Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் இனக்கலவரம்: தமிழர்களின் கடைகள் தீவைத்து எரிப்பு!

Featured Replies

திருமலையில் சிங்களப் பேரினவாதிகள் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். நண்பகல் திருகோணமலை சந்தைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டிருக்கின்றது. இதில் அகப்பட்டு ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கடைகள் படையினரின் உதவியுடன் சிங்களக் காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன.

தொடர்ந்து பிற்பகல் 3:45 மணிக்கு மேலும் ஒரு கைக்குண்டு நகர்ப்பகுதியில் வீசப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சிறிலங்கா படையினர்ää பொலிசார் நிற்கும் நகர்ப்பகுதியில் தமிழர்களின் கடைகள் தீ வைக்கப்படுகின்றன@ தீ வைக்கப்பட்டவை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி நகர்ப்பகுதியை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை சற்றுமுன்னதாக சிறிலங்கா இராணுவ ட்ரக் வண்டி ஒன்றும் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றது.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

  • Replies 63
  • Views 7k
  • Created
  • Last Reply

அட கடவுளே பாவம் மக்கள்தான் :cry: :cry: :twisted: :twisted:

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு வெற்றி பெற்றதை ,சிங்களவரால் ஜீரணிக்கமுடியவில்லை

Pandemoniam in Trinco, five killed in fire, looting widespread

[TamilNet, April 12, 2006 10:41 GMT]

Five persons including the owner of the well known grocery store, R.R.Group were killed and ten others injured when the business located in Central Road, Trincomalee town came under grenade attack 4.15 p.m. and completely destroyed by fire, sources in Trincomalee town said. Many other business establishments are also reported to be burning. Widespread looting is reported across the town as the residents are dispersing in panic around Trinco town. Sri Lanka Army (SLA) and Sri Lanka Navy (SLN) soldiers are said to be involved in creating the mayhem, according to news reaching TamilNet.

Sri Lanka Monitoring Mission (SLMM) officials have allegedly told reporters that the situation is uncontrollable and that they are remining indoors.

No other details are available at the moment.

இனக்கலவரம்

திருமலையில் இருதரப்புக்கு இடையே துப்பாக்கிச் சண்டை

[புதன்கிழமை, 12 ஏப்ரல் 2006, 16:31 ஈழம்] [ம.சேரமான்]

திருகோணமலையில் இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பிரதி காவல்துறை மா அதிபர் றொகான் அபேயவர்த்தன கூறுகையில்,

காய்கறி சந்தையில் கைக்குண்டுத் வீசப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

இருப்பினும் காயமடைந்தோர் உள்ளிட்ட இதர விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

அப்பகுதியில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிச் சூடும் நடந்ததைக் கேட்டதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.

சிங்களகாடையரின் வெறியாட்டம்

சிங்களவன் தன் சுயரூபத்த காட்ட முற்படுகிறான்.... பாதிப்புக்குள்ள இருக்கும் மக்களை தங்களை பதுகாக்க புலிகள் பிரதேசத்துக்கு போய் விடுவது நல்லது....!

ஒட்டுக்குழுக்களுக்கு இப்போ மக்கிழ்ச்சியாக இருக்கும்...!

பொறுத்தது காணும் இனிப் பொங்கி எழ வேண்டியது தான்...

  • தொடங்கியவர்

இறந்தவர் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகின்றதே. இப்போது 9 பேர் என தமிழ்நெற் சொல்கின்றது

9 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயம் 6 தமிழர்களின் கடைகள் எரிகின்றன. :evil: :evil: :evil: :evil: :evil:

www.tamilnet.com

இறந்தவர் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகின்றதே. இப்போது 9 பேர் என தமிழ்நெற் சொல்கின்றது

அப்படி தான் சங்கதியும் செய்தியும் சொல்லுது

சொல்லி சொல்லி அடிக்கிறார்கள் என்று சொன்னார்கள் உண்மையா?

சங்கதிச் செய்தி:

லிங்கநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தீ மூட்டி எரிக்கப் பட்டுள்ளது. அந்த நிலையத்திற்கு முன்னால் நின்ற தமிழர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரச் சந்திப்பகுதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரு தமிழர்கள் வெட்டப்பட்டதுடன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 4.15 மணியளவில் மத்தியவீதிப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஐவர் கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலும் 10பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அக்கடை எரிந்து அழிந்துள்ளது. அதேபோன்று நடைபெற்ற வன்முறைகளில் மேலும் நால்வர் கொல்லப்பட்டும் முப்பது வரையானோர் படுகாயமடைந்துள்ளனர்.

10 பேர் பலி 50ற்கு மேற்பட்டோர் காயம். கடைகள் எரிகின்றனவாம் மேலும் ஒரு ஊடகம் தெரிவிப்பு.

www.nitharsanam.com

நாளை கண்காணிப்பு குழுவோடு சந்தித்த பின்னர் முக்கிய பத்திரிகை மகாநாடு என்று வேறை இருக்கு.

அதுக்குள்ளை ஆப்பிளுத்துப் போட்டாங்கள் போலை கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை நகர் பகுதியில் தமிழ் மக்களிற்கு எதிராக பாரிய வன்செயல்கள் சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வன்செயல்களினால் 11 பேர் கொல்லப்பட்டும், மேலும் 45ற்கும் அதிகமானோர்; படுகாயமடைந்துள்ளனர். தமிழருக்குச் சொந்தமான பெருமளவான கடைகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்தோரில் 15 வரையானோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரியவருகிறது.

தற்போது அங்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியவீதியில் சிறீலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் உயிரிழந்ததையடுத்து தமிழருக்கு எதிராக பாரியளவில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமலை மத்தியவீதி, லிங்க நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெருமெடுப்பில் தமிழர்களிற்கு எதிரான வன்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூப்பதிற்கும் அதிகமான கடைகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.

லிங்கநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தீ மூட்டி எரிக்கப் பட்டுள்ளது. அந்த நிலையத்திற்கு முன்னால் நின்ற தமிழர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரச் சந்திப்பகுதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரு தமிழர்கள் வெட்டப்பட்டதுடன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 4.15 மணியளவில் மத்தியவீதிப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 10பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அக்கடை எரிந்து அழிந்துள்ளது. அதேபோன்று நடைபெற்ற வன்முறைகளில் மேலும் நால்வர் கொல்லப்பட்டும் முப்பது வரையானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேபோன்று நகரில் உள்ள தமிழர்களிற்குச் சொந்தமான பெருமளவான கடைகள் சிங்களக் கடையர்களால் தீமூட்டி எரிக்கப்படுவதுடன், பாரியளவில் கொள்ளையும் இடம்பெறுகிறது. நகரில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி பல்வேறு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த வன்முறைகளில் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தகவல்கள் தருகையில் நிலமை தற்போது கட்டுப்பாட்டை மீறியுள்ளது. தாங்கள் தொடர்ந்து கதவுகளிற்குள்ளேயே இரு ப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேவேளை வன்னியி;ல் விடுதலைப் புலிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் திருகோணமலைச் சென்று நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்: சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலைச் சிங்களவர் பொதுவாக ஜேவிபி ஆதரவாளராகத் தான் இருக்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் ஜேவிபிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றுக் கூட ரவிராஜ் எம்பியை கொல்வதற்கு முயற்சித்திருந்தனர். எனவே பின்ணனியில் ஒரு சக்தி இருந்து செயற்படுவது புலனாகின்றது. தமிழ்மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்

S.Lanka monitors say northeast town out of control

12 Apr 2006 11:32:48 GMT

Source: Reuters

COLOMBO, April 12 (Reuters) - The situation in Sri Lanka's multi-ethnic northeastern port town of Trincomalee was getting out of control on Wednesday after riots and deaths following an explosion, ceasefire monitors said.

"There seems to be widespread rioting in Trincomalee," Sri Lanka Monitoring Mission (SLMM) spokeswoman Helen Olafsdottir said. "Reports are that there has been some shooting and the situation is getting out of control. The truce monitors are unable to go to the scene ... and we need the police and army to restore order."

The SLMM is an unarmed Nordic staffed mission tasked with monitoring a strained truce between the government and the Liberation Tigers of Tamil Eelam rebels.

Trincomalee is one of the few towns in Sri Lanka where large numbers of both the island's majority Sinhalese and minority Tamil and Muslim communities live.

http://www.alertnet.org/thenews/newsdesk/SP328394.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனைய பகுதிகளுக்கும் திருமலைக்கும் வித்தியாசமிருக்கிறது. ஏனைய இடங்களில் நாங்கள் ஏதாவது விட்டுக்கொடுத்துப்போகலாம். ஆனால் திருமலையில் அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால் ஒப்பீட்டளவில் நாங்கள் பலமில்லாமலிருக்கிறோம் அல்லது அப்படியான தோற்றம் இருக்கிறது.

எனவே இந்தமுறை இப்படுகொலைகளுக்குச் சரியானதொரு முடிவு எடுக்காமல் இருக்கக்கூடாது. நாளை பத்திரிகையாளர் மாநாட்டில் என்ன சொல்லப்போகிறார்களோ தெரியாது. ஆனால் அது பேச்சுவார்த்தை தொடர்பான விசயங்களே முதன்மைபெறுமென்று நினைக்கிறேன்.

இந்த திருமலை விசயத்தைத் தனியாக எடுத்துச் செல்ல வேண்டும்.

Blasts rock Sri Lanka port town

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4901952.stm

Eyewitness: 'Body parts everywhere'

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4903274.stm

Fourth bomb blast in Sri Lanka this week kills nine

http://www.radioaustralia.net.au/news/stor...1615245.htm?Sri

Explosion in Sri Lankan port leads to 11 deaths

http://www.eecho.ie/news/bstory.asp?j=1791...684&n=179192738

புதன் 12-04-2006 17:56 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்]

திருமலையில் காடையரின் வெறியாட்டத்தில் 12 பேர் பலி மேலும் 50 பேர் படுகாயம்.

திருமலையில் சிறீலங்கா புலனாய்வுத்துறையினரும் சிங்கள கடற்படையினர் மற்றும் சிங்கள காடையரும் இணைந்து நடத்தப்பட்ட கடைத்தனமான வெறியாட்டத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

திருமலை நகர மத்திய வீதியில் இன்று புதன்கிழமை 4 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் சிறீலங்கா படைவீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இப்படைவீரர் கொல்லபட்டதற்கு பழிவாங்கும் முகமாக இன்று மாலை 4.15 மணிக்கு மத்திய வீதியில் உள்ள தமிழ் வர்த்தக நிலையம் ஒன்றினுள் நுழைந்த சிறீலங்கா படைப் புலனாய்வுத் துறையினரும் கடற்படையினரும் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்தனர்.

இதன் போது வணிக நிலையத்தினுள் பணியாற்றிய நால்வர் அந்த இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து சிறீலங்கா புலனாய்வாளர்களும் கடற்படையினரும் பாதுகாப்பு வழங்கின சிங்கள காடையர்கள் திருமலை நகரத்தை சுற்றிவளைத்து தமிழர்கள் மீது தாக்குதலை தொடுத்ததோடு பல வர்த்தக நிலையங்களையும் எரியூட்டியுள்ளனர்.

துப்பாக்கிகள், கைக்குண்டுகள், கத்திகள், தடிகள், பொல்லுகள், சைக்கிள் செயின்கள், கொட்டன்கள் தமிழ் மக்களை தாக்கி வருகின்றனர். பல வர்த்தக நிலையங்கள், வீடுகளை எரியூட்டியதோடு கொள்ளையடித்தும் வருகின்றனர்.

இந்த வன்முறையில் 12 பேர் கொல்லபட்டதோடு 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருமலை நகரில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கான 20 வணிக நிலையங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

நிலமை மோசமாகி கட்டுக்கடங்காமல் போயுள்ள இந்த நிலையில் கண்காணிப்பாளர்கள் அப்பகுதிக்குச் செல்லவில்லை என போர் நிறுத்த கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வீதியிலும் வணிக நிலையங்கள் முன்பாக நின்ற பல தமிழ் மக்கள் சிங்கள காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

லிங்கநகர்ப் பகுதியில் ஐ.ஓ.சி என்ற அழைக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் எரிக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிலையத்தின் முன்பாக பல தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் அனுராதபுரச் சந்தியில் உந்துறுளியில் சென்ற இரு தமிழர்கள் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய வன்முறைகள் குறித்து சிங்கள ஊடகங்கள் மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். திருமலையில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதல் ஏற்பட்டதாகவும் இதனை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தாகவும் தெரிவிக்கின்ற போதும் சிறீலங்கா அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இதனையே தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது திருமலை நகர் முழுவதுமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றையதினம் திருமலை நகருக்குச் சென்ற பல தமிழர்கள் இன்றும் வீடு திரும்பவில்லை. வீதிகளில் மிதிவண்டிகளும் உந்துறுளிகளும் சிங்கள காடையர்களால் சேதமாக்கப்பட்டு காணப்படுகின்றன. குறிப்பாக மத்தியவீதி, அபயபுரச் சந்தி, 3ம்கட்டைச் சந்தி, அன்புவழி புரச்சந்தி ஆகிய பகுதிகளில் பல மிதிவண்டிகள், உந்துறுளிகள் எரியூட்டப்பட்டு காணப்படுகின்றன.

தொடரும் சிங்கள காடையர்களின் வன்முறைகளால் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். நகரில் தொடர்ந்து வெடிச்சந்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதகா எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

இறுதி இணைப்பு

திருமலை மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் மத்திய வீதியில் தேங்காய் வியாபார நிலையத்திருந்து இன்று பிற்பகல் 3.50 மணியளவில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் ஓடினர்.

ஆர்.ஆர் என்று சொல்லப்படுகின்ற தனியார் வர்த்தக நிலையம் ஒன்றினுள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். கடையில் பணிபுரிந்தவர்கள் கடையின் பின்புற வழியாகத் தப்பிச் சென்று உயிர் பிழைத்தனர்.

கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் திருமலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 40 பேர் வந்து சிகிற்சை பெற்றுள்ள மருத்துவமனை வட்டராங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலை அடுத்து அருகில் உள்ள கொரியாவத்தை என்ற இடத்திலிருந்த வந்த சிங்கள காடையர்கள் வாள்கள்,கத்திகள், கம்புகள் சகிதம் வந்தவர்கள் மக்கள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கினர். தாக்குதல் திருமலையில் பல இடங்களில் பரவலாக நடத்தப்பட்டன.

அத்தோடு தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்களை எரியூட்டினர். இவ்வாறக மத்தியவீதி, ஏகாம்பரவீதி, பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன.

சம்வத்தை அடுத்து திருமலை வீதிகளில் பலரும் இரத்தம் சிந்த காங்களுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.

சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டம் ஒரே புகைமண்டலமாகக் காட்சியளிக்கின்றது.

இன்றைய வன்முறையில் 6 பேர் குண்டுத் தாக்குதலி இறந்ததாகவும், ஏனையவர்கள் வன்முறைகளில் கொல்லபட்டுள்ளனர். இதில் 6 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுமார் 25 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு மகிழுந்து, நான்கு உந்துறுளிகள், ஒரு பாரவூர்த்தி என்பன எரியூட்டப்பட்டுள்ளன. திருமலையில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்த நிலையங்களை எரியூட்டியுள்ளனர். குறிப்பாக திருமலை நகர், அபயபுரச் சந்தி, அன்புவழிபுரச் சந்தி, பட்டிக்கழி, லிங்கநகர்ச் சந்தி, அனுராதபுரச் சந்தி ஆகிய சந்திகளில் தீவைப்பு இடம்பெற்றுள்ளது.

திருமலையில் இராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

IOC எரிபொருள்நிலையத்தை எரிச்சிட்டாங்களா? அருமை அருமை.

திருகோணமலையில் குண்டு வெடிப்பு, 14 பேர் பலி

திருகோணமலை நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் 14 பேர் இறந்து போயுள்ளதாகவும், 45க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறந்துபோனவர்களில் 10 பேர் பொதுமக்கள, இருவர் இராணுவத்தினர் என்று திருகோணமலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் இன்று மரக்கறி சந்தையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததாகவும் அதைத் தொடர்ந்து வன்செயல்கள் நடைபெற்றதாகவும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார். நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும

77ம் ஆண்டுத் தமிழன் இல்லை பயந்து கிடக்கிறதுக்கு

சிங்களவன் ஒரு தலையை வெட்டினால் தமிழன் ஒன்பது

தலையை வெட்டக்கூடிய பலத்தோடதான் இருக்கிறான்.

வேலுப்பிள்ளையற்றை பெடியனுக்கு இப்ப ரெண்டு கண்ணும்

சிவந்திருக்கும் கண்டியளோ. திருகோணமலையிலை ஒரு

சிங்களத் தம்பியும் நிக்காமல் ஓடப்போறாங்கள் பாருங்கோ...

IOC எரிபொருள்நிலையத்தை எரிச்சிட்டாங்களா? அருமை அருமை.
lOc இந்தியாவுடன் தொடர்புடைய நிறுவனமா ?.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.