Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயங்கினேன்..தேடினேன்..சுவையான 'பரோட்டா'வை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வீட்டில் சமையல் செய்து சாப்பிடும்போது குடும்பத்திலுள்ளோர்களுக்கு சலிப்பு ஏற்படுவது இய்ற்கை..

சரி, குழந்தைகளை விடுங்கள், நாம் பெற்றோர்கள், அரிசியிலான உணவையே சாப்பிடலாமென்டால் யாழ்கள பொடுசுகள் :rolleyes:, எம்மை "சோத்து அங்க்கிள், சோத்து அன்ரி" என பகிடி விடுதுகள்..! :D

இன்றைக்கு வெள்ளிக் கிழமை, உங்கள் குழாயில்(you tube) தமிழ் நகைச்சுவை காணொளியில் விரும்பிய தேடலில் இந்த "வெண்ணிலா கபடிக்குழு" பரோட்டா பற்றிய சுவையான நாவூறும் நகைச்சுவை கிட்டியது...

மயங்கினேன்....! வட்ட வட்ட பரோட்டாவினையும், அதற்கு தொட்டுக்கொள்ள, கார 'சால்னா'வையும் கண்டு...!!

தேடினேன்....! இணையத்தில் எங்கே சுவையான பரோட்டா கடைகள், துபையில் இருக்கென...!!

ஆனால், கூகிளாண்டவர் என்ன சொல்கிறாரென பாருங்கள்...! :o

madhurai8_20101209.jpg

[size=4]தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?[/size]

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை...! அளவிலும், சுவையிலும் எத்தனை வேறுபாடு..!!

விருதுநகர் பரோட்டா,தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா,சில்லி பரோட்டா..சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே...!.

[size=5]பரோட்டாவின் கதை என்ன தெரியுமா..?[/size]

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைந்து, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டும் அல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள், இந்த கொடிய 'மைதா'வில் இருந்து தயாரிக்கபடுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட!

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயல் பெரோக்சைட் (Benzoyl Peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா.

Benzoyl Peroxide நாம் முடியில் அடிக்கும் 'டை(Dye)யில் உள்ள ரசாயனம். இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு நோய்க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயனம், மாவை மிருதுவாக கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. .

இதில் Alloxan, சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவழைப்பதற்கு பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல,மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துகள் எதுவும் இல்லை.. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை 'மைதா'வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது!

Europe union,UK,China இந்த மைதா பொருட்களை விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக [size=4]கல், இருதய கோளாறு, [/size]நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

ஆகவே, 'பரோட்டா' பிரியர்கள் யாழில் இருந்தால், இதை கவனத்தில் கொள்ளுதல் நலம்.

http://reghahealthca.../blog-post.html

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றிகள் ராஜவன்னியன் அண்ணா.. :blink:

கோதுமையில் பழுப்பு நிறத்தில் ஒரு மாவும், வெள்ளை நிறத்தில் ஒரு மாவும் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று முன்பு யோசிப்பதுண்டு.. தோல் தீட்டியதால் வெண்மை நிறம் வந்ததாக்கும் என்று நினைத்துவிட்டேன்.. :unsure:

பரோட்டாவும் கோழி குழம்பும் சுட சுட செம கட்டு கட்டுறனான் இனிமேல் குறைக்கணும் :D

பகிர்வுக்கு நன்றி அண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே... குறைந்தபட்சம் மூன்று பேராவது விழித்துக்கொண்டார்கள்.. மகிழ்ச்சி. :rolleyes:

இனிமேல் அதிக நேயர்களை இச்செய்தி சென்றடைய, பரோட்டாவை ஒரு தட்டில் ஏந்திய(?) 'நவீன நங்கைகள்' படத்தோடைதான் போடணும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பரோட்டா..... ஈழத்தில் பிரபல்யமில்லை வன்னியன்.

றொட்டி என்று சொன்னால்.... நல்லாயிருக்கும்.

அந்த ரொட்டியையும் மூத்த தலை முறையினர் சாப்பிடுவதில்லை.

எமக்கு பிடிச்சது.... அரிசி மா புட்டும், இடியப்பமும் தான். :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரோட்டா..... ஈழத்தில் பிரபல்யமில்லை வன்னியன்.

றொட்டி என்று சொன்னால்.... நல்லாயிருக்கும்.

அந்த ரொட்டியையும் மூத்த தலை முறையினர் சாப்பிடுவதில்லை...

smiley2244.gif Oh..it's wrong address...? தகவலுக்கு நன்றி சிறி.

ஏன் சிறீ அண்ணா கொத்து ரொட்டி எங்கட இடங்களில் பிரபலமானதும் அதிகம் பேர் விரும்பி சாப்பிடும் சாப்பாடு தானே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறீ அண்ணா கொத்து ரொட்டி எங்கட இடங்களில் பிரபலமானதும் அதிகம் பேர் விரும்பி சாப்பிடும் சாப்பாடு தானே :wub:

அபராஜிதன் நீங்கள் உங்கள் தலைமுறையை வைத்துச் சொல்கிறீர்கள்.

உங்கள் அப்பா, அப்பப்பா கொத்து ரொட்டி சாப்பிட்டு வளர்ந்தவர்களா? :rolleyes:

அபராஜிதன் நீங்கள் உங்கள் தலைமுறையை வைத்துச் சொல்கிறீர்கள்.

உங்கள் அப்பா, அப்பப்பா கொத்து ரொட்டி சாப்பிட்டு வளர்ந்தவர்களா? :rolleyes:

உண்மை தான் இந்த தலைமுறையினரிடையே தான் பிரபலமான சாப்பாடு இது : :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் இந்த தலைமுறையினரிடையே தான் பிரபலமான சாப்பாடு இது : :rolleyes:

அதிலும்....

முஸ்லீமும், சிங்களவனும்.....

கொத்து ரொட்டி வியாபாரத்தை தமிழனுக்குள் விதைத்து விட்டார்கள்.

எம்மை.. அறியாமல்... நடக்கும், ஒரு உணவு வியாபாரம்.

இதற்குப் பின் நிற்கும் பல நாடுகளை நாம் அறிந்தாலும்......

அதனை தடுக்க முடியாது: காரணம் தமிழன் ஓற்றுமை இல்லாதவன் என்பதை பொது எதிரி நன்றாக அறிந்து வைத்துள்ளான்.

தமிழ் நாட்டில், இட்லி தின்றவர்கள்,

இன்று... பரோட்டா சாப்பிடுகின்றார்கள்.

நாளைக்கு... சோனியாவின் பிட்சா... சாப்பிடுவார்கள். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pizzahut-chennai-india.jpg

நாளை என்ன நாளை...?

இன்றே தமிழகத்தின் பெரிய நகரங்களில் இந்த 'நவீன பரோட்டா'.. அதாங்க, பிட்சா அங்காடிகள் பல முளைத்துவிட்டன... !

ஒரு கையில் கோக், மறுபுறம் கேர்ள்...நடுவே பிட்சா.. இதுதான் இளசுகளின் இன்றைய ஸ்டைல்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரூபாவுக்கு, நாலு இட்லி வித்த காலம் போய்.....

ஆயிரம் ரூபாவுக்கு, ஒரு பிட்சாவா...

-கொல்லங்குடி கருப்பாயி-

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்.. கொல்ட் ஸ்பாட், காளிமார்க் எல்லாம் ஞாபகம் இருக்கா? :rolleyes: உள்ளூர் வணிகத்தை மேலைநாட்டு நிறுவனங்கள் எவ்வாறு கெடுக்கின்றன என்பதற்கு உதாரணங்கள்..! :unsure:

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்.. கொல்ட் ஸ்பாட், காளிமார்க் எல்லாம் ஞாபகம் இருக்கா? :rolleyes: உள்ளூர் வணிகத்தை மேலைநாட்டு நிறுவனங்கள் எவ்வாறு கெடுக்கின்றன என்பதற்கு உதாரணங்கள்..! :unsure:

ஓ...அது மட்டுமா?

டொரினோ, பவன்டோ, ப்ரூடாங்க் என பலவகை சிறு குளிபான நிறுவனங்களை, இந்த உலக முதலைகள் உருட்டி கபளீகரம் செய்துவிட்டன.

746927-250x250.jpgbovonto-soft-drink-pict3264-123548.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் பரோட்டா மிகப் பிரபலம். ரொட்டி பரோட்டா என்று சொல்வார்கள்.. :rolleyes: சீன, மலாய் இனத்தவரும் விரும்பி உண்ணும் உணவு. மீன் கறியுடன் தருவார்கள்.. :)

28175130.jpg

ஓ...அது மட்டுமா?

டொரினோ, பவன்டோ, ப்ரூடாங்க் என பலவகை சிறு குளிபான நிறுவனங்களை, இந்த உலக முதலைகள் உருட்டி கபளீகரம் செய்துவிட்டன.

தமிழகத்தில் பன்னீர்ச் சோடா (காளி மார்க்?) இப்பவும் இருக்கிறதா? பேட்டை ரவுடிகளின் ஆயுதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பன்னீர்ச் சோடா (காளி மார்க்?) இப்பவும் இருக்கிறதா? பேட்டை ரவுடிகளின் ஆயுதம்.

ம்..இன்னும் இருக்கிறது.. தென் தமிழகத்தில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.