Jump to content

அரிசி முறுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி முறுக்கு

cook%20man.jpg

தேவையான பொருட்கள்:


  • புழுங்கல் அரிசி- 200 கிராம்.


  • பச்சரிசி- 800 கிராம்.


  • உளுந்தம் பருப்பு-200 கிராம்.


  • எள்-20 கிராம்


  • சீரகம்-30 கிராம்.


  • நெய் அல்லது டால்டா- 250 கிராம்.


  • உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

1. புழுங்கல் அரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளவும்.

2. வறுத்த புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு என்று மூன்றையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

3. இந்த மாவுடன் நெய் அல்லது டால்டாவைச் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசையும் போது எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு பிசையவும்.

4. தேவையான உப்பையும் சேர்த்துக் கட்டியாக முறுக்குக் குழலில் வைத்துப் பிழியும் படியான பக்குவத்தில் பிசைந்து கொள்ளவும்.

5. முறுக்குக் குழலில் தேவையான அச்சுக்களைப் பயன்படுத்திப் பிழிந்து எடுத்து வாணலியில் காய வைத்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகச் சுடவும்.

cook%20by.jpg

இந்த சுவையான அரிசி முறுக்கு ஒரு மாதத்திற்குக் கூட வைத்துச் சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சற்று விளக்கமாக நான் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். சரி, இதுதான் நான் சொல்ல வந்தது. இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்று ஒருபோதுமே தமிழர்கள் எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை, அது அவர்களின் அரசியல் அபிலாஷையுமல்ல. இன்னும் ஒரு வழியில் கூறுவதானால், தமிழ் பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது.   தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது இத்தேர்தலில் வெல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் மனங்களிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கடிக்கப்பட்டுவரும் அவர்களது அபிலாஷைகளை, கோரிக்கைகளை இத்தேர்தலின் மூலம் உயிர்ப்பித்து, மீளவும் முன்னிற்குக் கொண்டுவருவது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீளவும் உணர்த்த இத்தேர்தலினைக் களமாகப் பாவிப்பதே உண்மையான நோக்கம். ஆகவேதான் தமிழ்ப் பொதுவேட்பாளர்  தேர்தலில் தோற்கப்போகிறார் என்று அஞ்சுவோர், ஏளனம் செய்வோர் அரசியல்த் தெளிவில்லாமல் இதனைச் செய்கிறார்கள் என்று எழுதினேன்.  உங்களைத் தனிப்பட்ட ரீதியில் இது தாக்கியிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 
    • பிரித்தானிய நேரப்படி இன்று ஞாயிறு (16 ஜூன்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   35)    முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா  எதிர் ஸ்கொட்லாந்து     AUS  எதிர்  SCOT 22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.   ஸ்கொட்லாந்து நுணாவிலான்   இப்போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இங்கிலாந்து அணியை சுப்பர் 8 சுற்றுக்குள் போகவிடாமல் தடுக்குமா?       36)    முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான்   எதிர்   அயர்லாந்து     PAK  எதிர்  IRL 22 பேர்  பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.   அயர்லாந்து  சுவி   இப்போட்டியில் பாகிஸ்தான் இரண்டு புள்ளிகள் தனது பெருமையை கொஞ்சம் காத்து 22 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா?
    • இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளை மூட்டையாக அள்ளிக்கொண்டுபோய் ரணிலின் காலடியிலோ, சரத் பொன்சேக்காவின் காலடியிலோ, சஜித்தின் காலடியிலோ, சந்திரிக்காவின் காலடியிலோ கொட்டி இதுவரையில் தமிழரசுக் கட்சியோ, தமிழ்க் கூட்டமைப்போ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கண்ட பலன் என்ன, தமிழர்களுக்கு இவற்றால் ஆன பயன் என்ன? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டுபோய் அரசியல் வியாபாரம் செய்வதாக உத்தேசம்?  தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும் என்பதற்கான எனது நிலைப்பாடு இதுதான். 1. சிங்கள பெளத்த ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் முர்ராக நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு. 2. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்திலிருந்து தமிழினம் பட்டுவரும் அவலங்களும், அவர்கள் மீதான அடக்குமுறைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதைச் சொல்வதற்கு (தேர்தல்ப் பிரச்சாரங்களில் இவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும், தேர்தலுக்கான சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இச்செய்தியும் சொல்லப்படுவது அவசியம்). 3. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை மீளவும் சிங்கள தேசத்திற்கும், சிங்கள அரசியல்த் தலைமைக்கும் நினைவுபடுத்துவதற்கு    ( யுத்தம் முடிவடைந்துவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டன என்று சர்வதேசத்தில் செய்யப்பட்டு வரும் சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டியது அவசியம்). 4. 2009 இற்குப் பின்னர் தமிழ் அரசியலில் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்டுவரும் தேசிய நீக்கம் என்பதனை முறியடித்து, தமிழ் மக்கள் இன்னமும் தேசியத்தின்பால் நிற்கிறார்கள் என்பதனை சிங்களத் தலைமைகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு (தேசிய நீக்கம் என்பதும் புலிநீக்கம் என்பதும் சுமந்திரன் தலைமையில் மிகவும் இலாவகமாக தற்போது செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இவரது உள்ளடக்கமே இதனைச் செய்யத்தான் என்பது எனது கணிப்பு). 5. இன்று தமிழர்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் நலன்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், தமிழரின் வாக்குகள் அவர்களைப்பொறுத்தவரை தமது சொந்த நலன்களை, பாராளுமன்றச் சலுகைகளை அடைந்துகொள்வதற்காக மட்டும்தான், ஆகவே அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லை, அவர்கள் கைகாட்டும் சிங்கள ஜனாதிபதியொருவருக்கு நாம் வாக்களிக்கப்போவதில்லை என்பதைக் காட்டுவதற்கு. 6. இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போகும் சிங்களவர் ஒருவரைத் தெரிவுசெய்வதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தமிழர்கள் சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் உரத்துச் சொல்வதற்கு.  1977 ஆம் ஆண்டுத் தேர்தலினை தமிழரசுக் கட்சி எவ்வாறு தனிநாட்டிற்கான தமிழ் மக்களின் ஆணையாகப் பாவித்து அமோக வெற்றியிட்டீயதோ, அதுபோன்றே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதித் தேர்தலை அதே தமிழ் மக்களின் ஆணையினைப் புதிப்பிக்க, தமிழ் மக்கள் இன்னும் அதே அபிலாஷைகளுடன் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க, சிங்கள தேசத்தின் ஜனாதிபதிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்களுக்கு கூஜா தூக்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைக் காட்டப் பாவிக்க வேண்டும். இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சுமந்திரன் வகையறாக்களின் கூச்சல்கள் அப்படியே குப்பையில் தூரக் கொட்டிவிட்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரின் அவசியம் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தத் தொடர்ந்து செயற்படுவதுதான். 
    • 33வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த கனடிய அணிக்கும் இந்திய அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு:  முடிவில்லை! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!    ------ 34வது போட்டி மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வேகமாக அடித்தாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களையே பெறமுடிந்தது. முடிவு:  இங்கிலாந்து அணி DLS முறையில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.   34வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 54 2 ரசோதரன் 54 3 கோஷான் சே 54 4 ஈழப்பிரியன் 52 5 சுவி 52 6 நந்தன் 52 7 தமிழ் சிறி 48 8 ஏராளன் 48 9 கிருபன் 48 10 கந்தப்பு 48 11 வாத்தியார் 48 12 எப்போதும் தமிழன் 48 13 நீர்வேலியான் 48 14 வீரப் பையன்26 46 15 நிலாமதி 46 16 குமாரசாமி 46 17 தியா 46 18 வாதவூரான் 46 19 அஹஸ்தியன் 46 20 கல்யாணி 46 21 புலவர் 44 22 P.S.பிரபா 44 23 நுணாவிலான் 44
    • வணக்கம்! இங்கே நாம் எல்லோரும் கருத்துதான் எழுதுகின்றோம். இன்ன படிப்பு படித்து அதற்குரிய அறிவை இங்கு பகிர்கின்றோம் எனவும் எழுதவில்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை இங்கே எழுதுகின்றார்கள். அல்லது தங்கள் அறிவிற்கேற்ப எழுதுகின்றார்கள். அவ்வளவுதான். அடுத்தவருக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தீர்மானிக்க உங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என நினைக்கின்றேன். இது நான் விட்ட பிழைகளின் அனுபவம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.