Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?

அம்மா ; ஆமாம் ஏன்டா ?

மகன்: .நாய் தெருவில் செத்து கிடக்கு .!

 

அம்மா: அதுக்கு உனக்கெண்டா. நீ சாப்பிடு

 

மகன்: எனக்கு பசிக்கல்லை அம்மா. அதை பார்த்த பிறகு பசி போயிட்டுத்து.

 

அம்மா: ? ? ? ? ? ? ?

:lol: :lol: :lol:

 

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹா lolz :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்...

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி, இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி...

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும், காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து...

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார். முதலில் ஜன்னலை மூடுங்கள் ஒருத்தி செத்து விடுவாள். அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு...!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு இது எப்படி என்று பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..

பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நந்தன் அண்ணா தன்னோட பையனோட birth day க்கு அவரோட பையன் கிட்ட கேக்கிறாரு.....

உன்னோட பிறந்த நாளுக்கு பரிசா என்ன வேணும்?

மகன்: ஒன்னும் அதிகமா வேணாம் அப்பா உங்க கஷ்டம் எனக்கு தெரியும் ...

ஜஸ்ட் ஒரு ரேடியோ அத சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார் அவளவு தான்......

நந்தன் அண்ணா நெஞ்ச பிடிச்சவாறே இன்னாது ஸ்போர்ட்ஸ் காரா........ஜோக் அடிச்சது காணும் ஒழுங்கா போய் படி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: நான் துண்டை கையில் எடுத்தா

குளிக்கப் போறேன்னு அர்த்தம்...

துண்டைக் கழுத்தில் போட்டால்

ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...

துண்டை இடுப்பில் கட்டினால்

கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...

துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்

இதை கேட்டு டென்ஷன் ஆனா நந்தன் அண்ணா காலை தூக்கியவாறே ஆமாடா சுண்டல் நான் கால தூக்கினா உன்ன உதைக்க போறேண்ணு அர்த்தம்....

வேண்டும் இடம் எல்லாம் உங்க துண்டை கட்டுங்கோ. ஆனால் அரைநாரில் மட்டும் கட்டாதீர்கள். நீங்களும் காசிக்கு போனால் யாழில் இன்னும் ஒரு உறவு குறைய போகுது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தால் என்ன அண்ணா நேற்று மட்டும் யாழை 15000 பேர் பாத்திருக்கின்றார்கலாம் இலங்கையில் தடை செய்யப்பட்ட நிலையிலும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையிலே 3 மட்டும்தான்

எப்ப வரும்னே தெரியாது..

பணம்,......

சாவு.. ......

அப்புறம் .....

எஸ்.எம்.எஸ்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிச்சு கிச்சு மூட்டும் தமிழக அரசியல் செய்தி ஓன்று

திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவுக்கு ஜாதகத்தில், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் பார்வை சரியில்லாததால், அவற்றுக்கு பரிகாரம் செய்யும் வித மாக, ஊதா, கறுப்பு, சந்தனம் என, கலர் கலர் சட்டையில் வலம் வருகிறார்.

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட, தி.மு.க., செயலருமான நேரு, தி.மு.க.,வில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவர். கட்சியில் தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரிடமும் நெருங்கி பழகக்கூடியவர். இவரது தம்பி ராமஜெயம், நேருவின் அரசியல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி, ராமஜெயம் காரில் கடத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன்பின், நேருவின் ஒட்டுமொத்த நடவடிக்கை யும் மாறியது. தாடி வளர்த்து, நரைத்தத் தலையுடன் வலம் வந்தார். அதன்பின், கட்சி தலைவர்கள், அவரது ஆதர வாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து, தாடியை மழித்து, "டை' அடித்து, பழைய நேருவாக திரும்பினார்.ஆயினும் தொடர்ந்து அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சொத்துக்குவிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

தவிர, ராமஜெயம் கொலை செய்யப்பட்டு, ஓராண்டு நெருங்கும் நிலையிலும், இதுவரை குற்றவாளிகள் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. நேரு மீதும், அவரது குடும்பத்தார் மீதும் வழக்குகள், பிரச்னைகள் தொடர்வதால், பிரபல ஜோதிடரிடம், ஜோதிடம் பார்த்ததாக தெரிகிறது. அவரது ஆலோசனைப் படி, ஊதா, கருப்பு, வெளிர் மஞ்சள் நிறங்களில் சட்டை அணிந்து வெளியே வருகிறார்.

இதுகுறித்து கட்சினர் சிலர் கூறுகையில், "நேரு ஜாதகத்தில், ராகு, கேது, சனி போன்ற சக்தி வாய்ந்த கிரகங்களின் பார்வை சரியில்லாததால், ஜோதிடர் அறிவுரைப்படி, கிரகங்களுக்கு உகந்த, அவற்றுக்கு பிடித்த நிறங்களில், ஆடை அணிந்து வருகிறார். கையில் சிவப்பு நிற கயிறு கட்டியுள்ளார். வாகனமும் அதேபோல தான் பயன்படுத்துகிறார்' என்றனர். கடந்த வாரம், ராகு, கேது ஸ்தலங்களான, திருநாகேஸ்வரம், கீழப்பெருப்பள்ளம் கோவிலுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தவிர, துறையூரில் உள்ள ஓங்காரக்குடில் அன்னதான கூடத்துக்கு, 100 மூட்டை அரிசி தானம் வழங்கியுள்ளார். மேலும், அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்துள்ளனர்.

இதுகுறித்து நேருவின் பி.ஏ., முத்துசெல்வம் கூறுகையில், ""அண்ணன் எந்த கோவிலுக்கும் செல்லவில்லை. பெரிதாக பணிகள் ஏதும் இல்லாதபோது, இதுபோல கேஷுவலாக கலர் சட்டை அணிந்து வருவார். மற்றபடி எந்த காரணமும் இல்லை,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

Dinamalar

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி

விடுதலையை வென்றுடுத்ததாக வரலாறு இல்லை...

விடுதலை இயக்கத்தின் பின்னால்

மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் போதுதான் அது

மக்கள் போராட்டமாக ...

தேசிய போராட்டமாக ...

முழுமை பெரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள விடியோகாட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.

http://m.youtube.com/#/watch?v=GSRVUj3PW2g&feature=youtu.be&desktop_uri=%2Fwatch%3Fv%3DGSRVUj3PW2g%26feature%3Dyoutu.be

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா இது ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் !!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=rGjkSMvDOB4

Be ware of girls never trust them

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கண்ணதாசன், தமிழ் தேசியக் கட்சி ஆரம்பித்த போது, கடற்கரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், தி.மு.க.,வையும் அதன் தலைவர்களையும் வழக்கம் போல் தரக்குறைவாக தாக்கி பேசினார். ஆத்திரம் அடைந்த சிலர், கூட்டம் முடிந்தவுடன், கண்ணதாசனைக் தாக்க முயன்றனர். உடனே, கண்ணதாசன், போலீசில் புகார் கொடுத்தார். "சிட்டிபாபுவும், வேறு சில மதுரைக்காரர்களும் சேர்ந்து என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த கொலை முயற்சியை, கருணாநிதி தான் தூண்டி விட்டார்...' என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார் கண்ணதாசன். இந்த புகார், மறுநாள் காலையில் ஒரு நாளிதழின் முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. வெளியூர் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, அன்று தான், சென்னை திரும்பியிருந்தார் கருணாநிதி. "கண்ணதாசன் கூறியிருப்பது பொய் என்று போலீசுக்கே தெரியும். உங்களை இந்த வழக்கில் சேர்க்க மாட்டார்கள்...' என்று கருணாநிதியிடம் நான் சொன்னேன். அது போலவே, கருணாநிதியை வழக்கில் சேர்க்கவில்லை.

சிட்டிபாபு மற்றும் சில மதுரைக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. நீதிபதி நடராஜன் மிகவும் நேர்மையானவர். வழக்கில் சிட்டிபாபுவுக்காக நான் ஆஜரானேன். கண்ணதாசனைக் குறுக்கு விசாரணை செய்தேன். அவர் பொதுமேடைகளில் எப்போதுமே தரக் குறைவாக பேசுபவர் என்பதை நீதிபதி உணரும் வகையில் கேள்விகளை கேட்டேன்.

"நீங்கள், சாதாரணமாக, எந்த பொதுக்கூட்டத்திலும், மாற்றுக் கட்சியினரை அசிங்கமாகவும், அவதூறாகவும் பேசுவது வழக்கம் அல்லவா?'

"இல்லை. நான் அப்படியெல்லாம் பேசுவது கிடையாது!'

கண்ணதாசன் இப்படித்தான் பதில் சொல்வார் என்பது நான் எதிர்பார்த்தது தான். இப்படி பதில் சொன்னதும், என்ன கேட்க வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். அதைக் கேட்டேன்.

"நீங்கள் தி.மு.க.,வில் இருந்த போது, திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பக்தவத்சலத்தின் மகள் சரோஜினி வரதப்பனைப் பற்றி என்ன பேசினீர்கள் என்பது நினைவிருக்கிறதா?'

"இல்லை...'

"நான் நினைவுபடுத்துகிறேன்...' என்று கூறி, "சரோஜினி வரதப்பனைப் பற்றி, அவர் அசிங்கமாக பேசியதை அப்படியே எடுத்துச் சொன்னேன். இந்த பேச்சினால் ஆத்திரமடைந்த காங்கிரஸ்காரர்கள், உங்களை நையப் புடைத்தனர். சென்னை திரும்பிய நீங்கள், ரவுடிகளின் பட்டாளத்தோடு மறுபடியும் திருக்கழுக்குன்றத்தில் கூட்டம் நடத்தி, கலாட்டா செய்ய ஏற்பாடு செய்தீர்கள். இதை தெரிந்த அண்ணாதுரை, உங்கள் முயற்சியை தடுத்து நிறுத்தினார், இல்லையா?' என்றும் கேட்டேன்.

திருக்கழுக்குன்றம் பேச்சுபற்றி நான் குறிப்பிட்ட உடனே, கண்ணதாசனின் முகம் வெளிறி விட்டது. எங்கே, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்டி விடுவேனோ என்று பயந்தார். எனவே, சாமர்த்தியமாக, "நான் அப்போது, தி.மு.க.,வில் இருந்ததால், தி.மு.க., பண்பாட்டையொட்டி அப்படிப் பேசியிருப்பேன்...' என்றார்.

"சரி... நீங்கள் தி.மு.க.,வை விட்டு வெளியேறிய பிறகு திருந்தி விட்டீர்களா? அதன் பின், மேடையில் பேசும் போதெல்லாம் நாகரிகமாகத்தான் பேசுகிறீர்களா?'

"ஆமாம்...'

"அண்மையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், மூதறிஞர் ராஜாஜியை, "செருப்பால் அடிக்க வேண்டும்...' என்று பேசினீர்களா?'

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராத கண்ணதாசன், அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அவரை விட அதிர்ச்சி அடைந்தவர், நீதிபதி நடராஜன். "இந்தக் கேள்வி எல்லாம் இப்போது எதற்கு கேட்கிறீர்கள்?' என்று பதறியபடி கேட்டார் நீதிபதி.

"இந்த சாட்சி கண்ணதாசன் எப்படிப்பட்டவர் என்பதை, இந்த நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் மேடை ஏறினால், கள் குடித்த குரங்கு போல் நடந்து கொள்பவர். பேசக் கூடாததையெல்லாம் பேசி, மாற்றாரின் ஆத்திரத்தை கிளப்பக் கூடியவர் என்பதை, இந்த நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கேள்விகளை கேட்கிறேன்...'

இதன் பிறகு, கண்ணதாசன் பதில் அளிக்கக்கூட நீதிபதி வாய்ப்பு தரவில்லை. சிட்டிபாபு உள்ளிட்டோர் மீதான கொலை முயற்சி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

:D :d

—"ஒரு மேயரின் நினைவுகள்' நூலில், மறைந்த வேலூர் நாராயணன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன ஆதங்கம் இந்த தமிழகத்தின் மாணவர் புரட்சியை பார்க்க எமது தளபதிகள் மற்றும் போராளிகள் பலர் இல்லையே என்று......

தங்களை ஆகுதியாக்கி இந்த புரட்சியை உருவாக்கி இருக்கின்றார்கள் எமது காவல் தெய்வங்கள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இத்தனை வருடங்களாக எதிர் பாத்ததே இந்த தமிழகத்தின் எழிச்சியை தான்.......

தங்கள் அழிவில் புதிய புரட்சியை உருவாக்கி தமிழ் ஈழம் மலரப்போகும் நாளை எதிர் பாத்து காத்திருக்கும் அந்த அத்தனை மாவீரர்களையும், போராளிகளையும் மீண்டும் ஒரு முறை நன்றியோடு நினைவில் கொள்கின்றேன்.....

அவர்கள் வேண்டி நின்றதொன்றுதான். ஆனால் தமிழர் அழிவில் தனம் தேடும் கருணாநிதி அடக்கு முறை சட்டங்களை பாவித்து அவர்களை அடக்கிவிட்டு தான் உண்ணாவிரதமிருந்து நாடகம் ஆடிவிட்டார்.  இன்று சிதம்பரம் சென்னை வந்து "பாராளுமன்றத்தில் நாங்கள் ஒரு பேருக்கு பிரேரணை கொண்டு வருகிறோம் நீ பேருக்கு பதவி விலகு" என்ற போது பேருக்கு பதவி விலகி நாடகம் ஆடியிருக்கிறார். அதில் அவர் திரும்ப சேர்வதற்க்கான நாடகமும் சேர்த்தே இணைக்கபட்டிருக்கிறது. ஆனால் ஐ.நாவில்  அமெரிக்காவின் பிரேரணையை கருணாநிதி காங்கிரஸ் கூட்டு தொடர்ந்து நீர்த்துப்போக செய்கிறது. அடுத்த தேர்தலில் கருணாநிதி-காங்கிரஸ் கூட்டு தோற்கும் வரை ஐ.நா வில் எதும் நடக்குமா என்பது சந்தேகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி மத்தியில் ஆர்சிக்கு வந்தாலும் ஒன்றும் ஆக போவதில்லை ஆனால் தமிழகத்தின் இந்த எழிட்சியை ஈழத்தமிழினம் பற்றிப்பிடித்து எமது இலக்கை நோக்கி நகரவேண்டும் அண்ணா.....

உலக நாடுகள் நினைக்க வேண்டும்....

15 மில்லியன் சிங்களவன் வேணுமா இல்லை 80 மில்லியன் க்கு மேல் இருக்கும் தமிழன் வேணுமா என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி கிடையாது.: பிஜேபி. பாரதிய ஜனதா கட்சியின் "தமிழ் ஈழம்" புரிதல் இதுதான்.. எல் கே அத்வானி. : சிங்களவர்களை தமிழர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிடவேண்டியது தானே..??" நாநாஜி தேஷ்முக் : தமிழும் சிங்களமும் சமஸ்க்ருத தாயின் குழந்தைகள் அதை தமிழர்களும் சிங்களர்களும் உணர்ந்தாலே இலங்கையில் யுத்தம் நின்றுவிடும்..!!" ராகவ ரெட்டி: சிங்களர்கள் ராமாயணத்தில் கொடூர ராவணனை ஒழிக்க ராமனுக்கு உதவிய அந்த அனுமானின் படை...!!" பிரவீன் தொகாடியா : "தமிழ் ஈழம்" என்கிற தீவிரவாதிகளை இந்திய தண்டிக்கவேண்டும் (தமிழ் ஈழம் என்பது தீவிரவாதிகளின் பெயராம்) "ஈழம் என்றால் என்னவென்று தெரியாமல் நீங்கள் ஈழத்தை பற்றி பேசுவதற்கு பேசாமலே இருக்கலாமடா நீங்க.....!!" "இந்த லட்சணத்தில் இந்த மடையர்கள் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் பேசும்போது வேடிக்கையாகத்தான் இருக்கும்..!!

" Mr.Naradhar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RSS காரங்களுக்கும் பிஜேபி க்கும் தப்பு தப்பா ஈழத்தமிழரின் வரலாற சொல்லி கொடுத்து இருக்கார் நம்ம சுப்பு சுவாமி :D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

""இல்லை ஓய்... காங்., தலைவர் ஞானதேசிகன்... முந்தா நாள் காலைல, பார்லி., கூட்டத்துல கலந்துக்க, விமானத்துல டில்லி போக கிளம்பினார்... அந்த நேரத்துல, காங்., மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத்கிட்டேர்ந்து போன்.... "நாங்க மூணு பேரு, சென்னை கிளம்பி வர்றோம்'ன்னு... அதனால, டில்லி பயணத்தை கேன்சல் செஞ்சுட்டார்... ஆனா, பேச்சுவார்த்தைக்கு அவரைக் கூப்ட்டுக்கவே இல்லே... இவா மூணு பேரு மட்டும் உக்கார்ந்து பேசிட்டு, கிளம்பிட்டா...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.

""என்ன பேசிக் கிளம்பினாலும், பருப்பு வேகலே பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

""அது சரி... அதான், மத்திய அரசுக்கான ஆதரவை, தி.மு.க., தலைவர் வாபஸ் வாங்கிட்டாரே...'' என்றார் குப்பண்ணா.

""உண்மையில், காங்கிரசோட எண்ணத்தை தான் அவங்க சொல்லிட்டுப் போனாங்க பா... ஆனா, அதை வெளியில் சொல்லாம, பூசி மழுப்பி, தமிழகத்திற்கு வந்த காங்., குழுவும், தி.மு.க., தலைவரும் தனித் தனியா பேட்டி குடுத்தாங்க... ரெண்டு மணி நேரப் பேச்சுல, "2ஜி' விவகாரமும் பங்கெடுத்துச்சு... "இந்த விசயத்துல, நான் என் ஸ்டாண்டுல நின்னா தான், அடுத்த எலெக்ஷன்ல தோல்வி இல்லாம, எம்.பி.,க்களை தேர்ந்தெடுத்துக் குடுக்க முடியும்... அதனால, என்னை தொந்தரவு பண்ணாதீங்க'ன்னு, தி.மு.க., தலைவர் சொன்னதாகவும் தகவல்...

""அவங்க கிளம்பின உடனேயே, ஆதரவை வாபஸ் வாங்குறோம்ன்னு அறிவிச்சா, பிரதமருக்கு மரியாதை கொடுக்காத மாதிரி ஆயிடும்ன்னு கணக்கு பண்ணி, "பிரதமர்ட்ட சொல்றோம்'ன்னு அவங்களை சொல்ல வச்சு, 12 மணி நேரத்துக்குப் பின்ன, "ஆதரவு வாபஸ்'ன்னு அறிவிச்சிருக்காரு பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களே இந்த வீடியோ வை ஒரு முறை பாருங்கள்.....

சென்னை ஜெயின் கல்லூரியின் மாணவர்களும் மாணவிகளும் பெரும் திரளாக குழுமி இருந்து

ஒழிக ஒழிக ராஜ பக்சே ஒழிக என்று குரல் எழுப்புவதும்

போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம் என்று

உறுதியாய் சொல்லுவதும்......

இந்த புரட்சி போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா.....

http://m.youtube.com/#/watch?v=mQpzrb_WuHk&feature=player_embedded&desktop_uri=%2Fwatch%3Ffeature%3Dplayer_embedded%26v%3DmQpzrb_WuHk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பொங்கிடும் கடலாய் எழுந்த மாணவர் புரட்சி......

இது கூட்டிக்கொண்டு வந்த கூட்டம் அல்ல.....

வஞ்சித்த சிங்களவனை

உணர்வால்.... ஒன்றித்து........ எச்சரிக்க வந்த கூட்டம் ......

ஈழத் தமிழா நீ தனியே அல்ல என்று உணர்த்த வந்த கூட்டம்

ஒன்றாக இணைந்து உரிமை மீட்போம் என்று தோள்கொடுக்க வந்த கூட்டம்.....

http://m.youtube.com/#/watch?ref=feed&fb_source=feed&v=NUZ2KMvBD8M&feature=share&_ft_=qid.5857459872508313526%3Amf_story_key.10151324919437944&refid=28&desktop_uri=%2Fwatch%3Fv%3DNUZ2KMvBD8M%26feature%3Dshare%26fb_source%3Dfeed%26ref%3Dfeed%26refid%3D28%26_ft_%3Dqid.5857459872508313526%253Amf_story_key.10151324919437944

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணர்ச்சி 2009 இல் வந்திருந்தால் இறப்புகளையாவது தடுத்திருக்கலாம். காலம் கடந்து வரும் எதுவும் பயனற்றதே.

  • கருத்துக்கள உறவுகள்
என்னோட கருத்தும் இது தான் சுமோ அப்போதே எங்களோடு சேர்ந்து இறங்கி இருந்தால் பாலசந்திரனில் இருந்து எத்தனையோ ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்
 
எது எப்படியோ காலம் கடந்தாவது நித்திரையில் இருந்து முழித்தவர்களால் நல்லதொரு தீர்வு எம் மக்களுக்கு கிடைத்தால் சந்தோசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.