Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் மறந்து போனன்

Featured Replies

நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரும் சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா . உங்கட அனுபவங்களையும் பதியுங்கோ .

2674158463_2ff9034d63.jpg

2674158463_2ff9034d63.jpg

New+Image.JPG

http://2.bp.blogspot.com/_2RPPNJgWX9s/Rp1c6tt4DdI/AAAAAAAAAYo/_z1HqBCe2I4/s320/New+Image.JPG

நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

http://www.ourjaffna.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

ஆடிக் கூழின் சுவையே தனி. ஒரு குடம் கூழ் குடிக்கலாம்!!

ஆடிப் பிறப்பை தமிழர்கள் மட்டும் சிறப்பிக்கின்றனரா? இதன் வரலாறு என்ன? இந்துக்களுக்கு உரிய ஒரு தினமா?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரு[/size][size=4]ம்[/size][size=4] சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா .[/size]

திருமதி வெகுமதியாய் கூளும் கொளுக்கட்டையும் செய்து தந்தாவா

  • தொடங்கியவர்

ஆடிக் கூழின் சுவையே தனி. ஒரு குடம் கூழ் குடிக்கலாம்!!

ஆடிப் பிறப்பை தமிழர்கள் மட்டும் சிறப்பிக்கின்றனரா? இதன் வரலாறு என்ன? இந்துக்களுக்கு உரிய ஒரு தினமா?

மிக்க நன்றிகள் நிழல் ,உங்கள் நேரத்திற்கு . ஆம்..... ஆடிப்பிறப்பு தமிழர்களின் பாரம்பரிய பண்டிக்கை . இதற்கு தனது சிறுவர் பாடல் மூலம் மகுடம் வைத்தவர் நமது ஈழத்துக் கவி நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் . எனது தேடலின் ஒருபகுதியை உங்கள் கருத்திற்கு அனுசரணையாக இணைக்கின்றேன் .

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாகும்.

ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் 'ஆடிப்பெருக்கு' பண்டிகையைக் கொண்டாடுவர்.

"ஆடி விதை தேடி விதை ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி ஆவணி ஆன புரட்டாதி காடி தோய்த்த கனபனங் காயத்தைத் தேடித் தேடித் தினமும் புசிப்பவர் ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்"

என்பன போன்ற பழம் பாடல்களால் ஆடி மாதம் ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டு வந்ததென்பது அறியக் கிடக்கின்றது.

http://ta.wikipedia....ki/ஆடிப்பிறப்பு

ஆடிமாதம் பிறக்கின்றது. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின்

"ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!"

என்ற பாடலும் தான்.

ஆடிப்பிறப்பிற்க்கு வீடுகளில் பதநீரிலிருந்து ஆடிக்கூழ் காய்ச்சுவார்கள். கொழுக்கட்டை அவிப்பார்கள். ஆடிகூழும், ஆடிக்கொழுக்கட்டையும் அவ்வளவு பிரசித்தி பெற்றது. தை மாதம் பிறப்பை தைப்பொங்கலாக கொண்டாடுகின்றோம், சித்திரை மாதப் பிறப்பை சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றோம்.

ஆனால் ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற கதை ஆடியிலே கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் சித்திரைபுத்திரன் தகப்பனுடன் ஒத்துப்போகமாட்டான்.ஆடிக்கூழ் காமத்தை குறைக்கும் என்பார்கள்.

ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை ஆடிமாதத்தில் எந்த நல்லகாரியத்தையும் தொடங்கமாட்டார்கள்.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் புழக்கத்தில் இருக்கு. இதன் அர்த்தம் ஆடியிலை விதை விதைத்தால் விளைச்சல் அதிகம் என்பதாகும்.

இப்படி ஆடி என்ற சொல் எம்மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருகிறது.

ஆடி அமாவாசை:

ஒவ்வொருமாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு தனிச் சிறப்பு. பெரும்பாலான இந்துக்கள் தங்கள் முன்னோருக்கு பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆடி அமாவாசையாகும்.

எங்கள் முன்னோர்களான பிதிர்களை வழிபட்டால் தோசங்கள் நீங்கி நல் வாழ்வு பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பல புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடி மக்கள் தங்கள் பிதிர்களுக்கு நன்றி செலுத்துவதுடன் பாவவிமோசனமும் அடைகின்றார்கள் என்பது ஐதீகம்.

http://paddathumsudd...-post_6094.html

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று கோயிலில் குடித்தேன் கல் கடிபட்டது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ஆடி அமாவாசை அப்பா இல்லாதவர்கள் விரதம் பிடியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கூழ் குடிச்சன்....நேற்று..

நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா...

யாழ்ப்பாணக் காலாசாரத்தில் நிலைத்து நிற்கும் ஆடிப்பிறப்பு.

.

யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும்.

ஆடிப்பிறப்பினை கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் உள்ளனர். இந்த அளவுக்கு ஆடிமாதத்தின் சிறப்பு பண்டைய யாழ்ப்பாணத்து மூத்த குடியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சமும், பெருமைப்படவேண்டிய அம்சமும் என்னவென்றால், பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டுவருவதே ஆகும்.

தமிழ்நாட்டு தமிழர்கள் கூட ஆடிமாதம் வந்துவிட்டால் பெரும்பாலும் அம்பாள் கோவில்களில் கூழ் ஊற்றல் என்ற சடங்கினை செய்துவருகின்றனர் எனினும் யாழ்ப்பாண மக்களைப்போல தமிழில் ஆடிமாதம் முதலாம் நாளில் தமக்கே உரிய வகையில் அந்த நாள் மட்டும் சமைக்கும் இனிப்பு கூழ்பற்றி அவர்கள் அறியமாட்டார்கள்.

ச ரி பண்டைய யாழ்ப்பாணத்து ஆதிக்குடியினர் ஏன் ஒரு மாதத்தின் தொடக்க நாளினை இப்படி கொண்டாடுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றதுதான். ஆனால் எந்த சமய சம்பிரதாய நூல்களிலோ அல்லது மத அனுஸ்டானங்களிலோ இந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் தரப்படவில்லை. அப்படி இருக்க யாழ்ப்பாணத்து மக்கள் ஏதோ ஒரு காரணத்தை மையமாக வைத்தே இந்த ஆடிமாத முதல் தேதியில் ஆடிப்பிறப்பினை கொண்டாட முற்பட்டுள்ளனர்.

சரி நாம் அறிந்த வகையில் ஆடிமாதத்தின் சிறப்பினை எடுத்துப்பார்த்தால், ஆடிக்காற்றுக்கு அம்மியும் பறக்கும் என்ற பழமொழிகளுக்கேற்ப, யாழ்ப்பாணத்தின் மீது தென்மேல் பருவக்காற்று பலமாக வீசும் காலம் இது, யாழ்ப்பாணத்தை நோக்கி தெற்கில் இருந்து வடக்காக காற்று வீசும். இந்தக்காலத்திலேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் வர்ண வர்ணமாக, வித விதமான வகையில் பல பட்டங்களை கட்டி வானில் பறக்கவிட்ட மகிழ்வார்கள்.

அதேபோல பண்டைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஆடி மாதத்தில்த்தான் பெரும்பாலும் கார்னிவேல்கள், வானவேடிக்கை விழாக்கள், களியாட்ட விழாக்கள் எல்லாம் நடந்ததாக பல மூதாதையர்களின் கதைவழியாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

அடுத்ததாக 12 மாதங்களை கொண்ட ஒரு ஆண்டில் முதல்பாக அரையாண்டு முடிவடைந்து அடுத்த பாகம் தொடங்கும் நாள் ஆடி முதலாம் நாள் என்றபடியால் இந்த நாளையும் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிக்கலாம் எனக்கருதப்படுகின்றது.

அதாவது தை மாதம் முதலாம் நாள் எவ்வாறு தைப்பொங்கல் என கொண்டாடி பொங்கல் செய்து படைத்து கொண்டாடுகின்றார்களோ அதேபோல, ஆடி மாதம் முதலாம் நாளினையும் கொண்டாட அவர்கள் தலைப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க முதல் பாக ஆண்டு தேவர்களுக்குரியதென்றும், அடுத்த பாதி ஆண்டு பிதிர்களுக்கு உரியதென்றும் கூறப்படும் ஒரு ஐதீகமும் இருப்பதன் காரணத்தினால், இனிப்பான கூழும், கொழுக்கட்டையினையும் சமைத்து பிதிர்களுக்கு படைத்தனர் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.

எது எப்படியோ உற்று நோக்கினால் யாழ்ப்பாணத்தில் ஆடிமாதம் என்பது ஒரு மகிழ்ச்சியானதான மாதமாகவே இருக்கும் ஏனெனில் காற்றில் பட்டங்கள் விடுவதும், யாழ்ப்பாணத்தின் மக்கள் விழா எனக்கருதக்கூடிய நல்லார் கந்தசுவாமி கோவில் பேருட்சவம் இந்த மாதம் முழுமையாக இடம்பெறுவதாலும், இதன்காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளி இடங்களுக்கு சென்றவர்கள் அனைவரும் ஒன்று கூடும் காலமாக இருப்பதால் நவீன காலத்தில்க்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான காலரமாகவே தெரிகின்றன.

ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படி கொண்டாடப்பட்டது என்பதும். அதன் முதல்நாளே நாளைய ஆடிப்பிறப்பு பற்றி சிறுவர்கள் கொள்ளும் சந்தோசத்தையும் மையமாக வைத்து நவாலியூர். சோமந்தரப்புலவர் என்ற யாழ்ப்பாணத்து சிறந்த புலவர் ஒருவர் பாடியுள்ள பாடலில் இருந்து தெரியவருகின்றது. இதிலிருந்து ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பிற்கு யாழ்ப்பாணத்தில் விடுமுறை விடப்பட்டுள்ள வரலாறும் புலப்படுகின்றது.

சரி அந்தப்பாடலை இந்த நாளில் மீட்டிப்பார்ப்பது சிறப்பாக இருக்கும்…

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தம் தோழர்களே!

கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்

பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,

வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரில் சக்கரையுங்கலந்து,

தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி

சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி

வெல்லக் கலவையை உள்ளே இட்டு

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டு மாவுண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே

குத்து விளக்குக் கொளுத்தி வைத்து

அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல

மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தந் தோழர்களே

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

என அந்தப்பாடல் வரிகள் அமைந்துள்ளது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் அடிப்பிறப்புக்கு கூழ் எப்படி ஆக்குவது என்ற ரெசிப்பியையும் புலவர் பாடலிலேயே தெரிவிததுள்ளதான்.

எனவே யாழ்ப்பாண மக்கள் ஆடிப்பிறப்புக்கு வழங்கியிருந்த முக்கித்துவம் இந்தப்பாடலில் இந்து புலனாகியிருக்கும்.

இன்று கடந்தகால மூன்று தசாப்த யுத்தத்தின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் கூடிழந்த குருவிகளாக சிதறிப்போய் வௌ;வேறு நாடுகளின் கூடுகளில்அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் தாம் எங்கெல்லாம் இக்கின்றார்களோ அங்கும் தமது கலாசாரங்களை மறக்காமல் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை பேணிவழர்ப்பதற்கு உலகத்தமிழினமே எழுந்து நின்று ஒரு சபாஸ் போடலாம்.http://www.tamilmurasuaustralia.com/2012/07/blog-post_5620.html

  • தொடங்கியவர்

திருமதி வெகுமதியாய் கூளும் கொளுக்கட்டையும் செய்து தந்தாவா

[size=4]ஓ........ செய்து தந்தாவே வெகுமதியாய் .[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கோமகன்! பலரும் செய்ய அலுப்புப்படும் வேலைகளையும்,இணைப்புகளையும் நீங்கள் எமக்கு தந்துதவுகின்றீர்கள்.அதாவது எமது பாரம்பரியம் ஒட்டிய பல தகவல்களை இங்கே கொண்டுவந்த பெருமை உங்களையே சாரும். snap1dl1.gif

  • தொடங்கியவர்

நான் நேற்று கோயிலில் குடித்தேன் கல் கடிபட்டது :lol:

[size=4]அதிகம் ரேக் எவே க்கு அலைந்தால் இப்படித்தான் கல்லு கடிபடும் அக்கை . உங்கள் நேரத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் .[/size]

[size=4]புத்தா முடிந்தால் ஒருமுறை இடைவெளியைக் குறைத்து எடிற் செய்து விடமுடியுமா?[/size]

  • தொடங்கியவர்

நன்றி கோமகன்! பலரும் செய்ய அலுப்புப்படும் வேலைகளையும்,இணைப்புகளையும் நீங்கள் எமக்கு தந்துதவுகின்றீர்கள்.அதாவது எமது பாரம்பரியம் ஒட்டிய பல தகவல்களை இங்கே கொண்டுவந்த பெருமை உங்களையே சாரும். snap1dl1.gif

[size=4]போங்கோ குசா........... எனக்கு செரியான வெக்கமாய் இருக்கு . உப்பிடி ஐஸ் வைக்கிறியளே .[/size]

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நாளைக்கு ஆடி அமாவாசை அப்பா இல்லாதவர்கள் விரதம் பிடியுங்கள்

[size=4]ஓ ............. பிடிச்சனே அக்கை . எனக்கு வீட்டில திறம் சாப்பாடு . ஞாபகப்படுத்தினதுக்கு நன்றியுங்கோ . கேட்டால் மனசில எடுக்காதையுங்கோ . நீங்களும் பிடிச்சியளோ ? அம்மா இல்லை எண்டு ஒருக்கா எழுதின்னீங்கள் .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.