Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தள செய்தியாளர்களின் விபரங்களை திரட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே நேரடியாக வழங்கியுள்ளார்.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார்.

சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார்.

அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா வாகிஸ்ராவிடமும் இணைய ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களைத் தயாரித்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இணையத் தளங்களுடன் தொடர்புடைய பெருமளவானோரின் விபரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றுவோரே இணையத் தளங்களுக்குத் தகவல்களை வழங்கி வருவதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த விபரங்கள் அனைத்தும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinapp...?20120609106362

Edited by சுபேஸ்

யாழ்களப் பொறுப்பாளர்கள் பற்றி ஒருத்தரும் விபரங்கள் திரட்டவில்லை தானே? திரட்டினால் சொல்லுங்கள் அப்பு

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களப் பொறுப்பாளர்கள் பற்றி ஒருத்தரும் விபரங்கள் திரட்டவில்லை தானே? திரட்டினால் சொல்லுங்கள் அப்பு

2 , 3 பேரை யாழ் விட்டு விரட்டும் முன் யோசித்திருக்கணும்.

அவர்கள் ஏதாவது செய்யத்தானே வேண்டும்?.

இங்கும் எழுதக்கூடாது

அவர்களுக்கும் எழதக்கூடாது என்பது பேராசை.. :lol::D :D

2 , 3 பேரை யாழ் விட்டு விரட்டும் முன் யோசித்திருக்கணும்.

அவர்கள் ஏதாவது செய்யத்தானே வேண்டும்?.

இங்கும் எழுதக்கூடாது

அவர்களுக்கும் எழதக்கூடாது என்பது பேராசை.. :lol::D :D

:D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களப் பொறுப்பாளர்கள் பற்றி ஒருத்தரும் விபரங்கள் திரட்டவில்லை தானே? திரட்டினால் சொல்லுங்கள் அப்பு

என்னிடம் இருக்குது எனச் சொன்னால் நம்பவா போறீங்கள் :lol::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.