Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

கோடரியை ஏன் விற்பான். தங்க கோடரியை எப்படி திரும்ப கொண்டுவரமுடியும். பணம் உழைக்க தெரிந்த விறகு வெட்டியாய் இருந்தால்  உண்மையை சொன்ன கடவுளுக்கு திரும்ப பொய் சொல்லாமல் இன்னொன்றையும் கூட கேட்டுவாங்கி போய் தினம் தினம் ........ பணம் சேர்க்க முடியாதா?  :lol:

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது

நைட்ல கரண்ட் கட்

ஆன சமயத்தில

வாற கொசு மாதிரி

துாங்கவும் முடியாது

துரத்தவும் முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரோகங்களில் தோற்பது மனிதர்கள் அல்ல..... மனிதர்களை நம்பிய நம்பிக்கை தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம் .

நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களை பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை .

உள்ளத்தை ஒழுங்கு படுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராக சென்று ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தைகளை கேட்டு வாங்கும் இமான் அண்ணாச்சி தன்னுடைய சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிக்காக கென்யாவிற்கு சென்று புது கெட்டப்பில் கலக்கினார்.

இந்த வாரம் சன்டிவியில் ஞாயிறன்று காலை கென்யாவில் உள்ள தமிழர்களை வைத்து அவர்களின் தமிழறிவை சோதித்தார் இமான்.

முதலில் திருக்குறள் கேட்ட அவர் அதன் விளக்கத்தையும் கேட்டார். ஒரு தமிழர்,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

என்று குறள் சொன்ன அவர், அதற்கு சொன்ன விளக்கம்தான் அதிரவைத்தது.

அதாவது எவ்வளவு பெரிய மாமியாரா இருந்தாலும் கடைசியில மருமகளுக்கு அடங்கித்தான் போகணும் என்றார். இதை அவர் தெரிந்து சொன்னாரா, இல்லை காமெடிக்காக சொன்னாரா? இமான் அண்ணாச்சிக்குத்தான் வெளிச்சம்.

அதற்குப்பிறகு அவர் சந்தித்த இரண்டு பேரும் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தை மட்டும் தவறாக சொன்னார்கள். கடைசியில் ஒருவர் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தையும் சரியாக சொன்னார்.

அதெல்லாம் சரி அண்ணாச்சியின் சன் டிவி புகழ் படவாய்ப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறதாமே. தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படங்களில் இவருக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 50 ஆயிரமாம். இது தற்போதைய சம்பளம் தான் படம் ஹிட்டாகிவிட்டால் ஆயிரங்களை லட்சமாக்க முடிவு செய்திருக்கிறாராம்.

ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர் அண்ணாச்சி, எவ்ளோ வரி கட்டணும்.. சரியான பதில் சொல்வாரா? இமான் அண்ணாச்சி?

Thatstamil

நானும் இந்த நிகழ்ச்சியை வார வாரம் தவறாமல் பார்ப்பேன் நல்ல ஒரு கலகலப்பான நகைச்சுவையான நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கி இப்பொழுது சன் டிவி இல் கலக்கி கொண்டு இருக்கும் இமான் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் உள்ளூரில் நிகழ்ச்சி தொடங்கி இப்பொழுது கென்யா வரைக்கும் சென்றிருக்கும் நிகழ்ச்சி இன்னும் பலநாடுகளில் படமாக்கப்படும் என்று எதிர்பார்ப்போம்.

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தாருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு யோசனை வந்தது,

அருகில்உட்கார்ந்திருந்த ஓருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார்.

சர்தார் நன்கு தூங்க தொடங்கினார். சர்தாரை எழுப்பி விடுவாதாக சொன்ன நன்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்க்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஸ்டமாக இருந்தது.

தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தாருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார்.

தான் ஓரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், சர்தார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), சர்தார் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார்.

இதை எதையும் அறியாத சர்தார் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.

தன் மனைவியை அழைத்து சொன்னார், "ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்க்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.

:( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா க்கு படகில் வந்திருக்கும் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பலரும் நீர் கொழும்பு புத்தளம் பதுளை என்று வந்து இருகின்றார்கள் யுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள்..... தாங்கள் நல்ல வாழ்கையை தான் தேடி வந்திருப்பதாக கூறினார்கள் அது மட்டுமல்லாமல் இந்த படகில் வந்தவர்கள் இதுவரை ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் செய்யாத புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றார்கள்

அதவாது ரயில் நிலையங்கள் கடைகள் அடங்கிய சந்திகளில் கூட்டமாக இருந்து பெண்களை பாத்து பாடுவதும் கிண்டல் செய்வதும் நக்கல் அடிப்பதும் என்று.....

அண்மையில் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு கூட்டமாக வந்திருந்த அவர்கள் ஒரு தென்னித்திய பாடகியை பாத்து நீ அவன வைசிருந்தனியா இவன வைச்சிருந்தனி என்று கத்தி அவர் பாடவே மேடைக்கு வரமாட்டன் என்று சொன்ன சம்பவம் நடை பெற்று மேடையில் இவர்களுக்கு பொதுப்படையாக அறிவிக்க வேண்டி வந்தது

ஆஸ்திரேலியா ஒரு நல்ல நாடு வாழ வந்திக்கும் நீங்கள் இப்பிடியான செயல்களில் ஈடுபடாதிர்கள் என்று நான் எல்லோரையும் சொல்ல வில்லை ஆனால் பலர்

தமிழ் கடை ஒன்றின் முன்னாள் வந்து நின்றும் பெண்களை பாத்து பாடி நக்கல் அடித்து அந்த கடைக்கார் என்னடைய கடைக்கு முன்னாள் இருந்து இப்பிடி எல்லாம் செய்யாதிர்கள் என்று சொல்ல அவருடனையே சண்டைக்கு போய் இருக்கின்றார்கள்

இப்பிடியே போனால் இங்குள்ள தமிழர்களே இவர்களை திருப்பி அனுப்ப அரசுக்கு அளித்தம் கொடுப்பார்கள்......

கண்டதையும் கேட்டதையும் எழுதியது

சுண்டல்

சிங்கள அடக்கு முறைக்கு கீழ் ஏற்பட்டிருக்கும் கலாச்சார சீரழிவு. இதை பேசின்னால் யாழில் உடனே இது தானே மேட்டுக்குடிகளின் கற்பு கதைகள் என்று கூறிக்கொண்டு சீறிப்பாய்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்பதிலுக்கு மாமியார் கையை உடைத்த மருமகள்

கோட்டயம்:தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள்.

கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி; இவரின் மனைவி ரஜினி. இவர்களுடன், லால்ஜியின் தாய், சாந்தம்மாவும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம், லால்ஜி வெளியே போயிருந்தபோது, முற்றத்தில் விழுந்த தேங்காயை எடுத்து பார்த்தார் ரஜினி. கெட்டுப் போன, தேங்காய் என்பதால், அதை குப்பையில் வீசினார்.இதை பார்த்து அங்கு வந்த மாமியார் சாந்தம்மா, "நல்ல தேங்காயை ஏன் குப்பையில் தூக்கி எறிந்தாய்' என, கேட்டு, மருமகளிடம் வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. திடீரென, மருமகளின் இடது காதை, கடித்து குதறினார் சாந்தம்மாவலியிலும், ஆத்திரத்திலும், அருகில் கிடந்த கம்பை எடுத்து, மாமியார் சாந்தம்மாவை தாக்கினார் ரஜினி. அதை தடுக்க முயன்ற போது, மாமியாரின் இரு கைகளும் உடைந்தன. அதிலும், ஆத்திரம் தீராத ரஜினி, மாமியாரின் உதட்டையும் கடித்து, பழி தீர்த்தார்.உடலில் ரத்தம் தோய்ந்த நிலையில், இருவரும் வீட்டுக்குள் சென்று படுத்துக் கொண்டனர்.

இவர்களின் சண்டையை பார்த்த, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த, மாமியாரையும், மருமகளையும், போலீஸ் ஜீப்பில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர்.பொதுமக்கள் அளித்த புகாரின்படி, போலீசார், இருவர் மீதும், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Dinamalar

:D :d :D :d :D:( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆண் மகனும் ஆல மர விழுது போல யாரோ ஒருத்தி ஊஞ்சலாடி போய் இருப்பா :(:D

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆண் மகனும் ஆல மர விழுது போல யாரோ ஒருத்தி ஊஞ்சலாடி போய் இருப்பா :(:D

ஒவ்வொரு பெண்ணும் ஆலமரம் போல! :D

 

அதில் தானே விழுதுகள் தொங்குகின்றன! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அனைத்து நாடுகளிலும்

தமிழன் வசிக்கிறான்.

சைனாவில் சைனிஷ் பேசுகிறான்

கியூபாவில் ஸ்பானிஷ் பேசுகிறான்

அரபு நாடுகளில் அரபிக் பேசுகிறான்

ரஷ்யாவில் ரசியன் பேசுகிறான்

ஜப்பானில் ஜப்பானிஷ் பேசுகிறான்

ஜெர்மனில் ஜெர்மன் பேசுகிறான்

மலேசியாவில் மலாய் பேசுகிறான்

கொரியாவில் கொரியன் பேசுகிறான்

பிரான்சில் பிரெஞ்ச் பேசுகிறான்

இத்தாலியில் இத்தாலியன் பேசுகிறான்

தாய்லாந்தில் தாய் பேசுகிறான்

பர்மாவில் பர்மீஸ் பேசுகிறான்

எதோப்பியாவில் ஏரோமா பேசுகிறான்

பெல்ஜியத்தில் டச் பேசுகிறான்

கம்போடியாவில் கீமர் பேசுகிறான்

தென்னாப்பிரிக்காவில் சுளு பேசுகிறான்

கானாவில் அகான் பேசுகிறான்

சோமாலியாவில் சோமாலி பேசுகிறான்

நைஜீரியாவில் லிக்போ பேசுகிறான்

உலகில் 250 க்கும் மேற்பட்ட நாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் அதிகபட்சம் 20 நாடுகளில் வேண்டுமானால் ஆங்கிலம் பேசப்படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் மொழிகள் வேறு. ஆனால் தமிழ்நாட்டில் என்ன சொல்கிறான்? ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் எங்குமே போக முடியாது என்கிறான். ஆங்கிலத்தை ஏன் பெரிதாகக் காட்டி, காட்டிப் பயமுறுத்துகிறாய்? நீ பயமுறுத்துவதால் தான் குழந்தைகளும் பயப்படுகிறது. ஆங்கிலம் படிப்பதால் பல நன்மைகள் இருப்பதும், நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை ஒரு நோக்கமாக நாம் வைத்திருப்பதும் வேறு விசயம். நீ பயமுறுத்துவதும், அம்மொழி மீது அநியாயத்திற்கு கவுரவத்தை ஏற்றி வைப்பதும் ஏனென்றுதான் புரியவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1300 எபிசோடுகளுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் திருமதி செல்வம் தொடர் முடிவுக்கு வரப்போவதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர் தொடங்கியதில் இருந்து கடைசி வரைக்கும் அழுது அழுதே இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த அர்ச்சனாவின் அழுகைக்கு முடிவு கிடைக்கப்போகிறது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

சீரியல் என்றாலே பணக்கார தோரணையோடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி சாதாரணமான மக்களுக்கு ஏற்ற வகையில் தொடங்கப்பட்ட தொடர் மெட்டி ஒலி, திருமதி செல்வம். இதில் மெட்டி ஒலி தொடர் முடிவுக்கு வந்த பின்னர் சன் டிவியில் கடந்த 2007ம் ஆண்டு இறுதியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பானது திருமதி செல்வம்.

சீரியல்களில் வில்லனாகவே அறியப்பட்ட சஞ்சீவ் இதில் ஹீரோவானார். சேது படத்திற்குப் பின்னர் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அபிதா இதில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். வழக்கமான குடும்பத்தொடர்தான் என்றாலும் திருமதி செல்வத்தின் கதை அமைப்பு எல்லாருக்கும் பிடித்துப் போகவே பிரைம் டைமான இரவு 8 மணிக்கு மாறியது. இதுவரை 1340 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவரும் திருமதி செல்வம் முடிவுக்கு வரப்போவதாக இயக்குநர் குமரன் தெரிவித்துள்ளார்.

அழுகை அர்ச்சனா

கார் மெக்கானிக் செல்வத்தின் மனைவி அர்ச்சனா படிப்பறிவு இல்லாத அப்பாவி. வடிவுக்கரசிதான் அர்ச்சனாவின் அம்மா. அர்ச்சனாவிற்கு இரண்டு தங்கைகள் ஒரு அண்ணன் என குடும்பப் பாங்கான தொடராக தொடங்கியது. ஆனால் தொடர் ஆரம்பம் முதலே அர்ச்சனாவிற்கு ஒரே அழுகைதான்.

இவர்களை வாழவே விடக்கூடாது என்று வில்லத்தனம் செய்யும் அண்ணி. புகுந்த வீட்டில் மாமியார் பாக்கியத்தின் வில்லத்தனம். ஏழ்மையாக தொடங்கிய வாழ்க்கை சவால் விட்டபடி ஒரே பாட்டில் வசதியான வாழ்க்கைக்கு உயர்கின்றனர் அர்ச்சனா செல்வம் தம்பதியினர்.

இவர்களை வாழவே விடக்கூடாது என்று வில்லத்தனம் செய்யும் அண்ணி. புகுந்த வீட்டில் மாமியார் பாக்கியத்தின் வில்லத்தனம். ஏழ்மையாக தொடங்கிய வாழ்க்கை சவால் விட்டபடி ஒரே பாட்டில் வசதியான வாழ்க்கைக்கு உயர்கின்றனர் அர்ச்சனா செல்வம் தம்பதியினர்.

தெருவோரத்தில் குழந்தை பெற்று எப்படியோ அம்மா, அப்பாவிடம் சேரும் அர்ச்சனாவிற்கு அங்கும் சோதனைதான். மாப்பிள்ளை செல்வம் அடித்த துயரத்தில் அர்ச்சனாவின் அப்பா மாரடைப்பில் இறந்து போக, அம்மா வடிவுக்கரசி வெடிகுண்டு விபத்தில் உயிரிழக்கிறார். இதில் குழந்தை காணாமல் போக அர்சனாவிற்கு மனநிலை தடுமாறுகிறது.

எப்படியோ குழந்தை மீண்டும் கிடைக்க மறுபடியும் பழைய நிலைக்கு திரும்புகிறாள் அர்ச்சனா. ஆனாலும் நந்தினியின் வில்லத்தனத்தினால் அவளிடம் இருந்து குழந்தையை பிரிக்க நினைக்கிறான் செல்வம். அழுது ஆர்பாட்டம் செய்து போலீசின் பின்னால் ஓடுகிறாள் அர்ச்சனா. முதல் எபிசோடில் இருந்து 1340 எபிசோடு வரை அர்ச்சனா சிரித்தது சரியாக 100 எபிசோடு மட்டுமே.

இது மாதிரி ஒரு தம்பதி இருப்பாங்களா என்று ஏங்கவைத்த தொடர் இது. கடைசியில் செல்வம் மாறிப்போகவே போர் அடிக்குதுப்பா சீக்கிரம் சீரியலை முடிங்க என்று கூறத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். இதனால் தொடருக்கு சுபம் போட முடிவு செய்து விட்டனராம்.

2007ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி 2013 பிப்ரவரி வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவருகிறது திருமதி செல்வம். நந்தினி, பாக்கியத்தின் வஞ்சகத்தை உணர்ந்து கடைசியில் மனைவியிடமே சரண் அடைகிறான் செல்வம். இல்லத்தரசிகள் எதிர்பார்த்தது போல சுபம்தான்.

அடுத்தது தெய்வத் திருமகள்

இந்த தொடரின் இயக்குநர் குமரன் சன் டிவியில் தென்றல் தொடரையும் இயக்கி வருகிறார். திருமதி செல்வம் முடிந்த பின்னர் அவரே தெய்வத் திருமகள் என்ற புதிய தொடரை இயக்குகிறாராம். இதுவும் திருமதி செல்வம் ஒளிபரப்பான நேரத்திலேயே ஒளிபரப்பாகிறது.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

1300 எபிசோடுகளுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் திருமதி செல்வம் தொடர் முடிவுக்கு வரப்போவதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

திருமதி செல்வத்தை விடுங்க.. :D நான் யாழ்களத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகில் வந்த என் மகள் எண்ணூறு பதில்களா என்று ஆச்சரியப்பட்டது சுண்டலின் பா.கே.ப வைப் பார்த்து.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அனைத்து நாடுகளிலும்

தமிழன் வசிக்கிறான்.

சைனாவில் சைனிஷ் பேசுகிறான்

கியூபாவில் ஸ்பானிஷ் பேசுகிறான்

அரபு நாடுகளில் அரபிக் பேசுகிறான்

ரஷ்யாவில் ரசியன் பேசுகிறான்

ஜப்பானில் ஜப்பானிஷ் பேசுகிறான்

ஜெர்மனில் ஜெர்மன் பேசுகிறான்

மலேசியாவில் மலாய் பேசுகிறான்

கொரியாவில் கொரியன் பேசுகிறான்

பிரான்சில் பிரெஞ்ச் பேசுகிறான்

இத்தாலியில் இத்தாலியன் பேசுகிறான்

தாய்லாந்தில் தாய் பேசுகிறான்

பர்மாவில் பர்மீஸ் பேசுகிறான்

எதோப்பியாவில் ஏரோமா பேசுகிறான்

பெல்ஜியத்தில் டச் பேசுகிறான்

கம்போடியாவில் கீமர் பேசுகிறான்

தென்னாப்பிரிக்காவில் சுளு பேசுகிறான்

கானாவில் அகான் பேசுகிறான்

சோமாலியாவில் சோமாலி பேசுகிறான்

நைஜீரியாவில் லிக்போ பேசுகிறான்

 

இந்தியத் தமிழன் மட்டும் தான் தன்  சொந்த நாட்டிலேயே ஆங்கிலத்தைக் கதைக்கின்றான் அதுவும் அரைகுறையாக . :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி செல்வத்தை விடுங்க.. :D நான் யாழ்களத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகில் வந்த என் மகள் எண்ணூறு பதில்களா என்று ஆச்சரியப்பட்டது சுண்டலின் பா.கே.ப வைப் பார்த்து.. :D

லொள்ளு........

விழுந்து விழுந்து சிரிக்கும் முகக்குறி

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி செல்வத்தை விடுங்க.. :D நான் யாழ்களத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகில் வந்த என் மகள் எண்ணூறு பதில்களா என்று ஆச்சரியப்பட்டது சுண்டலின் பா.கே.ப வைப் பார்த்து.. :D

 

அடுத்த தடவை, உங்கள் மகளுக்குச் சொல்லுங்கோ!

 

அது வெறும் பதிவு அல்ல!

 

சுண்டல் மாமா, வேலையில இருந்து செய்யுற ப்ராஜெக்ட் எண்டு! :D

 

உங்க மகள் தானே!பக்கெண்டு பிடிச்சிருவா! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கையில் ஒரு பாலஸ்தீனம் "

ஆம் 60 வருட சுதந்திர போராட்ட வேட்கை !!!

இனபடுகொலை செய்து விட்டு ஊடக நரிகள் அதற்கும் "போர்குற்றம்" என்று பூசி மெழுகுகிறது இந்த ஊடக விபச்சாரர்கள் ....!!!

ஊடகம் என்னும் ஆயுதத்தை வைத்து கொண்டு எம்மை முட்டாளாக்கியது போதும்

"WE ARE VERY MATURED COMMUNITY NOW"- ஆம் எம் இனம் இப்போது முதிர்ச்சி அடைந்துவிட்டது ஏகாதி பத்தியம் ,ஆதிக்க வர்க்கத்தை முறியடிப்போம் ஊடகம் என்னும் ஆயுதத்தை கையிலெடுப்போம் .....!

ஆகவே இனியாவது போர்குற்றம் என்ற பதத்தை தவிர்த்து இனப்படுகொலை என்ற வார்த்தையை உபயோகிப்போம் கள உறவுகளே மாற்றம் என்பது யாழில் இருந்து உருவாகட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் திறந்து பேசினால்...

சிலர் புரிந்துகொள்வார்கள்,

சிலர் பிரிந்துசெல்வார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துல பொய்யே பேசாத மூணு குழந்தைங்க பத்தித் தெரியுமா ?

1 இன்னும் பிறக்காத குழந்தை

2 இப்போ பிறந்த குழந்தை

3 இந்த மெசேஜ்ஜை உங்களுக்கு சொன்ன பச்சைகுழந்தை

நோ... நோ... அழக்கூடாது

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆர்., எழுதுகிறார்:

என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.

நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.

இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.

எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.

நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.

மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!

ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.

— கடந்த 1966ல் எம்.ஜி.ஆர் சமநீதி' இதழில் எழுதியது.

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை சாவித்திரி, "பிராப்தம்' என்ற படத்தைத் தயாரித்தார்.

சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த, அந்த படத்தில், "தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்... வெகு நாளாக என் ஆசை சின்னம்மா...' என்ற பாடலின் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்தது.

டி.எம்.எஸ்., பாடிக் கொண்டிருந்தபோது, அந்த பாடலின் சரணத்தை, அவர் பாடி நிறுத்தியதும், அந்த இடத்தில், "கண்ணா' என்று உணர்வுப்பூர்வமாக சாவித்திரியின் குரல் ஒலிக்க வேண்டும்.

அந்த ஒரே ஒரு வார்த்தைக்கு குரல் கொடுப்பதற்காக அவரும் அங்கே நின்று கொண்டிருந்தார். டி.எம்.எஸ்., பாடலை உச்சக்கட்டத்தில் பாடிக்கொண்டிருக்கும் போது, அந்த இடைவெளியில் சாவித்திரி, "கண்ணா' என்று நெகிழ்வாக, சோகம் ததும்ப குரல் கொடுத்தார். அதற்குப் பின் டி.எம்.எஸ்., பாடலைத் தொடர்வார்.

இந்தப் பாடல், டி.எம்.எஸ்.,சுக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத் தந்தது.

சாவித்திரியிடம், இந்தப் பாடலை பற்றிப் பேசும் போது, டி.எம்.எஸ்., சொன்னார்: பாடலின் நடுவில், "கண்ணா' என்று, நீங்கள் உருகாதவர்களையும் உருக வைக்கும் குரலில் அழைத்தீர்களே... அந்த உருக்கமும், நெகிழ்வும் தான், இன்னும் சிறப்பாக அந்தப் பாடலைப் பாட வைத்தது என்றார்.

உடனே, சாவித்திரி சிரித்துக் கொண்டே, "பாடலை நீங்கள் பாடிய பாவமும், உங்கள் குரலில் தெரிந்த அந்த உணர்வும் தான், என்னை அப்படி உருக்கமாக, "கண்ணா' என்ற வார்த்தையைச் சொல்ல வைத்தது...' என்றார். ஒரே ஒரு முறை கண்ணா என்று அழைத்ததால், அந்த கண்ணனே அப்படி பாடலில் வந்துவிட்டதுபோல், இருவரும் உணர்ந்து, நெகிழ்ந்து போயினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே

நீ எல்லாம் ஒரு மனுசனா ....?

ஜோய் ..காணாம பேசாத ...அறைக்குள்

அடிவாங்குறது நான் தான் ....!

............................................................................................

டாக்டர் ...எனக்கு வயிற்றில் தானே ஆப்பிரேசன்

அப்புறம் ஏன்..? நெஞ்சில் செய்தீங்க ..?

உன்னை யார் கீழே இறங்கி படுக்க சொன்னது ..?

:D:d:d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.