Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு உதவமறுத்ததாக கூறினாலும் போர்க்குற்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியை வெளியேற்றுகிறது கனடா

Featured Replies

புலிகளுக்கு உதவமறுத்த சிறிலங்கா கடற்படை அதிகாரியை வெளியேற்றுகிறது கனடா

SL_naval-cap.jpg

போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில்- கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை கனேடிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

கொமடோர் நடராஜா குருபரன் என்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியின் அரசியல் தஞ்சக் கோரிக்கையே கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர் சிறிலங்கா கடற்படையின் அட்மிரல் தரத்துக்கு மூன்று நிலைகள் கீழாகப் பணியாற்றினார்.

சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகளுக்கு உதவிய இவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட- எண்ணிலடங்காக பொதுமக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்த சில வாரங்களில் - 2009 ஜுனில் ஓய்வுபெற்றிருந்தார்.

2009 ஓகஸ்ட் 4ம் நாள் தனது மனைவி பாமினி குரபரன், மற்று இரு பிள்ளைகளாக மயூரன், கிருசாந்தி ஆகியோருடன் கனடாவில் அடைக்கலம் கோரினார்.

அதன் பின்னர் ரொரன்ரோவில் வசித்து வந்த இவர், சிறிலங்கா கடற்படையில் பணியாற்றிய 5 தமிழ் அதிகாரிகளில் ஒருவராவார்.

இவர் சிறிலங்கா அரசாங்க, அரச ஆதரவுக் குழுக்கள் மற்றும் போராளிகள் தொடர்பாக தாம் அச்சம் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் குடிவரவு அதிகாரிகள் இவர் உண்மையான அகதி அல்ல என்றும், போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவரது மேன்முறையீட்டை சமஸ்டி நீதிமன்றம் கடந்த ஜுன் 13ம் நாள் நிராகரித்தது.

இதனால், இவரும் இவரது குடும்பத்தினரும் தற்போது சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர்.

சிறிலங்கா படைகள் கொடூரங்களைப் புரிந்துள்ளதை உறுதி செய்துள்ள இந்த நீதிமன்றத் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பத்தாயிரக்கணக்கான காணாமற் போதல்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக அறிக்கையில் அடங்கியுள்ள விரிவான சாட்சியங்களும், ஆதாரங்களும், சிறிலங்கா கடற்படையை உள்ளடக்கிய சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் சிறிலங்காவின் பரந்துபட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியான தாக்குதல்களுகு உதவியாக இருந்துள்ளது என்று தனது 50 பக்கத் தீர்ப்பில் நீதிபதி ஜோன் ஓ கீவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, சிறிலங்கா படைகள் போர்க்குற்றங்களை இந்த நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளதாவும், இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

கொமடோர் குருபரன் 1981இல் சிறிலங்கா கடற்படையில் ஒரு மின் பொறியியலாளராக இணைந்த இவர் தாம் ஒரு தமிழர் என்பதால் பல சவால்களை எதிர்நோக்கியதாக கூறியுள்ளார்.

2001ம் ஆண்டில், சிறிலங்கா கடற்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைத் தருமாறு விடுதலைப் புலிகள் கோரிய போதும் அதை தாம நிராகரித்து விட்டதாக கொமடோர் குருபரன் தெரிவித்துள்ளார்.

பின்னர் 2008ம் ஆண்டில் மீண்டும் அதே கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தான் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் தன்னை சிறிலங்கா கடற்படையினர் புலிகளின் அனுதாபியாகவே சந்தேகித்ததாகவும், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஒரு மாதத்தின் பின்னர், சிறிலங்கா அரச ஆதரவு கருணா குழுவினரால் தனது மனைவி கடத்தப்பட்டு, பெரும்தொகையான பணத்தை கப்பமாக கோரியதாகவும், இல்லையேல் குடும்பத்தை முற்றாக அழித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கொமடோர் குருபரன் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் அமெரிக்கா சென்று கனேடிய எல்லையில் அடைக்கலம் கோரினார்.

கனெடிய குடிவரவு அதிகாரிகள் இவர் போரில் ஈடுபடவில்லை என்றும், தனிப்பட்ட ரீதியான போர்க்குற்றங்களைச் செய்யவில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.

எனினும் இவர் சிறிலங்கா கடற்படையின் இருண்ட செற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வசதிகளை அளிப்பதில் பங்கேற்றுள்ளார்,

சிறிலங்கா படையினர் செய்த கொடூரங்களை அறிந்திருந்த போதும் 1985 தொடக்கத்தில் வெளிநாடு சென்ற போது கூட இவர், அதிலிருந்து வெளியேற முனையவில்லை என்று கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் மனிதஉரிமைகளை தொடர்ச்சியாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியாகவும் மீறிய ஒரு அமைப்பான சிறிலங்கா கடற்படையில் நீண்டகாலம் பணியாற்றியதன் மூலம் இவர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinapp...?20120703106515

பி.குறிப்பு: முடிந்தவர்கள் இந்த தீர்ப்பை இங்கே இணைத்து விடுங்கள்.

Edited by மல்லையூரான்

நல்ல செய்தி இது போன்று மற்றய நாடுகளிளும் உள்ள போர் குற்றவாளிகளையும் அந்த அந்த நாடுகளின் உதவியோடு நாடு கடத்த நாம் உழைக்க வேண்டும்.

[size=4]முதலில், கனடா அரசுக்கு அங்கு தாயகத்தில் நடந்தவை பற்றி நன்கு எல்லாம் தெரிந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த அரசு கூட புலிகளை 'பயங்கரவாதிகள்' என்ற தடையை விதித்தமை பிழை என்று உணரும் காலம் வரும். [/size]

[size=4]

ஓய்வுபெற்ற ஒரு மாதத்தின் பின்னர், சிறிலங்கா அரச ஆதரவு கருணா குழுவினரால் தனது மனைவி கடத்தப்பட்டு, பெரும்தொகையான பணத்தை கப்பமாக கோரியதாகவும், இல்லையேல் குடும்பத்தை முற்றாக அழித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கொமடோர் குருபரன் கூறியுள்ளார்.
[/size]

[size=4]அடுத்து இந்த கருணா, அகதியாக வந்த குருபரன் இருவருமே சிங்களத்திடம் ஏமாந்த முட்டாள்களே.இவ்வாறானவர்கள் இருக்கும் வரை அவனும் இந்த தொடர்கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதியவண்ணம் இருப்பான். [/size]

[size=6]Former Sri Lankan naval officer ‘complicit’ in war crimes: Canadian Immigration and Refugee Board[/size]

[size=5]One of Sri Lanka’s top naval officers has fled to Canada but federal officials are refusing to accept his refugee claim on the grounds he was complicit in war crimes during the troubled island’s long civil war against Tamil rebels.[/size]

[size=4]

[size=5]Nadarajah Kuruparan was Commodore of the Sri Lanka Navy, third in rank behind the Admiral, when he retired in June 2009 — just weeks after his forces helped defeat the separatist Tamil Tigers in a conflict that left untold civilians dead.[/size][/size][size=4]

[size=5]On Aug. 4, 2009, he arrived at the Canadian border with his wife and two children and made a refugee claim, a development that has only now emerged with the release of a court ruling on his case. He has apparently lived in Toronto since then.[/size][/size][size=4]

http://news.nationalpost.com/2012/07/02/former-sri-lankan-naval-officer-complicit-in-war-crimes-immigration-and-refugee-board/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குருபரன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். யாழ் இந்துவில் கல்வி கற்றவர். 1981 - 82 இல் பல்கலைக் கழக அனுமதி கிடைக்காததினால் கொத்தலாவலை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பொறியியல் கற்கை நெறிக்காக இன்னும் இரண்டு தமிழருடன் இவரும் சேர்ந்தார். அன்றிலிருந்து 2009 வரை சிங்கள கடற்படையின் ஒரு அதிகாரியாகச் செயற்பட்டு வந்திருக்கிறார். இடையே தனது தகப்பனார் இறந்த போது பூரண இராணுவ பாதுகாப்போடு திருநெல்வேலிக்குச் சென்று வந்திருக்கிறார்.

புலிகள் பலமுறை இவரை பதவி விலகும்படி கோரியிருந்தும், பணத்தாசையாலும், பதவி மோகத்தாலும் தொடர்ந்தும் சிங்களப் கொலைப் படையில் பணியாற்றி வந்திருக்கிறார். புலிகள் இவரிடம் சில தகவல்களைக் கோரியதாகவும் ஆனால் தான் அதற்கு உடன்படவில்லை என்றும் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ளுவாராம் இவர்.

தான் ஒரு உயரதிகாரியாக இருந்தபொழுதிலும் கூட, மற்றைய அதிகாரிகள் தன்னைச் சந்தேகத்துடனேயே பார்த்து வந்ததாகவும், போர்முனைக்கு தன்னை அனுப்புவதில் தயக்கம் காட்டியதாகவும் கூறுகிறார். ஆனால் தான் பலரைப் பயிற்றுவித்ததாகக் கூறிக்கொள்ளுவாராம்.

இவர் கடற்படையிலிருக்கும்போதே கருணா குழுவினால் இவரது மனைவி கடத்தப்பட்டு 5 லட்சம் கப்பம் கட்டியபின்னர் விடுவிக்கப்பட்டதாக இப்போது கூறித்திரிகிறார். கணடாவில் தஞ்சமசடைந்திருக்கும் இவரது குடும்பத்திற்கும் இவருக்கும் விசா மறுக்கப்பட்டது சரியான முடிவுதான். சிங்களவனின் எச்சில்த்துண்டுக்காக சொந்த இனத்தின் இருப்பையே அழிக்கத் துணைபோன இந்தக் கயவர்கள் எப்படி அழிந்தாலும் யாரும் கவலைப் படப்போவதில்லை. மற்றய பொறுக்கிகளுக்கு இவரது கதை ஒரு பாடமாக அமையட்டும்.

Canada should have prosecuted officer of war-crimes complicit SL Navy: TAG

[size=2]

[TamilNet, Wednesday, 04 July 2012, 13:41 GMT]

[/size]

In what can turn out to be a move of political significance, one of Sri Lankan Navy’s top officer’s refugee claim has been rejected by federal officials in Canada, owing to a finding by the Canadian Immigration and Refugee Board (IRB) that the officer, Nadarajah Kuruparan, had been complicit in crimes against humanity and that there was systematic human rights abuses committed against the Tamils in the island by institutions he served in. However, referring to the salient points of this outcome, Rajeev Sreetharan from TAG told TamilNet “Deporting, as opposed to prosecuting Nadarajah Kuruparan for his direct participation in coordinated maritime armed attacks and logistical support to the Sri Lankan Armed Forces' genocidal siege of the Tamil civilian population cornered in Mu'l'livaaykkaal, is incompatible with letter and spirit of what the Geneva Conventions compel.”[size=2][/size]

pdf.gif

[size=2]

"Rejection by Canadian federal officials of Sri Lankan Navy cadre Nadarajah Kuruparan's refugee claim on the ground of war crimes complicity in turn triggers Canada's binding international humanitarian law obligations pursuant to its signature and ratification of Additional Protocol II to the Geneva Conventions, effective since November 20, 1990.”

[/size]

[size=2]

“Canada must ensure 'better protection for the victims" of armed conflict. In the age of armed conflict and transnational Diasporas, this includes Tamil victims in Sri Lanka and in Canada's Tamil Diaspora. TAG urges Canadian political and legal institutions to follow up its public criticism of Sri Lanka's human rights violations with investigating and prosecuting Kuruparan under applicable war crimes and human rights law," Mr. Sreetharan added.

[/size]

[size=2]

The war crimes accused Kuruparan, who was Commodore in the Sri Lankan Navy, had arrived in Canada in August 2009 and had a made claim for refugee status on the basis that “he feared the government, pro-government militias and rebels” reported the website of the Canadian newspaper National Post.

[/size]

[size=2]

The National Post further said that the officer, one out of five Tamil officers in the mostly Sinhala navy, and his family had been harassed by the “pro-government Tamil militia” of Karuna.

[/size]

[size=2]

Nevertheless, his refugee status was denied by the IRB on the allegation that he “had been complicit in the crimes against humanity because he had a long service with the navy, an organization that was known to regularly and systematically commit human rights abuses against the LTTE, the Tamil population and individuals suspected or perceived to be LTTE collaborators or sympathizers.”

[/size]

[size=2]

The 50 page decision compiled by the Canadian Federal Court under Justice John O’Keefe further commented on the ‘widespread and systematic’ acts of violence committed by the Sri Lankan security forces alluding to “The extensive sources of evidence and the reporting contained therein, including references to tens of thousands of disappearances and the institutionalization of torture”.

[/size]

[size=2]

Speaking to TamilNet, Siva Vimalachandran from the NCCT said “The admittance by Canadian state officials that crimes against humanity and war crimes were committed and the systematic nature behind these atrocities reinforces the need for the diaspora to stay confident in exposing the protracted genocide of the Eezham Tamils.”

[/size]

[size=2]

Likewise a press release of the NCCT dated July 3 stated “The ruling against Kuruparan serves to reinforce the need for Prime Minister Harper to boycott the upcoming Commonwealth meeting to be held in Sri Lanka. Prime Minister Harper promised boycott the 2013 Commonwealth meeting in Sri Lanka unless the country’s human rights record improved.”

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குருபரன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். யாழ் இந்துவில் கல்வி கற்றவர். 1981 - 82 இல் பல்கலைக் கழக அனுமதி கிடைக்காததினால் கொத்தலாவலை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பொறியியல் கற்கை நெறிக்காக இன்னும் இரண்டு தமிழருடன் இவரும் சேர்ந்தார். அன்றிலிருந்து 2009 வரை சிங்கள கடற்படையின் ஒரு அதிகாரியாகச் செயற்பட்டு வந்திருக்கிறார். இடையே தனது தகப்பனார் இறந்த போது பூரண இராணுவ பாதுகாப்போடு திருநெல்வேலிக்குச் சென்று வந்திருக்கிறார்.

. சிங்களவனின் எச்சில்த்துண்டுக்காக சொந்த இனத்தின் இருப்பையே அழிக்கத் துணைபோன இந்தக் கயவர்கள் எப்படி அழிந்தாலும் யாரும் கவலைப் படப்போவதில்லை. மற்றய பொறுக்கிகளுக்கு இவரது கதை ஒரு பாடமாக அமையட்டும்.

நீ கடமையாற்றிய நாட்டுக்கு போ

உன் எஐமானர்கள் காத்திருக்கிறார்கள் பரிசுசு தர.

செத்துத்தொலை

:( :(

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பற்றி ஒருவர் வேறோரு இணையத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்;

குருபரன் யாழ் இந்துக் கல்லூரியில் 81/82 ம் ஆண்டு படித்ததாகவும் போராட்டம் தொடங்கிருந்த நேரம் இவரோடு சேர்ந்து 4 பேரை இந்துக் கல்லூரியில் இருந்து கொத்தலாவலை பயிற்சிக் கல்லூரிக்கு தேர்ந்தெடுத்ததாகவும்,போராட்டம் ஆரம்பித்த நேரம் ஆகையால் அது தமிழரிடையே பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகவும் அந்த நான்கு பேரில் மூவர் இடையில் விலகி பொறியியல் துறையில் கல்வி கற்று நாட்டை விட்டு வந்ததாகவும் இந்த குருபரன் அடிக்கடி வெளிநாடு வந்து போகுன்றவர் என்றும் அவர் அப்படி வந்து போகும் போதெல்லாம் அவரது நண்பர்கள் இந்த பதவியை விட சொன்ன போதும் மறுத்தவர் என்றும் இவருக்கு அரசில் அதிக செல்வாக்கு இருக்குது என்றும் இவர‌து நண்பர்கள் ஊருக்குப் போனால் இவர் தனது அர‌ச‌ செல்வாக்கை பயன் படுத்தி சலுகைகள் செய்து கொடுப்பார் என்றும் புலிகள் தமக்கு உதவி செய்ய சொல்லிக் கேட்ட போது மறுத்தவர் என்றும் அதை பெருமையாக தனது நண்பர்களுக்கு சொல்லி சிரிப்பாராம் என்றும் எழுதியிருந்தார்.

என்னைப் பொறுத்த வரை இவரை போல ஆட்களைத் தான் முதலில் சுட‌ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணரின் நிலை இப்ப திரிசங்கு சொர்க்கம்.. :rolleyes::D

  • தொடங்கியவர்

இந்த துரோகிகளின் நிலை திரி சங்கு நிலையல்ல. இவர்கள் ஈடுகொடுக்கத்தக்க இளமையை பாவித்து உழைக்கிறதை உழைத்துப்போட்டு இப்போது இளைப்பாற உலகத்தின் தலலை சிறந்த நாடு தேடி வருகிறார்கள். துணிச்சாலாக தமிழுக்கு உயிர் கொடுக்க போனவர்கள் கைகால்கள் கிழிந்து இறக்கக் கூட வழியில்லாமல் கிடந்து தவிக்கிறார்கள். இயன்ற முயற்சி எடுத்து ஆளை கனடா வெளியே அனுப்பிவிட செய்ய வேண்டும். இவர்கள் கனடாவில் இருந்து இண்டபோலுக்கு ஆக்களை காட்டிக்கொடுக்க விடக்கூடாது.

Edited by மல்லையூரான்

[size=4]இவர் மகிந்தா, கோத்தா, பொன்சேகா, சவீந்தர சில்வா .... போன்ற சகலரையும் பற்றி, அவர்கள் செய்த போர்க்குற்றங்கள் பற்றியும் சர்வதேச நீதி மன்றத்தில் ஒப்புதல் கூறி சரணடையலாம். [/size]

[size=4]உதவிக்கு கருணாவையும் கூப்பிடலாம், உயிருடன் விட்டால். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.