Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தேர்தலிலும் தாங்களே வெல்ல வேண்டும் என்று நினைப்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்க கூடிய சராசரி ஆசை தான்...... ஆனால் அவற்றை நேர்மையான முறைகளில் மேற்கொண்டால் பாராட்டலாம் ஆனால் அதைவிட்டு விட்டு மற்றைய கட்சி வேட்பாளர்களுக்கு வேட்புமனுவே கிடைக்க கூடாது என்று நினைப்பதும் , தேர்தலில் நிற்க கூடியவர்களை விலைக்கு வாங்குவதும்.... வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும்..... தப்பி தவறி எந்த எதிர்கட்சியினரும் வென்று விடவே கூடாது என்று நினைப்பதும்.... ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல்.......இது ஒரு நாள் ஆட்சியை இழப்பதர்க்கே வழிவகுக்கும்.....மக்கள் தங்கள் பக்கம் என்று சொல்பவர்கள் ஏன் இப்பிடியான வேலைகளில் ஈடுபடனும்?

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு தனக்கு இருக்கிற மக்கள் பணியை மேலும் தெளிவுபடுத்துகின்றது என்றும், தந்தை செல்வா பாசறையிலும் சிறையிலும் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும், கட்சியின் மூத்த தலைவர் உடனான அனுபவங்கள், தம்பி பிரபாகரனுடனான நட்பு அனுபவங்கள் பற்றியும் ஆழமான உணர்வுடன் பகிர்ந்துகொண்டார்.

நான் என்பதற்கு அப்பால் நாங்கள் எல்லோரும் எமது தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைப்போம் என வேண்டுகோள் விடுத்தார்.

மாவை சேனாதி ராஜா

தலைவர்

தமிழரசுக்கட்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறவிட்டு விட வேண்டியவர்கள் , உடன் இருக்கையில் புரிகிறது , தவற விட்டவர்களின் அருமை...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்த தொழில்களும் தமிழகத்தை விட்டு வெளியேறினால் என்னாகும்....

கிட்டத்தட்ட இந்தத் தலைப்பில் உள்ள நிலையை நோக்கி தமிழகம் மெல்ல மெல்ல போய்க் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது. காரணம், தமிழகத்தில் தொழில் சூழல் மோசமாகி வருவதாலும், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாலும் பிற மாநில முதல்வர்கள் தமிழக தொழில் நிறுவனங்களை அவர்களது மாநிலங்களுக்கு ஈர்க்க ஆரம்பித்திருப்பதாலும் தமிழகத்தின் தொழில் நிலை மேலும் மோசமடையும் வாய்ப்பு வலுவாகி வருவதாக அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் முதலீட்டாளர்கள் நிச்சயம் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் மின்வெட்டும், மின்பற்றாக்குறையும்.

தொழில் மாவட்டமான கோவையும், திருப்பூரும் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது. பல மணி நேர மின் தடையால் இந்த மாவட்டங்களின் தொழில்கள் முடங்கிப் போகும் அளவுக்கு நிலைமை

என்ன செய்ய போகின்றது தமிழக அரசு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அமைதியாக இருந்தவாறு தீர்வை எதிர்பார்க்க முடியாது. தீர்வு தானாகவே வரும் என்ற மனப்பாங்கில் இருந்தால் எதுவும் இங்கு நடவாது. வெறுமனே போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எமக்காக யாரும் போராட வரமாட்டார்கள். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகள் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டு வரும் நாங்கள் முதலில் போராட வேண்டும். அதன் பின்னர் தானாகவே சர்வதேச சக்திகளும், அதன் ஆதரவும் கூடி வருமென்று த.தே.கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா போல் புன்னகை தவழும் முகத்துடன்

அய்யா போல் நெஞ்சு நிமிர்த்திய நடையுடன்

வயதான இந்தக் காலத்திலும் வாலிப முறுக்கு

எனக்கும் வந்தே தீரும் தம்பீ!

கலைஞர்

//////

இதனால் தலிவர் தளபதிக்கு சொல்ல வருவது eன்னவென்றால் ஆயுசு பூரா நீ இப்பிடியே தான் இருக்கணும் தப்பி தவறி முதல்வராக ஆசைப்பட்டுடாதே தம்பி.......

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.....

 

சுண்டு பிரதர் உங்கள் பதிவுகள் எல்லாம் வந்து பார்த்துட்டு போவேன்.அந்த வகையில் நிறைய விடையங்களை இணைப்பதற்கு மிக்க நன்றி.

 

முடிந்தவரைக்கு சகிப்புத் தன்மை அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் எல்லா நேரமும் சகிப்புத் தன்மையோடு இருந்து விடமுடியாது..இந்த உலகத்தில் எப்போதும் எவ்வளவுக்கு அப்பாவிகளாக இருக்கிறோமோ அந்தளவுக்கு மனதை காயப்படுத்திட்டு போறவர்களும் இருக்கிறார்கள்..எதிர்த்து  பேச,போராட ஆரம்பிக்கும் போது அதற்கும் மனதை கஸ்ரப்படுத்தும் படியான எண்ணப்பாடுகளோடு கூடிய எதிர்ப்பாக்காத  இலவச பட்டங்கள் கிடைத்த வண்ணமமே இருக்கிறது..சகிப்புத் தன்மையோடு எவ்வளவுக்கு இருக்கலாம்.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களே தமிழர்களே திடீர் என்று என்னுடைய வாலிபம் மீண்டும் திரும்பி இருப்பதை நான் உணர்வதால் அண்ணா வகுத்து தந்த பாதையில் .... பெரியார் காட்டிய வழியில் தி மு க என்ற இயக்கத்தின் முதுகெலும்பாம்......திராவிடர்களின் முள்ளம்தண்டாம்......எமது இளைஞர் அணியின் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ளலாம் என்று இருக்கின்றேன் .... ஆகவே இந்த கலைஞர் இளைஞர் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை காண அலை கடல் என திரண்டு வாரீர் வாரீர்... உடன் பிறப்பே..... உளுந்து வடையுடன் உனக்காக காத்திருப்பேன்.......

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக ஆயிரம் பச்சைப் புள்ளிகளோடு நிக்கிறீங்கள்..என்னுடைய வாழ்த்துக்கள்.1000. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய சமூகமே

நீ சீர்குலையவில்லை

உன்னை யாரும் சீர் செய்யவும் இல்லை

அதான்.... நீ உயரவே இல்லை ...

நாங்களும் மாறவே இல்லை ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைப் புள்ளிகளோடு நிக்கிறீங்கள்.. வாழ்த்துக்கள் தம்பி சுண்டல் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுன்டல் , 1001  ஹா  ஹா ஹா...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக புரட்சிப்படை

தமிழர்களின் கவனத்திற்கு !!.....

இதை படித்தால் ரத்தம்

கொதிக்கும் ,

தயவு செய்து ,2நிமிடம்

ஒதுக்கி ,கண்டிப்பா

க,படிக்கவும்,

படிக்கவும் ,படிக்கவும் ,பகிரவும்,

பகிரவும் இது நம் தமிழின

விடுதலைக்கு உதவும்........ .

கருணாநிதியை ஏன்

துரோகி, எட்டப்பன்

என்று சொல்கிறோம்?

இனப்படுகொலை சமயத்தில்

அவர் அப்படி என்ன செய்தார்?

இது போன்ற

கேள்விகளுக்கான சில

விளக்கங்கள் உதாரணத்தோடு:

(இவற்றை படித்துவிட்டு நண்பர்களிடம்

பகிருங்கள். திமுக, என்ற

உதவாக்கரை கட்சிகளையும்

அப்புறப்படுத்துவோம்)

1. தமிழீழப் படுகொலை நடந்த

2008-2009இல் மத்திய அரசுக்கான

ஆதரவை வாபஸ்

பெறப்போகிரோம்

என்று சொல்லிவிட்டு பின்னர்

பின்வாங்கினார்

2. தமிழீழ ஆதரவாளர்கள்

கைது செய்யப்பட்டு சிறையில்

அடைக்கப் பட்டனர் ... சட்டம்

இவர்களுக்கு மட்டும்

கடுமையாக்கப்பட்டது.

3. போராட்டங்களுக்க

ு காவல்துறை அனுமதி மறுத்தது

4. போரை நிறுத்து என

துண்டறிக்கை கொடுத்ததற்காக

மே பதினேழு இயக்க தோழர்கள்

13 பேர் 10 நாட்களாக

புதுக்கோட்டை சிறையில்

அடைத்தனர்

5. கருணாநிதி ஆட்சி மாறும்

வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘

முத்துக்குமார்’, ‘இலங்கை’

என்று பேசும், எழுதப்பட்ட எந்த

வித துண்டறிக்கைகளோ,

சுவரொட்டிகளோ அச்சகங்கள்

அச்சடிக்க தடையை திமுக

அரசு விதித்திருந்தது.

இதை அச்சிட்ட

அச்சகங்களை கண்டறிந்த

காவல்துறை சிலவற்றை மூடியதும்,

வழக்கு பதிவு செய்து அச்சுக்

கூடங்களை கையகப்படுத்தியத

ும் நடந்தது.

6. கடற்கரை ஓரத்தில்

காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்

டு தமிழீழத்தில்

இருந்து வருபவர்களை கைது செய்வதும்,

உதவி பொருட்கள்

அனுப்பபடுவது தடுக்கபட்டும்

செய்யப்பட்டது.. மறைந்த தோழர்.

புதுக்கோட்டை முத்துக்குமார்.

இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணாநிதியை விமர்சனம்

செய்தார்கள் என்பதற்காக

சிவனடியார்களை மூன்று மாதம்

பொய் வழக்கில்

சிறை வைக்கப்பட்டார்கள்

8. தமிழீழ போர்

சி.,டிக்களை தமிழக

காவல்துறை பறிமுதல்

செய்தது. அத்தகைய

சி.டிக்களை நகல் எடுக்க

முடியாமல் தடை செய்தது.

காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த

எங்களது தோழர் திருச்சியில்

கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும்

என தொடர்ந்து போராடிய

வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக

அரசு.

10. சுவரொட்டிகளை திமுக

அரசின்

காவல்துறை இரவோடு இரவாக

கிழித்துப் போடுவார்கள் .

அல்லது சுவரொட்டிகள்

பறிமுதல் செய்யப்படும்.

ஒட்டுபவர்கள்

கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப்

படுகொலையை கண்டித்தும்,

திமுக

அரசினை விமர்சித்து பேசினார்

என்பதற்காக புஇமு தோழர்

நெல்லையில் கடுமையாக

காவல்துறையால்

தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய்

வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார்

தீக்குளித்ததும் அவர் தமிழ்

தீவிரவாதி என

தனது ஊடகங்களில்

செய்தி வெளியிடச் செய்தார்.

பிணத்தை வைத்து அரசியல்

செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான

பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும்.

கடன் தொல்லையாலும்., உடல்

நலக் கோளாறினாலும்,

குடித்துவிட்டும்

தற்கொலை செய்தார் என

செய்தி வெளியிட

வைத்தது அரசு.

பின்பு இதை மாற்றி எழுதவைக்க

போராட்டம் நடத்த

வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர்

புகைப்படத்தை சுவரெழுத்தில்

கூட அழிக்க உத்தரவிட்டிருந்

தார் கருணாநிதி..

விடுதலை சிறுத்தைகளுக்கே

கூட இது ந்டந்தது. அவர்களின்

சுவரெழுத்தில் பிரபாகரன்

படம்

கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது

15. மூன்றாவது ஈகியரான

சென்னை அமரேசன்

எழுதி வைத்திருந்த கடிதம்

காவல்துறையால் கைப்பற்ற

பட்டு அழிக்கப்பட்டது.

இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின்

நினைவு ஊர்வலமும்

உடனடியாக நடத்த

கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது

.

17. தமிழீழ போர் காட்சிகள்

தொலைக்காட்சியிலோ,

ஊடகத்திலோ வெளியிடக்கூடாது

என சட்டம்

கொண்டுவந்து தடுத்தார்.

18.

போர்காட்சிகளை வெளியிடலாம்

என உயர் நீதி மன்றத்தில்

சென்று உணர்வாளர்கள்

உத்தரவு வாங்கி வந்த உடன்

‘மக்கள்’

தொலைக்காட்சி அதை வெளியிட்டது.

உடனடியாக அந்த

தொலைக்காட்சி அலுவலகத்தில்

காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிட

ில்

உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென

காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல்

திமுக ஆட்சியில் இருக்கும்

வரை அச்சகங்கள்

அச்சடிக்கவில்லை.

மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்

டன.

20 சென்னை மற்றும் இதர

இடங்களில் உள்ள

அரசு கருத்தரங்க கூடங்கள்

தமிழீழ பிரச்சனைக்கும்,

தமிழீழம் சாரத தமிழர்

பிரச்சனை, தமிழ்

மொழி பிரச்சனை என்ற

எதற்கும் கருத்தரங்கம் நடத்த

அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய

பாவணர் அரங்கம்

ஒவ்வொருமுறையும்

காவல்துறை அனுமதி பெற்று ந்டத்தவேண்டும்

என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

போர் முடியும்

வரை இங்கு எந்த நிகழ்வும்

தமிழர்

பிரச்சனை சார்ந்து நடத்த

அனுமதிக்கப்படவில்லை..

22. தமிழீழப் போரை நிறுத்த

வேண்டும் என்று பொதுக்

கூட்டத்தில் பேசியதற்காக

கொளத்தூர்மணி, மணியரசன்,

சீமான் கைது செய்யப்ப்ட்டனர்

சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான்

கைது செய்யப்பட்டார்

பேசியதற்காக. நெல்லையில்

இருந்து அவர் தலைமறைவாக

வெளியேறி பல

ஊர்களுக்கு பயணம்

செய்து பேச

வேண்டி இருந்தது. சீமானும்,

அமீரும் கைது செய்யப்பட்டார்க

ள்.

24. நாஞ்சில் சம்பத்தும்,

கொளத்தூர் மணியும்

திரும்பவும்

கைது செய்யப்பட்டார்கள்.

25

சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க

முயற்சி செய்து, திரள

அனுமதி மறுக்கப்ப்ட்டதால்

‘கருப்பு பலூனை’ பறக்க

விட்டார்கள் என்பதற்காக

இயக்குனர்.

பாரதிராஜா உள்ளிட்ட

திரைப்பட உணர்வாளர்கள்

கைது செய்து சிறையில்

அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ

வண்டி தாக்குதலுக்காக பல

உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய்

வழக்கில் சிறையில்

அடைத்தது

27.

முத்துக்குமாரை இழித்து பேசினார்

என்பதற்காக ஈ.வி.கே.எஸ்

வீட்டில்

அருகே சென்று முற்றுகையிட

சென்ற இயக்குனர் செந்தமிழன்,

அருணா பாரதி உள்ளிட்ட 40

பேர் ஒரு மாதத்திற்கும் மேல்

கோவை சிறையில்

அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின்

மரணத்தின் ஊர்வலத்தின்

போது கல்லூரிகள், பள்ளிகள்

காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட்

அலுவலகத்தை தாக்கினார்கள்

என்று தோழர்களை கைது செய்து சிறையில்

அடைத்தது

30. போரில்

காயமடைந்து எவரேனும்

தமிழகத்தின்

மருத்துவமனைகளில்

சிகிச்சை பெற

வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்

டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது.

மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட

அத்தியாவசிய பொருட்கள்

தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல்

செய்யப்ப்ட்டது. இதையும்

மீறி ரத்தம்

மருந்து பொருட்களை அனுப்பினார்

என்பதற்காகத்தான் திமுக

அரசால் 2010இல்

புதுக்கோட்டை முத்துக்குமார்

கைது செய்யப்பட்டார். திமுக

ஆட்சியில் தான் அவர்

கொலையும் செய்யப்பட்டார்.

.......

நன்றி .ஈழபாரதி பாரதி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியின் துன்பியல் சம்பவத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இப்பொழுது நெருங்கி வரத்தொடங்கி இருக்கும் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக தமிழர்களை பிரிக்க வைக்க மீண்டும் அந்நிய சக்திகள் தமிழகத்தை பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு பார்த்த ஈழத்தமிழர் என்ற புது கதையுடன் ஆரம்பித்து இருக்கின்றார்கள்..... சில நேரம் இது இரண்டு தமிழர்களையும் பிரிக்க நடந்த உண்மை சம்பவமாக கூட இருக்கலாம்...... தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாக பெருகி வரும் ஆதரவை தமிழர் விரோத போக்கு சக்திகள் எவையும் விரும்பபோவதில்லை...... ஆகவே ஒரு சிலரை வைத்து சுப்பிரமணிய சுவாமி அண்ட் கோ ஆடுகின்ற நாடகமாக கூட இருக்கலாம் எதற்கும் தமிழர் தாப்பு விழிப்புடன் இருப்பது அவசியம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னி ராசிக்கு ஏழரை சனி முடிகிறது

போட்டு ஒரு ஆட்டு ஆட்டி உலுக்கி குலுக்கிட்டு தான் போறாரு.....அப்பிடியே திரும்பி பாக்காம போய்டுங்க......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்:

வெடி வைத்தும் பயப்படாத குரங்குகள் நடிகை சுஹாசினியை பார்த்து தெறித்து ஓட்டம்////////

ஹா ஹா.......பாவம் மணிரத்தினத்தால தான் எதுவும் பண்ண முடியல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பதற்குக் கூட

இரண்டு பேர் வேண்டியிருக்கிறது...

தனியாக சிரித்தால்

பைத்தியம் என்கிறார்கள்....

எனக்கு அதைப் பற்றி கவலையில்லை....,

நான் அழத்தானே போகிறேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிட்னியில் ஒரு பிரதேச அரசாங்க மருத்துவமனையில் மட்டும் கிட்டதட்ட 20 ஈழத்தமிழ் மருத்துவர்கள் கடமையாற்றுகின்றார்கள்.....

‪#‎தமிழேண்டா‬ .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவியாக தோற்றமளித்த அறிஞன்.எதிராளியையும் வசப்படுத்திய வைசியன்.குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.

இன்று அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள்.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் "தளபதி" .பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான்.

பள்ளியில் படிக்கும்போதே பொடி போடும் பழக்கம் கொண்டவர்.கல்லூரிக் காலத்தில் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு ஆளானார்.அதன் காரணமாக எச்சில் துப்ப வகுப்பில் ஜன்னல் ஓரமாகஅமர்ந்துகொள்வார்.

வெற்றிலை போடும் பழக்கம் அவரின் மரணம் வரை இருந்தது.

பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து "திராவிட முனேற்ற கழகம்" என்ற தனி கட்சி கண்டார்.இருந்த போதிலும் பெரியாரை " என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் " என்று பெரியாருக்கு மகுடம் சூட்டினார்.

அண்ணாவின் மனைவி பெயர் ராணி.இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.தன் அக்கா மகள் சௌந்தர்யாவின் குழந்தைகளான பரிமளம்,கௌதமன்,இளங்கோ,ராஜேந்திரன் ஆகியோரை தத்தெடுத்து வளர்த்தார்.

தலை சீவமாட்டார்.கண்ணாடி பார்க்க மாட்டார் மோதிரமும்,கைகடிகாரமும் அணிவது கிடையாது.என்னை காலண்டர் பார்க்கவைத்து,கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே இந்த முதமைச்சர் பதவி என்று அடிகடி சொல்லிகொள்வார்.முதமைச்சராக இருந்து அவர் மறைந்த போது அவரிடம் இருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம்,ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு,நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூ. 5000, மைலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ.5000. இவை மட்டும்தான் அவர் விட்டு சென்ற சொத்துக்கள்.

அண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொது கூட்டங்களில் பேசக்கூடியவர்.அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது.அப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு.அது தேர்தல் நேரம்.அவர் பேசியது " காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை,போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை......என்பதே அந்தப் பேச்சு.

ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமைக் கொண்டவர் அண்ணா.அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. யேல் (yale ) பல்கலைகழகத்தில் அவர் ஆற்றிய உரை ஒரு வரலாற்று சம்பவம்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.

அறிஞர் அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராக பதவி வகித்தார். 1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னையும்,கழகத்தையும் அதில் தீவிரமாக ஈடு படுத்திகொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும்,தி.மு.க விற்கும் கிடைத்தது.

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார்அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார்.

மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.அண்ணா அவர்கள் சாதுர்யமாக பேசுவதில் வல்லவர். ஒரு முறை தமிழக சட்டமன்றத்தில் எதிர் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அண்ணாவை பார்த்து " உங்களுடைய(ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன " என்று சொன்னதும் அண்ணா அதற்கு," என்னுடைய ஒவ்வொரு அடியும் அளந்து வைக்கப்படுகிறது" என்று நயம்பட பதில் கூறினார்.

1962 இல் அண்ணா மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்த்தை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.

"நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்

என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்."

அண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றளும் பெற்றவர்.

"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அதுபோன்றே " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு,

இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் இலங்கையும் இந்தியாவும் சொல்ல போவது புலிகளால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து என்று தான்......

‪#‎தமிழன்டா_புலிகள்டா_செம_அடிடா_கனவிலையும்_புலிடா_உருப்படவிடாத_அரசியல்டா‬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றில் ஆஜராகும் போது புலிகளால் எனக்கு ஆபத்து ஆகவே பாதுகாப்பு வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று அதிக பாதுகாப்பு கொடுத்தால் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியே .....

புலிகளை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் அம்மா அவர்களுக்கு நன்றிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டு கருணாநிதி இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதி செய்ததை தான் அவரும் செய்திருப்பார்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மக்கள் உடனடியாக சிங்கள மொழியை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் உள்ள பதில் பிரதி இந்திய தூதுவர் எஸ்.டி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.///////////////////

முதல்ல தமிழ் நாட்டில போய் ஹிந்தி படிக்க சொல்லுங்க உங்கள செருப்பால அடிச்சு கலைப்பாங்க.....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மக்கள் உடனடியாக சிங்கள மொழியை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் உள்ள பதில் பிரதி இந்திய தூதுவர் எஸ்.டி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.///////////////////

முதல்ல தமிழ் நாட்டில போய் ஹிந்தி படிக்க சொல்லுங்க உங்கள செருப்பால அடிச்சு கலைப்பாங்க.....

 

 

அங்க  சொல்லப்பயந்து தான்

கேட்க  நாதியற்ற  ஈழத்தமிழனிடம் சொல்கிறாரோ..?

இங்கு சொன்னதுக்கும் அம்பிட்டால்

அங்க வாங்குவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.