Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பராசக்தி படம் வெளியாவதற்குச் சில தினங்களுக்கு முன், சிவாஜி கணேசனுக்கு திருமணம் நடந்தது. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள, சுவாமிமலையில், ஒரு சிறிய சத்திரத்தில், தன்னுடைய சகோதரி மகளை மணந்தார். சீர்த்திருத்த முறையில் தான்! தமிழாசிரியர் ஒருவர் தலைமை தாங்க, கருணாநிதியும், நானும் வாழ்த்துரை வழங்க, திருமணம் முடிந்தது. நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள், கிருஷ்ணன், பஞ்சு, சகஸ்ரநாமம் போன்றோர் வந்திருந்தனர். உணவருந்தப் போகும் நேரம், "லேட்'டாக வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.,

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து, கணேசன், எந்தவித உள்ளுணர்வும் இல்லாமல் சொன்னார்: அண்ணே நீங்க இந்த சூட்டு கோட்டு போட்டுக்கிட்டு ஏண்ணே ஆக்ட் பண்ணப் போறீங்க, கத்தி எடுத்தீங்கன்னா கைகொட்டி மக்கள் ரசிக்கும்போது என்றார்.

எம்.ஜி.ஆர்., முகத்தில் மாறுதல் தெரிந்தது. விடைபெற்று போகும் போது, என்னிடம் எம்.ஜி.ஆர்., சொன்னார்: கணேசு என்னைப் பார்த்து என்ன கேட்டது பார்த்திங்களா? ஊம்... பார்க்கிறேன். வீரசாகசப் படங்களில் கதாநாயகனாக வந்த எம்.ஜி.ஆர்., ஒரு மாறுதலாக சூட்டு கோட்டு போட்டு கதாநாயகனாக நடித்த, "அந்தமான் கைதி' என்ற படம் அப்போது தான் வெளிவந்து, தோல்வி கண்டிருந்தது.

இதை மனதில் வைத்தே, சிவாஜி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஒரு சொல் எம்.ஜி.ஆர்., மனதில், "ஆழமான சவாலுக்கு' அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும்.

— "என் நினைவுகள்' நூலில் ராம.அரங்கண்ணல்.

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது பகுதியில் தனிய ஜோக்ஸ் மட்டும் இல்லாமல் பரந்து பட்ட தகவல்களை வழங்கும் முகமாக இப்பிடியான செய்திகளும் இடையிடையே வரும் :D

ஒரு பையன் வீட்டை விட்டு தன் காதலியுடன் ஓடினான்...

மூன்று நாட்கள் கழித்து அவன் வீடு திரும்பினான்..!

அப்பா:இப்போ எதுக்குடா வந்த?

அம்மா: உனக்கு என்ன வேணும்?

தங்கை:ஏன் எங்களை தொல்ல பண்ற?

.

.

..

.

.

.

.

.

.

.

.

அவன்: நொக்கியா சின்ன பின் சார்ஜெர் வேணும்.....!

# மெசேஜ்: நோக்கியா போன் 3 நாள் சார்ஜ்ல இருக்கும்...! :D

536372_503143476376846_1420360368_n.jpg

Edited by நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
:D :D

நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரம் இல்லை...

அவன் போய் நாற்பது பேரை கூட்டி வாறதுக்கு முன்னாடி ஓடிறது தான் வீரம்.... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இதில எது பாஸ் :D

நந்தன் : டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு

ரொம்ப ஜாஸ்தியாம்.

சுண்டல் : இப்பவாவது தெரியுதா நான் ஏன்

ஜாதகத்தை நம்புறதில்லைன்னு??????? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி இண்டைக்கு நந்தன் அண்ணாவ பிடிச்சு ஒரு கதை சொல்லுங்கண்ணா எண்டு கேட்டன்.... கொஞ்ச நேரம் யோசிச்சவர்......சரி இந்தா சொல்லுறன் கேள்......

ஒரு ஊர்ல அப்பிடி இப்பிடி எண்டு ரெண்டு பேர்.

ஒரு நாள் அப்பிடி எப்பிடி இருக்கிங்கன்னார்.......இப்பிடி எப்பிடியோ இருக்கேன்னார்.....

அப்படி, இப்பிடி சொன்னா எப்பிடி? , அப்பிடி இருக்கேன் இல்லை இப்பிடி இருக்கேன்னு சொல்லுங்க எண்டார்............

உடனே இப்படிக்கு அப்பிடி ஒரு கோபம், நான் எப்பிடி இருந்தா உனக்கென்னா ன்னு கேட்டார் ........

அதுக்கு அப்பிடி, அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லைங்கா......சும்மா எப்பிடி இருக்கிங்கன்னு கேட்டேண்ணு சமாதான படுத்தினார்.....

அப்பிடியும் இப்படியும் எப்படியோ friends ஆனாங்க.....

எண்டு சொல்லிடு நீ எப்பிடி இருக்கைன்னு கேட்டாரு......

நான் எப்பிடியோ அப்பிடி ஒரு கதைய கேட்டிட்டு இப்பிடி வந்து உங்களுக்கு எழுதுறன்.....

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ தாண்டி எனக்கு BOOST

உன் மூச்சு எனக்கு PEPER ROST

உன் பின்னால் சுத்தினால்

என் வாழ்கை WAST

நான் கவிதை எழுதுவது

இது தான் LAST

gatepass

வாங்கி உன் இதயத்திற்குள்

வந்தேன் !!!

என்னை timepass ஆக்கிட்டு

Byepassla விட்டுட்டு போயிட்ட

:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாங்கில் இரு அப்பாவி இந்தியர்கள்

பேசிகொள்கிறார்கள்...

ஒருவன் : ஏன்னே, நம்ம ஊரு பாங்க்லையே இவ்ளோ கூட்டம் இருக்கே! ...

மற்றொருவன் : ஆமா....

ஒருவன் : அப்ப சுவிஸ் பாங்க்ல எவ்ளோ கூட்டம் இருக்கும்!...... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்துல....

.

.

.

ஒரு அழகான கிராமம்..

அதில் ஒரு அழகான பள்ளிக்கூடம்.

அங்கே ஒரு அழகான டீச்சர்....

.

.

.

.

அவங்க..

.

.

.

.

.

அவங்க

.

.

.

.

அவங்க

.

.

.

.

.

அவங்க இப்போ ரிட்டயர்ட ஆயி்ட்டாங்க..

.

.

.

.

முடிஞ்சுடுச்சு., போயி வேலைய பாருங்க.,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

இன்னொருவர்: யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

ஒருவர்: நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?''

""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.''

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்துல....

.

.

.

ஒரு அழகான கிராமம்..

அதில் ஒரு அழகான பள்ளிக்கூடம்.

அங்கே ஒரு அழகான டீச்சர்....

.

.

.

.

அவங்க..

.

.

.

.

.

அவங்க

.

.

.

.

அவங்க

.

.

.

.

.

அவங்க இப்போ ரிட்டயர்ட ஆயி்ட்டாங்க..

.

.

.

.

முடிஞ்சுடுச்சு., போயி வேலைய பாருங்க.,

டாய் சுண்டல்!..........எண்டைக்காவது ஒரு நாளைக்கு என்ரை கையாலைதான் வடைபாயாசத்தோடை விருந்து :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nanthan anna: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

Sundal: 5 இருக்கும்!

Nanthan anna: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

Sundal : 5 தான் !

Nanthan anna (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

Sundal: 4.

Nanthan anna: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

Sundal : 5 !

Nanthan anna : அது எப்படிறா 5 கோழி வரும்?

Sundal: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு.

Nanthan anna: !!!!

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டேய் மச்சி, நாளைக்கு சினிமாவுக்கு போறேன் வர்றியாடா…?

முடிஞ்சா வர்றேன் மச்சி…

படம் முடிஞ்சி ஏன்டா வர! படம் ஆரம்பிக்கு பொழுதே வா!

ஒருவன்: சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்.

மற்றொருவன்: இல்லையே நான் பத்து வருஷமா புடிக்கிறேன். எனக்குத் தெரியாதா? சிகரெட் புடிச்சா புகைதான் வரும்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்…

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,

அதுக்காக,

மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

:D

காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது!

ஆனால் வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்!

ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN’S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention.

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

: எறும்புகளால் தனித்தனியே வாழ முடியாது. அவை ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து ஒரே சமூகமாக வசிக்கின்றன. சாரை சாரையாகச் சென்று இரை தேடுகின்றன. தேடிய உணவை தமக்குள் பங்கிட்டு சாப்பிடுகின்றன. ஒரு எறும்பு சமூகத்தில், மூன்று வகை எறும்புகள் உண்டு. ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு. ஒரு கூட்டில் ஒரு ராணி எறும்புதான் இருக்கும். வேலைக்கார எறும்புகளெல்லாம் பெண் எறும்புகளே. ஆனால், அவை முட்டையிடாது. ராணி மட்டுமே முட்டையிடும். மற்ற எறும்புகளை விட, ராணி எறும்பு உருவத்தில் பெரியது. வேலைக்கார எறும்புகள் தான் அதன் சமூகத்தில் எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்கின்றன. சில இரை தேடும்; சில கூட்டில் இருந்து ராணியையும், குஞ்சுகளையும் பாதுகாக்கும். மற்றும் சில, எதிரிகள் உள்ளே நுழையாதபடி கூட்டைப் பாதுகாக்கும்.

வேலைக்கார எறும்புக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. ஒரு பையில் தனக்குத் தேவையான உணவை நிறைத்து வைத்துக் கொள்கிறது. மற்றொரு பையில், உணவை நிரப்பி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது. எறும்புகளுக்குத் தாடைகள் உண்டு. சிற்றெறும்பு, நெருப்பெறும்பு, கட்டெறும்பு, நம்மை, தாடைகளால் கடிக்கின்றன. பிள்ளையார் எறும்பு எனப்படும் கறுப்பு எறும்பு மட்டும் கடிக்காது.

ஒரு இடத்தில், கிளிகளை ஒருவன் ஏலம் போட்டு கொண்டிருந்தான். பேசும் கிளிகள் அவை. எல்லாக் கிளிகளும் விற்றுக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு, ஒரு பேசுங்கிளியை வாங்க விருப்பம். கடைசியில் ஒரு கிளிதான் மிச்சம்.

"யாராவது ஏலம் எடுக்கிறீர்களா?' என்று கேட்டான் கிளி விற்பவன். வந்தவன் ஏலம் கேட்க துவங்கினான். இவன் கேட்க கேட்க ஏலத் தொகை கூடிக்கொண்டே போனது. ஏலம் முடிந்து கிளியைக் கையில் வாங்கினான். அப்போது தான் அவனுக்கு சந்தேகம் வந்தது. "இந்தக் கிளி நல்லா பேசுமா?' என்று கேட்டான். ஏலக்காரன் சொன்னான்; நல்லா பேசுமாவது? இவ்வளவு நேரம் உங்களுடன் போட்டியா ஏலத் தொகையைக் கூட்டினது இந்தக் கிளிதான்!' என்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

எறும்பின் வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கு.. :D அதுசரி ஆண் எறும்புகளுக்கு என்ன வேலை? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கழுதைய பார் யோகம் வரும் காதலித்துப்பார் சோகம் வரும்:D

எறும்பின் வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கு.. :D அதுசரி ஆண் எறும்புகளுக்கு என்ன வேலை? :rolleyes:

Ever wondered what different jobs are in ant colonies? Well you’ve come to the right place.

There is lots of work to be done in those ant piles in your backyard than you think. One of the jobs is to lay the eggs, done by the queen . She basically starts the colony. When a colony gets too big, the male and female ants leave and mate. Soon the male dies, and the queen lays her eggs in a safe place. The larger ants that are born are usually the soldiers , who protect the colony. (The female ants are the only kind that can bite.) Some others are scavengers , who hunt for food. And let’s not forget the carpenter , who helps build the ant pile. Some nursery workers also take care of the young ants, in the nursery. There are workers that are daughters of the queen, who collect and distribute food throughout the colony. Wow, you never know what’s really going on in those old ant piles!

:D

Depending on the species, queens live about 5 to 30 years, making them the longest-lived insects. Workers live about 1 to 3 years. Males live only for a mating season.

:(

இப்ப சொல்லுங்க இசை அண்ணா பிடிச்சிருக்கா பிடிக்கலியா?

Edited by SUNDHAL

[size=4]சுண்டலுக்கு யாழ்கள விழாவில மிச்ச சொச்சத்தையும், சொச்ச மிச்சத்தையும் குழைச்சுச் சாப்பிட்டதில வயிறு 2, 3 நாளா ஒரே கடபுட, கடபுட என்று சத்தம்... :blink: 24 மணத்தியாலத்தில இதை கட்டுப் பாட்டுக்குள்ள கொண்டு வராமல் அவுசுக்குப் பிளைட் எடுத்தால் வாசல்ல நிக்கிற [/size]Quarantine நாய் மோப்பம் பிடிச்சு மானத்தை வாங்கிடும்.. :o வேற வழி இல்லாமல் இசை தனக்குத் தெரிந்த ஒரு நல்ல பாட்டு டாக்டரிடம் சுண்டலை அப்போயின்மென்ட் வைச்சுப் போகிறார்.. ^_^

[size=4]சுண்டல்: ஹாய் டாக்! நீங்க தான் பாட்டு டாக் ஆ?

பாட்டு டாக்டர்: என்ன பிரச்சனை?

சுண்டல்: வயிறு சரி இல்லை டாக்

பாட்டு டாக்கடர்: என்னய்யா வைத்ததில இருந்து பாட்டுச் சத்தம் வருகுது?

சுண்டல்: யோவ்! டாக், காதில இருக்கிற ஹெட் போனை கழட்டியா..[/size]

[size=4]பாட்டு டாக்டர்: :icon_mrgreen: சரி இப்ப சொல்லும் சுண்டல்

சுண்டல்: ஒரே வெளிக்குப் போகுது டாக்டர், நாளைக்கு நான் கனடாவை விட்டு வெளியால போகவேணும்..

பாட்டு டாக்டர்: ஒரு பைகட் வெந்தயத்தைக் கையில் கொடுத்து அனுப்புகிறார்..

சுண்டல்: ஏக்கத்தோடு டாக் எனக்கொரு பாட்டு?

பாட்டு டாக்டர்: "போனால் போகட்டும் போடா..."

ஒரு பைகட் வெந்தையத்தை ஒரியடியாப் போட்ட சுண்டலுக்கு வெளிக்குப் போகவே முடியாமல் போகிறது.. மீண்டும் பாட்டு டாக்டரிடம் போகிறார்..

சுண்டல்: ஹாய் டாக்!

பாட்டு டாக்டர்: இப்ப என்ன பிரச்சனை?

சுண்டல்: வெளிக்குப் போகவே முடியாமல் இருக்கு டாக்டர்..

பாட்டு டாக்டர்: ஒரு பாப்பாப் [/size][size=1]பழ[/size]த்தைக் கையில் கொடுத்து அனுப்புகிறார்..

[size=4]சுண்டல்: மீண்டும் ஏக்கத்தோடு டாக் எனக்கொரு பாட்டு?

பாட்டு டாக்டர்: "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் பேதி ஆகட்டுமே, தனாலே வெளிவரும் கலங்காதே...[/size] [size=4]"[/size]

[size=1][size=4]சுண்டல் "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டவாறு இசையின் காரில் ஏறுகிறார்... [/size] :D:lol:[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahahah :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: கமோன் மான்! இது என்ன காரா, மாட்டுவண்டியா?

இசை: கொஞ்சம் பொறப்பா! இது கொம்பனிக் கார்! வாசம், கீசம் ஒன்றும் போட்டுடாதை, சுண்டல்!

வழியில் ஒரு சேவிஸ் ஸ்டேசன் வர,இசை காரை நிறுத்துகிறார்!

சுண்டல்: அவசரமாகப் போகணும் ,மேன்! கதவைத் திற!

கடைக்காரன்: இரவில பிரக்னண்ட் ஆக்கள் தான் உள்ளே போகலாம்.

சுண்டல், சேட்டுக்குள் பப்பாப் பழத்தை மறைத்தபடி, வண்டியைக் காட்டுகிறார்.

கடைக்காரன்: ஒகே மேடம், நீங்க உள்ளே போகலாம்! (கதவைத் திறந்து விடுகிறார்!

சுண்டல்: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! தீங்கனி போல்..... :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.