Jump to content

சுவையான மைதா அல்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] சுவையான மைதா அல்வா[/size]

[size=4]28-maida-halwa.jpg[/size]

[size=4]வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size]

[size=4]தேவையான பொருட்கள்:[/size]

[size=4]மைதா மாவு - 1/2 கிலோ

சர்க்கரை - 1 கிலோ

கேச‌ரி பவுடர் - 1/4 டீஸ்பூன்

உருக்கிய நெய் - 1/2 கப்

ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்

முந்திரி - 8

திராட்சை - 8[/size]

[size=4]செய்முறை:[/size]

[size=4]முதலில் மைதா மாவை கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிசைந்த மாவானது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த மாவை கரைத்துக் கொண்டு, மேலே இருக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.[/size]

[size=4]மறுபடியும் அந்த மாவில் 2 லிட்டர் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கழித்து, பின் கரைத்து மேலே வரும் நீரை அதே பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.[/size]

[size=4]மீண்டும் அந்த மாவில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கழித்து, பின் கரைத்து மேலே வரும் நீரை அதே பாத்திரத்தில் மறுபடியும் ஊற்றிக் கொள்ளவும். இப்போது 1 1/2 லிட்டர் மைதாப் பால் கிடைத்திருக்கும்.[/size]

[size=4]பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது கொதித்து நுரைநுரையாக வரும் போது, தீயைக் குறைத்து அதில் மைதாப் பாலை ஊற்றி நன்கு கிளர வேண்டும்.[/size]

[size=4]இவ்வாறு ஒரு 5 நிமிடம் கிளரியதும், பின் அதில் கேசரி பவுடர், நெய் சேர்த்து கெட்டியாக கிளரவும். அல்வா பதம் வந்ததும், அத்துடன் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளரி இறக்கவும்.[/size]

[size=4]இப்போது சுவையான மைதா அல்வா ரெடி!!![/size]

[size=4]http://tamil.boldsky...lwa-001456.html[/size]

Link to comment
Share on other sites

இதென்ன கிட்டதட்ட மஸ்கட் செய்கிரமாதிரிஎல்லோ இருக்கு :D

இணைப்புக்கு நன்றி தமிழரசு அண்ணா .

Link to comment
Share on other sites

[size=5]மைதா அல்வா இந்த பெயரை சொல்லக்குள்ள அதை சாபிடோனும் போல இருக்கு .[/size]

[size=5]எங்கட இடத்திலை இது ஒன்றும் செய்ய மாட்டாங்க . வெறும் அல்வா மட்டுதான் . ஒரு முறை எங்கட அக்கா அல்வா செய்து அல்வாவில இருந்த ஆசையும் போய்ட்டுது . கடிச்சால் கடிச்சதுதான் பிறகு இரண்டு பல்லும் அல்வாவில இருந்து களராது. அந்த விரக்தியிலே நான் இருபது வருசமா அல்வா சாப்பிட இல்லை .[/size]

[size=5]ஆனால் நீங்கள் குறிப்பிட்டதும் , நான் சொன்னதும் வேற ,வேற அல்வா என்று நினைக்கிறேன் .[/size]

[size=5]யாராவது கேரளா பெண்ணை திருமணம் செய்தால் இதெல்லாம் சாத்தியம் .[/size]

[size=5]நன்றி உங்கள் பகிர்வுக்கு தமிழரசு அண்ணா .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மைதா அல்வா இந்த பெயரை சொல்லக்குள்ள அதை சாபிடோனும் போல இருக்கு .[/size]

[size=5]எங்கட இடத்திலை இது ஒன்றும் செய்ய மாட்டாங்க . வெறும் அல்வா மட்டுதான் . ஒரு முறை எங்கட அக்கா அல்வா செய்து அல்வாவில இருந்த ஆசையும் போய்ட்டுது . கடிச்சால் கடிச்சதுதான் பிறகு இரண்டு பல்லும் அல்வாவில இருந்து களராது. அந்த விரக்தியிலே நான் இருபது வருசமா அல்வா சாப்பிட இல்லை .[/size]

[size=5]ஆனால் நீங்கள் குறிப்பிட்டதும் , நான் சொன்னதும் வேற ,வேற அல்வா என்று நினைக்கிறேன் .[/size]

[size=5]யாராவது கேரளா பெண்ணை திருமணம் செய்தால் இதெல்லாம் சாத்தியம் .[/size]

[size=5]நன்றி உங்கள் பகிர்வுக்கு தமிழரசு அண்ணா .[/size]

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு...

"அல்வா" என்றால் தமிழகத்தில் ஞாபகத்திற்கு வருவது "நெல்லை"

DSC00258.JPG

இது திருநெல்வேலியின் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரில், கீழ தேரடி வீதியில் உள்ள இருட்டுகடை அல்வா என்ற பலகாரக் கடை.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பெயர் பெற்ற கடை. ராஜஸ்தானத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்தினரால் 90 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்றது. இன்றைக்கும் இந்தக் குடும்பத்தின் வழி வந்தவர்களே கடையை நிர்வகிக்கின்றனர்.மாலை 5 மணிக்குத்தான் கடை திறக்கும்; இரவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். கடைக்குள் ஒளி தர சாதரண எண்ணெய் விளக்குகள் மட்டுமே. “இருட்டுக் கடை” என்ற பெயர் வந்ததே இதனால்தான்.

கடை இருட்டாக இருக்கலாம், ஆனால், அல்வாவின் ருசியும் மணத்தால் கவரப்பட்டு எப்பொழுதும் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சாட்சி. கடையின் வெளியில் ஒரு சின்ன போர்டு கூடக் கிடையாது. ஆனாலும் கூட்டத்திற்கு என்னவோ குறைவே இருக்காது.

DSC00904_1600x1200.jpg

"இருட்டுகடை அல்வா" வாங்க மக்கள் வரிசை!

1841234894_229577c51c_o.jpg

"இருட்டுகடை அல்வா"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.