Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடியரசு தின விழாவில்...சூயிங்கம்மை மென்று கையால் எடுத்து திருப்பி வாயில் போட்ட ஒபாமா!/////

நீங்க என்ன தான் என்னைய கூப்பிட்டு ஓங்க இராணுவ பலத்த காட்டினாலும்......எங்களுக்கு இதெல்லாம் சூயிங்கம் மாதிரி அப்பிடியே சப்பிட்டு துப்பிடுவம் என்றத மோடிக்கு உணர்த்த தான் அப்பிடி செய்தாரோ?

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா இந்த வார சிரிச்சா போச்சி....சூப்பர்...

https://youtube.com/watch?v=45k7FMM7zZs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள், மலையக மக்களிடையே நான் ஒன்றை அவதானித்துள்ளேன். ஒரு சகோதரர் ஒரு கட்சியிலும் மற்றவர் இன்னொரு கட்சியிலும் இருப்பார்கள். யார் வந்தாலும் சகோதரர்கள் தங்கள் குடும்பங்களைப் பார்த்துக் கொள்வார்கள். நாங்களோ கட்சிக்காகக் காடைத்தனங்களில் ஈடுபட பின் நிற்க மாட்டோம். இந்த நிலை மாற வேண்டும்.

வடக்கு மாகாண முதல்வர்

விக்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி தன்னோட பேர டிசைன் போட்டு கோட்டு போட்டதுக்காக மோடிய காறி துப்பாதீங்கப்பா.....

ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு தன்னோட பேர டிசைனா போட்டு ஒருத்தர் கோட்டு போட்டிடாராம்.... ஆமா அவரு எகிப்து நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் அவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் தனக்கு ஆதரவாக ஒரு நாடும் இல்லையே என்று தவித்து வந்த ரஷ்ய நாட்டுக்கு சற்று ஆறுதலாக நடந்து முடிந்த கிரீஸ் நாட்டு தேர்தலில் ரஷ்ய சார்பு இடது சாரி கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது...... பதவி ஏற்று சில மணி நேரங்களிலையே ரஷ்யா மீதான பொருளாதார தடையை உடனே நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி விட்டார் கிரீஸ் பிரதமர்.....

ஏற்கனவே கிரீஸ் கடன்களால் தத்தளித்து வரும் நிலையில் பெரும்

கடனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கிய நிலையில் அவருடைய கருத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் எடுபடுமா என்றால்? ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் அதன் கருத்துகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பளித்தே ஆகவேண்டும்.......

ஆக ரஷ்யா விஷயத்தில் புட்டின் இருக்கும் வரை அமெரிக்கா பாடு சான் ஏற முழம் சறுக்கும் நிலைமை தான் ...

அப்ப நான் வட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மீக தேடல் அதிகமாகிவிட்டது .- சிம்பு.////

திரையுலகில் சம்பாதித்ததை விட நித்தி மாதிரி ஆகிட்டா நிறைய சம்பாதிக்கலாம் சிம்பு அப்பிடியே நித்திக்கு ஒரு ரஞ்சிதா மாதிரி..... உங்களுக்கு ஒரு நயன்தாரா கிடைக்காமலா போகும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருணின் வருங்காலப் படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!////

கணக்கு போட்டு தாய்யா கல்யாணம் பண்ணி இருக்கான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி சுற்று சனிகிழமை சிட்னியில் நடைபெற இருகின்றது........

இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா ,கொரியாவை எதிர்கொள்ளுகின்றது........இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அது வளர்ந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கி மிகப்பெரும் ஊக்கமாக அமையும்......

  • கருத்துக்கள உறவுகள்

வருணின் வருங்காலப் படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!////

கணக்கு போட்டு தாய்யா கல்யாணம் பண்ணி இருக்கான்....

olsk45egabfae.jpg

:huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் இருந்து விலகல்.....////

என்ன பண்ண காங்கிரஸ்க்கு குஷ்பூ வந்திட்டதால இந்தம்மாவ யாரும் கண்டுக்கிறாங்க இல்லையாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது என்னமோ தெரியா எல்லா நாடுகளுமே தமிழர் தரப்பை தான் விட்டு கொடுத்து போக சொல்லுகின்றார்கள்....... அனைத்தையும் தன்வசம் வைத்திருப்பவன் தான் விட்டுக்கொடுக்க வேண்டுமே தவிர...... எல்லாவற்றையும் இழந்து நிக்கும் தமிழர் தரப்பு அல்ல என்பதனை மறந்து அழுத்தம் மேல் அழுத்தம் கொடுக்கின்றார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னமோ தெரியா எல்லா நாடுகளுமே தமிழர் தரப்பை தான் விட்டு கொடுத்து போக சொல்லுகின்றார்கள்....... அனைத்தையும் தன்வசம் வைத்திருப்பவன் தான் விட்டுக்கொடுக்க வேண்டுமே தவிர...... எல்லாவற்றையும் இழந்து நிக்கும் தமிழர் தரப்பு அல்ல என்பதனை மறந்து அழுத்தம் மேல் அழுத்தம் கொடுக்கின்றார்கள்.....

 

இது  ஒரு கூட்டுவன்புணர்வு.....

அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்

நாதியில்லாதவனை யார் நாடுவார்....?? :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா சீனா காரங்களுக்கு வந்த சோதனை......சீனாவில் பெண்களுக்கு தட்டுப்பாடாம்....120 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற கணக்கில் தான் பெண்களின் எண்ணிக்கை சீனாவில் இருக்காம்.....

CHINA's bachelors are in crisis. There just aren't enough women to go around. With 120 men for every 100 women, single men are losing hope.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா சீனா காரங்களுக்கு வந்த சோதனை......சீனாவில் பெண்களுக்கு தட்டுப்பாடாம்....120 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற கணக்கில் தான் பெண்களின் எண்ணிக்கை சீனாவில் இருக்காம்.....

CHINA's bachelors are in crisis. There just aren't enough women to go around. With 120 men for every 100 women, single men are losing hope.

 

 கப்பலில் அவுசுக்கு அகதிகளாக வரும் பெண்களை சீனாவுக்கு அனுப்பி வைக்குமாறு அவுஸின் அரசிடம் வேண்டிக்கொள்ளவேண்டும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா Queensland மாநில தேர்தல் நடந்திட்டு இருக்கு பாப்போம் ......, கடந்த முறை லிபரல் கட்சியிடம் ஆட்சியை இழந்த தொழில் கட்சி இன்று ஆட்சியை கைப்பற்றுகின்றதா என்று.....2011 ஆம் ஆண்டு தொழில் கட்சியிடம் ஆட்சியை கைப்பற்றிய லிபரல் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்த்தியில் இருக்கின்றார்கள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா தென் கொரியன் பொண்ணுங்க எல்லாம் அழுதிட்டு போயினம் தங்க நாடு 1988 ஆம் ஆண்டுக்கு பிறகு final மட்டும் வந்திட்டு போயும் போயும் கால்பந்தாட்டத்தில் குழந்தை பிள்ளையான ஆஸ்திரேலியா கிட்ட தோல்வி அடைந்சிட்டுதாம்......நான் சொன்னன் வீட்ட போய் சுட சுட ஒரு பாம்பு சூப் வைச்சு குடிச்சீங்க எண்டா கவலை எல்லாம் பறந்து போய்டும் எண்டு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீன் பிடிக்க போன இடத்தில படகுக்குள் பாய்ந்த மீன் கையில் வைத்திருந்த போனை விழுங்கிடிச்சி அப்பிடின்னு சொல்லி கூட insurance claim பண்ணி இருக்காங்களாம்.....இங்க........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவோடு இரண்டுமுறை பேசியுள்ளேன் : உமாசங்கர் IAS

இவராவது பறுவாயில்ல......இரண்டு தடவை பேசி இருக்கார் ஆனா angel டிவிகாரன் சொல்லுறான் தன்ன இயேசு பரலோகத்துக்கு அழைத்து சென்று ஆண்டவரோடு போர்ட் மீட்டிங் ஏற்பாடு பண்ணி தந்தவராம் அப்போ ஆண்டவர் சொன்னவராம் உன்னோட டிவில நல்ல நல்ல நிகழ்ச்சி போடுறா அதனால எனக்கு மகிழ்ச்சி அப்பிடியே மெய்ன்டேன் பண்ணு என்று.... ஹா ஹா இன்னாங்கடா நடக்குது.....

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜேசுராஜாவுடன் ஐந்து வருடங்கள் ஒன்றாய் வேலை செய்திருக்கின்றேன்....! இப்ப எங்கிருக்கின்றாரோ,ஒருவேளை இதைப் பார்த்தால் என்னுடன் தொடர்பு கொள்ளட்டும்...!!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ISIS தீவிரவாதிகள் பிடியிலிருந்த ஜப்பானை சேர்ந்த மற்றொரு பிணைய கைதியும் தலை துண்டித்து படுகொலை.....////

யாருடைய கொலைகளிலும், உயிர் இழப்புகளிலும் சந்தோஷப்பட முடியாது, ஒவ்வொரு உயிர்களினும் பெறுமதி உலகத்தில் உள்ள மற்ற எல்லோரையும் விட ஈழத்தமிழினத்துக்கு நன்கு தெரியும்......அடக்கு முறைகளுக்கு எதிராக ஈழத்தமிழினம் மிக தீவிரமாக போராடிய 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களை அழிப்பதில் மிக தீவிரமாக சிங்களத்துக்கு உதவி வந்தது ஜப்பான் அதுவும் குறிப்பா சமாதானத்துக்கான விசேஷ தூதுவர் ஒருவரை நியமித்து முழுக்க முழுக்க சிங்களத்தின் எடுபிடியாகவே இருந்தது ஜப்பான்...... தமிழர்களின் நியமான கோரிக்கைகளை மறுத்து தீவிரவாதம் என அடையாளபடுத்தியது ஜப்பான்......தன்னுடைய நாட்டுக்கோ தன்னுடைய பிரஜைகளுக்கோ தமிழர் தரப்பால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத போதும் தீவிரவாதிகள் என்ற போர்வையில் தமிழர் விடுதலை போராட்டம் உலக நாடுகள் அனைத்தாலும் நசுக்க பட்ட பொழுது அதில் முன்னணியில் பாரிய நிதி உதவிகளை அள்ளி வழங்கியது ஜப்பான்..... தீவிர வாதத்துக்கும் விடுதலை போராட்டத்துக்கும் விளக்கம் தெரியாத உலகில் தமிழினம் கடுமையாக தண்டிக்க பட்டது...... இன்று தமிழினத்துக்கு எதிராக களத்தில் நின்ற நாடுகள் தீவிரவாதம் என்ற உண்மையான சொல்பதத்தையும் அதன் வலிகளையும் உணர தொடங்கி இருக்கும்.......இவை எல்லாவற்றையும் இப்பொழுது பேசி எதுவும் நடந்து விட போவதில்லை தான்..... ஆனால் இவர்களின் துரோகம்கள் தமிழனின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இறக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும்....

மனிதாபிமான உதவிகளில் ஈடுபடுவர்கள் பிடிக்கப்பட்டு இப்பிடியான கொடூரமான முறையில் கொல்லபடுவது கண்டிக்கப்பட வேண்டும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் ஒரு கூட்டம்..... வேறு ஒரு மதத்தின் புனித நூல் ஒன்றினை அறம் புறமாக விமர்சித்து கொண்டு இருக்கின்றார் உமாசங்கர் IAS .... அப்பொழுது அவருடைய தொண்டை .... அடைக்கிறது அருகில் இருந்தவர் தண்ணீர் எடுத்து குடுக்கின்றார் குடிக்க சொல்லி அதுக்கு உமாசங்கர் சொல்லுறார்..... இதெல்லாம் பிசாசின் வேலையாம்.... அதாவது தன்னுடைய மதத்தை பரப்புவதை பிசாசு தொண்டைக்குள் இறங்கி நின்று தடுக்கிறதாம்.... சோ இதுகெல்லாம் தண்ணி குடிக்க கூடாது.... என்று சொல்லி விட்டு பேச்சை தொடருகின்றார்......

அப்போ நெஞ்சு வலி வந்தாலும் இதயத்தில் இறங்கி நின்று பிசாசு சுத்தியலால் நச்சு நச்சுன்னு அடிக்கிது என்று சொல்லுவாரா?

தமிழகத்தின் தலைவிதி இவர்கள் உயர் பதவியில் இருப்பது.....

தமிழக அரசு அதிகாரி என்றால் அனைத்து மதத்துக்கும் சொந்தமானவராக இருக்கணும் இப்பிடி அடுத்தவன் மதத்த தப்பா சொல்லி பிரச்சாரம் பண்ணுறவனா இருக்க கூடாது....

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு நிர்வாகக்கூட்டத்துக்கு போயிருந்தேன்

நாங்கள் இருந்த மாடிக்கு மேல் மாடியில் இவர்களின் ஆராதனைக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது

சத்தம் எமக்கு  இடைஞ்சலாக இருந்தது

அவர்களது கூட்டம் முடிய

ஒருவர் தள்ளு வண்டிலில் வந்தார்

கொங்கோ நாட்டில் 250 பயணிகளுடன் விழுந்த விமானத்தில் தப்பித்த ஒரே ஒருவராம்....

இப்படியானவர்கள் செய்யும் பிரச்சாரம்

மிக எளிதில் கவர்ந்துவிடுகிறது.

அவருடைய  படத்தையும் 

விமானத்தின் தகவல்களையும் கேட்டிருக்கின்றேன்

கிடைத்தால் அதை ஒரு திரியாக விவாதிக்கலாம்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பாவாடை, தாவணிக் கதைகளாக வருவதால், சில காலம் தமிழ் சினிமாவிற்கு லீவு விட்டு விடலாமா என்ற முடிவில் இருக்கிறாராம் நடிகை லட்சுமி மேனன்./////

ஏன் பாப்பா சமந்தா மாதிரி டவுசர் போடுற கதை வந்து அதில நீங்க நடிச்சா பாக்க கூடிய மாதிரியா இருக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு நிர்வாகக்கூட்டத்துக்கு போயிருந்தேன்

நாங்கள் இருந்த மாடிக்கு மேல் மாடியில் இவர்களின் ஆராதனைக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது

சத்தம் எமக்கு இடைஞ்சலாக இருந்தது

அவர்களது கூட்டம் முடிய

ஒருவர் தள்ளு வண்டிலில் வந்தார்

கொங்கோ நாட்டில் 250 பயணிகளுடன் விழுந்த விமானத்தில் தப்பித்த ஒரே ஒருவராம்....

இப்படியானவர்கள் செய்யும் பிரச்சாரம்

மிக எளிதில் கவர்ந்துவிடுகிறது.

அவருடைய படத்தையும்

விமானத்தின் தகவல்களையும் கேட்டிருக்கின்றேன்

கிடைத்தால் அதை ஒரு திரியாக விவாதிக்கலாம்

அப்போ இன்னும் கொஞ்ச நாட்களில் விசு அண்ணாவும் அல்லேலூயா என்று கொண்டு திரிவதை நாங்கள் கணாலாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழ் சாதிக்காரர்கள் படித்து பதவிக்கு வந்து தங்களையே அதிகாரம் பண்ணுவதை விரும்பாத ஆதிக்கசாதி குடும்பம் ஒன்று, தங்கள் கிராமத்தில் கீழ் சாதிக்காரர்கள் யாருமே படிக்கக் கூடாது என்று அராஜகம் பண்ணுகிறது. அதை எதிர்த்துப் பேசும் பத்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று மரத்தில் தொங்க விடுகிறது.

ஆதரவற்ற அந்த சிறுமியின் அக்கா, இந்த கொடியவர்களை எப்படி பழிவாங்குகிறாள் என்பது மீதிக் கதை.

முதல் பாதியை தன் பாணியில் ஜாலியாக நகர்த்திச் செல்கிறார் எஸ்ஏசி. ஒரு நடிகராக, மிகையின்றி நடித்திருக்கிறார். உடலால் வயதானாலும் மனதால் என்றும் இளமையாக இருக்கும் அந்தப் பாத்திரத்தின் குணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு வலது, இடது கரங்களாய் நின்று பேருதவி புரிந்திருக்கிறார் இளையராஜா.

‪#‎டூரிங்‬ டாக்கீஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.