Jump to content

சுவையான...வெண்ணெய் இறால்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சுவையான...வெண்ணெய் இறால்!!![/size]

[size=4]26-butter-prawn-300.jpg[/size]

[size=4]கடல் உணவானது உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் இறாலை சமைத்தால், தொக்கு, கிரேவி என்று தான் செய்திருப்போம். ஆனால் இந்த இறாலை வைத்து வீட்டிலேயே சுவையான ஒரு மலேசியன் ஸ்டைல் உணவான வெண்ணெய் இறாலை செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!![/size]

[size=4]தேவையான பொருட்கள் :[/size]

[size=4]இறால் - 10

வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 6

கிராம்பு - 3

பூண்டு - சிறிது

சர்க்கரை - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்

சைனீஸ் வைன் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் - 1 கப்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]செய்முறை :[/size]

[size=4]முதலில் இறாலின் தலையை வெட்டி நீக்கிவிடவும். பின் அந்த இறாலை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், அந்த எண்ணெயில் இறாலைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் கிராம்பை தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.[/size]

[size=4]பிறகு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி, உருகியதும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, கிராம்புப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கவும்.[/size]

[size=4]பிறகு அத்துடன் வறுத்த இறால், சர்க்கரை, சோயா சாஸ், சைனீஸ் வைன் மற்றும் வறுத்த தேங்காயை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு வதக்கி, அந்த சாறானது இறாலில் இறங்கும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கவும்.[/size]

[size=4]http://tamil.boldsky...awn-001442.html[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன்.  பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம்.  ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 
    • தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை.  ☹️
    • அவருக்கு மட்டுமே புள்ளி கிடைக்கும் 
    • இவர் கடல் வளத்துறை அமைச்சரல்லவா? எப்போ இந்த துறைக்கு மாற்றப்பட்டார், மாறினார் அல்லது தானாகவே எடுத்துக்கொண்டாரோ? தேர்தல் வருகிறது, தமிழ்த் தலைமைகளுக்கு யோசனை  கூறுவது, அவர்கள் கேட்க்கும் தீர்வுகளுக்கு தான் உரிமை கோருவது, கட்சி தாவுவது, அது போலவே தனது அமைச்சு பொறுப்புகளை கைவிட்டு  வேறு அமைச்சுக்கு தாவுவது. எதிலாவது நிலைத்து, இதுதான் எனது கொள்கை, இவர்தான் என் தலைவன் என்று இருந்திருக்கின்றாரா? இப்பவே சஜித்துக்கு தூது விட்டு அழைப்புக்காக காத்திருப்பார், அதே நேரம் ரணில் புகழும் பாடுவார், மறுநாள் சஜித்தே சிறந்த தலைவர் என்பார். இவரின் வாழ்வே ஒரு நகைச்சுவை தான்போங்கோ. இவர் மட்டுமல்ல இவர் போன்றோர் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதனால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், தீர்வுகள் இழுத்தடிக்கப்படுகின்றன, சமுதாயம் சீர்கெடுகின்றது, சட்ட ஒழுக்கம் பாதிப்படைகின்றது, அதிரடியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர், லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது அப்பாவிகள்  நசுக்கப்படுகின்றனர். பலருக்கு தாங்கள் யார் தங்கள் பொறுப்பு என்ன? எதற்காக தமக்கு சம்பளம் தரப்படுகிறது என்கிற தெளிவே இல்லாமல் கதிரையை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள். பொறுப்பு கூற வேண்டிய தருணத்தில் அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் படுப்பதும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதுபோல் நமது பிரதேசத்தில் உள்ள திறமையற்ற தங்கள் பொறுப்புக்களின் தாற்பரியம், ஒழுங்கு, கொள்கை, அறிவு  இல்லாதவர்கள், தெரியாதவர்கள் ஆளுக்கொரு, நாளுக்கொரு விளக்கமளித்து மக்களை குழப்புவதும் பிரச்சனைகளை உருவாக்குவதும் பதில் கூற பொறுப்பெடுக்க வேண்டிய நேரத்தில் கடமைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மறைந்து விடுகின்றனர். இதற்கு யார் காரணம்? "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி."                                   
    • 2020 பொதுத் தேர்தலில், விக்கி ஐயாவின் தலைமையில் ஆனந்தி சசிதரன் நின்று தோற்ற போது வென்ற வாக்குகள் எத்தனை? ஏன் மக்கள் அவரை அந்த நேரம் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.