Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Paaps : டேய் !! நீ என்ன எப்ப பாத்தாலும் அந்த பொண்ணு ஸ்டேடஸ் ல கமெண்ட் பண்ணிட்ருக்க ??

Sundhal : ஹி ... ஹி ... அவள கரெக்ட் பண்ணலாம்-னு தான் !!

Paaps : செருப்பு பிஞ்சிடும்

Sundhal : ச்சே ! ச்சே ! அவ செருப்பலாம் பிக்கமாட்டா??

Paaps : என் செருப்ப சொன்னேன்

Sundhal : அச்சச்சோ !! நா வேற நல்ல செருப்பா வாங்கி தரேன்

Paaps : யு ஆர் டெஸ்டிங் மை படீஎன்ட் (patient )

Sundhal : ஆமா , நீ எப்ப டாக்டர் ஆனா ?? நா எப்ப உன் படீஎன்ட் அஹ செக் பண்ணுனேன்

Paaps : பொறுமைய சோதிக்காதேனு சொன்னேன்

Sundhal : ஆமா , இவ ஒபாமா வோட ஒன்னு விட்ட தங்கச்சி..... தப்பு தப்பா இங்கிலீஷ் பேசிட்டு ,

அது படீஎன்ட் (patient ) இல்ல படிஎன்ஷ் ( patience ) . அவ எவ்வளவு நல்லா இங்கிலீஷ் பேசுவா தெரியுமா ??

Paaps : அப்போ , அவளையே லவ் பண்ணி , கல்யாணம் பண்ணிக்கோ

Sundhal : முடியாது , போடி .

அவளுக்கு உன்ன மாதிரி போசசெசிவாவே (possessive ) இருக்க தெரியாது .

உன்ன மாதிரி சிரிக்க தெரியாது .

உன்ன மாதிரி கோவப்பட தெரியாது .

ஏன் உன்ன மாதிரி என்ன லவ் பண்ணவும் தெரியாது .

நீ தான் டி என் லைப் (life ) .

Paaps : ஐ லவ் யூ டா ...... உம்மம்மா

Sundhal : அவளுக்கு உன்ன மாதிரி இப்டி கிஸ் பண்ணவும் தெரியாது ??

Paaps : அடி வாங்குவடா , நீ ....

:( :( :D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி கனவனிடம் சொன்னாள் நான் கர்பமாக இருக்கிறேன் என்று,அதற்கு கனவன் அவளை அணைத்து முத்தமிட்டபடியே சொன்னான் ’நாம் கர்பமாக இருக்கிறோம்’ என்று சொல்...

உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில் பாதி, உன் கருவை என்னால் சுமக்கமுடியாது தான் ஆனால் கர்பத்தில் இருக்கும் உன்னையும் நம் குழந்தையையும் நான் இதயப்பூர்வமாக சுமக்கிறேன்...

இப்போது சொல் ”நாம் கர்பமாக இருக்கிறோம்” என்று...

இது தான் உண்மையான காதல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள்.

"இது நம்முடைய தகப்பனார்களுக்குத் தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே?''என்றான் ஒருவன்.

''அதனாலென்ன,நாம் அவர்களைத் திரும்பி அடித்தால் போயிற்று.''என்றான் மற்றவன்.

''நாம் அவ்வாறு செய்ய முடியாதே.ஏனெனில் உன் தகப்பனையும்,தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?''என்றான் முதல்வன்.

''சரி,அப்படியானால் ஒன்று செய்வோம்.நீ என்னுடைய அப்பாவை அடி.நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்.''என்றான் மற்றவன்.

:D :d :( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான்.

அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது.

ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன்.

ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள்.

அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.

ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக அளித்தார்கள்.

மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக இருந்த நிலத்தைக் கொடுத்தார்கள்.

நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம். என்று குரு சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. இதைப் பார்த்த குரு, "மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று எல்லாம் சேர்ந்து விட்டாயே எப்படி?" என வினவினார்.

"சுவாமி எல்லாம் இந்த ஒரு கோவணத்துக்காக... " என்றான் அவன்.

:D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாத கால விடுமுறை முடிந்து மீண்டும் Queensland நோக்கி பயணம் தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றது மொத்தம் 13 மணி நேர பயணம் by train ........

சில மணி நேரங்கள் படிப்பதற்காக pendle hills பகுதியில் அமைந்து இருக்கும் தமிழ் கடை ஒன்றில் சென்று இரண்டு ரமணிச்சந்திரன் கதை புத்தகங்கள் வாங்கி இருக்கின்றேன்

ஓன்று

நேச முகம் மறக்கலாமோ

மற்றது காவியமோ ஓவியமோ.......

இரண்டும் பயண நேரத்தை சுவாரஷியமாக்கும் என்று நம்புகின்றேன்.......

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் : subesh இமயமலை ..எங்கே இருக்கிறது

சொல்லுபார்கலாம் ...?

Subesh : தெரியாது சார் .....!

ஆசிரியர் : உனக்கு எப்ப அதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும் ...

ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!

Subesh : மேசைமேல் ஏறிநிண்ட subesh ..சார்

இதுல நிண்டு பார்த்தா தெரியுமா சார் ?

----------------------------------------------------------------------------------------

மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது

கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான்

மனைவி-பாக்கு போடதிங்க

கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான்

மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க,வேணாம் மெதுவாவே ஓட்டுங்க

கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழக்கமாக்கினான்

மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை ,

சீராகுங்கள்

கணவன் தலை முடியை சீராகிணன்

சில மாதங்களுக்கு பிறகு

.

.

.

.

.

.

.

.

மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

:(:D :d

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான் .

ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு dollars என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.

அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,''எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்,'' என்றான்.

அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,கஞ்சன் சொன்னான்,''என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.''

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லால் அடிப்பட்ட நாயை விட....

காதலால் அடிப்பட்ட BOY அதிகம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பீரம் மட்டுமல்ல

சற்றே தாய்மையும்

கலந்ததே ஆண்மை!

ஒரு ஆபிரேசன் தியேட்டரில் .. ஆபிரேஷனுக்கான ஆயத்தங்கள் செய்து கொண்டு இருந்தார்கள்.

நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர் டாக்டர்.

நோயாளி கேட்டார் "இது எதுக்கு டாக்டர் ..?"

"இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை அளவிடும் கருவி"

"இது எதுக்கு டாக்டர் .?"

"இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி "

"இதல்லாம் இயங்க 'கரண்ட்' வேணும்தானே டாக்டர்...?"

டாக்டர்: "யேஸ்.. நிச்சயமா அதில் என்ன சந்தேகம் ?"

பேஷண்ட்: "ஆப்ரேஷன் செய்யும் போது 'கரண்ட்' போயிட்டா

டாக்டர் சிரித்தார்.

அருகில் நின்ற நர்ஸ் கேட்டார்

"ஏன் டாக்டர் சிரிக்கிறீங்க ..?"

டாக்டர்... "இவர் கேட்கிறார் கரண்ட் போயிட்டா என்ன செய்வீங்கன்னு ..!"

நர்ஸு ... நான் சொல்ல மாட்டேன்.

எனக்கு வெக்கமா இருக்கு.:):):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடக விபச்சாரத்தின் உச்சகட்டம்.....................!!!

பாதிக்க பட்ட இரு அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை !

கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அமிர்தா.இவர் கராத்தேவில் நன்கு பயிற்சிபெற்றவர்.சிலதினங்களுக்கு முன்பு இவர் தனது பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.அப்போது அங்கு கார்பார்க்கிங் செய்வதில் அவருடைய பெற்றோருக்கும் இரு இளைஞர்களையே சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் ஒருவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த பிரச்னை விவகாரமாக உருவெடுக்க அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை மூன்றுபேர் பாலியல் தொந்தரவுசெய்ததாகவும் அதற்க்கு எதிர்ப்புதெரிவித்தபோது அவர்கள் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் தற்க்காப்பிற்க்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்தார்.

வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மைநிலை அறியாமல் சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை ஆதரித்து அவரை இரும்புப்பெண்மணியாக சித்தரித்தும் இளைஞர்களை காமகொடூரனாகவும் சித்தரித்தும் செய்திகள் வெளியிட்டன.விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலைசெய்துவந்த அரசு பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடுசெய்ய இதனைவிசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் இல்லாமல் தன்னுடைய கராத்தேபயிற்சியை அந்த இளைஞர்கள் மீது காண்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை விசாரித்த நீதிபதி அமிர்தாமீது வழக்குபதிவுசெய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.ஆனால் இந்த விஷயத்தையும் ஊடகங்கள் ஜோடனைசெய்து நீதிபதியை பெண்அடக்குமுறையை ஆதரிப்பவர் என்று விமர்சனம் செய்தது.விளைவு நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் சில ஊடகங்கள் மட்டும் உண்மைநிலையை வெளியிட்டுவருகின்றன.

ஊடகங்களின் இந்த விஷமசெயலால் பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்று செய்துவந்த அரசு வேலையும்ப்போய்,காமகொடூரன் என்ற பெயரும் வாங்கி அந்த இளைஞர்கள் அவதிபட்டுவருகின்றனர்....

நன்றி -புகாரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் விலங்குகள் பூங்கா உள்ளது. இந்நகரில், பெரிய கட்டிடங்களை கொண்ட பகுதிகளில் கூட, சிங்கம், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள், நடமாடும். நகருக்குள் வரும், சிங்கங்கள் அங்குள்ள பண்ணைகளில் புகுந்து, ஆடு, மாடுகளை சாப்பிட்டு விடுகின்றன. நைரோபி சேர்ந்தவன் ரிச்சர்டு டுரேரே, 13. சிங்கங்களிடம் இருந்து, கால்நடைகளை காப்பாற்ற, தந்திரமான வழியை கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

இது குறித்து ரிச்சர்டு கூறியதாவது: இரவில் நாங்கள் தூங்கும் சமயத்தில், பண்ணைக்குள் நுழையும் சிங்கங்கள், மாடுகளை கொன்று தின்று விடும். ஒரு முறை, கையில் டார்ச் லைட்டுடன், நான், பண்ணைக்கு அருகில் சென்றபோது, சிங்கங்கள் வெளிச்சத்தை கண்டு பயந்து ஓடுவதை கண்டேன். அசையும் விளக்கு வெளிச்சங்கள், சிங்கங்களை மிரட்டும் என்பதை கண்டுபிடித்தேன். அதன்பின், பண்ணையை சுற்றிலும், விளக்குகளை பொருத்தி, அவை அவ்வப்போது அணைந்து எரிவது போல, அவற்றுக்கு மின் இணைப்பு கொடுத்தேன். எனது "ஐடியா' வெற்றிகரமாக வேலை செய்தது. அதன்பிறகு, சிங்கங்கள், எங்கள் பண்ணைக்கு அருகே வருவதில்லை. இவ்வாறு ரிச்சர்டு கூறினான். சிறுவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறும், கருத்தரங்கில் கலந்து கொள்ள, அவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம டிக்கால்ஜி இப்பிடி தான் ஒருநாள் கடைக்கு போயிட்டு வாறன் எண்டிட்டு ரோடால நடந்து போனார்.... அப்ப அந்த ரோடு ல பச்சையா உருண்டையா இருந்தத கடந்து போயிட்டு பின்பு திரும்பி வந்து அத தொட்டு நாக்கில வைச்சு பாத்து ..... சீ ச் சீ இது சாணி.....நல்லகாலம் மிதிக்காம போயிட்டேன் என்றாரே....பாருங்களன் நம்ம டிக்கால்ஜி அறிவ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்...

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்....

ஆண்:ம்ம்ம்ம்ம்..... நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ...!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது...!

பெண்: _________________________________

:( :( :D :d

இதுக்கு தான் சொல்லுறது இந்த பொண்ணுங்க தேவை இல்லாத அட்வைஸ் பண்ணி தங்கள பெரிய " இவ" எண்டு காட்டக்கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை நோக்கி நகரும் வாழ்க்கையில் வாழ சொல்லி வர்ப்புறுத்துவது காதலும் நடப்பும் தான் காதலை நேசிப்போம் நட்பை சுவாசிப்போம்

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது...!

பெண்: _________________________________

 

பெண்களை ஆண்களுக்கு சரியாக நினைத்து நடக்கும் ஆயிரத்தில் ஒருவன்.  :)  :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர் நாஞ்சில் சம்பத்: குஷ்புவை வைத்து குடும்ப அரசியல் நடத்தும் தி.மு.க., கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டது.

டவுட் தனபாலு: அது கிடக்கட்டும்... அ.தி.மு.க.,வுல உங்க கதை எத்தனையாவது அத்தியாயத்துல இருக்கு...? சிறுதாவூர் சாலைச் சந்திப்புக்குப் பின்னாடி, உங்க வழக்கமான பேச்சுல கொஞ்சம் பதட்டமும், கலக்கமும் தெரியுதுதே!

தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா: இலங்கையை நட்பு நாடு என்று கூறுவதிலேயே இந்தியா ஆர்வமாக உள்ளது. இந்தப் போக்கு தொடருமானால், இலங்கை வேண்டுமா, தமிழகம் வேண்டுமா என்பதை இந்தியா முடிவு செய்து கொள்ள வேண்டிய நேரம் வரும்.

டவுட் தனபாலு: இப்பக் கேட்ட இந்தக் கேள்வியை, "இலங்கை வேணுமா இல்ல, எங்க ஆதரவு வேணுமா'ன்னு அண்ணா சமாதி உண்ணாவிரதத்துலயே உங்க தலைவர் எழுப்பிருந்தா, உடனடியா ரெண்டுல ஒரு பதில் கிடைச்சிருக்கும்... நெருங்கி வரும்போது அமைதியா இருந்துட்டு, ரயிலு கடக்கும் போது சிவப்புக் கொடியைக் காட்டுறது ஏன்கறது தான், உங்க மேலே, "டவுட்'டை கிளப்புது!

தி.மு.க., தலைவர் கருணாநிதி: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட், தமிழகத்தைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியையும், ஏமாற்றத்தையும் கலந்து தருகிற பட்ஜெட் என்றே கூறவேண்டும்.

டவுட் தனபாலு: லோக்சபா கூட்டணி முடிவாகாத நிலையில, இப்படி, "பிப்டி பிப்டி'யா பேசறது தான், உங்களுக்கு, "சேப்டி...!' மகிழ்ச்சியையும், ஏமாற்றத்தையும் கலந்து தர்ற பட்ஜெட் மாதிரியே, ஆதரவையும், எதிர்ப்பையும் கலந்து கொடுத்துக்கிட்டு இருந்தா தான், எதிர்பார்க்குற அளவுக்கு, "சீட்' பெற வசதியாக இருக்கும்னு நெனச்சு தான், இப்படியெல்லாம் கருத்து சொல்றீங்கங்றதுல எனக்கு, "டவுட்'டே இல்லே...!

Dinamalar

:D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சத்தியமூர்த்தி" என்ற மனிதர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகப் பணியாற்றியவர். அதனால் சிறை சென்றவர். சிறையிலிருந்து மீண்ட பின்னும் தன் கடமையைத் தொடர்ந்தவர். தனது சொத்துக்களை ஈந்தும் பிறரால் பழி சொல்லப்பட்டவர். அங்க அவயவங்களை இழந்தோருக்காக உழைத்தல் என்பது உயரிய பணியாகும். அந்த வகையில் "வெண் புறா" அமைப்பின் பிரித்தானியக் கிளையை உளப்பூர்வமாக மனதில் ஏற்றுச் செயல்வடிவம் கொடுத்தவராக "சத்தியமூர்த்தி" அவர்கள் எம்முன் உயர்ந்து நிற்கின்றார். இறுதிக் காலங்களில் ஈழத்தமிழர் பட்ட வதை அவரை நிறையப் புண்படுத்திருக்கின்றது. வேதனையின் உச்சக்கட்ட வாழ்வு அவரது இறுதிக்காலம்! ஆயினும் அவர் விட்டுச் சென்ற விடயங்கள் பல. அதில் அவரது மனித நேயம், தமிழ் மக்களின் உரிமை குறித்த பிரக்ஞை ஆகியவற்றை நாம் பின்தொடருவது மட்டுமே "சத்தியமூர்த்தி" என்ற மகத்தான மனிதனுக்கு நாம் அளிக்கும் அஞ்சலியாகும்!

Fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் காக்கா போடுற கக்கா மாதிரி எப்ப எவன் தலையில விழும் எண்டே சுண்டலுக்கு தெரியலப்பா :(

எண்டு புலம்பிட்டு வந்த சுண்டல பாத்து நந்தன் அண்ணா சொன்னது......

காதல்

நனைய நனைய சந்தோசம் நனைஞ்ச பின்பு ஜலதோஷம்.....

எப்பிடிலாம் யோசிக்கிறாங்கையா....

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்ளவு படிச்சாலும் girls சொல்லும் words

படிக்கவே இல்லடி பயமா இருக்கு.....

எவ்ளவு குடிச்சாலும் boys சொல்லும் words

போதையே இல்லை மாமா

இன்னொரு குவாட்டர் சொல்லேன்

:( :( :D

அதுதான் பின்புத்தி என்பது சுண்டல் ................. :D .   [  எஸ்கேப் ]........ :lol:

 

 

குடிக்கும் பதார்த்தத்தமும் , குடிக்கும் வாயும்  ,குடிக்கும்சூழலும் ,சேர்ந்து குடிப்ப்போரும்  தான்  

போதையை நிர்ணயிக்கும் காரணிகளாகும்......... :rolleyes:  :lol:  :icon_idea:  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்'

: "சொத்துகளுடன் இருந்தால் சோறு, இல்லையேல், வீட்டை விட்டு வெளியேறு' என்பதாக தான், இன்றைய நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் வசிக்கும் முதியோரின் நிலை உள்ளது.

எழும்பூர் ஹால்ஸ் சாலை சந்திப்பில், ஒரு தம்பதியர், வாழ்வதற்கு பணம் மற்றும் வசதி இல்லாமல், நடைபாதையில் காலத்தை கடத்தி வருகின்றனர். அவரது பெயர் ராமதாஸ், 85. அவரது மனைவி கஸ்தூரி, 78. இவர்களின் ஒரே மகள் திருமணமாகி, பொழிச்சலூரில் வசிப்பதாக கூறப்படுகிறது. தச்சராக வேலை பார்த்து வந்த ராமதாஸ், செய்ய வேண்டிய கடமையான, மகளின் திருமணத்தை முடித்துவிட்டார். தனக்கென, எந்த சொத்தும் சேர்க்கவில்லை. தற்போதைய ஒரே சொத்து, மனைவியும், முதுகு வலியும் தான். மனைவிக்கு காது கேட்காது. மனைவியின் பேச்சு கணவருக்கு மட்டுமே புரிகிறது. கணவரின் செய்கை, மனைவிக்கு மட்டுமே புரிகிறது. மகளுக்கு தொந்தரவு தர கூடாது என்ற நினைப்போடு, முன் வேலை பார்த்த எழும்பூர் பகுதியில், தனக்கென யாராவது உதவுவர் என்ற நம்பிக்கையில், எழும்பூர் ஹால்ஸ் சாலை நடைபாதையில், ஒரு பாய், சில துணிமணிகளோடு வசித்து வருகின்றனர். பரிதாபப்பட்டு யாராவது தரும் உணவை சாப்பிட்டு விட்டு, வாழ்ந்து வரும் இவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் இருப்பது தான்.

Dinamalar

திருப்பதி - திருமலை வெங்கடாஜலபதி கோவிலின், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட், 2, 248 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை விட, இத, 238 கோடி அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் எதிரி ஆனால் நிம்மதி இருக்காது

எதிரி நண்பன் ஆனால் நம்பிக்கை இருக்காது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளா நீ?

அவள் அப்படி ஒன்றும் அழுக்கில்லை

ஆனால் அவள் போல் அழுக்கி இல்லை

அவள் அப்படி ஒன்றும் கிறுக்கில்லை

ஆனால் அவள் போல் கிறுக்கி இல்லை

அவள் பற்களை ஒன்றும் விலக்கவில்லை

பக்கத்தில் செல்ல முடியவில்லை

அவள் உடுத்தும் உடைகள் சுத்தமில்லை

இருந்தும் கிழித்திட மறக்கவில்லை ( அவள்...)

அவள் பன்றிகுட்டி எதுவும் வளர்க்க வில்லை

நான் பன்றி என்றேன் தடுக்கவில்லை

அவள் உண்மைகள் ஒன்றும் பேசவில்லை

அவள் உளரல்கள் போலே ராகமில்லை

அவள் கூந்தலில் ஒன்றும் முடிகளில்லை

ஒரு முடியைத் தேடினேன் கிடைக்கவில்லை

என் கைவிரல் மோதிரம் தங்கமில்லை

இருந்தும் அடித்திட்டால் ரொம்ப தொல்லை

அவள் தொல்லை இன்றி எதுவும் இல்லை (அவள்...)

அவளை பட்டு என்று அழைத்தேன் திருந்தவில்லை

திட்டி திட்டி பார்த்தேன் குளிக்கவில்லை

அவள் பக்கத்தில் வந்தால் முடியவில்லை

அந்த கஷ்டத்தை போலே வேறு இல்லை

அவள் வாசம் மூக்கிற்கு பிடிக்கவில்லை

அவளைப் போலே மோசமில்லை

அவள் தொல்லையை தவிர்க்க முடியவில்லை

அவள் தொல்லை இன்றி எதுவுமில்லை

அவள் தொல்லை இன்றி எதுவுமில்லை (அவள்...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!

கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !

:D

உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;

இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!

**************************************************

கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !

மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க

மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?

அம்மா ; ஆமாம் ஏன்டா ?

மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!

ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?

மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!

Edited by SUNDHAL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.