Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோசிக்கச் செய்து கடந்துபோன மறந்தவை ஞாபகம் வந்தால் பதியுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

<p>

எனது ஊரவர் ஒருவர் சொன்ன பிறிதொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. எங்களுரில் இருந்து சில மைல் தொலைவில் இன்னுமொரு சிற்றூரில் உள்ள ஒரு பிரசித்தமான கோவிலில் ஒரு சமயம் ஒரு தகராறு ஏற்பட்டதாம். இயக்கம் தலையிட்டுத் தகராறு தீரும்வரை கோவிலைப் பூட்டிவைத்ததாம். பூட்டப்பட்ட காலத்தில் திருவிழாக்காலம் வந்தும் திருவிழா நடைபெறாது இருந்ததாம். அப்போது ஒரு நாள், சில இயக்க உறுப்பினர்கள் இரவில் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு ஆச்சி தெருவோரமாய் நின்று என்னை உதில ஏத்திக்கொண்டுபோய் இறக்கிவிடுங்கோடா மோனை என்றாவாம். இயக்கத்தவர்களின் இரு சைக்கிள்களில் ஒன்றில் இடமிருக்க, அந்த உறுப்பினர் ஆச்சியை பாறில் ஏத்தி சிறிதுநேரம் பயணித்தார்களாம். ஆச்சியும் என்னடா மோனை கோயிலைப் பூட்டித் திருவிழா நடக்காமல் செய்துபோட்டியள் என்றாவாம். இயக்கப் பெடியளும் ஏதோ சொல்லிக் கதைச்சுக்கொண்டுபோகும் போது திடீரென பாறில் இருந்த ஆச்சியைக் காணேல்லையாம்...

இன்னுமோருவன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு....எதிர்பார்க்கவில்லை...எனது மறக்கமுடியாத சம்பவத்தில் இதுவும் ஒன்றாக இனிமேல் இருக்கும்... :D

Edited by putthan

  • தொடங்கியவர்

<p>

இன்னுமோருவன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு....எதிர்பார்க்கவில்லை...எனது மறக்கமுடியாத சம்பவத்தில் இதுவும் ஒன்றாக இனிமேல் இருக்கும்... :D

புத்தன் இரு விடயங்கள் சொல்லத்தோன்றுகின்றன:

1. ஒருவரிடம் இருந்து என்ன எழுத்தை எதிர்பார்க்கலாம் என்று அவர்சார்ந்து நாமாக முடிந்தமுடிபான ஒரு முடிவிற்கு வருவதும் பின்னர் நாமெடுத்த முடிவிற்குக் கட்டுப்பட்டதான பேச்சு மட்டும் தான் அவரிடம் இருந்து வரும் என்று எதிர்பார்ப்பதும் நாளாந்த நடைமுறையில் காணக்கூடிய ஒன்று தான் என்றபோதும் புத்திசாலித்தனமானது அல்ல. ஏனெனினில் எம்மைநாம் முற்றாகப் புரிந்துகொள்வதற்கே ஏகப்பட்ட முயற்சியும் திறந்தமனப்பான்மையும் தேவைப்பட்டுப் பெரும்பான்மையான நேரங்களில் எம்மை நாம் புரிவதே சாத்தியமற்றுப் போகிறது. இதில் பிறிதொருவரை முற்றுமுழுதாப் புரிஞ்சிட்டன் என்று சொல்வது சாத்தியமில்லை. அத்தோடு. மனிதர்கள் மாற்றமின்றி நேரக்குடவைக்குள் சிக்குண்டு கிடப்பவர்கள் இல்லை. எல்லாத்துக்கும்மேலால், இக்களத்தில் திருப்பத்திருப்பப் பலதடவை பேசப்பட்டதைப் போல எழுதுபவரின் பங்கு சொற்பம் தான். வாசனை என்பது ஒவ்வொரு வாசகரிற்கும் பிரத்தியேகமான பிரதிகளை ஒரு எழுத்துச் சார்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு வாசனின் முயற்சி அவசியம். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று ஒருவர் எழுதினால் அதில் இரண்டு என்பது இது தான் என்று ஒரே ஒரு புரிதலை மட்டும் வாசகன் அடம்பிடித்துப் பற்றிக் கொண்டிருந்தால், வருடக்கணக்க்கில் நீலம், சிப்புப் பச்சை என்று எழுதுகிற தாழின் நிறத்தை மாத்தி ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று எழுதுபவன் எழுதிக்கொண்டிருப்பதிலோ வாசகன் படித்துக்கொண்டிருப்பதிலோ அர்த்தம் இல்லை என்பதற்கு மேலால் அது ஒரு சித்திரவதையாகத் தான் இருக்கும். எனவே என்னைப் பொறுத்தவரை, எழுதுபவனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்பது கொஞ்சம் அடிப்படை நிலை.

2. ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசி, அச்சம்பவம் சார்ந்து பிறிதொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது என்று பேசின், முதற்சம்பவத்தை விட்டுவிட்டு ஞாபகம் வந்த இரண்டாம் சம்பவத்தை மட்டும் பற்றிப் பேசுவது போதுமானதல்ல. இருள், தணல், பொக்களம், காளி என்ற ஒரு பின்னூட்டம் சார்ந்து பேசி அச்சம்பவம் எனதூரவர் ஒருவர் சொன்ன வேறொரு சம்பவத்தை ஞாபககப்படுத்துகிறது என்று ஒரு சம்பவத்தைப் பகிர்ந்தால் அதன் அர்த்தம் சைக்கிள் பாறில் இருந்த ஆச்சி மறைந்தது சார்ந்து நெக்கு நெய்யுரகிக் கண்ணீர் மல்கக் கரங்குவித்து புல்லரித்து நிற்பதென்பதல்ல. கிரேக்கர்கள் தங்கள் பாரம்பரியத்தின் புராணத்தை ஒத்த கதைகளைக் கடவுள்கள் சார்ந்து புத்தகமாக்கி வைத்துள்ளார்கள். அதை, கிரேக்கத்தில் இருந்து பலதூரம் தள்ளி இருக்கும் மேற்கு நாடுகள் பல்கலைக்கழக மட்டங்களில் கூட மொழிபெயர்த்துப் படித்துத தர்கித்து வருகிறார்கள். இதன் அர்த்தம் இவர்களிற்குப் பகுத்தறிவு இல்லாமல். ஆன்மீகத்தில் கட்டுண்டு கண்மூடித்தனமாகப் பக்திமார்க்கத்தைத் தொடருகிறார்கள் என்பதல்ல. கிரேக்க மித்தோலொஜியினை மித்தோலொஜி என்று சொல்லித்தான் படிக்கிறார்கள். காரணம் எந்த ஒரு அனெக்டோட்டையோ அல்லது எழுதி வைக்கப்பட்ட கதையினையோ சரியாக அணுகுகையில் வாசகனின் பக்குவத்தைப் பொறுத்துப் பல விடயங்கள் சுவறும். கிரேக்க மித்தோலெஜியில் நக்கல் அடிப்பதற்கு ஏகப்பட்ட இலகுவான இளகிய இரும்புகள் கிடக்கின்றன என்று விட்டு, இதெல்லாம் எப்பிடிச் சரிவரும், கடவுள் வாறாதவாது கடலிற்கடியில குடும்பம் நடத்திறதாவது என்று எழுதினால் சரிவராது. ஏனெனில் புத்தகத்தையே மித்தோலொஜி என்று தான் விட்டிருக்கிறார்கள். சைக்கிள் பார் ஆச்சியையும் ஒரு போர்க்கால சிறு கிராமத்தின் மித்தோலொஜியாகப் பார்த்தீர்ககள் ஆயின், புதிய வாசிப்பு கிடைப்பதற்கான சர்த்தியம் தெரியலாம்.

உங்கள் பின்னூட்டத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் நன்றி. நீங்கள் கூறியது போல உங்களது மேற்படி பின்நூட்டம் நீங்கள் மறக்காத ஒன்றாக இருப்பின் நல்லதே :D

Edited by Innumoruvan

ஈஸ், சாத்திரி, ஜீவா, தமிழிச்சி உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றி. ஜுவாவின் சம்பவம் ஆர்வத்தைக் கிழறுகிறது. மிகவும் மனத்துணிச்சல் உள்ளவர் போல் இருக்கிறீர்கள். இருட்டிற்குள் தனிய தணல் தெரிய நின்று தடவிப்பாக்கிற தைரியம் எல்லோரிற்கும் வந்துவிடாது.

எனது ஊரவர் ஒருவர் சொன்ன பிறிதொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. எங்களுரில் இருந்து சில மைல் தொலைவில் இன்னுமொரு சிற்றூரில் உள்ள ஒரு பிரசித்தமான கோவிலில் ஒரு சமயம் ஒரு தகராறு ஏற்பட்டதாம். இயக்கம் தலையிட்டுத் தகராறு தீரும்வரை கோவிலைப் பூட்டிவைத்ததாம். பூட்டப்பட்ட காலத்தில் திருவிழாக்காலம் வந்தும் திருவிழா நடைபெறாது இருந்ததாம். அப்போது ஒரு நாள், சில இயக்க உறுப்பினர்கள் இரவில் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு ஆச்சி தெருவோரமாய் நின்று என்னை உதில ஏத்திக்கொண்டுபோய் இறக்கிவிடுங்கோடா மோனை என்றாவாம். இயக்கத்தவர்களின் இரு சைக்கிள்களில் ஒன்றில் இடமிருக்க, அந்த உறுப்பினர் ஆச்சியை பாறில் ஏத்தி சிறிதுநேரம் பயணித்தார்களாம். ஆச்சியும் என்னடா மோனை கோயிலைப் பூட்டித் திருவிழா நடக்காமல் செய்துபோட்டியள் என்றாவாம். இயக்கப் பெடியளும் ஏதோ சொல்லிக் கதைச்சுக்கொண்டுபோகும் போது திடீரென பாறில் இருந்த ஆச்சியைக் காணேல்லையாம்...

தமிழச்சி நீண்டநாட்கள் பின்னர் சந்தித்ததில் மகிழ்ச்சி. உண்மை தான் மரணம் சார்ந்து தம்மைக்காட்டிலும் தமது அன்பிற்குரியவர்கள் சார்ந்தே உலகில் பயம் அதிகம் ஆட்சிபுரிகிறது.

இந்த கதையை நானும் கேள்விப்பட்டுளேன்.

இந்த தலைப்பில் நடைபெறும் உரையாடல்களை வாசித்து வருகிறேன். மேற்கோள் கட்டிய கருத்துக்கும் நான் சொல்ல போகும் விடையத்துக்கும், அந்த கதையை கேள்விபட்டேன் என்பதை தவிர வேறு ஒரு சம்பந்தமும் இல்லை.

உங்கள் முதல் பதிவு மரணத்தில் ஆரம்பித்ததால் மரணம் சம்பந்தமான எனது ஒரு அனுபவம்.

நான் யாழ் குடாநாட்டில் தென்மராட்சி பகுதியை சேர்ந்தவன். 1995 ஆண்டு யாழ் குடாநாடு முழுமையும் இராணுவ கட்டுபாட்டுக்கு வந்த பின் அங்கு வாழ்ந்தவன். அந்த சூழ்நிலை காரணமாக எனது படிப்பிற்காக யாழ் நகருக்கு அணமித்த பகுதியில் வீடு எடுத்து தங்கி வந்தேன். அந்த நேரத்தில் எனது அம்மம்மாவின் திவசத்துக்கு வீட்டுக்கு சென்றேன். சென்றபோது பொதுவாக திவசத்துக்கு பொறுப்பெடுத்து சமையல் செய்யும் அம்மா காய்ச்சல் காரணமாக சமைக்க முடியாது இருந்தார், நான், அண்ணா , அண்ணி மூவருமாக திவசத்துக்கு வேண்டிய சமையல் செய்தோம். திவசத்துக்கு முதல் நாள் எமது குடும்ப மருத்துவரிடம் காட்டி மருந்து எடுத்ததாக அம்மா சொன்னார். மருத்துவர் மலேரியா என குளிசை குடுத்திருந்தார். அங்கு அப்போது சாதாரண காய்ச்சலுக்கு பல சந்தர்பங்களில் நுண்ணுயிர் கொல்லிகளை கொடுப்பதும், மலேரியாவுக்கு சோதனை செய்யாமலே மருந்து கொடுப்பதும் வழக்கம். அத்துடன் அப்போது முன்று நாள் காய்ச்சல் என பேச்சு வழக்கில் சொல்லப்பட்ட காய்ச்சல் பலரையும் தாக்கி பலரும் மரணமாகிய சம்பவங்கள் நடந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் சுக தேகியாக தெருவில் கண்ட ஒருவர் நான்காம் நாள் காய்ச்சலால் மரணமாகினர் என உறவுகள் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அத்துடன் காய்ச்சல் என சொல்லிய பலரும் செப்ரிசிமியவுக்கு ஆளாகி இறந்தார்கள். அப்போது இருந்த நிலமைகளில் என்ன நோயாக்கி இறப்புக்கோ கரணம் என்றோ அல்லது மேலதிக சோதனை செய்யவோ வசதிகளும் இல்லை. பொறுப்பில் இருந்தவர்களுக்கு இப்படி நடக்கிறந்தே என்ன கரணம் என அறிய வேண்டும் என்ற அக்கறை இருந்தத எனவும் தெரியவில்லை/ அல்லது இருந்த மட்டுபடுத்திய வசதிகளுடன் சேவை செய்து மாரடிக்கவே நேரம் போதாது மேலதிக வேலை என விட்டார்களா? . அல்லது இறப்புக்களை கண்டு இறுகிய மனங்களுக்கு இறப்புக்கள் பத்தோடு பதினொன்று?? திவசம் முடிந்து அன்று மாலை இ. போ. ச பஸ்ஸில் யாழ் திரும்பி கொண்டிருந்த போது நாவற்குழி சந்திக்கு முன்னராக சாவகச்சேரி நோக்கிய திசையில் ஒரு கார் கரியலில் பிரேத பெட்டி கட்டிய படி பயணித்தது. அது யாருடையது என்றும் தெரியாது. அதை கண்ட எனக்கு என்னை அறியாமலே கண்ணீர் வந்தது. அப்படி பிரேத பெட்டியை/ சவ ஊர்வலத்தை பார்த்து கண்ணீர் வருவதோ/ அழுவதோ எனக்கு பழக்கம் இல்லாதது. நான் யாழில் உள்ள எனது தங்குமிடத்துக்கு சென்று இரண்டாம் நாள் அண்ணா எனது தங்குமிடத்துக்கு வருகிறார் அம்மாவை யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும் அம்மா நினைவிழந்து நடக்கும் திறன் இழந்து விட்டதாகவும் சொன்னார். வைத்திய சாலையில் அனுமத்தித்து இரண்டு நாட்களில் அம்மாவின் உயிர் பிரிந்தது. காய்ச்சல் செப்ரிசிமியா ஆகியிருந்தது. ஆனால் செப்ரிசிமியவை உருவாக்கிய நோயக்கியை அடையாளம் காண முடியவில்லை/ அல்லது முயலவில்லை. செப்ரிசிமிய என்பது குருதியில் நுண்ணங்கிகள் கட்டுபடுத்த முடியாது பெருகுவது. சில நேரம் ஒரு குறிப்பிட்ட நோயக்கியினால் வரலாம். எனக்கு தெரிய பலர் அந்த நேரம் செப்டிசிமியாவல் இறந்திருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் ஒரே நுண்ணங்கியால் ஏற்பட்டதா என அறியவோ அல்லது அவ்வாறு அதிகம் நிகழ என்ன கரணம் எனவோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியவில்லை.

இப்போதும் பஸ் பயணத்தின் பொது பிரேத பெட்டியை கண்டு கண்ணீர் வந்ததும், தொடர்ந்த அம்மாவின் மரணமும் மறக்க முடியாதது. ஆனால் அது தற்செயலா? அல்லது??.......

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.