Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும்

Featured Replies

[size=5]ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அறிவிப்பு[/size]

[size=4]இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், இலங்கைக்கான தனது ஜி.எஸ்.பி. சலுகை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.[/size]

[size=4]அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான ரோன் கேர்க் இவ்வாறு அறிவித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.[/size]

[size=4]தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிப்பதில் இலங்கையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2008 ஆம்ஆண்டு ஏ.எவ். எல்.மற்றும் சி.ஐ.ஓ அமைப் பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை தொடர்ந்து இலங்கைக்கான ஜி.எஸ்.பி. சலுகை குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.[/size]

[size=4]"இலங்கையின் ஜி.எஸ்.பி. சலுகை நடைமுறை மீளாய்வு முடிவானது, கடந்த சில வருடங்களில் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான விவகாரங்களை தீர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்தின் கவனிக்கத்தக்க முயற்சிகளின் அடிப்படையில் அமைந்தது. பயன்பெறும் நாட்டின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஜி.எஸ்.பி. சலுகை ஒரு வினைத்திறனான கருவியாக உள்ளது என்பதை இந்த மீளாய்வின் இந்த வரவேற்கத் தக்க பெறுபேறானது வெளிப்படுத்துகிறது என்றும் ரோன் கேர்க் கூறியுள்ளார்.[/size]

[size=4]ஜி.எஸ்.பி. சலுகை மூலம் அபிவிருத்தியடைந்துவரும் 128 நாடுகளைச் சேர்ந்த 5000 வகையான பொருள்களை தீர்வையின்றி அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. சலுகையின்கீழ் 18.5 பில்லியன் டொலர் பெறுமதியான பொருள்கள் தீர்வையின்றி இலங்கையால் இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=109071180601191578

  • தொடங்கியவர்

[size=4]எல்லாம் தெரிந்த, ஜெனீவாவில் சிங்களத்திற்கு எதிராக நின்ற அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளில் ஒன்றே இது. இந்த வரிச்சலுகையை இரத்து செய்யாமல் வைத்திருப்பது 'ஒரு கையால் அணைத்தும் மறுகையால் அடிக்கும்' கொள்கையை ஒத்தது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிடம் எண்ணை யாரும் வாங்கக்கூடாது என தடை போடும் அமெரிக்கா இந்தியா, சிறிலங்காவுக்கு அத்தடை இல்லை என்பது எதனைக் காட்டுகிறது??

90 செக்கனுக்கு ஒரு முறை ஒரு பெண் பாலியல் ரீதியாக கெடுக்கப்படும் நாட்டின் மனித உரிமை பற்றி என்ன அறிக்கைகளை இந்த மேற்குலகம் விட்டுள்ளது. குறிப்பாக கனடா புலிகள் செய்தவற்றை உன்னிப்பாக கவனித்து அறிக்கை வெளியிட்டதாக ஒரு குடுகுடுப்பை சொல்கிறார்.அப்படியெனில் இப்போ சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் பற்றி கனடா உன்னிப்பாக கவனிக்க முடியாமல் அறளை பெயர்ந்து விட்டதா??

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]இந்தியாவும் ஜெனீவாவில் சிங்களத்திற்கு எதிராக முடிவெடுத்தபோது அதன் முதலீடுகளை சிங்களம் தடுத்து / நிறுத்தியது.ஆனால் அதையே அமெரிக்காவிடம் செய்ய முடியாத நிலை, காரணம் மிகப்பெரிய ஏற்றுமதி. [/size][/size]

[size=4]இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய இடம் பிடிக்கும் ஆடை ஏற்றுமதி ஜி.எஸ்.பி. பிளசினை ஐரோப்பிய யூனியனிடம் முன்னாராக இழந்தது. இவ்வாறே அமெரிக்காவிடமும் வரிச்சலுகையை சிங்களம் இழக்க முடியாது. [/size]

... அமெரிக்காவை தளமாகவும், அமெரிக்காவிலிருந்து வெளியே செல்லாமலும் அங்கேயே உள்ளீருந்து இயங்கும் "தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தின்" பிரதமர் அலுவலகம் மிக சிறப்பாக அங்கு பணியாற்றுவதின் பிரதிபலிப்பு!

[size=1][size=4]இந்தியாவும் ஜெனீவாவில் சிங்களத்திற்கு எதிராக முடிவெடுத்தபோது அதன் முதலீடுகளை சிங்களம் தடுத்து / நிறுத்தியது.ஆனால் அதையே அமெரிக்காவிடம் செய்ய முடியாத நிலை, காரணம் மிகப்பெரிய ஏற்றுமதி. [/size][/size]

[size=4]இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய இடம் பிடிக்கும் ஆடை ஏற்றுமதி ஜி.எஸ்.பி. பிளசினை ஐரோப்பிய யூனியனிடம் முன்னாராக இழந்தது. இவ்வாறே அமெரிக்காவிடமும் வரிச்சலுகையை சிங்களம் இழக்க முடியாது. [/size]

இலங்கை Dole கம்பனிக்கு கொடுத்த காணிகளை திரும்ப பெற்றது. ஈரானுடன் எண்ணை வர்த்தகம் செய்வேன் என்று அடம் பிடித்தது. இப்போ அமெரிக்காவுக்கு எண்ணை அகழ பூர்வாங்க ஆயத்தங்கள் செய்கிறது. அமெரிக்கா, சீனா, ரூசியா, இந்தியா, வியட்நாம் எல்லோரும் முள்ளி வாய்க்காலை மன்னார் கடலுக்கு நகர்த்தியிருக்கிறார்களா என்று எண்ணத்தான் செய்கிறது.

எதற்கும் தேர்தல் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா, இலங்கை சீனாவுடன் ஒட்டுவதை கவனிப்பதிலும் பார்க்க அமெரிக்காவுடன் ஒட்டுவதைதான் பெரிது படுத்துகிறது. (இது கம்யூனிச மானிலமான கேரளாவிருந்து வரும் பாதுகாப்பு வியூகங்களொ தெரியாது). இந்த முறை மட்டும் தான் இந்தியா மனித உரிமைகள் சபை பிரேணையை இலங்கை பயணத்தில் காட்டி மிரட்டி இருக்கிறது. அமெரிக்கா எண்ணை அகழ்வதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. அமெரிக்கா அங்கே நேரம் செலவிடுவதாகில் நிச்சயமாக எண்ணை வர வேண்டும், அல்லது வேறு ஏதோ அங்கே இருக்கிறது என்பது இந்தியாவுக்கு தெரியும். GSP வருடா வருடம் புதுப்பிக்கும் உடன் படிக்கை. அதை தடுப்பதற்கு "பகிஸ்கரி இலங்கைதான்" நல்ல வழி. இல்லையேல் புடவைகள் வாங்கும் முதலாளிகள் அரசாங்கத்தை லொபி பண்ணூவார்கள்.

அமெரிக்காவின் 300 மில்லியன் சனத்தின் கவனத்தை இருக்கும் தமிழர் திருப்ப வேண்டுமாயின் அது ஒரு சவாலா விடையம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]நன்றி மல்லையூரான். [/size]

[size=4]மன்னார் வளைகுடாவில் எவ்வளவு மசகு எண்ணெய் உள்ளது? நிறைய இருந்தால் ஏன் இவ்வளவு காலமும் அமெரிக்கா உட்பட அதை அகழ்வதை விரைவாக செய்யவில்லை என எண்ணத்தோன்றுகின்றது. [/size]

[size=4]இந்தியா இரண்டு நாடுகளையும், அமெரிக்கா + சீனா , இலங்கையில் எதிர்க்கமுடியாது. இவற்றில் ஒன்றை மற்றைய நாட்டுடன் சேர்ந்து எதிர்ப்பதே கூட சவாலானது. [/size]

[size=4]அமெரிக்கா தனது வர்த்த சலுகையை வைத்திருப்பது மூலம் தனது அழுத்தங்களை தெரிவிக்க முடியும். அதை நிற்பாட்டி விட்டால் அந்த வலிமை போய்விடும் என எண்ணுகிறேன். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.