புக்கரம் நீட்டி அழைத்து எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கருத்துச் சொல்வதுகூடச் சிலவேளை அதிகப் பிரசங்கித்தனமென்று இகழப்படவும் கூடும். சேக்ஸ்பியர் மட்டும்தான் கவிதைபாடவேண்டும் என்பதுபோல அரசியலைக் குறித்த சிலர் மட்டுமே பேசவேண்டுமென்ற பாரம்பரியம் ஈழத் தமிழரிடையே வளர்ச்சி கண்டுள்ளது..

Posted

நிர்மலன் கூறிய பல விடயங்களில் எனக்கும் உடன் பாடு உண்டு.ஆனால் இந்த படித்தவர்கள்,படியாதவர் என்ற பிரிவினையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.ஒருவருக்கு முதலில் தேவை நேர்மை, அவர் எந்தளவு படித்தவராக இருந்தாலும் நேர்மை அற்றவர் என்றால் அங்கே பல விதமான மோசடிகள்,ஊழல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.ஆகவே பொறுப்பானவர்கள் திறமயானவராகவும், அறிவுள்ளவராகவும் அனைவரையும் அரவணைத்துப் போவபவராகவும் இருக்க வேண்டும்.ஆனால் புலம் பெயர்ந்தவர்களில் ,படித்தவர்கள் எத்தினை பேர் முழு நேரமாக தேசியத்திற்கு உழைக்கத் தயாராக இருகின்றனர்.எத்தனை பேர் தாம் பார்க்கும் வேலைகளை விட்டுவிட்டு முழு நேர ஊழியராக இருக்க உடன்படுவர்?

புலத்தில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று அவசியம்.திறமையானவர்கள், நேர்மையாக நடப்பவர்கள் உள்வாங்கப் பட வேண்டும்.ஆனால் இவர்களை என்னென்று அடையாளம் காண்பது.யார் இவர்களை நியமிப்பது?ஏற்கனவே இருப்பவர்களை புறந்தள்ளாமல் எவ்வாறு இதனை மேற்கொள்வது.இவ்வாறு புறந்தள்ளப்பட்டவர்கள் ,தமது சுய நலத்தால் தேசியதிற்கு எதிராக வேலை செய்ய மாட்டார்களா?இவர்களை எதிர்ச் சக்திகள் பயன் படுத்த மாட்டாதா?இப்படி பல பிரச்சினைகள் இருகின்றன.

மொத்தத்தில் புலத்தில் நிர்வாக மறுசீரமைப்பு என்பது அவசியமானதாகவே இருக்கிறது.

Posted

இல்லை தவறு. அனைவருமே தேவை, இருந்தாலும் இன்னும் எல்லாரும் இறங்கி மீன் பிடிக்கும் அளவுக்கு நிலமை வரவில்லை.

கொஞ்சம் கால அவகாசம் தேவை. கவனமாக இருக்கவேண்டிய காலம்.

இப்போ கூட போராட்டத்தில் எதிர்பாராத புயல்கள் வரலாம்.

அந்த தலைவனின் உரமான கட்டுக்கோப்பு சிங்களத்தில் எல்லை போடு வரை தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வேறொரு களப்பிரிவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ் கனடிய இளைஞனின் கருத்து:

-----------------------------------------------------

According to your section 83.01(1)(a) and 83.01(1)(B) of the Criminal Code as:

-an activity that is an offence under one of the UN anti-terrorism conventions and protocols listed in the Criminal Code; or

-an activity that is taken or threatened for political, religious or ideological purposes and threatens the public or national security by killing, seriously harming or endangering a person, causing substantial property damage that is likely to seriously harm people, or by interfering with or disrupting an essential service, facility or system

The LTTE emerged from Tamils to fight back the state sponsored terrorism by Srilankan government. Canadian definition of criminal code well fits to Srilankan goverment too. The LTTE and Srilankan government are equal partners now so its time to list Srilankan government in your list. By banning LTTE Canada is forcing itself to be responsible of continuing masscre of Srilankan government.

This move makes raises lots of questions.

-if it's meant as a revenge for tamilcanadians who are supporters of liberals (but many voted tories with the guidance of community leaders)

-if it's about to take a crucial step in peace process to pressure Srilankan government on seriously workingout a solution.

-if it's following US orders to follow what US has done-ban on LTTE

-if it's fallen to the false propaganda by Lankan embassy and some full time working sinhalese extremists in Canada.

-if it's concerned to the human rights watch report (if extortion is the real cause, a simple official warning or other measures could've been enough than going this high)

French is fully implemented in Canada as second language respecting minorities but in Srilanka, its only in papers. Where do we go report it? We tamils didn't have any other country to speak of ourselves against state sponsored terrors so we retaliated and used the same tactic. It was a tamil canadian aerospace engineer who went to join LTTE to form airforce. There're other interllectuals who give their brain for the tamil cause. This ban makes all of this highly educated and hardworking tamil canadians branded as terrorists.

If Canadian tamils pouring money to LTTE is the real concern Canada has it could've gone to the front organizations and warned about it rather than just hitting with a big weapon-ban.

The 'Pongu thamil' event with more than 50,000 tamils participation alone should tell you that how much we care back home issues. Even though its not a criminal activity to gather again after this ban there will be quite number tamils who will be afraid to join due to the fear of regulations. In that case, Canada curbed down tamils freedom of expression.

You are forcing enthusiastic tamil youths to quit any activities(organizing events like Martyre's day) to promote their tamil cause and have a feel of tamilness inside them and make them feel guilt if they are to support behind the scene.

Its looks pathetic to see our sole representatives-LTTE to be listed with the worse world terrorist like Al-Quida and other 38 groups. Take some time and compare LTTE's vision with other terror groups. Any oppressed minorities have to fight back if no one is there to talk on their behalf.

Until Canada promises to take care of my brothers and sisters I, a tamilcanadian will continue to support the tamil cause, with more active role than before.

Thank you Canada.

Shan Karen

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கா தூதுவரின் ஒருபக்கச்சார்பான கருத்துக்கு புலம் பெயர்ந்த மக்கள் பலர் தங்களது கண்டனங்களினை தெரிவிக்க அதற்கு அமெரிக்க தூதுவர் அதற்கு பதில் அளித்தார். அதன்பிறகு சிங்கள அரசாங்கம் விடும் பிழைகளினையும் தெரிவித்தார். ஏன் புலத்தில் உள்ள தமிழர்கள், அமைப்புகள் கனடா அரசாங்கத்துக்கு தங்களின் ஆதங்களினைத் தெரிவிக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசிற்கும் புலிகளிற்கும் கனடாவில் பேச்சு நடத்த முயற்சி? சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமிடையேயான பேச்சுவார்த்தையை கனடாவில் நடாத்துவதற்கு கனடாவின் தற்போதைய அரசு முயற்சி எடுத்து வருவதாகத் தெரியவருகிறது.

விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டது துரதிர்ஸ்டவசமானது எனவும், இது கனடாவின் இலங்கை இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகள் தொடர்பான நடுநிலையைப் பாதிக்கும் எனவும் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்த குயின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சறின் எய்கின் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவாகர அமைச்சர் பீற்றர் மைக்கே, அக் கருத்தை மறுதலித்ததுடன் கனடா பேச்சுவார்த்தையில் காத்திரமான பங்கு வகிப்பது குறித்து நோர்வேஜிய அரசுடன் தான் கலந்துரையாடியதாகவும், கனடாவில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது குறித்த விடயத்தை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் அக்கறையுள்ள கனடிய அரசியல் முக்கிஸ்தர் ஒருவர் இது குறித்து தனிப்பட்ட ரீதியில் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான முயற்சியை வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்வதானது வரவேற்கத்தக்க விடயம் எனவும், இது ஒரு மிகச் சிறந்த முயற்சி எனவும் தெரிவித்தார்.

கனடாவின் இவ்விருப்பானது நோர்வேயினால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இரு தரப்பிற்கும் தெரியப்படுத்தப்பட்டு அவர்களின் ஒத்தாசை பெறப்பட்டாலே இது சாத்தியமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் 39 ஆவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது அதன் முன்னணி அமைப்புக்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என்பதுடன், அவ்வாறு விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்களிற்கு உதவிகள் வழங்குவது, பங்களிப்பது என்பனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் கனேடிய ஊடகங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டதையடுத்த

Posted

பீஷ்மர் யாழ்க் களத்தில எழுதினதை வாசிச்சிடுத் தான் இந்தக் கட்டுரைய எழுதி இருக்கிறார் போல.உங்கள் கருதுக்கள் என்ன?

கனடாவில் நடந்ததென்ன?

[16 - April - 2006] [Font Size - A - A - A]

-பீஷ்மர்

* சிந்திக்க வேண்டிய விடயங்கள் சில பற்றிய குறிப்புகள்

பெப்ரவரி 6 ஆம் திகதி பதவியேற்ற கனடாவின் புதிய கன்சர்வேட்டிவ் (பழைமை பேண் வாத) அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் நாள் திகதியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நிறுவனம் பயங்கரவாதம் காரணமாக கனடாவில் தடைசெய்யப்படுகின்றது என்ற அறிவிப்பை மக்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக் வெல்டே அறிவித்தார்.

இப்புதிய அரசாங்கம் நவ பழைமை பேண்வாதத்தை தனது அடிப்படைக் கருத்து நிலையாகக் கொண்டது. புதிய பிரதமரான ஸ்ரீபன் ஹாப்பர் இக் கட்சியை 2003 வாக்கிலேயே உருவாக்கினார். கனடாவில் நிலவிய அரசியல் தாராண்மை வாதத்தை எதிர்த்து ஓர் ஒட்டுமொத்தமான பார்வை இறுக்கத்தை மேற்கொள்ள விரும்பிய காப்பர், அதிகாரத்துக்கு வந்தால் விடுதலைப் புலிகளை தடை செய்வார் என்ற பேச்சு தேர்தல் காலத்திலேயே இருந்ததுதான். இப்பொழுது காரியம் நிறைவேறியுள்ளது.

இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டம் இன்று ஒரு முக்கிய கட்ட நிலையினை எய்தியிருக்கும் இவ்வேளையில், குறிப்பாக, சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு வேண்டிய பதிற்குறிகளை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒர் உணர்வு இங்கு காணப்படும் நிலையில் கனடாவின் இந்த அறிவித்தல் தமிழர் நிலைப்பாட்டுக்கு மனச்சோர்வினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த கட்டத்திலேயே தான் இந்தப் பிரகடனம் பற்றி மிக மிக நிதானமாகவும் பார்க்க வேண்டிய அவசியமொன்றுள்ளது. நோய்க்கான காரணத்தை அறியாமல் வலியைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. இன்னுமொரு முக்கிய விடயம் இதனை தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தின் ஓர் அம்சமாக அதுவும் உரிமைப் போராட்டத்தின் இன்றைய கட்ட ஓர் அம்சமாகக் கொள்ள வேண்டும். இதனை விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக மாத்திரம் பார்ப்பது தவறான கண்ணோட்டமாகும். இப் பிரச்சினையை இரண்டு நிலைப்படப் பார்ப்பது அவசியம்.

முதலாவது, இப்பிரச்சினை இந்த வடிவத்தை பெற்றதற்கான உடனடி காரணம் அல்லது காரணங்கள் இரண்டு அதற்கு பின்புலமாகவுள்ள ஆழ்நிலை கருத்துநிலை அம்சங்கள்.

கனேடிய அமைச்சர் ஸ்ரொக்வெல் டே இந்தப் பிரகடனத்தை அறிவித்தபோது அதற்கான பின்புலத்தையும் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜோ பெக்கர் என்ற பெண்மணி கியூமன் றைய்ற்ஸ் வோட்ச் (மனித உரிமை கண்காணிப்பு) என்ற நிறுவனத்தின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் முதன்மைப்படுத்தியுள்ள அம்சங்களை இவரும் நினைவு கூருகின்றார். அவற்றுள்ளே பிரதானமானது விடுதலைப் புலிகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே வலுக் கட்டாயமாக பணம் சேகரிக்கிறார்கள் என்பதாகும்.

ஜோ பெக்கரினுடைய அந்த அறிக்கையின் அழுத்தம் முக்கியமானது. மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசும் நிறுவனங்கள் பெரும்பாலும் இலங்கையில் தமிழ்ப் பிரதேசத்து நிலைமைகள் பற்றியே பேச இந்த அறிக்கை புலம்பெயர் நிலையை கனடா பற்றிய சில உதாரணங்களுடன் பேசியுள்ளது. ஜோ பெக்கருடைய அறிக்கையை இலங்கை அரசாங்கம் எத்துணை சூட்சுமமாகப் பயன்படுத்தியது என்பது எமக்குத் தெரியும். எனவே, இது பற்றி முதலாவதாக எழும் சந்தேகம் ஜோ பெக்கருக்கு இத்தகையதொரு அறிக்கையை எழுதுவதற்கான பின்புலம் யாது என்பதாகும். இதுபற்றி பலரை கேட்டபோது ஜோ பெக்கர் அப் பிரதேசத்தில் முன்னர் மனிதவுரிமை சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார் என்றும் அந்தக் கூட்டத்தை சிலர் சென்று குழப்பியிருந்தனர் என்றும் கதையொன்று வருகின்றது. இக் கதையை விரிவாக ஆராய வேண்டும். கூட்டம் உண்மையில் குழப்பப்பெற்றதா? எவ்வாறு குழப்பப்பெற்றது? பெக்கரின் நிலைப்பாட்டுக்கு எதிரான விவாதங்களை வாத விவாதத்துக்கு உட்படுத்தாமலே குழப்பினார்களா? என்பன போன்ற வினாக்கள் முக்கியமாகின்றன. இவற்றைவிட ஜோ பெக்கருக்கும் மற்றைய இலங்கை சக்திகளுக்குமான உறவுகள் யாவை என்பதும் முக்கியம்.

விபரம் தெரிந்தவர்கள் இவற்றை வெளியே கூற வேண்டியது அவசியமாகிறது. அடுத்து இரண்டாவது விடயத்துக்கு வருவோம். அதில் மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன. முதலாவது, ஸ்ரீபன் ஹாப்பர் அரசாங்கத்துக்கு இந்த பிரச்சினை ஏன் முக்கியமானது? நவ பழைமை பேண் வாதிகள் என்ற வகையில் இப் பிரச்சினை ஸ்ரீபன் ஹாப்பர் அரசாங்கத்துக்கு இது எவ்வாறு முக்கியமாகின்றது? என்பது ஒரு அச்சாணியான வினாவாகும். புஷ் அரசாங்கத்துடன் தொடர்புகள் உண்டா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, கனடாவுக்குள்ளே இந்த `பயங்கரவாதத்தை' எந்த எந்த அம்சங்களில் காணுகிறார்கள் என்பதையும் நோக்கல் வேண்டும். இவ்வாறு சொன்னவுடனேயே விடுதலைப் புலிகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக தங்களை அங்கு காட்டிக் கொள்பவர்களின் நடைமுறைகள், தமிழ் மக்களுடனான உறவு, அரசாங்கத்துடனான உறவு ஆகியன எந்நிலைப்பட்டவை என்பது பற்றிய விருப்பு வெறுப்பற்ற கணிப்பீடு ஒன்று அவசியமாகிறது. அவர்கள் தங்களை அரசியற் பிரசாரகர்களாக கருதுகிறார்களா அல்லது தங்களை நிர்வாக முகாமையாளர்களாக கருதுகிறார்களா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில், கனேடிய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கனேடிய உளவு நிறுவனங்களும் வழங்கிய தகவல்களும் முக்கியமானது என்பது ஏப்ரல் 8 அறிக்கையில் நன்கு தெரிய வருகிறது. ஜோ பெக்கர் சுமத்திய குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வ கனேடிய உளவு நிறுவனமும் கூறியுள்ளதா என்பதை அறிதலும் முக்கியமான அம்சம்.

அடுத்தது இரண்டாவது கட்ட நிலைப்பட்ட இரண்டாவது வினாவாகும். இது ஒரு முக்கியமான விடயம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரசாரத்தையும் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் அங்கு உள்ளனரா அவர்கள் யாவர் என்பதாகும்.

ஒரு குறை கணிப்பின்படி ஏறத்தாழ மூன்றரை - நான்கு இலட்சம் இலங்கையர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. இதில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் தான் சிங்கள மக்கள் ஆவர். மூன்று/ மூன்றரை இலட்சம் பேர் தமிழர்கள். இவர்களில் கனேடிய பிரஜைகளாகவுள்ளவர்கள் குறைந்தது இரண்டு/ இரண்டரை இலட்சமாகவாவது இருத்தல் வேண்டும். இந்த இரண்டரை இலட்சம் வாக்கின் அரசியல் பலம் யாது. இந்த இரண்டரை லட்சம் பேர் அங்குள்ள அரசியற் கட்சிகளிலே இடம்பெறுகின்றனரா இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இந்த கட்டத்தில் அரை இலட்சம் சிங்கள மக்களையும் இரண்டரை இலட்சம் தமிழ் மக்களையும் அரசியற் பிரக்ஞை நிலையில் வைத்து ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒரு தேவையுமுள்ளது. அப்படி பார்க்கும் போது இந்த 2 1/2 இலட்சம் தமிழர் பற்றிய சில அசௌகரியமான உண்மைகள் வெளிவருகின்றன.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்து கலை, இலக்கிய, அரசியல் சூழல்களுக்குள்ளேயே அங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்தை கனடாவில் எவ்வாறு நாற்றுநட செய்ய வேண்டும் என்பதில் அமிழ்ந்து கிடக்கின்றனரே தவிர, கனேடிய தமிழர்களாக அந்த இரண்டு அடையாளங்களையும் இணைத்துப் பேணுவதில் எவ்வித அக்கறையும் காட்டாதிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இவை யாவற்றுக்கும் மேலாக இன்னுமொரு பயங்கரமான உண்மையுள்ளது. கனடாவில் வசிக்கின்ற குறிப்பாக, ரொறன்ரோவில் வசிக்கின்ற இளம் தலைமுறையிலான தமிழர்கள் (இளைஞர்கள்) மிகவும் மோசமான முறையில் சட்டவிரோத காடைத்தனங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. இப்படி செய்வோர் தொகை மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால், இவை நிச்சயமாக நடைபெறுகின்றன. அண்மையில் பல்கலைக்கழக மட்டத்திலேயே சில மாணவர்கள் தமது சகாக்கள் இருவரை மோட்டார் வண்டியால் மோதிக் கொன்றதாக சர்வதேச ஊடகங்களிலே பேசப்பெற்றன. சிங்கள ஊடகங்களிலேயும் அது பெரிதுபடுத்தப்பட்டது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவிழ் பதம் பார்த்த கதை தான். பெற்றோர்கள் நாவலர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல பிள்ளைகள் `சைக்கிள் பெல்ட்'க்களுடன் உலாவுவது சகஜமாகிவிட்டது. இந்த விடயத்தில் வியட்நாமிய அகதிகளும் இலங்கை தமிழ் அகதிகளும் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர் என்று உள்ளூர் கனேடிய பிரமுகர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயங்கள் 3 ஆவது நிலைப்பட்ட ஒரு வினாவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. இது மிக மிக முக்கியமானது. கனேடிய உயர் சமூக மட்டத்திலும் ஊடக நிலைகளிலும் இலங்கை தமிழர் நிலைப்பாடுகளை எடுத்துப் பேசுவதற்கான கருத்தாதரவு நாடும் கூடங்கள் (ஃணிஞஞதூ) உள்ளனவா? இப்படியான கருத்தாதரவு நாடும் குழுமங்கள் இருக்க வேண்டியவை அவசியமாயிற்றே. இந்த நிலையிலே தான் இரண்டு உண்மைகள் வெளிவருகின்றன. இலங்கை தமிழர்களின் நிலைமைகள், போராட்டங்கள், நிலைப்பாடுகள் பற்றி உயர் சமூக மட்டங்களிலே பேசக் கூடியவையான குழுமங்கள் அவசியம் இப்படியான குழுமங்களில் பிரபல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்ற தொழின்மை நிலையினர் இடம்பெறுவது வழக்கம். மற்றைய நாடுகளிலேயே இப்படியான தமிழ்க் குழுமங்கள் குறைவு. கனடாவில் இல்லையென்றே கூறலாம். இதற்கான காரணம் பற்றி அறிய முனைந்த போது மேலே சொன்ன உத்தியோகபூர்வ முகாமையாளர்களின் எஜமான் போக்குகள் காரணமாக ஆர்வமுள்ள தொழின்மையர் கூட தங்களை இனங்காட்டிக் கொள்வதில்லையென பேசப்படுகின்றது. சிங்கள கருத்தாதரவு நாடும் கூடங்களை பொறுத்த வரையில் நிலைமை முற்றுமுழுதாக வேறுபாடானது. ஒட்டாவாவில் இருக்கின்ற ஒரு `லொபி' கனேடிய அறிஞர்கள் தொழின்மையர் போன்றோருடன் அடிக்கடி கருத்தாடல் நடத்துவதாகவும் அந்த கருத்தாடல்களில் தமிழர் நிலைப்பாடுகளின் நியாயமின்மைகள் பற்றி பேசுவதாகவும் கூறப்படுகின்றது. இப்படியான ஒரு குழுமம் கனேடிய தமிழர்களை பொறுத்தவரையில் இயங்குவதில்லை என்றே கூறுகிறார்கள். இயங்குவதில்லை என்றால் அந்தளவில் விட்டுவிடலாம். அந்தளவில் இயங்குவதை செல்வாக்குள்ள சிலர் விரும்பவில்லையென்று கூறுகிறார்கள். இவற்றின் உண்மை பொய் பற்றி ஆராய்வது எமது கடமையாக இருக்க வேண்டிய அதேவேளையில் அங்கு பொறுப்பு நிலையிலுள்ளவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை காட்ட வேண்டியது அவசியம். இந்த விடயத்தில் ஓர் அடிப்படையான அரசியல் உண்மையை அழுத்தி கூறுவது அவசியமாகிறது.

விடுதலைப் புலிகளோடு இயக்க நிலையிலோ தனிப்பட்ட நிலையிலோ கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் உள்ளவர்களை தவிர, மற்றைய இலங்கை தமிழர்கள் எல்லோருமே இன்றைய நிலையில் இலங்கை தமிழர் போராட்டத்தினை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்ற கொள்கையினை உடையவர்களே. விடுதலைப் புலிகளோடு சில விடயங்களிலே கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் இலங்கையின் இன்றைய நிலையில் அந்த தலைமையின் அவசியத்தை மறுக்கும் சாதாரண, புலம்பெயர் நிலை தொழின்மையால் (Professionals) இல்லையென்றே கூறலாம். இந்த நிலை மேலே கூறிய `லொபி' உருவாக்கத்துக்கு மிக முக்கியமானதாகும்.

இந்த வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் முக்கியமாகும். அதேவேளையில், அடுத்த வினா அச்சாணியானதாகும். கனடாவின் நவ, பழைமை பேண்வாத சிறுபான்மை அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கனேடிய பிரஜைகளான தமிழர்கள் எவ்வித பதிற்குறிகளை காட்டப் போகின்றனர் என்பது மிகமிக முக்கியமான வினாவாகும். பிரஜாவுரிமை இல்லாதவர்களின் நிலைமை வேறு. பிரஜாவுரிமை உள்ள தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள். இதற்கான அரசியல் ஒருங்கு சேர்ப்பு எவ்வாறு செய்யப்படப் போகின்றது யார் செய்யப் போகிறார்கள் இதுவும் பிரதானமான விடயங்களாகும். இறுதியாக, சர்வதேச நல்லெண்ண தேவை காரணமாக புதிய நடைமுறைகளை கையாள வேண்டிய இந்த வேளையில் இந்த அனுபவம் ஏற்பட்டிருப்பது ஒரு வகையில் நல்லதென்றே கூற வேண்டும். நெல் மணிகளை விட பதர்கள் இடம்பெறும் நிலையை ஊக்குவித்தல் கூடாது. இலங்கை தமிழர் பற்றிய கருத்தாதரவு நாடும் குழுமங்கள் சிறந்த முறையில் தொழிற்பட வேண்டிய காலமிது. நம்மை நோக்கி இன்று நோக்கியுள்ள அரசியற் சவால்களின் சிக்கல் நிறைந்த பன்முகப் பார்வையை கனடா அரசாங்கத்திலும் பார்க்க கனேடிய தமிழர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

பொன் சுத்தமாக வருவதற்கு புடமிடப்படுவது அவசியம். புடமிடுதல் என்பது நெருப்புக்குள் இருந்து வெளிவருவதாகும். நெருப்புக்கு பயந்து பொன்னை கரும் பொன்னாக வைத்திருப்பவர்கள் எவரும் இருக்க முடியாது.

http://www.thinakkural.com/news/2006/4/16/...les_page577.htm

Posted

பீஷ்மரும் இன்னொரு வக்கற்ற தமிழன் போலை சும்மா பூசி மெழுகி எழுதியிருக்கிறார். :D

ஜோ பெக்கரின் முன்னைய கூட்டத்தை பக்குவமாக இராஜதந்திரரீதியில் எதிர்கொள்ளாது குழப்பினார்களா? இது அனாவசியமாக பகையை வழர்த்து ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மரியாதையை குறைத்திருக்கும்.

50000 சிங்களவர்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் (5 மடங்கு) 250000 தமிழர்கள் இருக்கிறார்களா?

நாவலர் சிலையோடை ஒரு சந்ததி சைக்கிள் செயினோடை அடுத்து சந்ததி.

TSVP என்பது முற்று முழுக்க இளையவர்கள் அதுவும் பல்கலைக்கழம் சொல்லும் பக்குவம் பெற்றவர்களை கொண்டது. அதிலேயோ ஏகப்பட்ட தனிநபர்கள் சார்ந்த பிரச்சனை.

அதுமாத்திரமல்ல கடந்த வருடம் சுனாமி நடவடிக்கைகளிற்கு உதவிய கனடிய அமைப்புகளிற்கு (MSF, கனடிய படைகள் போன்றவர்கள்) அவர்களுடை அனுபவங்களை பகிரவும் தமிழர் தரப்பிலிருந்து நன்றி கூறவும் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதை பொறுப்பொடுத்திருந்தவர்கள் பட்டதாரிகள். அதில் அவதானித்ததை எழுதினால் :oops:

Posted

ஏன் எழுதுங்கோவன், எழுதினாத் தானே கொஞ்சமாவது புத்தி வரும்.மற்ற ஊடகங்கள் செய்யாததை யாழ்க் களமாவது செய்யட்டும்.

Posted

அண்மையில் கனடா விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கப்பட்டியலில் சேர்த்திருக்கிறது. அது பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறன. கனடாவின் தடை கண்டனதுக்குரியது என கூறுவோரும், அது பழமைவாத கட்சியின் நீண்டகால திட்டம் , அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அதை நடைமுறைபடுத்தினார்கள் என சொல்லி திருப்திபடுவோர் ஒருபக்கமும், தடை விடுதலை போரை பாதிக்காது, என்ன கனடாவை நம்பியா எமது விடுதலை போர் தொடங்கப்பட்டது என வசனம் பேசுவோரும் என பல கருத்துக்கள் பலவாறு வைக்கப்பட்டாலும், கனடா தடை செய்தது என்பது ஒருவகையில் எமக்கு இராஜதந்திர ரீதியில் நல்லதல்ல.

அதுகும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சனத்தொகையை கொண்ட ஒரு நாட்டில் அம்முடிவு எடுக்கப்பட்டதென்பது வருத்ததிற்குரியது.

இன்று எமது போராட்டம் ஏதோ ஒருவகையில் சர்வதேசமயப்பட்டு விட்டது என்பது கள நிதர்சனம். அதை யாரும் மறுக்கமுடியாது.

தடை செய்யப்படுவதற்கு இலங்கை அரசின் பிரச்சாரம், மனித உரிமை அமைப்பின் அறிக்கை என நியாயபடுத்தமுனைந்தாலும், எம்பக்கத்திலும் சில தவறுகள் இருக்கத்தான் செய்திருக்கும், அதை நாம் சுயவிமர்சனதுக்கு உட்படுத்தி மறுசீரமைக்க வேண்டியது எமது கடமை. இது கனடாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் தமிழர் சார்பாக பொறுப்பில் இருக்கும் பலரும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். அதை சம்பந்தபட்டவர்கள் எதிர்காலத்தில் கவனத்தில் எடுபார்கள் என நம்புவோம்.

அடுத்ததாக எமது பிரச்சார யுத்திகள், ஊடகத்துக்கு எமது தகவல்களை எடுத்துசெல்வதில் இருக்கும் பலவீனமான நிலை, அவ்வவ்நட்டு நிர்வாகத்தினருக்கு எமது தரப்பு நியாயத்தையும், அவ்வபோது நடக்கும் அட்டூழியங்களை அவர்களின் கவனத்துக்கு எடுத்துசெல்வதிலும் கவனம் எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது.

அண்மையில் சில நாட்டு இளையோர் அமைப்புக்கள் அந்த பணியில் ஈடுபட்டாலும் இன்னும் வினைதிறனாக அரச ஊடக இயந்திரத்துக்கு சமனாக எமது பிரச்சாரம் முன்னெடுக்கப்பட் வேண்டியது அத்தியாவசியமானது.

இன்றைய பல்தேசிய ஊடக உலகில் ஈழத்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் அல்லது முற்றுமுழுதாகவே இல்லை எனும் நிலையே காணப்படுகிறது.

பலதேசிய ஊடகங்களில் பார்த்தீர்கள் என்றால் செய்தி வாசிப்பவர்களில் இருந்து செய்தியாளர்கள் வரை பல இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.

செய்தியாளர்களின் செய்திவழங்கும் பாணியில் அச்செய்தி மக்களின் உணர்வுகளை சென்றடையும் தன்மை தங்கியுளது.

உதாரணமாக

அண்மையில் ஈழத்தில் நடக்கும் அண்மைய சம்வங்கள் தொடர்பில்

தமிழ் மொழி மூலஇணைய ஊடகங்களன

புதினம், பதிவு, சங்கதி, உதயன் , வீரகேசரி, தினக்குரல் என பலதிலும் ஒரே சம்பவம் தொடர்பில்

வரும் செய்திகள் ஒரே மாதிரியான உணர்வை வாசகர் மத்தியில் ஏற்படுத்துவதில்லை.

எம்மவர்கள் சர்வதேச ஊடகத்துறையில் நுளையும் போது வேற்று நாட்டவரின் செய்தி எழுதும் பாணிக்கும் எம்மவரின் பாணிக்கும் இடையில் பாரிய வேறுபாடு நிச்சயமாக இருக்கும்.

ஆனால் ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளிலும் ஈழப்பிரச்சனைக்கு முன்பே வேரூன்றிய எமது சமூகத்தில் இருந்து எவரும் ஊடகம் சார் பணியில் பெரிதாக நுளையவில்லை என்பதும், எமது சமூகம் தமது பாரம்பரிய சிந்தனையில் இருந்து விடுபடாது வைத்தியர், பொறியிலாளர், கணக்காளர் எனும் துறைகளிலே கவனத்தை செலுத்தியது என்பது நடைமுறை யதார்த்தம்.

இதில் இருந்து எதிர்காலத்திலாவது எதிர்கால சந்ததி விடுபட வேண்டும். எம்மவர்கள் பலரும் அது சார் துறைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக முன்னேற வேண்டும். இது உடனடி பலனை தராவிட்டாலும் எமது சமூகத்துக்கு நீண்டகால பலனை தரக்கூடியது.

யூதர்களால் அவர்களுக்கு சார்பான ஒரு ஊடக உலகை பல்தேசிய அளவில் வைத்திருக்க முடிகிறது இன்றும்.

எம்மால் அந்தளவுக்கு முடிகிறதோ இல்லையோ நாமும் அந்துறைக்குள் எம்மவர்களை கொண்டு செல்வதன் மூலம் சிறிதளவாவது எமக்கு சாதகமாக்கலாம். எமது இணையப்பக்கங்கள் பல ஆங்கிலம் மற்றும் தமிழிலேயே இருக்கிறது. அவை பல்வேறு ஐரோப்பிய மொழியிலும் உருவாக்கப்பட்டு எமது பிரச்சனைகளை, எமது போராட்டத்தின் நியாய தன்மையை அந்நாட்டு மக்களுக்கு எடுத்துகூற கூடியதாக இருக்க வேண்டும்.அது தற்போது முடியாத காரியமாக இருக்கமுடியாது ஏன் எனில எமது இளம் சந்தையினர், பலர் அவ்வவ்நாட்டு மொழி, தமிழில் தேர்ச்சி உடையவர்கள் இருக்கிறார்கள்.

எமது பிரச்சாரம், என்பது எமது ஈழத்தமிழ் மக்களை மாட்டும் கருத்தில் எடுக்காது அவ்வவ்நாட்டு மக்களையும் சென்றடைய கூடியதாக இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்ததாக பல நாடுகளிலும் இருக்கும் ஈழத்து கல்வியாளர்களையும், எமக்கு சார்பான அவ்வவ் நாட்டு கல்விமான்களையும் ஒன்றிணைத்து எமக்கு சார்பான பிரச்சாரத்தை மேற்கொள்வது நன்மை பயக்ககூடியது.

சிலர் சொல்லலாம், அவர்களாக உணர்ந்து அவ்வாறு செய்யலாம் தானே அவ்வாறு வராதவர்களை ஏன் கணக்கெடுக்க வேண்டும் என்று.

ஒரு கையின் ஐந்து விரல்களும் ஒரு மாதிரி இருப்பதில்லை.

ஈழத்தில் கூட போருக்கான படை திரட்டலில்

ஆரம்ப காலத்தில் தாமக இணைந்தவர்கள் பலர். பிற்பட்ட 90 களில் போரின் உக்கிரத்தை / அட்டூழியத்தை தாமாக உணர்ந்து இணைந்தவர்கள், தமது குடும்ப இழப்புக்கள் அதன் மூலமான ஒரு உணர்வால் இணைந்தவர்கள் என ஒரு சாராரும் இருக்கும் போது. இன்னொரு சாரார் பல்வேறு நேரங்களில் நடந்த பிரச்சார/ சமகால அரசியல் கருத்தரங்குகளில் கேட்டு அதன் பின்னர் இணைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் தாமாக இணைவார்கள் என்று காத்திருந்தால் போராட்டம் இந்தளவுக்கு வளர்ந்திருக்காது.

அவ்வாறு இருகும் போது புலம்பெயர்ந்து இருக்கும் கல்வியாளர்கள் அனைவரும் தம்பாட்டுக்கு வருவார்கள் என சொல்லமுடியாது. தாமாக இனையும் ஒரு சிலர் மூலமாக , அவர்களுடன் இணைப்பில் உள்ள பல்வேறு நபர்களையும் உள்வாங்க முயற்சிக்கலாம். அவ்வாறு முழுப்பேரும் இணைவார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் குறிபிட்ட ஒரு பகுதியினரைவது இணைத்து கொண்டு அவர்கள் மூலமாக எமது போராட்டதுக்கு வலுசேர்க்கும், சில நடவடிக்கைக்களமேற்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

2003 ம் ஆண்டு ஈழத்தில் வடகிழக்கிற்கான சூழலியல் முகாமைதுவம் சம்பந்தமான ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

அது யாழ்பல்கலைகழகம், கிழக்குபலகலைகழகம், The economic consultancy house(TECH) எனும் கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட அரச சாரா அமைப்பும் இணைந்து நடாத்தப்பட்டது.

http://www.esn.ac.lk/emnes2003/background.asp

அதற்கு ஜப்பான் நாட்டு பேராசிரியர் (ஜப்பானியர்) ஒருவர் விருந்தினராக கலந்துகொண்டார். அவரை விட பல நாடுகளையும் சேர்ந்த ஈழத்து புலமையாளர்களும் கலந்துகொண்டனர்.

இச்செயற்பாடு புலம்பெயர் புலமையாளர்களால் தாமாக முன்வந்து செய்யப்பட்ட ஒன்றல்ல என்றே நினைக்கிறேன். அதற்கான முன்முயற்சி ஈழத்தில் தான் எடுக்கப்பட்டது. பின்னர் பல நாட்டிலும் வசிக்கும் எம்மவர்கள் இணைந்துகொண்டார்கள்.

இதே பொன்றே எம் போராட்டதின நியாயம், சமகால அரசியல் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்துக்கு பல மொழிகளிலும் எடுத்து செல்ல, பல நாடுகளில வசிக்கும் இளையோரையும் புலமையாளர்களையும் இணைத்து வினைதிறனான முறையில் செயற்பட வேண்டும். அதற்கு முன்முயற்சிக்கள் எடுக்கப்பட்டு, அவை தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இதன் மூலமும், எம்மை சுய பரிசோதனைக்கு உட்படுதுவதன் மூலமும் வருங்காலதில் மேலும் பாதகமான முடிவுகள் வராமல் தடுக்கக்கூடியதாக இருக்கலாம்.

அதைவிடுத்து தொடர்ந்தும் இதற்கு அவர் காரணம்/ அவர்கள் காரணம் என வேறு நபர்கள்/ சமூகங்களில் மட்டும் காரணம் தேடி குற்றம் சுமத்துவதை விடுத்து நாம் வினைத்திறனாக செயற்பட வேண்டியது இன்றைய சூழலில் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் நடந்ததென்ன?

http://www.thinakkural.com/news/2006/4/16/...les_page577.htm

-பீஷ்மர் (தினக்குரல் 16/04/2006)

* சிந்திக்க வேண்டிய விடயங்கள் சில பற்றிய குறிப்புகள்

பெப்ரவரி 6 ஆம் திகதி பதவியேற்ற கனடாவின் புதிய கன்சர்வேட்டிவ் (பழைமை பேண் வாத) அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் நாள் திகதியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நிறுவனம் பயங்கரவாதம் காரணமாக கனடாவில் தடைசெய்யப்படுகின்றது என்ற அறிவிப்பை மக்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக் வெல்டே அறிவித்தார்.

இப்புதிய அரசாங்கம் நவ பழைமை பேண்வாதத்தை தனது அடிப்படைக் கருத்து நிலையாகக் கொண்டது. புதிய பிரதமரான ஸ்ரீபன் ஹாப்பர் இக் கட்சியை 2003 வாக்கிலேயே உருவாக்கினார். கனடாவில் நிலவிய அரசியல் தாராண்மை வாதத்தை எதிர்த்து ஓர் ஒட்டுமொத்தமான பார்வை இறுக்கத்தை மேற்கொள்ள விரும்பிய காப்பர், அதிகாரத்துக்கு வந்தால் விடுதலைப் புலிகளை தடை செய்வார் என்ற பேச்சு தேர்தல் காலத்திலேயே இருந்ததுதான். இப்பொழுது காரியம் நிறைவேறியுள்ளது.

இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டம் இன்று ஒரு முக்கிய கட்ட நிலையினை எய்தியிருக்கும் இவ்வேளையில், குறிப்பாக, சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு வேண்டிய பதிற்குறிகளை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒர் உணர்வு இங்கு காணப்படும் நிலையில் கனடாவின் இந்த அறிவித்தல் தமிழர் நிலைப்பாட்டுக்கு மனச்சோர்வினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த கட்டத்திலேயே தான் இந்தப் பிரகடனம் பற்றி மிக மிக நிதானமாகவும் பார்க்க வேண்டிய அவசியமொன்றுள்ளது. நோய்க்கான காரணத்தை அறியாமல் வலியைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. இன்னுமொரு முக்கிய விடயம் இதனை தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தின் ஓர் அம்சமாக அதுவும் உரிமைப் போராட்டத்தின் இன்றைய கட்ட ஓர் அம்சமாகக் கொள்ள வேண்டும். இதனை விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக மாத்திரம் பார்ப்பது தவறான கண்ணோட்டமாகும். இப் பிரச்சினையை இரண்டு நிலைப்படப் பார்ப்பது அவசியம்.

முதலாவது, இப்பிரச்சினை இந்த வடிவத்தை பெற்றதற்கான உடனடி காரணம் அல்லது காரணங்கள் இரண்டு அதற்கு பின்புலமாகவுள்ள ஆழ்நிலை கருத்துநிலை அம்சங்கள்.

கனேடிய அமைச்சர் ஸ்ரொக்வெல் டே இந்தப் பிரகடனத்தை அறிவித்தபோது அதற்கான பின்புலத்தையும் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜோ பெக்கர் என்ற பெண்மணி கியூமன் றைய்ற்ஸ் வோட்ச் (மனித உரிமை கண்காணிப்பு) என்ற நிறுவனத்தின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் முதன்மைப்படுத்தியுள்ள அம்சங்களை இவரும் நினைவு கூருகின்றார். அவற்றுள்ளே பிரதானமானது விடுதலைப் புலிகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே வலுக் கட்டாயமாக பணம் சேகரிக்கிறார்கள் என்பதாகும்.

ஜோ பெக்கரினுடைய அந்த அறிக்கையின் அழுத்தம் முக்கியமானது. மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசும் நிறுவனங்கள் பெரும்பாலும் இலங்கையில் தமிழ்ப் பிரதேசத்து நிலைமைகள் பற்றியே பேச இந்த அறிக்கை புலம்பெயர் நிலையை கனடா பற்றிய சில உதாரணங்களுடன் பேசியுள்ளது. ஜோ பெக்கருடைய அறிக்கையை இலங்கை அரசாங்கம் எத்துணை சூட்சுமமாகப் பயன்படுத்தியது என்பது எமக்குத் தெரியும். எனவே, இது பற்றி முதலாவதாக எழும் சந்தேகம் ஜோ பெக்கருக்கு இத்தகையதொரு அறிக்கையை எழுதுவதற்கான பின்புலம் யாது என்பதாகும். இதுபற்றி பலரை கேட்டபோது ஜோ பெக்கர் அப் பிரதேசத்தில் முன்னர் மனிதவுரிமை சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார் என்றும் அந்தக் கூட்டத்தை சிலர் சென்று குழப்பியிருந்தனர் என்றும் கதையொன்று வருகின்றது. இக் கதையை விரிவாக ஆராய வேண்டும். கூட்டம் உண்மையில் குழப்பப்பெற்றதா? எவ்வாறு குழப்பப்பெற்றது? பெக்கரின் நிலைப்பாட்டுக்கு எதிரான விவாதங்களை வாத விவாதத்துக்கு உட்படுத்தாமலே குழப்பினார்களா? என்பன போன்ற வினாக்கள் முக்கியமாகின்றன. இவற்றைவிட ஜோ பெக்கருக்கும் மற்றைய இலங்கை சக்திகளுக்குமான உறவுகள் யாவை என்பதும் முக்கியம்.

விபரம் தெரிந்தவர்கள் இவற்றை வெளியே கூற வேண்டியது அவசியமாகிறது. அடுத்து இரண்டாவது விடயத்துக்கு வருவோம். அதில் மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன. முதலாவது, ஸ்ரீபன் ஹாப்பர் அரசாங்கத்துக்கு இந்த பிரச்சினை ஏன் முக்கியமானது? நவ பழைமை பேண் வாதிகள் என்ற வகையில் இப் பிரச்சினை ஸ்ரீபன் ஹாப்பர் அரசாங்கத்துக்கு இது எவ்வாறு முக்கியமாகின்றது? என்பது ஒரு அச்சாணியான வினாவாகும். புஷ் அரசாங்கத்துடன் தொடர்புகள் உண்டா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, கனடாவுக்குள்ளே இந்த `பயங்கரவாதத்தை' எந்த எந்த அம்சங்களில் காணுகிறார்கள் என்பதையும் நோக்கல் வேண்டும். இவ்வாறு சொன்னவுடனேயே விடுதலைப் புலிகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக தங்களை அங்கு காட்டிக் கொள்பவர்களின் நடைமுறைகள், தமிழ் மக்களுடனான உறவு, அரசாங்கத்துடனான உறவு ஆகியன எந்நிலைப்பட்டவை என்பது பற்றிய விருப்பு வெறுப்பற்ற கணிப்பீடு ஒன்று அவசியமாகிறது. அவர்கள் தங்களை அரசியற் பிரசாரகர்களாக கருதுகிறார்களா அல்லது தங்களை நிர்வாக முகாமையாளர்களாக கருதுகிறார்களா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில், கனேடிய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கனேடிய உளவு நிறுவனங்களும் வழங்கிய தகவல்களும் முக்கியமானது என்பது ஏப்ரல் 8 அறிக்கையில் நன்கு தெரிய வருகிறது. ஜோ பெக்கர் சுமத்திய குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வ கனேடிய உளவு நிறுவனமும் கூறியுள்ளதா என்பதை அறிதலும் முக்கியமான அம்சம்.

அடுத்தது இரண்டாவது கட்ட நிலைப்பட்ட இரண்டாவது வினாவாகும். இது ஒரு முக்கியமான விடயம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரசாரத்தையும் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் அங்கு உள்ளனரா அவர்கள் யாவர் என்பதாகும்.

ஒரு குறை கணிப்பின்படி ஏறத்தாழ மூன்றரை - நான்கு இலட்சம் இலங்கையர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. இதில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் தான் சிங்கள மக்கள் ஆவர். மூன்று/ மூன்றரை இலட்சம் பேர் தமிழர்கள். இவர்களில் கனேடிய பிரஜைகளாகவுள்ளவர்கள் குறைந்தது இரண்டு/ இரண்டரை இலட்சமாகவாவது இருத்தல் வேண்டும். இந்த இரண்டரை இலட்சம் வாக்கின் அரசியல் பலம் யாது. இந்த இரண்டரை லட்சம் பேர் அங்குள்ள அரசியற் கட்சிகளிலே இடம்பெறுகின்றனரா இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இந்த கட்டத்தில் அரை இலட்சம் சிங்கள மக்களையும் இரண்டரை இலட்சம் தமிழ் மக்களையும் அரசியற் பிரக்ஞை நிலையில் வைத்து ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒரு தேவையுமுள்ளது. அப்படி பார்க்கும் போது இந்த 2 1/2 இலட்சம் தமிழர் பற்றிய சில அசௌகரியமான உண்மைகள் வெளிவருகின்றன.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்து கலை, இலக்கிய, அரசியல் சூழல்களுக்குள்ளேயே அங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்தை கனடாவில் எவ்வாறு நாற்றுநட செய்ய வேண்டும் என்பதில் அமிழ்ந்து கிடக்கின்றனரே தவிர, கனேடிய தமிழர்களாக அந்த இரண்டு அடையாளங்களையும் இணைத்துப் பேணுவதில் எவ்வித அக்கறையும் காட்டாதிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இவை யாவற்றுக்கும் மேலாக இன்னுமொரு பயங்கரமான உண்மையுள்ளது. கனடாவில் வசிக்கின்ற குறிப்பாக, ரொறன்ரோவில் வசிக்கின்ற இளம் தலைமுறையிலான தமிழர்கள் (இளைஞர்கள்) மிகவும் மோசமான முறையில் சட்டவிரோத காடைத்தனங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. இப்படி செய்வோர் தொகை மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால், இவை நிச்சயமாக நடைபெறுகின்றன. அண்மையில் பல்கலைக்கழக மட்டத்திலேயே சில மாணவர்கள் தமது சகாக்கள் இருவரை மோட்டார் வண்டியால் மோதிக் கொன்றதாக சர்வதேச ஊடகங்களிலே பேசப்பெற்றன. சிங்கள ஊடகங்களிலேயும் அது பெரிதுபடுத்தப்பட்டது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவிழ் பதம் பார்த்த கதை தான். பெற்றோர்கள் நாவலர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல பிள்ளைகள் `சைக்கிள் பெல்ட்'க்களுடன் உலாவுவது சகஜமாகிவிட்டது. இந்த விடயத்தில் வியட்நாமிய அகதிகளும் இலங்கை தமிழ் அகதிகளும் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர் என்று உள்ளூர் கனேடிய பிரமுகர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயங்கள் 3 ஆவது நிலைப்பட்ட ஒரு வினாவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. இது மிக மிக முக்கியமானது. கனேடிய உயர் சமூக மட்டத்திலும் ஊடக நிலைகளிலும் இலங்கை தமிழர் நிலைப்பாடுகளை எடுத்துப் பேசுவதற்கான கருத்தாதரவு நாடும் கூடங்கள் (ஃணிஞஞதூ) உள்ளனவா? இப்படியான கருத்தாதரவு நாடும் குழுமங்கள் இருக்க வேண்டியவை அவசியமாயிற்றே. இந்த நிலையிலே தான் இரண்டு உண்மைகள் வெளிவருகின்றன. இலங்கை தமிழர்களின் நிலைமைகள், போராட்டங்கள், நிலைப்பாடுகள் பற்றி உயர் சமூக மட்டங்களிலே பேசக் கூடியவையான குழுமங்கள் அவசியம் இப்படியான குழுமங்களில் பிரபல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்ற தொழின்மை நிலையினர் இடம்பெறுவது வழக்கம். மற்றைய நாடுகளிலேயே இப்படியான தமிழ்க் குழுமங்கள் குறைவு. கனடாவில் இல்லையென்றே கூறலாம். இதற்கான காரணம் பற்றி அறிய முனைந்த போது மேலே சொன்ன உத்தியோகபூர்வ முகாமையாளர்களின் எஜமான் போக்குகள் காரணமாக ஆர்வமுள்ள தொழின்மையர் கூட தங்களை இனங்காட்டிக் கொள்வதில்லையென பேசப்படுகின்றது. சிங்கள கருத்தாதரவு நாடும் கூடங்களை பொறுத்த வரையில் நிலைமை முற்றுமுழுதாக வேறுபாடானது. ஒட்டாவாவில் இருக்கின்ற ஒரு `லொபி' கனேடிய அறிஞர்கள் தொழின்மையர் போன்றோருடன் அடிக்கடி கருத்தாடல் நடத்துவதாகவும் அந்த கருத்தாடல்களில் தமிழர் நிலைப்பாடுகளின் நியாயமின்மைகள் பற்றி பேசுவதாகவும் கூறப்படுகின்றது. இப்படியான ஒரு குழுமம் கனேடிய தமிழர்களை பொறுத்தவரையில் இயங்குவதில்லை என்றே கூறுகிறார்கள். இயங்குவதில்லை என்றால் அந்தளவில் விட்டுவிடலாம். அந்தளவில் இயங்குவதை செல்வாக்குள்ள சிலர் விரும்பவில்லையென்று கூறுகிறார்கள். இவற்றின் உண்மை பொய் பற்றி ஆராய்வது எமது கடமையாக இருக்க வேண்டிய அதேவேளையில் அங்கு பொறுப்பு நிலையிலுள்ளவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை காட்ட வேண்டியது அவசியம். இந்த விடயத்தில் ஓர் அடிப்படையான அரசியல் உண்மையை அழுத்தி கூறுவது அவசியமாகிறது.

விடுதலைப் புலிகளோடு இயக்க நிலையிலோ தனிப்பட்ட நிலையிலோ கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் உள்ளவர்களை தவிர, மற்றைய இலங்கை தமிழர்கள் எல்லோருமே இன்றைய நிலையில் இலங்கை தமிழர் போராட்டத்தினை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்ற கொள்கையினை உடையவர்களே. விடுதலைப் புலிகளோடு சில விடயங்களிலே கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் இலங்கையின் இன்றைய நிலையில் அந்த தலைமையின் அவசியத்தை மறுக்கும் சாதாரண, புலம்பெயர் நிலை தொழின்மையால் (Pரொfஎச்சிஒனல்ச்) இல்லையென்றே கூறலாம். இந்த நிலை மேலே கூறிய `லொபி' உருவாக்கத்துக்கு மிக முக்கியமானதாகும்.

இந்த வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் முக்கியமாகும். அதேவேளையில், அடுத்த வினா அச்சாணியானதாகும். கனடாவின் நவ, பழைமை பேண்வாத சிறுபான்மை அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கனேடிய பிரஜைகளான தமிழர்கள் எவ்வித பதிற்குறிகளை காட்டப் போகின்றனர் என்பது மிகமிக முக்கியமான வினாவாகும். பிரஜாவுரிமை இல்லாதவர்களின் நிலைமை வேறு. பிரஜாவுரிமை உள்ள தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள். இதற்கான அரசியல் ஒருங்கு சேர்ப்பு எவ்வாறு செய்யப்படப் போகின்றது யார் செய்யப் போகிறார்கள் இதுவும் பிரதானமான விடயங்களாகும். இறுதியாக, சர்வதேச நல்லெண்ண தேவை காரணமாக புதிய நடைமுறைகளை கையாள வேண்டிய இந்த வேளையில் இந்த அனுபவம் ஏற்பட்டிருப்பது ஒரு வகையில் நல்லதென்றே கூற வேண்டும். நெல் மணிகளை விட பதர்கள் இடம்பெறும் நிலையை ஊக்குவித்தல் கூடாது. இலங்கை தமிழர் பற்றிய கருத்தாதரவு நாடும் குழுமங்கள் சிறந்த முறையில் தொழிற்பட வேண்டிய காலமிது. நம்மை நோக்கி இன்று நோக்கியுள்ள அரசியற் சவால்களின் சிக்கல் நிறைந்த பன்முகப் பார்வையை கனடா அரசாங்கத்திலும் பார்க்க கனேடிய தமிழர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

பொன் சுத்தமாக வருவதற்கு புடமிடப்படுவது அவசியம். புடமிடுதல் என்பது நெருப்புக்குள் இருந்து வெளிவருவதாகும். நெருப்புக்கு பயந்து பொன்னை கரும் பொன்னாக வைத்திருப்பவர்கள் எவரும் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு

[16 - ஆப்ரில் - 2006] தினக்குரல்

விடுதலைப் புலிகளை கனடாவின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பது என்ற அந்த நாட்டின் புதிய அரசாங்கத்தின் முடிவினை கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வரவேற்கவில்லை.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் மக்கே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வைக் காண்பதற்காக அந்த நாடு உதவத் தயார் என்பதை வலியுறுத்தியுள்ளார். கனடா அரசாங்கம் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிப்பது தமிழ் சமூகத்தினர் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

மொன்ரியோலில் வாழும் முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரட்ணம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் உடன்படிக்கைகளையும் மேற்கொள்வது பயனற்றது என்கிறார். சமஷ்டி கட்சியின் உயிருடன் உள்ள ஒரேயொரு ஸ்தாபகரான 96 வயது நவரட்ணம், தமிழ் மக்களின் ஆரம்ப கால போராட்டங்கள் எவ்வாறு அகிம்சை வழியில் அமைந்திருந்தன என்பதை சுட்டிக்காட்டுகின்றார். அகிம்சை வழியில் நாம் போராடினோம். எமது போராட்டத்தை மேற்கொண்டோம். அது பலனளிக்கவில்லை என்கிறார் அவர்.

பண்டாரநாயக்கவிற்குப் பின்னர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒவ்வொரு வாக்குறுதியையும் கை விட்டுள்ளனர் எனும் அவர் முழுமையான பிரிவினையே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உண்மையான நிரந்தரமான தீர்வைக் கொண்டு வரும் என்கிறார். சமஷ்டி பலனளிக்காது என குறிப்பிடும் அவர் தமிழர்களின் தலைவிதியை சிங்கள அரசியல்வாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது எனவும் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் எமக்கு எதனையும் தரப்போவதில்லை. போராடுவதே வழி என்கிறார் கனடாவில் 25 வருட காலமாக வாழ்ந்து வரும் தமிழர் ஒருவர்.

கடல்கோளின் போது விடுதலைப் புலிகள் இருந்திருக்கா விட்டால் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உதவியிராது எனவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் நான்காக பிளவுபட்டுள்ளது. அவர்கள் ஏற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்கள் பௌத்த மதகுருமார்களை மாத்திரம் செவிமடுப்பார்கள் விடுதலைப் புலிகள் எப்போதும் உறுதியாகவுள்ளார்கள் என அவர் தெரிவித்தார். ஜெனீவா பேச்சுவார்த்தைகளிலும் அவர் நம்பிக்கை வெளியிடவில்லை. கனடாவின் பெரும்பாலான தமிழ் மக்களின் உணர்வு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே காணப்படுகின்றது.

Posted

கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள்.

அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள். சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள்.

ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.