Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தில் ஜோடிகளாக திரிபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் -இந்து முன்னனி////

ஏனுங்க ரோடுல ஜோடியா போற ஆடு மாடு நாய் பூனை இதுங்களையும் பிடிச்சி கல்யாணம் கட்டி வைப்பீங்களா அன்னைக்கி...

 

 

அதுக்கு எதற்காக இத்தனை பதட்டம் சுண்டல்... :wub:

ஒன்றா?

இரண்டா....?? :lol:  :D

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.///

அப்ப இதுகள என்ன செய்ய ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் அதி மேதகு அதி உயர்..... திரு சுமந்திரன் அவர்கள் தன்னுடைய நியமன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா

செய்து முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாக்கு அந்த இடத்தை விட்டு கொடுத்தால் தேசிய இணக்க அரசியல் செய்ய வசதியா இருக்கும் அப்புறம் சிங்களவனும் தமிழனும் ஒண்ணுக்க ஒன்னு ஆகிடலாம்........

இப்பிடிக்கு இணக்க அரசியலில் புதிதாக இணைந்திருக்கும்

முன்னாள் தமிழ் தேசிய வாதி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்கிழமை கூட இருக்கும் ஆஸ்திரேலியா லிபரல் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் அனேகமாக ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நீக்க படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது....... அவரின் தலைமையில் கட்சிக்கான மக்கள் ஆதரவு கடுமையாக குறைந்திருப்பதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி கூட்டத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருக்கின்றார்கள்...... தீர்மானம் வெற்றி பெற்றால் இவர் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான்......

அரோகரா .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலுவின் மிக பிரபலமான காமடிகளில் ஒன்றான இதில் வடிவேலோடு இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் செல்லத்துரை அவர்கள் இன்று மரணமடைந்தார்.........அஞ்சலிகள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை கைவிடுகின்றதா அமெரிக்கா...?////

என்னைக்கு தமிழர்களின் கைய பிடிச்சிருக்கு அமெரிக்கா? இனி கைய விட?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்... படத்துக்குப் படம் பிரமிப்பைத் தருகிறார். வேலையில்லாப் பட்டதாரியில் பார்த்த தனுஷ் சுண்டக் காய்ச்சிய பட்டை சாராயம் என்றால், இந்த ஷமிதாப்பில் அவர் ராயல் ஸ்காட்ச் மாதிரி அத்தனை க்ளாஸிக்

தனுஷின் தோற்றம், ஸ்டைல், குரலற்ற ஆவேச வாயசைப்பு... தான் ஒன்று சொல்ல முயல... அதற்கு நேரெதிராக அமிதாப் பேசி மாட்டிவிடும் காட்சியில் அவர் முகத்தில் காட்டும் ஆத்திரம், இயலாமை... சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நூறு சதவீதம் தகுதியான கலைஞன். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துவிட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேர்ல்ட் கப் கிரிக்கெட் தொடங்க போகுது......எந்த மேட்ச் போய் பாக்கிறதெண்டு தான் தெரியல்ல.....

இலங்கை அணி விளையாடுற மேட்ச் பாக்க போனா அப்புறம் நம்மள துரோகி ஆக்கிடுவாங்க......

  • கருத்துக்கள உறவுகள்

வேர்ல்ட் கப் கிரிக்கெட் தொடங்க போகுது......எந்த மேட்ச் போய் பாக்கிறதெண்டு தான் தெரியல்ல.....

இலங்கை அணி விளையாடுற மேட்ச் பாக்க போனா அப்புறம் நம்மள துரோகி ஆக்கிடுவாங்க......

 

 

ஒன்றை  கொடுத்துத்தான் இன்னொன்றை  வாங்கணும் சுண்டல்..

 

சிங்களத்தை ஆதரிப்பது  மட்டும் தான்

எதையும் கொடுக்காமல்

எதையும் பெறாமல் நடக்குது

கலந்து கொள்ளுங்கள்

சங்கமமாகுங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி......

புதிய வரலாறு எழுதுகிறது ஆம் ஆத்மி.....

எத்தனை நக்கல்கள்...எவ்வளவு இழிவான பேச்சுக்கள்......எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து சாதித்தது அரவிந்த் கேஜ்ரிவால் அணி.......

பழம்பெரும் இரண்டு கட்சிகளையும் பின்னகர்த்தி புதிய ஒரு கட்சிக்கு வாய்ப்பளித்து அரசியல் வரலாற்றில் புதிய பக்கத்தை எழுதுகின்றார்கள் டெல்லி மக்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி மக்களே இந்தியாவில் காங்கிரஸ் என்ற கட்சி இன்னும் இருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் இருந்து குஷ்பூ அக்காவும் இளங்கோவன் மாமாவும் டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றதால் தான் அங்கே காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது என்பதனை சொல்ல கடைமைப்பட்டு இருக்கின்றேன்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து டெல்லி மக்கள் மாதிரி புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மக்கள் முன்வரவேண்டும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதொண்ணும் இல்லை கிளீன் இந்தியா திட்டம் மோடி அறிவிச்சார் இல்லையா அதான் டெல்லி மக்கள் ஆம் ஆத்மியின் தொடப்பத்தால ஒரே அடியா கிளீன் பண்ணிட்டாங்கோ.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்க மக்காஸ் எந்த அணி வெற்றி பெறுதோ அந்த பக்கம் தாவிக்கிறது நம்ம மக்களோட பழக்கம் அது அரசியலில் இருந்து விளையாட்டு வரை பொருந்தும்.... கடந்த காலங்களில் கேஜ்ரிவாலை ஒரு கோமாளி மாதிரி நையாண்டி பண்ணிய முக நூல் போராலிங்க எல்லாம் கேஜ்ரிவால் புகழ் பாடிட்டு இருக்காங்க.....

அட முகநூளில் இதெல்லாம் சாதரணமப்பா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்கூட வேலை செய்யிற பங்களாதேஷ் பெடியன் கேட்டான் நாங்க எல்லாம் melborune க்கு உலகோப்பை கிரிக்கெட் இலங்கை எதிர் பங்களாதேஷ் ஆட்டம் பாக்க போறம் உனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடவா எண்டு? நான் சொன்னன் ஆஸ்திரேலியால கிட்டத்தட்ட 40,000 சிங்கள மக்கள் இருக்கிற இடம் மெல்பேர்ன்..... அதிகமா அவிங்க தான் வருவாங்க ..... அப்புறம் சிங்கள பொண்ணுங்களின் எழுச்சி அலையில் நாம சிக்கி சின்னாபின்னப்பட்டு சிங்க கொடியையும் நம்ம கையில தந்திடுவாங்க அப்புறம் அதை எவனாச்சும் படமெடுத்து போட தமிழ் தேசியம் பேசிட்டு திரிந்தவர் சிங்க கொடியுடன் MCG மைதானத்தில் நின்ற அதிசியம் பாரிரீர் என்று கோர்த்து விட்டிடுவாங்க .... அதனால நீங்களே போயிட்டு வாங்க டா என்று சொல்லிட்டன்....

சின்ன தகவல்

ஆஸ்திரேலியாவை பொருத்தவரை கூடிய சிங்களவர்கள் வாழும் இடமாக melbourne கிட்டத்தட்ட 40000 க்கு மேல் கூடிய தமிழர்கள் வாழும் இடமாக சிட்னி கிட்டத்தட்ட 60000 மக்கள் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 வது காதலும் புஸ்: முதல் காதலரையே மணக்கும் நடிகை..../

இத தாய்யா சொல்லுறது வாழ்க்கை ஒரு வட்டம்னு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்ததற்காக ஜோர்டானிய விமானப்படைகள் ஒரு வாரத்தில் 7000 ISIS கிளர்ச்சியாளர்களை கொன்றிருப்பதாகவும்............இப்பொழுது ஜோர்தானிய துருப்புகள் தரைவழி தாக்குதல் ஒன்றுக்காக ஈராக்கிய எல்லையில் 1000 கணக்கில் குவிக்க படுவதாகவும்.......மறு முனையில் ஈராக்கும் ISIS மீது மிகப்பெரும் தரை வழி தாக்குதலுக்கு தயாராவதாகவும் கூறப்படுகின்றது.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நூற்றாண்டில், ஆப்ரிக்காவில் தான், இளைஞர்கள் அதிக அளவில் இருப்பர் என, 'யூனிசெப்' நிறுவன ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி, இப்படியே போனால், 2100ல் உலகில், 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதி பேர் ஆப்ரிக்காவில் தான் இருப்பர். மனிதகுலத்தின் வருங்காலம் ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது என்று ஆப்ரிக்கா பற்றி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்........ஏதோ அப்பவாவது ஆபிரிக்கா முன்னேறினால் சரி....அனைத்து வளங்கள் இருந்தும் சரியான அரசியல் தலைமைகளும் இவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி இவர்களின் வளங்களை சுரண்டுபவர்களும் இருப்பதனால் இன்று வரை இருண்ட கண்டமாகவே இருக்கு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ்ல ஒரு தமிழ் பொண்ணு முதல் முதல் டாக்டர் ஆகிட்டுதாம் அத பெருமையா நம்ம சுவிஸ் வாழ் தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள்.......சுவிஸ் பக்கம் தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்தது 1980 களில் என்று வைத்தாலும் 2015 ஆம் ஆண்டுவரை காலம் எடுத்திருக்கு சுவிஸ் தமிழர்களுக்கு ஒரு டாக்டரை உருவாக்க....ஆனால் இதே காலபகுதியில் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியா,கனடா,லண்டன்,ஜெர்மனி,பிரான்ஸ் தமிழர்கள் பல நூற்றுகணக்கான மருத்துவர்களை உருவாக்கி அவர்கள் மருத்துவ உலகில் பெரும் சாதனைகளையும் படைத்தும் ,படைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள்........ஆக சுவிஸ் மக்களே இதுகெல்லாம் போய் பெருமைப்பட்டிட்டு இருக்காதீங்க.......

எது எப்பிடி இருப்பினும் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சில தமிழ் திரைப்படங்கள் வெளிவரும் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வந்த உடன அட இம்புட்டு தானா என்று இருக்கும்.... இப்ப அப்பிடி ஒரு நிலமையில ஹாலிவுட் திரைப்படமான Fifty Shades Of Grey இருக்காமே..... வெளிவர முதல் உலகமெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி...... வெளிவந்த பின்னர் அட இவ்வளவு தானா என்று இருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.வினருக்கு கத்திக்குத்து தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் 2 பேர் கைது////

ஹா ஹா எல்லாம் தலைவர் பாசரையில வளர்ந்ததுங்கடா .... ஒவ்வொனையும் கிடா மாதிரி வளர்த்து வைச்சிருக்கிறம் .... யாருகிட்ட ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் என்னமோ வருஷா வருஷம் வந்து போகுது.. ஆனா பெரும்பாலான நம்ம பசங்க வாழ்க்கை தான் அதே காதலி அதே ஆத்துக்காரி என்று போயிட்டு இருக்கு....

என்ன வாழ்க்கைடா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...

கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...

மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...

நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...

கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...

சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம் ஆத் மி

கெஜ்ரிவால் முதல் அதிரடி ::

அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அரசு பணி ரத்து..////

அரசு ஊழியர்கள பகைச்சுக்கிட்டு மீண்டும் ஆட்சிக்கு வார ஐடியா இல்லைப்போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.