Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமை இரவை

இனிமையாக்க

இளையராஜாவின் ஒற்றை பாடல் போதும்....

இசையில் ஆயிரம் மாறுதல் வரலாம்...

ஆனால் ஆன்மாவிற்கு ஆறுதல் தருவது என்றும் ராஜாவின் இசை தான்....

காதல் கொண்டேன்

கனவினை வளத்தேன்...

கண்மணி உனை நான்

கருத்தினில் நிறைத்தேன்...

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே...

நீயில்லாமல் எது நிம்மதி

நீதான் என்றும் என் சன்னிதி...

கண்ணே கலைமானே

கன்னி மயிலென

கண்டேன் உனை நானே...

#ராஜா sir... U r great

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிசும், அவரின் மனைவி அம்ரு தாவும், மும்பையில் இருந்து நாக்பூருக்கு நேற்று முன்தினம் விமானத்தில், 'எகானமி' வகுப்பில் பயணம் செய்தனர்;//////////

தமிழக தலைவர்கள் என்றால் தனி விமானம்......என்ன.....சுத்த வர பாதுகாப்பு படை என்ன....வாகன அணிவகுப்புகள் என்ன.....செல்லும் சாலையில் போக்குவரத்தை தடை செய்வதென்ன....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனில் முதலானவன் ஈசன்... ஈஸ்வரன்... அந்த ஈஸ்வரனுக்கு நிகரானவன் சனி பகவான்.. அதனாலேயே இவனுக்கும் சனீஸ்வரன் என்று பெயர்...

இப்படிப்பட்ட சனீஸ்வரனையே அடக்கி தன்னுடைய சிம்மாசனத்தில் ஏறுவதற்கு படிக்கட்டாக படுக்க வைத்தானாம் ராவணன். அதனால் இவனுக்கு ராவணேஸ்வரன் என்று பெயர்...

அப்படி சனீஸ்வரனை படிக்கட்டாக படுக்கைவைக்கும் போது மந்திரி பிரதானிகள், மற்றும் தேர்ந்த ஜோசியர்கள் சொன்னார்களாம்... சனீஸ்வரனை குப்புறப்படுக்கவைக்க வேண்டும் என்று....

ஆனால் ராவணனோ , சனீஸ்வரனின் நெஞ்சில் கால் வைத்துதான் ஏற வேண்டும் என்று மல்லாக்க படுக்க வைத்தானாம்.... அப்படி நெஞ்சில் கால் வைத்து ஏறும்போது தொடர்ந்து பட்ட சனீஸ்வரனின் பார்வையாலேயே ராவணன் அழிவு உறுதியானதாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூப்பனாரின் "சைக்கிள்: இப்போது வேறு இரண்டு பேரிடம்.. அப்ப வாசனுக்கு என்ன கிடைக்கும்? /////

பேரிச்சம் பழமாவது கொடுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் புதிய இந்திப் படத்தில் நடிக்கிறார். ///////

ஷாருக் கானுக்கு அம்மாவா இல்லது அமீர் கானுக்கு மாமியா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முந்தைய "மைனாரிட்டி"தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கிரானைட் முறைகேடு மறைக்கப்பட்டு விட்டதாக "பினாமி"ஆட்சி நடத்தும் பொம்மை முதல்வர் பன்னீர் தனது அறிக்கையிலே பிதற்றியிருக்கிறார். கழக ஆட்சிக் காலத்தில் நான் முறைகேட்டினை மறைத்தேன் என்றால், அப்போது பன்னீர் எங்கே போனார்? நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருக்க வேண்டியது தானே? கழக ஆட்சிக் காலத்தில் எந்த நீதி மன்றமாவது, கிரானைட் முறைகேடு குறித்து, யார் தலைமையிலாவது விசாரணை நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டு, அதனை நான் ஏற்காமல் இருந்து விட்டேனா? அப்படி இருந்தால் பன்னீர் எடுத்துக் காட்டி யிருக்க வேண்டியது தானே?

கிரானைட் முறைகேடு பற்றி எழுதிய நாளேடு ஒன்றின் மீது; கழக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியிருப்பதோடு, அவரே அந்த அறிக்கையில் அந்த வழக்கு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்று அ.தி.மு.க. ஆட்சியில் கருத்துரிமையின் கழுத்தை நெரித்திடும் வகையில் எத்தனை பத்திரிகைகள் மீது அடுக்கடுக்காக அவதூறு வழக்குகள்? ஒப்பிட்டுப் பார்க்கப் பன்னீர் தயாரா?

‪#‎DMK‬ ‪#‎Kalaignar‬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்திகள் மற்றும் சில இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சேதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். மாவீரர் மாதம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த செயற்பாடுகள் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைனாரட்டி தி மு க அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இருந்த ஜெயலலிதா அண்ட் பன்னீர் கோ க்கு கருணாநிதி அதே பாணியில் திருப்பி அடிக்க தொடங்கிவிட்டார்.....

"பினாமி" அ தி மு க அரசு என்று.....

ஜெயலலிதா கூட நினைச்சிருக்க மாட்டார்....தங்களுக்கு இப்பிடி ஒரு நிலை வரும் என்று......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன் மியூசிக்ல அர்ஜுன்னோட ஜெய்கிந் பார்ட் 2 விளம்பரத்த பாக்க பயங்கர டெரரா இருக்கும் போல இருக்கு படம் , பட் ஜெய்கிந் 1 ல இருந்த கவுண்டமணி இல்லாதது மைனஸா இருக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3-வது முறையாக இலங்கை அதிபராவாரா : சுப்ரீம் கோர்ட் கருத்தை கேட்கிறார் ராஜபக்சே/////

முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவிர்க்கு நடந்தது தெரிந்தும் நீதியரசரால் சுதந்திரமா கருத்துக்கூற முடியுமா என்ன.....

நீங்க மூன்று தடவை என்ன முப்பது தடவை வேணும்னாலும் போட்டி போட்டுக்கலாம் ஐயா என்று நீதியரசர் பவ்யமா தீர்ப்பு கூறுவாரு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் வருது அவன் அவன் வெளிநாட்டில் அதை நடாத்தி முடிக்க இரவு பகலாக பல அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தாண்டி சிறப்பா செய்து முடிக்க ஒரு குரூப் இனி கெளம்பும்..... வெளிநாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய மாவீரர் நாளை தேசிய எழுச்சி நாள் என்று மாற்றினால் அது எப்பிடி அப்பிடி மாத்தலாம்..... மாவீரர் தின வரவு செலவு கணக்கு என்ன?(நடாத்திறவன் பல பேரு தங்க கை காச போட்டு நடாத்தி இருப்பான்) மண்டப வாடகைகளை ஈடு கட்ட சில உணவு பொருட்களை விற்றால் அது எப்பிடி மாவீரர் நாளில் கொத்து ரொட்டி விற்கலாம்? இப்பிடி பல கேள்விகள் கேட்ப்பார்கள் ..... மாவீரர் நாளை நடாத்த தோளோடு தோள் கொடுங்கள் என்றால் ரொம்ப சாரி எங்களால கேள்வி மட்டும் தான் கேட்க முடியும் என்று ஒதுங்கி விடுவார்கள்.....

நாளைக்கு பிறகு எப்புடி இலங்கைக்கு டூர் போறதாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொஹரம் பண்டிகைக்கு முஸ்லிம்கள் ஊர்வலம் போகலாம் என்றால்....எதற்கு RSS போக கூடாது?

#ஒட்டு வங்கி அரசியல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஜி-யைப் பற்றி வலியப் பேசி யாரையோ திருப்திப்படுத்த விஜய் வட்டாரம் நினைத்ததாகத் தெரிகிறது. எந்த குளிர்பானக் கம்பெனிக்கு எதிராக 'கத்தி’யில் குரல் கொடுத்தாரோ, அதே கம்பெனியின் பிராண்ட் அம்பாஸிடராகப் பல ஆண்டுகள் இருந்தவர்தான் விஜய். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்குள் மீண்டும் ஒப்பந்தம் வரும் சூழ்நிலை இருந்தது. ஆனால் 'தொகை’ கட்டுப்படி ஆகவில்லையாம். அது எல்லாம் சேர்த்துத்தான் சமூக அக்கறைக் குரலாக ஒலித்துள்ளது.

2001-ல் தி.மு.க. ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்துக்குச்சொந்தமான இடத்தை ஏலத்தில் எடுத்து மால் கட்டுவதற்கு முயற்சி செய்தார் விஜய். அந்த இடத்தில் பறக்கும் ரயில் பாதை வருகிறது என்பதால் மால் கட்டுவதற்கான அனுமதியை சி.எம்.டி.ஏ தரவில்லை. அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்தது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். தனக்கு மாற்று இடம் வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்தார்.

அவர் வாங்கிய இடத்துக்கு அருகில் அரசுக்கு சொந்தமான திருமண மண்டபம் இருந்தது. அந்த இடத்தை மாற்றாகத் தாருங்கள் என்று விஜய் கேட்டார். அதற்கு தி.மு.க வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் விஷயத்தைக் கிடப்பில் போட்டது அ.தி.மு.க அரசு. அடுத்து தி.மு.க ஆட்சி. மாற்று இடத்துக்காக மறுபடியும் கருணாநிதியிடம் வந்தார்கள். மாற்று இடம் தரப்பட்டது. இதனை விஜய்யும் மறந்திருக்க மாட்டார்

## ஜீ.வி.யில் வந்துள்ள கழுகார் பதில்கள்##

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை சரியா என்ற விவாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருதி தடையை நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்ட்டுள்ளது. /////

எங்கப்பா அம்மா புகழ் பாடித்திறிந்த சீமான் அண்ட் கோ மற்றும் விசில் அடிச்சான் குஞ்சுகள்......

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் வருது அவன் அவன் வெளிநாட்டில் அதை நடாத்தி முடிக்க இரவு பகலாக பல அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தாண்டி சிறப்பா செய்து முடிக்க ஒரு குரூப் இனி கெளம்பும்..... வெளிநாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய மாவீரர் நாளை தேசிய எழுச்சி நாள் என்று மாற்றினால் அது எப்பிடி அப்பிடி மாத்தலாம்..... மாவீரர் தின வரவு செலவு கணக்கு என்ன?(நடாத்திறவன் பல பேரு தங்க கை காச போட்டு நடாத்தி இருப்பான்) மண்டப வாடகைகளை ஈடு கட்ட சில உணவு பொருட்களை விற்றால் அது எப்பிடி மாவீரர் நாளில் கொத்து ரொட்டி விற்கலாம்? இப்பிடி பல கேள்விகள் கேட்ப்பார்கள் ..... மாவீரர் நாளை நடாத்த தோளோடு தோள் கொடுங்கள் என்றால் ரொம்ப சாரி எங்களால கேள்வி மட்டும் தான் கேட்க முடியும் என்று ஒதுங்கி விடுவார்கள்.....

நாளைக்கு பிறகு எப்புடி இலங்கைக்கு டூர் போறதாம்....

 

 

நன்றி  சுண்டல்

காலையில் மனதுக்கு ஒத்தடம் தரும் ஒரு கருத்து....

சரி  பிழைகளுக்கு அப்பால்  மாவீரரை நினைவு கூரணும்

அந்த நிகழ்வு உலகம் பூராகவும் நடக்கணும்

மக்கள் தமது மாவீரர்களுக்கான மரியாதையை  வெளிப்படுத்துவதன் ஊடாக

மாவீரர்களின் மீதுள்ள கறையை (பயங்கரவாதம்) போக்குவதுடன்

தமிழர்களது அபிலாசைகள்  சார்ந்து  என்றும் நாம் ஒற்றுமையாக நிற்கின்றோம்

அதேநிலையில் நிற்கின்றோம் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தணும்...

 

மாவீரர் மண்டபத்துக்கான  எனது பங்களிப்பு  இந்த வருடமும் வழமைபோல் செய்யப்பட்டுவிட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனில் முதலானவன் ஈசன்... ஈஸ்வரன்... அந்த ஈஸ்வரனுக்கு நிகரானவன் சனி பகவான்.. அதனாலேயே இவனுக்கும் சனீஸ்வரன் என்று பெயர்...

இப்படிப்பட்ட சனீஸ்வரனையே அடக்கி தன்னுடைய சிம்மாசனத்தில் ஏறுவதற்கு படிக்கட்டாக படுக்க வைத்தானாம் ராவணன். அதனால் இவனுக்கு ராவணேஸ்வரன் என்று பெயர்...

அப்படி சனீஸ்வரனை படிக்கட்டாக படுக்கைவைக்கும் போது மந்திரி பிரதானிகள், மற்றும் தேர்ந்த ஜோசியர்கள் சொன்னார்களாம்... சனீஸ்வரனை குப்புறப்படுக்கவைக்க வேண்டும் என்று....

ஆனால் ராவணனோ , சனீஸ்வரனின் நெஞ்சில் கால் வைத்துதான் ஏற வேண்டும் என்று மல்லாக்க படுக்க வைத்தானாம்.... அப்படி நெஞ்சில் கால் வைத்து ஏறும்போது தொடர்ந்து பட்ட சனீஸ்வரனின் பார்வையாலேயே ராவணன் அழிவு உறுதியானதாம்...

சனிச்வரனை குப்பற போட்டுவிட்டு இராவணன் ஏறி போயிருந்தால் ......
சனிச்வரரின் பார்வை நிலத்தில்தான் பட்டிருக்கும். இராவணன் அழிந்திருக்க மாட்டான்.
நாங்கள் எல்லோரும் இராவணனை சந்தித்திருக்கலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஆஸ்திரேலியா பிரஜைகள் யாரவது ebola தாக்குதலுக்கு ஆளானால் அவர்களை பிரிட்டிஷ் பிரஜைகளாக கருதி பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு உயர்தர சிகச்சையளிக்கும் உடன்படிக்கை ஓன்று ஆஸ்திரேலியா பிரிட்டிஷ் அரசுகளுக்கிடையில் எட்டப்பட்டிருக்கு.....மேற்காபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா 36 மணிநேரம் விமான பயண தூரத்தில் இருப்பதால் இந்த நடவடிக்கை .....

இது நாடு தன்னுடைய பிரஜைகளுக்காக என்னவெல்லாம் பண்ணுது..... எங்கட நாடுகளுக்கும் இருக்கே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் வெளியில் காட்ட தடை! - புதிய சட்டம்//////

எங்க எங்கட லீனா மணிமேகலை, ராஜேஷ் அக்கா போன்ற பெண்ணின புரட்சி போராளிகள்...?

ஓ அவிங்க உள்ளூர்ல நடந்தா மட்டும் தான் பொங்குவாங்க போல........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ சினிமா துறையில் பிழைப்பு நடத்துவன் மட்டும் இல்லை .. அந்த துறையில் உச்சத்தை தொட்டு தமிழனுக்கு பெயரும் புகழும் ஈட்டு தந்த மகா கலைஞன் .தமிழ் மேல் நீ வைத்த பற்று வேறு எந்த நடிகனும் வைக்காத பற்று அதனால் தான்

என்னவோ தமிழ் சினிமா கரையான் பிடிக்காத புற்று . நீ எழுதிய தமிழ் வெண்பா அது நீ தமிழ் மேல் வைத்த அன்பா பலர் நெஞ்சத்தில் தைத்தது அம்பா என்றும் இருக்க வேண்டும் நீ தெம்பா

Happy birthday kamal......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து தான் சாம்பாதித்த பணம் எல்லாவற்றையும் மீண்டும் சினிமாவில் போடும் ஒரே நடிகன் கமல் தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உங்களுடன் பேச விரும்பினால் உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ முதலில் கதைக்கப் பாருங்கள் . அவரது கருத்து கேட்பது மட்டும் தான் உங்கள் கடமை அதை ஏற்பதும் ஏற்றுக்கொள்ளததும் உங்களைப் பொறுத்தது . அவருடைய கருத்து உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமான தருணத்தில் உதவலாம்

#அப்போ நான் வட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீக் எண்டு என்ட உடன அதுவும் சமர் வேற வெள்ளையல் எல்லாம் fishing வெளிக்கிட்டாச்சு.....இதுவே நம்ம ஆக்கள் ஊர்ல இப்பிடி போட் எடுத்திட்டு பொழுது போக்குக்கு மீன் பிடிக்க கெளம்பினா.... அதுக்கு ஒரு ஜாதி பேர் வைச்சு வேற மாதிரி கதைக்க தொடங்கிடுங்க......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் எல்லாம் ரெஸ்டுரன்ட் போட்டே செமையா உழைச்சு தள்ளுறான்...... வெள்ளையளும் சீன உணவங்களில் தான் குவிஞ்சு போய் இருக்குதுகள்....

‪#‎அவதானிப்பு‬.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இன்னொரு முறை முதல்வர்

பதவியிலிருந்து விலக மாட்டேன்"

- கெஜ்ரிவால்

டூ லேட்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் நிறைவேறாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.//////

ஆக மொத்தம் தமிழக அரசும் அ தி மு க என்ற கட்சியும் குழம்பி போய் இருக்கும் குட்டை என்பதனை ஒத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றிகள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.