Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில அபகரிப்புகளுக்கு எதிராக மக்களின் குரல்களை ஒடுக்க ஈ.பி.டி.பி ஒட்டுக் குழு நடவடிக்கை.

Featured Replies

தமிழர் தாயகத்திலுள்ள ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி சிங்கள இனவெறியர்களின் காணிச் சுவீகரிப்புகளுக்கு உடந்தையாகச் செயற்படுகிறது என்று கிளிநொச்சி மக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சியிலுள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளை சிறிலங்காப் படையினர் சுவீகரித்து வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்களின் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. நில அபகரிப்புக்களை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றும் பேசா மடந்தையர்களாக பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்த சிங்கள அரசுக்கும் இராணுவத்திற்கும் தமிழ் மக்களின் எதிர்ப்புச் செயற்பாடுகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன.

நில அபகரிப்புகளுக்கு எதிராக மக்களின் குரல்கள் உரக்க ஒலிப்பதால் இவ் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களைச் சமாளித்து பேசாமல் இருக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச உயர் மட்டம் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவைப் பணித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

நேற்றுச் சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஒட்டுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் செயற்பட்ட விதம் இதனைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. கிளிநொச்சியிலுள்ள தனியார் காணிகள் எச்சந்தர்ப்பத்திலும் எத்தேவைக்காகவும் சட்டரீதியாக எவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று சந்திரகுமார் இங்கு கூறியிருந்தார்.

மேலும், மக்களுடைய காணிகள் எப்பொழுதும் அந்த மக்களுக்குதான் அவை எச்சந்தர்ப்பத்திலும் சுவீகரிக்கவோ அல்லது வேறு தேவைகளுக்காக வழங்கப்படவோ மாட்டாது பாதுகாப்பு அமைச்சும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.

இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகள் படிப்படியாக அவர்களிடமிருந்து பெறப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்படும் பல தனியார் காணிகள் அவ்வாறு பெறப்பட்டு மீண்டும் அந்த மக்களுக்கே கையளிக்கப்பட்டுள்ளது.

அதில் சில காலதாமதங்கள் இருப்பினும் அந்தந்த காணிகள் அந்த மக்களுக்கே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கிளிநொச்சியில் எதிர்காலத்தில் காணிகள் விநியோகிக்கப்படும் போது இந்த மாவட்டத்தினதும் மக்களினதும் நலன் கருதி நன்கு திட்டமிடப்பட்டே வழங்கப்படும்.

மேலும், குளங்கள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் அரச திணைக்களங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் நீண்ட காலமாக குடியிருப்போர் தொடர்பில் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படாத வகையிலும் சட்டத்தை மீறாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒட்டுக்குழு உறுப்பினர் சந்திரகுமார் கூறிய போது அது தங்களுக்கு நகைப்புக்கிடமாக இருந்ததாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் பலர் தெரிவித்தனர்.

‘ஆமிக்காரன் எங்கட காணியெல்லாத்தையும் பிடிக்கிறான். ஆதில காம்புகளும் அடிக்கிறான். இப்பிடியிருக்க இந்த விசரன் என்னென்டா ஆமி திரும்ப நிலத்தை தருவனாம் எண்டுறான். இப்பிடி கதைக்க இவனுக்கு வெக்கமா இல்லையா’ என்று மேற்படி கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் கூறியதாக அங்கிருந்த எமது சங்கதி24ன் செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்திலுள்ள பல ஏக்கர் கணக்கான நிலங்கள் தினமும் சிங்கள பேரினவாதத்தால் சுவீகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு எதிராக ஈ.பி.டி.பி இதுவரை எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் இந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை கிளர்ந்தௌ முடியாமல் அடக்கி வைத்திருக்கும் செயற்பாட்டில் இந்த ஒட்டுக்குழு ஈடுபட்டுள்ளமை குறித்தும் தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/

[size=4]

‘ஆமிக்காரன் எங்கட காணியெல்லாத்தையும் பிடிக்கிறான். ஆதில காம்புகளும் அடிக்கிறான். இப்பிடியிருக்க இந்த விசரன் என்னென்டா ஆமி திரும்ப நிலத்தை தருவனாம் எண்டுறான். இப்பிடி கதைக்க இவனுக்கு வெக்கமா இல்லையா’ என்று மேற்படி கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் கூறியதாக அங்கிருந்த எமது சங்கதி24ன் செய்தியாளர் தெரிவித்தார்.
[/size]

[size=4]மக்கள் இந்த ஜனநாயக வேடம் பூண்ட பயங்கரவாதிகளை அடித்துக்கலைக்க வேண்டும். [/size]

... ...

சற்று முன்னர் யாழ் நிலவரம் களத்தில் இருந்து...

வடக்கில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்புக்களை கண்டித்து யாழ்.பேரூந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகள் சமூக அமைப்புக்கள் நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக, யாழ். நீதிமன்றில் யாழ். காவல்த்துறையினர் சமர்பித்த அறிக்கையின் பிரகாரம் (இவர்களது போராட்டமானது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என காவல்த்துறையினர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினையடுத்தே நீதிமன்றம் இந்த தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.) யாழ். மாவட்ட நீதிபதி மா.கணேசராசா ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் நீதிபதி மா.கணேசராசா அவர்கள் பின்வருமாறு உத்தரவிட்டு உள்ளார்...

தங்களின் 18-06-2012 விண்ணப்பத்தின் பிரகாரம் யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக திரு.கஜேந்திரன் பொதுச் செயலாளர் தமிழத் தேசிய மக்கள் முன்னணி என்பரால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துக. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருப்போரை கலைந்து செல்ல கூறுமாறு தங்களை பணிக்கிறேன். நீதிமன்ற கட்டளையை மீறி நடந்தால் மன்று தங்கள்மீது சட்ட நடிவடிக்கை எடுக்கும் என இத்தால் கட்டளையிடுகிறேன் என காவல்த்துறையினருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் விடுத்த கட்டளை அடங்கிய பத்திரத்தை ரெலோ இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் கிழித்தெறிந்துள்ளார். ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் கூடி நிற்கின்றனர். யாழ்.பேரூந்து நிலையத்தில் தற்போது கலகம் அடக்கும் காவலத்துரையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளனர்

... சிங்களம் மீண்டும் இரத்த வெறி பிடித்து இப்போராட்டத்தை அடக்க முயலலாம், அங்குள்ள மக்கள்தான் பாவம்! ... அங்கு செய்யட்டும் என எதிர்பாராமல், புலத்தில் கோயில்/சர்ச்சுகள்/மசூதிகளில் தலையில் அடித்து ஆண்டவரே நம்மை காப்பாற்று என அழுவதை நிறுத்தி, உந்த நாடு கடந்தவைகள் வீதிக்கு வந்து ஆர்ப்பாடம் செய்து உலகறிய செய்யட்டும், !

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

வடகிழக்கில் இடம்பெற்றுவரும், நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து இன்று யாழ்.நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்.நீதிமன்றிடமிருந்து பொலிஸார் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது.

இன்று பிற்பகல் 1.00 மணியளில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்தது. இதனையடுத்து அதிகாலை முதலே நகரில் பெருமளவு பொலிஸாரும், பெருமளவு இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நண்பகல் 12.00 மணியளவில் குறித்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தையும், அசம்பாவிதத்தையும் ஏற்படுத்த சில தரப்புகள் முனைந்து வருவதாக தெரிவித்த யாழ்.பொலிஸார் அதனாலேயே ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டு வெளியிடங்களிலிருந்து வந்த மக்கள் மீளவும் அவர்களது இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் விசேட பத்திரிகையாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது, இதில் ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், போன்ற கட்சியினர் கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், படைப்புலனாய்வாளர்களுக்கும் எதிராக முழங்கினர்.

தொடர்ந்து நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவுக்கு எதிராக நாமும் நீதிமன்றம் சென்று எமது நிலைப்பாடுகளைக் குறிப்பிட்டு போராட்டத்தை நடத்துவதென அனைத்துத் தரப்பினரும் தீர்மானித்ததுடன், ஆக்கிரமிப்பு, குடியேற்றங்கள் உள்ளிட்ட தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் வரையில் தொடர்ந்தும் போராடுவோம் எனவும்,

இதுவே நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் கடைசிச் சந்தர்ப்பமாக இருக்கும் எனவும் தெரிவித்ததுடன், அடுத்த கட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி மக்களுக்காக போராடி சிறைகளுக்குச் செல்வோம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை இந்த இடத்தில் சகல கட்சியினரும் கட்சி வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக ஒற்றுமையுடன் கலந்து கொண்டிருந்தனர்.

jaffna_tnpf04.jpgjaffna_tnpf03.jpgjaffna_tnpf02.jpgjaffna_tnpf01.jpg

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/

  • தொடங்கியவர்

இலங்கையில் மாவீரர் துயிலகங்கள், தமிழர் வழிபாட்டுத் தலங்கள் ஆகியன படையினரால் அழிக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வை.கோபாசுவாமி தெரிவித்துள்ளார்.

அரியலூரில் நடைபெற்ற ம.தி.மு.க 19-ம் ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார்.

அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் குறித்த இறுதி நிலவரம் தெரிந்த பிறகு யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். ஜனாதிபதி தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு வாக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மாவீரர் துயிலகங்கள், தமிழர் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டு அங்கு சிங்களர்கள் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சிங்கள அரசின் இனப்படுகொலைகள் பற்றி தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் அந்த நாட்டு தலைவர் மஹிந்த ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது என்றும் வைகோ குறிப்பிட்டார்.

சுதந்திர தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பில் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. இதை மூடி மறைக்கவே தி.மு.க. இப்போது டெசோ மாநாட்டை நடத்துகிறது..

http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.