Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகா ஜனங்களே இப்போ அட்டகத்தி படம் பாத்திட்டு இருக்கான் எல்லாரும் நல்ல படம்னு சொல்லுராங்கோ நான் பாத்து முடிச்சிட்டு படம் எப்பிடின்னு சொல்லுறன் okie

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பொண்ண மூணு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கன் தெரியுமா? வந்து மூணு மாசத்தில கரெக்ட் பணிட்டு போற

அவ அண்ணான்னா தங்கச்சின்னு போயிட்டே இருக்கணும் மச்சா இதுகெல்லாம் கவலை பட்டுன்னு இருக்க முடியுமா

:D

செம டயலாக் :D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் படம் அழகான ஜதார்த்தமான ஒரு படம் இவளவு நாளும் பணக்கார நகரத்து கல்லூரிகளை காட்டின தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்டு அரசு கல்லூரியை அங்கு நடை பெரும் சம்பவங்கள் காதல் மோதல் என்று படம் எடுத்திருக்கின்றார்கள் சுபெர்ப்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ... இப்ப பாருங்க! ஊழலை எதிர்த்து தைரியமா ஒரு மனுஷன் கிளம்பியிருக்கார், நாங்க அரசியல் பன்ற இந்த நாட்டுல ஊழலே கிடையாது'ன்னு சொல்ல வேண்டிய அரசியல்வாதிங்க.. அன்னா ஹசாரே மட்டும் யோக்கியமா?'ன்னு கேட்கறாங்க? சத்தியமா சொல்றேன்.. நாம உருப்பட போறதில்லை!'' ஒய்.ஜி.எம்...ன் கொதிக்கும் மனதிலிருந்து வெடித்துக் கிளம்பிய இவ்வார்த்தைகள்

"எந்த விஷயத்துக்கு உங்களுக்கு கோபம் வரும்?

விழிகளில் நீர் திரை எழும்ப.. ""நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நினைச்சாலே கண்ணீர்தான். "மறைஞ்சதுக்கு அப்புறம்தான் இந்த உலகம் நிஜமான கலைஞனை கொண்டாடும்ங்கிற உண்மைக்கு சிவாஜியும் சாட்சி! நீங்க சுவாசிக்கறது வெறும் காற்று சார். நான் சுவாசிக்கிறது கணேசன்.. சிவாஜி கணேசன்! (நினைவுகளில் கலங்கினார் ஒய்.ஜி.எம்.)

நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மெலிதான புன்னகைக்கு பிறகு "நான் தியாகம் பன்றதில்லை. எங்க அப்பாவுக்கு ஓழுங்கா திவசம் கொடுக்கறதில்லை. ஆனாலும், நான் நல்லவன்! ஏன்னா.. யாருக்கும் நான் கெடுதல் நினைக்கறதில்லை! (மிகச்சுலபமாய் வசீகரிக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரா.)

வாழ்க்கைங்கற நாடகமேடை திருப்தியா இருக்குதா?

ஏமாற்றங்களை, தோல்விகளை சந்திக்கலைன்னா... மனுஷனா பிறந்ததுக்கே அர்த்தம் இல்லாம போயிடும். ஆசைப்படற அத்தனையும், அவ்வளவு சுலபத்துல யாருக்கும் கிடைச்சிடாதுங்க. மனசுக்கு திருப்தி அடையத் தெரியணும்! இந்த வித்தை தெரிஞ்சா மட்டும்தான் சந்தோஷமா வாழ முடியும். என் மனசுக்கு இந்த வித்தை நல்லாவே தெரியும். ஒரு மகனா, நல்ல கணவனா, அன்பான தகப்பனா, ரசிகனோட விருப்பம் அறிஞ்ச கலைஞனா. நான் ரொம்ப மனநிறைவோட இருக்கேறன். வயசுல என்னைவிட சின்னவங்களா இருந்தாலும் என்கிட்டே இல்லாத திறமையோட வந்தாங்கன்னா.. எழுந்து நின்னு வணங்குற அளவுக்கு மனுஷனா இருக்கிறேன். எம்.எஸ். விஸ்வநாதன் இசையையும், முகம்மது ரபி பாடல்களையும் அன்னைக்கு ரசிச்ச மாதிரியே இன்னைக்கும் ரசிக்க மயங்குற மனசு வைச்சிருக்கிறேன் இதுக்கு மேல என்னங்க வேணும்!.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அணு அணுவாக ரசித்து வாழ்ந்தது எந்த வயதில்?

இப்பவும் அப்படித்தான் இருக்கேறன் ஆனா வாழ்க்கையை நான் ரசிக்க ஆரம்பிச்சது "டான்பாஸ்கோ' பள்ளி நாட்கள் தான். சுற்றுலா போன இடத்துல நாடகம் போட்டதை கேள்விப்பட்டு மறுநாள் வகுப்புல பாடம் நடத்தாம, என்னை நாடகம் போட வைச்சு ரசிச்ச ஆசிரியர் செல்வதுரை. ராமச்சந்திரன், முதல்வர் மேலன்.. இவங்கெல்லாம். இல்லைன்னாநான் இந்த அளவுக்கு வந்திருப்பேனான்னு தெரியலை. அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் மனசுக்குள்ளே பூ பூக்குது வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கணும்னா நல்ல நண்பர்கள் வேணும்னு சொல்வங்க. இந்த வரம் எனக்கு கிடைச்சதும் அப்போதான்! 1965வது வருஷம் என்கூட படிச்ச நண்பர்கள் அத்தனைபேரும்.. இப்பவும் ஒண்ணா இருக்கிறோம். குடும்பத்தோட அடிக்கடி சந்திக்கிறோம். சந்தோஷமா நினைவுகளை பகிர்ந்துக்குறோம் அதனால உங்க கேள்விக்கான பதில் .. என் 15 வயது முதல் இப்போது வரை! இனியும்...

இந்த உலகத்தில் இருக்கற ஆண்களையும் பெண்களையும் தண்டிக்கற வாய்ப்பு! எப்படிப்பட்டவர்களை தண்டீப்பீங்க?

தாய்மை உணர்வோட இருக்கற பெண்மையையும், அந்த பெண்மையை வணங்குற ஆண்மையையும் மதிக்கிறவன் நான். இதுல இருந்து தடம் மாறுறவங்களை நிச்சயம் தண்டிப்பேன். குறிப்பா. பெண்ணோட அனுமதியில்லாம அவளோட மனசையும், உடலையும் காயப்படுத்துற ஆண்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாம மரணதண்டனை கொடுப்பேன். அடுத்து காவலர்கள், கடற்கரையிலேயும், பூங்காக்கள்லேயும் காதலிக்கிறவங்களை விரட்டுற காவலர்கள்! இவங்களுக்கு தண்டனை கிடையாது. ஒரே ஒரு வேண்டுகோள்! காதலிக்கறவன் வேற எங்கே போய் சார் காதலிப்பான்? காதலை வாழ விடுங்க! இல்லேன்னா.. உலகம் ஸ்தம்பிச்சுடும்!'

தமிழர்கள் நல்ல ரசிர்களா? நல்ல மனிதர்களா?

யார் வந்தாலும் வரவேற்று, வாழ்க்கை கொடுத்து "கட்-அவுட்' வைச்சு ஆர்ப்பரிக்கிற அடிப்படையில தமிழர்கர் தீவிர ரசிகர்கள். ஆனா, வந்தவங்களை கடவுளாக்கி கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துறாங்க பாருங்க.. இந்த அடிப்படையில் தகுதி மறந்த. பராம்பரியம் தொலைத்த மனிதர்கள் சார்... புகழுக்கு மயங்குறது தமிழனோட பலவீனம். பாருங்க.. உழைச்சு சம்பாதிக்க வாங்க வேண்டிய பொருளை இலவசமா வாங்குறத்து தயாரா இருக்கறோம். நாம நல்ல மனிதர்களா?

வரலாறு:

தங்களின் 62 நாடங்களை உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். ஒய்.ஜி.மகேந்திரா. இவரது யு.ஏ.ஏ. நாடகக்குழு 2012ல் தனது 60வது ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கிறது. தற்போது அமெரிக்க நாடக கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஒய்.ஜி.எம். 2012ல் அவர்களை தமிழகத்தில் மேடையேற்றவும் திட்டமிட்டிருக்கிறார்.

மின்னல் கேள்விகள்... மின்னும் பதில்கள்.......

ஒரே ஒருநாள் மனதுக்கு பிடித்த இன்னொரு தொழில் செய்யலாம்! என்றால்..

எல்லாவிதமான இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரிந்தவன் என்ற முறையில். எனது குடும்பத்தினர் மற்றும் நான் ரசிக்கும் எம்.எஸ்.வி.யின் முன்னிலையில் மேடையேறுவன். நாள் முழுக்க அவர்களை மகிழ்விப்பேன்.

சென்னையில் மிகவும் பிடித்த இடம்? விரும்பும் மாற்றம்?

சபையர் திரையரங்கும், வுட்லேண்ட், டிரைவ் இன் ஹோட்டலுமே என் மனதிற்கு நெருக்கமான இடங்கள். இரண்டுமே தற்போது இல்லை. மீண்டும் வந்தால் மகிழ்வேன்!.

2012ல் உலகம் அழியப்போகிறது! இந்த செய்தி உங்களை பயமுறுத்துகிறதா?

(சிரிக்கிறார்) உலகமென நான் நினைக்கும் என் ப்ரியத்துக்குரியவர்கள் மறைந்த பொழுதெல்லாம் என் உலகம் அழிந்திருக்கிறது. இதன்படி. கடைசியாக என் உலகம் அழிந்தது 2009ல் நாகேஷ் மரணத்தில்

ஓய்வு நேரங்களில்.....

சக்தியுள்ள இசையும், சத்துள்ள கதையும் கொண்ட படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பது பிடிக்கும். இந்த வகையில், நான் அதிகம் பார்ப்பது ஆங்கில திரைப்படங்களைத்தான்!.

இதுவரை சம்பாதிக்காத ஒன்று?

அவ்வப்போது கெட்டப்பெயர் உட்பட எல்லாமும் சம்பாதித்து விட்டேன். என் நினைவு புத்தகத்தையும், கனவு பெட்டகத்தையும் புரட்டி பார்த்தவரை.. இனி சம்பாதிக்க ஒன்று இல்லை!.

-துரை கோபால்

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவைப்படும் போது கொடுப்பது தான் உதவி

இருக்கும் போது தருவதற்கு பெயர் பிச்சை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் தமிழ் நாட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை " மணி"

கருணாநிதி வாயில இருந்து மணி

ஜெயலலிதா வாயில இருந்து மணி

விஜயகாந்த் மதுரை ஆதினம் என்று மணி அது மட்டுமா ஆண்டிப்பட்டியில் இருந்து அரசம் பட்டி வரை இருக்கின்ற சாதாரண மக்கள் வாயிலும் மணி

மணி மணி

யார் இந்த " மணி"

புதிதாக வந்திருக்கும் அரசியல் வாதியா?

இல்லை நடிகரா?

இல்லை இசை அமைப்பாளரா?

இல்லை தொலைக்காட்சி தொடரா

இது எதுவும் இல்லைங்க டிங் டிங் மணி தாங்க டெல்லிலா அந்தம்மா பேச போன இடத்தில நேரம் முடிவடைந்ததை சொல்ல

மணி அடிச்சிருக்காங்க உடனே அந்தமாக்கு வந்திச்சு பாருங்க கோபம் பொசுக்கின்னு வெளில வந்திட்டாங்க..... இப்போலாம் தமிழ் நாட்டில அந்த மணிய வைச்சு தான் அரசியல்

நடக்கிது......,

இன்னும் எனென்ன வருமோ....

:(

தமிழ் நாட்டில் கோயில்ல மணியே அடிக்க கூடாதின்னு தடை வந்தா கூட ஆச்சரியம் இல்லை அந்தளவிற்கு மணி மீது இரத்தத்தின் இரத்தங்க கோபமா இருக்காங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவிற்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு இரண்டிற்கும் இதழ்கள் உண்டு ஆனால் இதயம் கிடையாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடிக்கையாளர்

வங்கி அதிகாரியுடன் சொன்னார்

காசோலை புத்தகம்

காணாமல் போய்விட்டது.

கவனம்

எவராவது உங்கள்கையெழுத்தை

போட்டு விடலாம்

முட்டாளா நான்

முன்னரே போட்டு விட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் புத்தாண்டை முன்னிட்டு யாழ் களத்தின் கதை கதையாம் பகுதியில் நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன......

ஓன்று ஜீவாவின் எழுத்துருவாக்கத்தில் அழகான ஒரு காதல்(நட்பு) காவியம் 26 வயது பையனுக்குள் இவளவு அழகான எழுத்து திறமையா என்று பாத்தவர்கள்( வாசித்தவர்கள்) பலரும் ஆச்சரியப்பட்டு பாராட்டிய அழகான காவியம் ஆவலோடு வாசித்து கொண்டு போனால் கடைசியில் கதை சோகமாக இருப்பதனால் இந்த கதையை பாத்தவர்கள் கனத்த இதயங்களோடு கதை கதையாம் பகுதியை விட்டு போவதை காணக்கூடியாதக இருக்கின்றது இளைய எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் கதையை அழகா எழுதி அமைத்த விதத்திற்காக.....:D

ஏக்கங்களை தந்து போனவள் பழையை நினைவுகளை மீட்டு போனாள்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து கோமகன் அண்ணா தயாரித்து எழுதி இயக்கி இருக்கும் படம்(கதை)

வேட்டை

வழமையான மண்வாசனையோடு அந்த கதையை கிராமத்து மொழியில் படமாக்கி இருப்பது கதையின் சிறப்பு......கதைகளுக்கு மத்தியில் ஒரு சமுக சிந்தனையையும் செய்தியையும் வழமை போல் சொல்லி சென்றிருக்கும் கோமகன் அண்ணாவிற்கு பாராட்டுக்கள்........ஆரம்பம் முதல் இறுதிவரை நல்ல விறுவிறுப்பாக இருந்ததாக மக்கள் கருத்து கூறுகின்றார்கள்.

வேட்டை நல்ல சாட்டை

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றவதாக வந்து போட்டியில் இணைந்து கொண்டிருக்கும் படம்( கதை) இயக்கி இருப்பவர் மெகா budget படங்களுக்கு பெயர் போன புத்தன் அண்ணா முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களை படமாக்கி இருக்கும் அழகுக்கும் அந்த கதை சொன்ன செய்திக்கும் ஒரு ஓ போடலாம் இந்த கதையை வாசித்து(பாத்து) ஒரு சிலராவது திருந்தினால் அது புத்தன் அண்ணாக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதலாம்

நாங்க யாழ்ப்பாணத்தார் திருத்த முடியாத தமிழர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்டன் றோயல்

யாழ் களத்தின் கைதேர்ந்த பெண் எழுத்தாளரான சாந்தி அக்கா எழுதி இதுக்கும் இந்த கதை மக்களின் மனங்களின் இடம் பிடித்த ஒரு போராளியை பற்றியது...... மக்களுக்காக மண்ணுக்காக வாழ்ந்த அந்த போராளி எப்பிடி மக்களுக்காக வாழ்ந்து அவர்களுக்காகவே மடிந்த ஒரு போராளியின் கதை எழுதிய விதம் அந்த போராளியை அப்பிடியே கண்முன் நிறுத்தியது

கப்டன் ரோய்- வீரம்

இந்த புத்தாண்டுக்கு இதுவரை நான்கு கதைகள் வந்து வாசகர்களுக்கு விருந்தாகி இருக்கின்றது அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றவதாக வந்து போட்டியில் இணைந்து கொண்டிருக்கும் படம்( கதை) இயக்கி இருப்பவர் மெகா budget படங்களுக்கு பெயர் போன புத்தன் அண்ணா முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களை படமாக்கி இருக்கும் அழகுக்கும் அந்த கதை சொன்ன செய்திக்கும் ஒரு ஓ போடலாம் இந்த கதையை வாசித்து(பாத்து) ஒரு சிலராவது திருந்தினால் அது புத்தன் அண்ணாக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதலாம்

நாங்க யாழ்ப்பாணத்தார் திருத்த முடியாத தமிழர்

புல்லரிக்குது சுண்டல் ...மெகா ஸ்டார் என்று சொல்ல வேணும்போல கிடக்கு...நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் பெண் அமைச்சர் ஒருவர் வேலை இல்லாதவர்களுக்காக அரசு கொடுக்கும் நாள் ஒன்றுக்கு 35 டாலர் காணும் என்றும் அந்த தொகையில் உங்களால் வாழ முடியுமா என்று கேட்ட பொழுது முடியும் என்று சொல்லி சர்ச்சையில் மாட்டி இருக்கா அதவாது நிருபர் ஒருவர் could you live off the dole என்று கேட்க

I could என்று சொன்னார்

இத்தனைக்கும் அவா எடுக்கும் சம்பளம் நாள் ஒன்றுக்கு கிட்ட தட்ட 903 டாலர் . சம்பளம் எல்லாத்தையும் பறிச்சு போட்டு வெறும் $ 35கொடுத்து விடனும் வாழ்ந்து காட்ட சொல்லி :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் குடும்ப நலன்களை கவனிக்கும் ஒரு

அமைச்சர் இப்பிடி சொல்லி இருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று அனைத்து முக்கியமான ஆங்கில ஊடங்களிலும் வந்த ஒரு சுவாரசியமான செய்தி America வை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய மகனுக்கு Xmas க்கு கொடுத்திருந்த பரிசு ஒன்றை பற்றி.....

குட் மோர்னிங் அமெரிக்கா என்ற நிகழ்ச்சியில் கூட அந்த தாயாருடன் பேசி இருந்தார்கள்.....

அவர் செய்தது இதுதான் தன்னுடைய பதின் மூன்று வயது நிரம்பிய செல்ல மகனுக்கு ஒரு பரிசை அளித்திருந்தார் அது ஒரு iPhone மகனுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி iphone கிடைச்சிரிச்சு நண்பர்களுடன் பேசலாம் ஸ்கூல் க்கு கொண்டு போகலாம் என்று எக்கச்சக்க கனவிலே மிதக்கலானான் பரிசளிக்கப்பட்ட பெட்டியினில் ஒரு பேப்பர் திறந்து வாசித்து பாத்தவனுக்கு அதிர்ச்சி.......

அதில் அந்த iphone பாவிக்க வைத்திருக்க அவருடைய தாயார் கொடுத்திருந்த பதினெட்டு நிபந்தனைகள் கீழே ஒப்பமிடு மாறும் இருந்தது......

அதில் முக்கியமாக

பெற்றோர்கள் போன் பண்ணினால் கண்டிப்பாக போன் எடுத்து பேசவேண்டும்

இரவில் பாடசாலை நாட்களில் எழு மணிக்கு பிறகும் வார இறுதி நாட்களில் 9 மணிக்கு பிறக்கும் போன் ஆப் செய்யப்பட்டு பெற்றோர்களிடம் கொடுத்து விட வேண்டும்

போன் இன் பாஸ் வோர்ட் என்ன

என்பதை பெற்றோர்களிடம் சொல்லிவிடவேண்டும்

நீ பாடசாலைக்கு இதை கொண்டு செல்ல முடியாது உன்னுடைய நண்பர்களிடம் நேரில் பேசு

போன் தொலைஞ்சாலோ உடைந்சாலோ அதற்குரிய செலவு உன்னுடைய பொறுப்பு என்று நிபந்தனைகள் செல்கின்றன

இப்ப சொல்லுங்க அப்பிடி ஒரு போன் அந்த பையனுக்கு தேவையா :(:D

Check this out -

Dear Gregory

Merry Christmas! You are now the proud owner of an iPhone. Hot Damn! You are a good & responsible 13 year old boy and you deserve this gift. But with the acceptance of this present comes rules and regulations. Please read through the following contract. I hope that you understand it is my job to raise you into a well rounded, healthy young man that can function in the world and coexist with technology, not be ruled by it. Failure to comply with the following list will result in termination of your iPhone ownership.

I love you madly & look forward to sharing several million text messages with you in the days to come.

1. It is my phone. I bought it. I pay for it. I am loaning it to you. Aren’t I the greatest?

2. I will always know the password.

3. If it rings, answer it. It is a phone. Say hello, use your manners. Do not ever ignore a phone call if the screen reads “Mom” or “Dad”. Not ever.

4. Hand the phone to one of your parents promptly at 7:30pm every school night & every weekend night at 9:00pm. It will be shut off for the night and turned on again at 7:30am. If you would not make a call to someone’s land line, wherein their parents may answer first, then do not call or text. Listen to those instincts and respect other families like we would like to be respected.

5. It does not go to school with you. Have a conversation with the people you text in person. It’s a life skill. *Half days, field trips and after school activities will require special consideration.

6. If it falls into the toilet, smashes on the ground, or vanishes into thin air, you are responsible for the replacement costs or repairs. Mow a lawn, babysit, stash some birthday money. It will happen, you should be prepared.

7. Do not use this technology to lie, fool, or deceive another human being. Do not involve yourself in conversations that are hurtful to others. Be a good friend first or stay the hell out of the crossfire.

8. Do not text, email, or say anything through this device you would not say in person.

9. Do not text, email, or say anything to someone that you would not say out loud with their parents in the room. Censor yourself.

10. No porn. Search the web for information you would openly share with me. If you have a question about anything, ask a person – preferably me or your father.

11. Turn it off, silence it, put it away in public. Especially in a restaurant, at the movies, or while speaking with another human being. You are not a rude person; do not allow the iPhone to change that.

12. Do not send or receive pictures of your private parts or anyone else’s private parts. Don’t laugh. Someday you will be tempted to do this despite your high intelligence. It is risky and could ruin your teenage/college/adult life. It is always a bad idea. Cyberspace is vast and more powerful than you. And it is hard to make anything of this magnitude disappear – including a bad reputation.

13. Don’t take a zillion pictures and videos. There is no need to document everything. Live your experiences. They will be stored in your memory for eternity.

14. Leave your phone home sometimes and feel safe and secure in that decision. It is not alive or an extension of you. Learn to live without it. Be bigger and more powerful than FOMO – fear of missing out.

15. Download music that is new or classic or different than the millions of your peers that listen to the same exact stuff. Your generation has access to music like never before in history. Take advantage of that gift. Expand your horizons.

16. Play a game with words or puzzles or brain teasers every now and then.

17. Keep your eyes up. See the world happening around you. Stare out a window. Listen to the birds. Take a walk. Talk to a stranger. Wonder without googling.

18. You will mess up. I will take away your phone. We will sit down and talk about it. We will start over again. You & I, we are always learning. I am on your team. We are in this together.

It is my hope that you can agree to these terms. Most of the lessons listed here do not just apply to the iPhone, but to life. You are growing up in a fast and ever changing world. It is exciting and enticing. Keep it simple every chance you get. Trust your powerful mind and giant heart above any machine. I love you. I hope you enjoy your awesome new iPhone. Merry Christmas!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அனைத்து முக்கியமான ஆங்கில ஊடங்களிலும் வந்த ஒரு சுவாரசியமான செய்தி America வை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய மகனுக்கு Xmas க்கு கொடுத்திருந்த பரிசு ஒன்றை பற்றி.....

குட் மோர்னிங் அமெரிக்கா என்ற நிகழ்ச்சியில் கூட அந்த தாயாருடன் பேசி இருந்தார்கள்.....

அவர் செய்தது இதுதான் தன்னுடைய பதின் மூன்று வயது நிரம்பிய செல்ல மகனுக்கு ஒரு பரிசை அளித்திருந்தார் அது ஒரு iPhone மகனுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி iphone கிடைச்சிரிச்சு நண்பர்களுடன் பேசலாம் ஸ்கூல் க்கு கொண்டு போகலாம் என்று எக்கச்சக்க கனவிலே மிதக்கலானான் பரிசளிக்கப்பட்ட பெட்டியினில் ஒரு பேப்பர் திறந்து வாசித்து பாத்தவனுக்கு அதிர்ச்சி.......

அதில் அந்த iphone பாவிக்க வைத்திருக்க அவருடைய தாயார் கொடுத்திருந்த பதினெட்டு நிபந்தனைகள் கீழே ஒப்பமிடு மாறும் இருந்தது......

அதில் முக்கியமாக

பெற்றோர்கள் போன் பண்ணினால் கண்டிப்பாக போன் எடுத்து பேசவேண்டும்

இரவில் பாடசாலை நாட்களில் எழு மணிக்கு பிறகும் வார இறுதி நாட்களில் 9 மணிக்கு பிறக்கும் போன் ஆப் செய்யப்பட்டு பெற்றோர்களிடம் கொடுத்து விட வேண்டும்

போன் இன் பாஸ் வோர்ட் என்ன

என்பதை பெற்றோர்களிடம் சொல்லிவிடவேண்டும்

நீ பாடசாலைக்கு இதை கொண்டு செல்ல முடியாது உன்னுடைய நண்பர்களிடம் நேரில் பேசு

போன் தொலைஞ்சாலோ உடைந்சாலோ அதற்குரிய செலவு உன்னுடைய பொறுப்பு என்று நிபந்தனைகள் செல்கின்றன

இப்ப சொல்லுங்க அப்பிடி ஒரு போன் அந்த பையனுக்கு தேவையா :(:D

 

 

 

பதின் மூன்று வயது மகனுக்கு சரியான நிபந்தனைகளே.

இதில் பச்சையில் குறிப்பிட்டவற்றை எனது மக்களுக்கு ஆரம்பத்தில் நானும் விதித்திருந்தேன்.

(ஆனால் ஒரு நாள் கூட அதை அமுல்படுத்தியதில்லை.  உதாரணமாக அவர்களின் பாஸ் வோர்ட்யை வைத்து உள் நுளைந்ததில்லை.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக வேகமாக மாறி வரும் உலகில் நீ வளர்ந்து கொண்டு இருக்கின்றாய் இதில் நான் தந்திருக்கும் நிபந்தனைகள் iPhone இற்கு ஆனது மட்டுமல்ல உன்னுடைய வாழ்க்கைக்கும் ஆனது உன்னுடைய சிந்தனையையும் உன்னுடைய இதையத்தையும் என்றும் நம்பு இனிய நத்தார் வாழ்த்துகள் என்று கூறி முடித்திருகின்றார்

உறவுகளே மொழிபெயர்ப்பில் நிறைய தவறு இருக்கலாம் மன்னிக்கவும் அகூதா அண்ணா மல்லை அண்ணா போன்றவர்கள் அழகிய தமிழில் மொழிபெயர்த்து இணைக்க முடிந்தால் இணைக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
பதின் மூன்று வயது மகனுக்கு சரியான நிபந்தனைகளே.

இதில் பச்சையில் குறிப்பிட்டவற்றை எனது மக்களுக்கு ஆரம்பத்தில் நானும் விதித்திருந்தேன்.

(ஆனால் ஒரு நாள் கூட அதை அமுல்படுத்தியதில்லை.  உதாரணமாக அவர்களின் பாஸ் வோர்ட்யை வைத்து உள் நுளைந்ததில்லை.)

 

 

அண்ணா கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ பாஸ்வேட்டை திறந்து பார்க்கா விட்டால் எப்படி அது சரியான பாஸ்வேட் எனத் தெரியும்?
 
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் வெள்ளை, மகனுக்கு ஈமெயில் திறந்துவிட்டு 18 வயதுவரை அவனின் எல்லா ஈமெயிலையும் படித்தாக பெருமையாக சொன்னான், மனதிற்க்குள் சிரித்துக்கொண்டு கேட்டதுதான், என்ன செய்ய 

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணா கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ பாஸ்வேட்டை திறந்து பார்க்கா விட்டால் எப்படி அது சரியான பாஸ்வேட் எனத் தெரியும்?
 

 

மற்றவர் கடிதங்களை பார்ப்பது மாதிரி  நான் வளர்க்கப்படவில்லை

என் பிள்ளைகளும் அப்பனிடம்  பொய்   சொல்வதுபோல் வளர்க்கப்படவில்லை.

இதற்கும் சாட்சி  கேட்டால்

அவர்களை நீங்கள் சந்திக்கும் காலம் ஒன்று வரும்

அதுவரை........... :icon_idea:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு, "மாடி வீட்டு ஏழை' என்ற திரைப்படத்தை, தாமே டைரக்ட் செய்து, தயாரிக்கத் தொடங்கினார் நடிகர் சந்திரபாபு. முதல் நாள் படப்பிடிப்பிலேயே, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., மேற்கொண்டு நடிக்க வரவேயில்லை.

அப்போது, "கலை' என்ற பெயரில், ஒரு சினிமாப் பத்திரிகை வெளிவந்தது. அதில், சந்திரபாபு அளித்த பேட்டியில், "உங்களுக்குப் பிடித்த நடிகர்?' என்ற கேள்விக்கு, "இரண்டு பேர், ஒன்று - நான். மற்றொருவர் - சிவாஜிகணேசன்' என்று பதில் அளித்தார். எம்.ஜி.ஆரை கோபமூட்டுவதற்காகச் சொன்ன பதில்! சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்தது. எம்.ஜி.ஆரின் அண்ணன், எம்.ஜி.சக்கரபாணி, சந்திரபாபுவிடம் கேட்டார்...

"என்ன, ஒரு பத்திரிகையில், உனக்குப் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று சொல்லியிருக்கிறாய்?'

சந்திரபாபு சூடாகச் சொன்னார்: "பின்னே... உங்கள் தம்பி பெயரை சொல்வேன் என்று நினைத்தீர்களா? நெவர்!'

விளைவு - "மாடி வீட்டு ஏழை' படம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. சந்திரபாபு உண்மையிலேயே ஏழையாகிப் போனார்.

ஒருபடத்தில் நடிக்க, ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் சந்திரபாபு. (அந்தக் காலக்கட்டத்தில் அரசு ஊழியரின் ஒரு மாதச் சம்பளமே, 150 ரூபாய் தான்) அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளில், வயிற்றுக்குச் சோறின்றி, வாழ வழியின்றி, வீட்டு மின்சாரக் கட்டணம் செலுத்தாமல், மின்வாரியத்தினர் வந்து, "பீஸ்' பிடிங்கிவிட்டுப் போன நிலையில், மெழுகு வர்த்தி வாங்கவும் காசில்லாமல், மூன்று இரவுகள் இருட்டிலேயே வாழ்ந்தார்.

எந்த சிவாஜி கணேசனை உயர்த்திக் பேசியதற்காக எம்.ஜி.ஆரின் பகையாளி ஆகி, ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி வதைபட்டாரோ, அதே சிவாஜி கணேசனை, ஒரு நாள் தேடிப் போனார் சந்திரபாபு.

"கணேசா... இப்போது நான் பட வாய்ப்பு இல்லாமல், பட்டினி கிடக்கிறேன். உன் படங்களில் எனக்கு சிபாரிசு செய்து, வாய்ப்பு வாங்கி கொடு. ஏதோ, பிழைத்துக் கொள்கிறேன்...' என்றார்.

சிவாஜி கணேசன் சாவதானமாகச் சொன்ன பதில், "உனக்கு என்னப்பா கஷ்டம்? ஏன் பட்டினி கிடக்கிறாய்? தினமும் என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போ. உனக்கென்று தனியாகவா உலை வைக்கப் போகின்றனர். என் வீட்டில் எத்தனையோ பேர், வேலைக்காரன், தோட்டக்காரன், சமையல்காரன் சாப் பிடுகின்றனர். அதுபோல, நீயும் ஒருத்தனா சாப்பிட்டுவிட்டுப் போயேன்...'

பதில் சொல்லாமல், கிளம்பிப்போன சந்திரபாபு, விரைவில் காலமானார்.

***

கவர்னர் ஜெனரல் பதவிக்காலம் முடிந்ததும், ராஜாஜி, சென்னை புறப்பட்டார். அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம், சென்னைக்கு அனுப்பப்பட்டன.

எல்லாப் பொருட்களையும் அனுப்பி விட்டனரா என்று பார்ப்பதற்கு, பிரதமர் நேருவே, ராஷ்டிரபதி பவனத்துக்கு வந்தார்.

அங்கே ஒரு இரும்புக் கட்டில் இருந்தது. அது, ராஜாஜி பயன்படுத்திய கட்டில். சாய்வாக உட்கார்ந்து எழுதவும், படிக்கவும் வசதியுள்ள கட்டில். அது, ராஜாஜியின் கட்டில் என்றும், ராஷ்டிரபதி பவனத்தின் கவனக்குறைவால், தங்கி விட்டது என்றும் கருதிய நேரு, அதை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். கட்டிலும், சென்னைக்கு வந்து விட்டது.

"இதை, சென்னைக்கு அனுப்புமாறு நான் சொல்லவில்லையே; அரசு பணத்தில் வாங்கிய இக்கட்டில், எப்படி சென்னைக்கு வந்தது?' என்று ராஜாஜிக்கு வியப்பு; பிறகு விசாரித்தார். நேருஜியின் உத்தரவின்படி கட்டில் அனுப்பி வைக்கப்பட்ட விவரம் தெரிந்தது.

பிறகு, நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார் ராஜாஜி.

"தங்கள் அன்புக்கு நன்றி. ஆனால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கட்டில், என்னுடையது அல்ல; அது அரசாங்கப் பணத்தில் வாங்கப்பட்டது. எப்படியோ, அது என்னிடம் வந்துவிட்டது. அந்த கட்டிலின் உத்தேச விலைக்கு, ஒரு செக் அனுப்பியிருக்கிறேன். அரசு கஜானாவில் அத்தொகையை சேர்ப்பித்து விடுங்கள்...' என்று, அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் ராஜாஜி.

***

நடுத்தெரு நாராயணன்

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ யாருக்காக வாழ்கின்றாயோ....அவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடு

யார் உனக்காக வாழ்கின்றார்களோ அவர்களை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாக்கு ::: ஆகா நீங்கள் எனக்கு எவ்வளவு உதவுகிறீர்கள் உணவை பதமாக அரைத்து தருகிறீர்கள் நான் இலகுவாக தட்டிவிடுகிறேன் அது போகவேண்டிய இடத்திட்குப்போகிறது நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்ய ..........

பல்லு ::::: ஒன்றும் வேண்டாம் கதைக்கும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள் நீங்கள் ஏதாவது கடுமையாக கதைத்தல், கனக்கக் கதைத்தால் பல்லுக்கில்லெல்லாம் கொட்டிப்போடுவன் என்றுதான் சொல்லுகிறார்கள், சிலர் சொல்லாமல் செய்தும் போடுவார்கள் .

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றுவது என்பது எல்லா நாட்டிலும் பொது போல அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இப்பிடியான அரசியல் வாதிகள் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது Queensland மாநில சுற்றுலா துறை அமைச்சர் சில கிழமைகளுக்கு முன்பு queensland மக்கள் கடந்த இயற்க்கை அனர்த்தங்களால் நலிந்து போய் இருக்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தூர சுற்றுலாக்கள் செல்லாமல் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் இந்த முறை விடுமுறையை கழித்து சுற்றுலா துறை மேம்பட வழி செய்யவேண்டும் என்று உருக்கமாக கேட்டிருந்தார் பல மக்களும் அதை நம்பி வெளிநாடுகளுக்கு செல்லாமல் மற்ற மாநிலங்களுக்கு போகாமல் queensland மாநிலத்திலையே விடுமுறையை கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது அந்த மக்களுக்கு இன்று அதிர்ச்சியான செய்தி சுற்றுலா துறை அமைச்சர் சுமார் 9000 கிலோ மீட்டர்கள் பயணித்து தனது விடுமுறையை குடும்பத்தோடு மால தீவில் கொண்டாடிக்கொண்டிருகின்றா..........

இன்றைய Sunday mail தலைப்பு செய்தி

Where the bloody hell are you jann?

ஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லையடி பாப்பா

எல்லா நாட்டு அரசியல் வாதிகளும் இப்பிடி தான் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.